உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குற…
-
- 0 replies
- 280 views
-
-
லிபியா பயணிகள் விமானம்` கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு' மால்டா படையினர் சூழ்ந்துள்ள விமானம் லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார். ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட…
-
- 3 replies
- 492 views
-
-
முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி ; டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி என்பது துருக்கி, பெர்லின் தாக்குதல் மூலம் தெளிவாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் உள்ள டீரம்பின் மார் ஏலாகோ தோட்ட மாளிகையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெர்லின் தாக்கதல் மற்றும் துருக்கி தாக்குதல் என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனியான பதிவேடுகளை உருவாக்கல் மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கா…
-
- 0 replies
- 377 views
-
-
பகை நாடுகளை அதிர வைத்துள்ள ஜப்பானின் இராணுவ கட்டுமானத்திட்டங்கள் ஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளுமன்ற அனுமதியையும் பெற்றுள்ளது. ஜப்பான் வரவு செலவு வரலாற்றில் முதன் முறையாக 97.5 ட்ரில்லியன் யென்கள் அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு கட்டுமானத்திற்காக அந்நாட்டு பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு, நிதியின் முதல் நிலையாக 1.4 வீதமான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தொகைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பாராளுமன்ற அனுமதியை அந்நாட்டு பிரதமர் சென்சோ அபே பெற்றுள்ளார். தற்போது பசுபிக் பிராந்திய வலையத்தில் கடல் ஆக்கிரமிப்பு பணிகளை சீனா முன்…
-
- 0 replies
- 409 views
-
-
பெர்லின் சந்தை தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் லொறியினைச் செலுத்தி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஆவண மோசடி தொடர்பில் ஜெர்மனியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டவர் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பெர்லினில் உள்ள கெய்சர் வில்ஹெம் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கிறிஸ்மஸ் சந்தையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த…
-
- 3 replies
- 755 views
-
-
37 ஆண்டுகளுக்குப் பின் சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் உலகின் மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் 37 ஆண்டுகளுக்குப்பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டோரியா: உலகின் மிக வெப்பமான பாலைவனம், உலகின் மிக நீளமான 3-வது பாலைவனம் ஆகிய பெருமைகளைக் கொண்டது ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனம். கிட்டத்தட்ட 9 மில்லியன் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாலைவனம் வடக்கு ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சகாரா பாலைவனத்தை சேர்ந்த அல்ஜீரியா, அன்செப்ரா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏ…
-
- 0 replies
- 430 views
-
-
ஜெர்மனியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட சகோதரர்கள் கைது ஜெர்மனி முழுவதும் தீவிர பாதுகாப்பு வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட பிறகு, ஜெர்மனி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. லாரியை ஓட்டி வந்ததாக, சந்தேகத்தின்பேரில் தூனிஷிய நபரைக் கண்டுபிடிக்க ஐரோ…
-
- 0 replies
- 230 views
-
-
ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ: ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி …
-
- 0 replies
- 242 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் சந்தேக நபரான அனீஸ் அம்ரியை தேடி ஜெர்மனி போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். * ரஷ்யாவில் விஷ குளியல் எண்ணெயை குடிக்கும் போதை அங்கு அறுபது பேரை பலிகொண்டிருக்கிறது. உடனடி நடவடிக்கைக்கு அதிபர் பூட்டின் உத்தரவு. * ஒரு நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுகண்ட விஞ்ஞானி. சதுரத்துளையிடும் கருவியை கண்டுபிடித்த எரித்திரிய அகதி.
-
- 0 replies
- 277 views
-
-
தலபானால் கடத்தப்பட்ட அமெரிக்க/கனடிய பெற்றோரும் குழந்தைகளும்.
-
- 0 replies
- 347 views
-
-
உலக அழகி 2016: போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி! 2016 உலக அழகிப் படத்தை போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வல்லே வென்றுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். டொமினிகன் குடியரசு, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 2,3ம் இடங்களைப் பிடித்தார்கள். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்த சுற்றில் தோல்வியடைந்து 18-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள். …
-
- 6 replies
- 1.7k views
-
-
வெடிப்பதற்கு தயாராகியுள்ள எரிமலை – 39000 வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் பேரழிவு பல வருடங்களாக அமைதியாக இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்தப் பகுதியிலுள்ள கேம்பி பிளக்கெரி எனும் எரிமலையானது தற்போது வெடிப்பதற்கு தயாராகி ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலை ஆய்வியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள சம்பவம் இதுவாகும். இவ் எரிமலை வெடிக்குமாயின் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்படையும் நிலை உள்ளதாகவும் ஆய…
-
- 0 replies
- 744 views
-
-
அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார். 'ஏர்துவானை சந்தித்ததில் மகிழ்ச்சி' அங்காராவில் உள்ள துருக்கி அதிபர் மாளிகையில், பானா மற்றும் அவரது தம்பி ஆகியோர் எர்துவானின் மடியில் அமர்ந்திருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவை விட்டு பானா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் சென்ற பின்னர், பானாவை துருக்கிக்கு அழைத்து வர எர்து…
-
- 0 replies
- 290 views
-
-
* பெர்லினில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் துனிஸிய நபரொருவரை ஜெர்மனிய போலிஸார் தேடுகிறார்கள். * மெக்ஸிகோவின் மிகப்பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட தீயில் முப்பத்தியொரு பேராவது மரணம். * ஆழத்தின் ரகசியம் அறிய முயற்சிக்கும் ஆய்வாளர்கள். ஆர்ட்டிக்கின் பழம் பனி, காலநிலை மாற்றம் குறித்த தகவலை தருமா?
-
- 0 replies
- 418 views
-
-
நடுவானில் மனித கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் இந்தியாவில் விமானங்களிலிருந்து மனித கழிவுகளை காற்றில் வீசும் விமான நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விமானங்கள் அதன் கழிவுகளை கொட்டுவதாக மனுதாரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். விமானங்களில் உள்ள கழிவறைகள் சிறப்பு தொட்டிகள் மூலம் மனித கழிவுகளை சேகரிக்கும். பொதுவாக விமானங்கள் தரையிறங்கியதும் கழிவுகள் அகற்றப்படும்; ஆனால், நடுவானில் கழிவறைகளில் உள்ள கழிவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். வ…
-
- 0 replies
- 426 views
-
-
சிரியாவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் : குழந்தைகளை முத்திட்டு வழியனுப்பும் தாய் : காணொளி வெளியானது சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கு தனது குழந்தைகளை தாய் முத்தமிட்டு அனுப்பும் காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. கொலை செய்வதற்காக முத்தமிட்டு அனுப்பப்பட்ட குழந்தை - 7 வயது சிரிய குழந்தையின் கடைசி நிமிடங்கள சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி ஜிகாதி என்ற 7 வயது சிறுமி தற்க…
-
- 0 replies
- 411 views
-
-
அச்சமூட்டும் தருணங்கள் : ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காணொளி வெளியானது துருக்கி நாட்டின் ரஷ்ய தூதுவர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட அவரை மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்நிலையில் தூதுவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த மர்ம நபர் அங்கும் இங்குமாக நடப்பதும் பின்னர் தனது துப்பாக்கி இருக்கிறதா என இரு முறை உறுதி செய்து கொள்வதும் பின்னர் தூதுவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுமான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் ரஷ்ய தூதர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஒரு கண்கா…
-
- 0 replies
- 286 views
-
-
பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர் தாக்குதல் நடந்த மார்க்கெட் பகுதி பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி தாக்குதலுக்கு காரணமான லாரியை ஓட்டியவர் என்று சந்தேகிக்கப்படும் நபர், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட குடியேறி என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கு தாற்காலிக குடியிருப்பு அனு…
-
- 19 replies
- 683 views
-
-
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம் மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு 70 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சான் பப்ளீட்டோ சந்தையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து மெக்ஸிக்கோ நேரப்படி நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவ்விபத்தில் 300 விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesari.lk/
-
- 1 reply
- 507 views
-
-
அதிர்ச்சியில் உறைந்துள்ள நேரில் கண்ட சாட்சிகள் ''மக்கள் மகிழ்ச்சியாக மதுவருந்திக் கொண்டிருந்தனர். நகரெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், வண்ண விளக்கு அலங்காரங்கள். நகரே விழா கோலம் பூண்டிருந்த சூழலில், திடீரென எங்கள் கண் முன் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது'' பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் 12 பேர் இறக்க காரணமான லாரி பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கும், 48 பேர் காயமடைந்ததற்கும் காரணமான கோர சம்பவம் குறித்து நினைவுகூர்கையில் அதிர்ச்சியில் உறைந்த பிரிட்டனை சேர்ந்த எம்மா ரஸ்டன் கூறியது தான் மேற்கூறியவை. பெர்ல…
-
- 0 replies
- 535 views
-
-
பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகாகோ கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பாதுகாப்பு சோதனை முன்னதாக, கடந்த திங்கள்கிழமை…
-
- 0 replies
- 295 views
-
-
At least 29 people died Tuesday in an explosion at a fireworks market in the city of Tultepec, the governor of the State of Mexico, Eruviel Avila, told CNN. Three minors will be transferred to a hospital in Texas for treatment for their extreme burns, officials said. An additional 72 people were injured. [Previous story, published at 7:27 p.m. ET] At least 22 people were killed Tuesday in an explosion at a fireworks market in Tultepec, Mexico, according to local authorities with firsthand knowledge of the search-and-rescue effort. Mexico's federal police said in an earlier tweet at least nine people died in the explosion. Dozens were reported injured. P…
-
- 1 reply
- 492 views
-
-
முடமாகிப் போன வெனிசுவேலா கரன்ஸி: முட்டை வாங்கவும் மூட்டை மூட்டையாக பணம் தேவை வெனிசுவேலாவில் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட பண நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக கடந்த வாரம் அந்நாடு அறிவித்தது.அதன் விளைவாக தங்களிடம் இருக்கும் பண நோட்டுக்கள் செல்லா நோட்டுக்கள் ஆகிவிடுவதற்கு முன்பாக அவற்றை வங்கிகளில் மாற்றிவிட மக்கள் குவிந்ததால், அனைத்து வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது. எனவே, 100 போலிவார் பணநோட்டை திரும்ப பெறுகின்ற முடிவு ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயரும் விலைவாசி மற்றும் நாணய மதிப்பு குறைவாலும், அதிகரிக்கும் மதிப்பு குறைந்த பணநோட்டுக்களாலும் சாதாரண மக்கள் கடும் இன்னலுக்கு…
-
- 1 reply
- 514 views
-
-
தூதர் கொலை சம்பவம் ரஷ்யா, துருக்கி இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது: அதிபர் எர்டோகன் ரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காரா: துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்து வந்தவர் ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த ஆண்ட்ரேவை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். சிரியாவின் காலப்போ நக…
-
- 0 replies
- 259 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் பன்னிரெண்டு பேரை பலிவாங்கிய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. * துருக்கியில் ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள போதிலும் உறவுகளில் பாதிப்பு இல்லை என இருநாடுளும் கூறுகின்றன. * பிரிட்டனில் குட்டிச் சிறார்களின் போலிஸ் படை. புரிந்துணர்வை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி.
-
- 0 replies
- 194 views
-