Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜெர்மனில் ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது சிறுவனிடம் விசாரணை ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில், குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது ஜெர்மன் சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த சிறுவனின் பெற்றோர் இராக்கை சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் அவர் தீவிரவாத எண்ணம் கொண்டவராக மாறியிருக்கிறார் என்று ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதத்தின் இறுதியில், மேற்கு நகரமான லுட்விக்ஸ்ஷஃபெனில் தோள் பை ஒன்றில் இந்த கருவியை அவர் விட்டு சென்றுள்ளார். ஆனால், குண்டு வெடிக்காமல், முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பின், ஒருவாரத்திற்குமுன், அந்த வெட…

  2. மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார். மிகையில் கோர்பச்சோவ் 85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார். இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊ…

  3. இன்றைய நிகழ்ச்சியில், * பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுகு இடையே கிழக்கு அலெப்போவில் இருந்து மக்கள் வெளியேற்றம் நிறுத்தம். இராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்கிறது சிரியாவின் அரசு. * அமெரிக்க தேர்தலின்போது, இணையதளத்தில் அத்துமீறியதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர் ஒபாமா கூறுகிறார். * பிரிட்டனின் தெருக்களில் கண்ணைக்கவரும் சிவப்பு நிற பொதுத்தொலைபேசிப் பெட்டிகள் விரைவில் அகலப்போகின்றன.

  4. செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..! பனிப்போர் காலம் தொட்டே கியூபாவானது உலகில் சிறப்புமிகு ரம் மதுபான தயாரிப்பை கொண்டு தனது நாட்டு கடன்களை அடைத்து வருகின்றது. இதனடிப்படையில் செக் குடியரசு நாட்டிடம் பெற்ற பெருந்தொகை கடனையும் ரம் மதுபானத்தை கொண்டு செலுத்துவதற்கு தயாராகியுள்ளது. இதுபற்றி செக்குடியரசின் நிதிஅயமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, கியூபா செக்குடியரசு என்பன கம்யூனிச வலய நாடுகளாக இருந்த காலத்திலிருந்தே கியூபாவானது சுமார் 276 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அக்கடன் தொகையை கியூபா எமது நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. …

  5. இலங்கை எப்படி மலேரியாவை ஜெயித்தது? ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பின் கூட்டம் இலங்கையில் கடந்த செப்டம்பர் 5-ல் நடைபெற்றது. 'மலேரியா இல்லாத நாடு' என்று அது இலங்கையை அறிவித்தது. பொது சுகாதாரம் தொடர்பான இலங்கையின் பெரும் சாதனைகளில் இது ஒரு மைல்கல். வாழ்நாள் அதிகரிப்பு, சிசு மரண விகிதம், சராசரிக் குடும்பத்தின் அளவு என்ற நல்வாழ்வு தொடர்பான மற்ற குறியீடுகளிலும் இது எதிரொலிக்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் 11 நாடுகள் உள்ளன. இலங்கையைத் தவிர்த்து மாலத்தீவுகளும் மலேரியாவை ஒழித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. இரு நாடுகளுக்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்…

  6. பிரான்ஸில் வெல்லப்போவது வலதுசாரிகளா அதிதீவிர வலதுசாரிகளா? பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹொல்லாந்தே முடிவெடுத்திருப்பதில் வியக்க ஏதும் இல்லை. ஹொல்லாந்தேயின் பதவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் - பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சநிலை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சொந்தக் கட்சிக்குள் சண்டை, தலைவர்களின் தனிப்பட்ட ஊழல் என்று சிக்கல்கள் மேல் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன. மக்களிடையே அவருடைய செல்வாக்கு கடுமையாக வீழ்ந்திருக்கிறது. "சோஷலிஸ்ட் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஒருவேளை ஹொல்லாந்தே போட்டியிட்டால், அவருக்கு எதிராகப் போட்டியிடுவோம்" என்று கட்சிக்குள்ளேயே குரல்கள் கேட்கி…

  7. சிரியாவின் அலெப்பா நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியா நாட்டில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கின்றன. போர் நிறுத்த நடவடிக்கைகளும் அமைதியைத் தரவில்லை. இந்தப் போரில் அலெப்போ நகரை மையமாக கொண்டே கடும் தாக்குதல் தொடர்கின்றன. இதில் பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். இம்மாதிரியான கொடூரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, நகரில் இயல்பான வாழ்க்கை நிலவ வேண்டும் என உலகம் தழுவிய அளவில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரீஸ் நகரத்தில் உள்ள, உலக புகழ்பெற்ற ஈபிள் டவரும் இணைந்துகொள்கிறத…

  8. விண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு செயற்கைக்கோளைச் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியபோது, பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ), தங்களது தலையில் பூச்சூடி, அழகான சேலை அணிந்த பெண்கள் , தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மிகப் பிரபலமானது. அந்த புகைப்படம், இந்தியாவில், விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற வழமையான ஒரு கருத்துணர்வுக்கு சவால் விடுவதாக இருந்தது. ஆனால், பின்னர், இஸ்ரோ(Isro) அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட ப…

  9. இன்றைய நிகழ்ச்சியில், *அலெப்போவில் கிளர்ச்சிக்காரர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம். ஆயிரக்கணக்கானோர் வெளியேறவுள்ளனர். * சிகிச்சைக்காக சினைப்பையை நீக்கி பத்திரமாக வைத்து மீண்டும் அதன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் கதை. * அமைதியீனத்தை தடுக்கும் ஆயுதமாக யோகாவை கையில் எடுத்துள்ள தென்னாப்பிரிக்க சிறைகள்.

  10. ஜெட் ஏர்வேஸுக்கும், தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பா? - புலனாய்வுப் பத்திரிகையாளரின் தகவல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில், அதன் தலைவர் நரேஷ் கோயல்,பத்திரிக்கையாளர் ஒருவருக்கு எதிராக ஆயிரம் கோடி ருபாய் நஷ்டஈடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குக்கு ஆளாகியுள்ள பத்திரிகையாளரின் பெயர் ஜோஸி ஜோசப். புலனாய்வு பத்திரிகையாளரான இவர், "A feast of vultures" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டார். அதில், இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே நடக்கும் மறைமுகப் பேரங்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதி இருந்தார். அந்த புத்தகத்தின் ஒரு பகுதியில், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவ…

  11. ராணுவத்திடம் சிக்கி இறப்பதை விட தற்கொலையே மேலானது! - சிரியா பெண்ணின் கடிதம்! சிரியா நாட்டில் அரசு ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இந்த யுத்தத்தில் பலியாகி உள்ளனர். எழுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அலெப்போ நகரை மையமாக கொண்டு நடைபெறும் இந்தச் சண்டையைத் துயரத்தைத் தணிக்கும் விதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதே மாதம் 19-…

  12. He, She இற்கு பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துங்கள்; ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல் பிரிட்­ட­னி­லுள்ள உலகப் புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றான ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வ­ மா­ண­விகள் He (அவன்), She (அவள்) போன்ற பதங்­க­ளுக்குப் பதி­லாக Ze எனும் பொது­வான பதத்தைப் பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். பாலின மாற்றம் செய்­த­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­வதைத் தவிர்ப்­பதே இதன் நோக்­கமாம். ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒன்­றி­யத்தால் வெளி­யி­டப்­பட்ட பிர­சு­ர­மொன்றில் இவ்­ வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. …

  13. இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் கிளர்ச்சிக்காரர்களின் வசம் எஞ்சியுள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பம். அரச ஆதரவு படைகள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் இடையே நேரடி மோதலும் நடந்தது. * டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்துவரும் நிலையில், யார் உள்ளே? யார் வெளியே? பிபிசியின் பார்வை. * போரினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், பேறுகால இறப்புகளைத் தடுக்கப் போராடும் பெண் மருத்துவர்கள்.

  14. ஆம்! சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன்: டுடெர்டே ஒப்புதல் டாவோ நகரின் மேயராக இருந்த போது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை,தானே கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபரான ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புக் கொண்டுள்ளார். சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை தானே கொலை செய்ததாக டுடெர்டே ஒப்புதல் பிலிப்பைன்ஸின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், டுடெர்டே இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸில் உள்ள பிரத்யேக கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்து முன்னதாக டுடெர்டே ஒப்புக்கொண்டும், மறுத்தும் இருவேறு நிலைகளை வெளிப்படுத்தியிருந்தார். மனிலாவில் தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் உரை…

  15. அலெப்போ போர் முடிந்தது சிரியா நகரான, அலெப்போவைக் கைப்பற்ற நான்காண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அலெப்போ போர் முடிந்தது நகரில் எஞ்சியிருந்த கிளர்ச்சிப் போராளிகள் நகரை விட்டு வெளியேற அனுமதிக்க போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த சில மணி நேரங்களாக அங்கு மோதல்கள் நடக்கவில்லை என்று நகரவாசிகள் கூறுகின்றனர். ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது என்று ரஷ்யா கூறியிருக்கிறது. சிரியா படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி சில பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன என்று ரஷ்யா கூறுகிறது. வரும் சில மணி நேரங்களில்,கடுமையாக காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள…

  16. ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பிரபல பொருளாதார நிபுணரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பு பொருளாதார அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக குருமூர்த்தி உள்ளார். தில்லியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரத்தில் தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனால்தான் மனை…

  17. இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை ராய்ப்பூர்: இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.…

  18. அமெரிக்க அதிபரின் கட்டத்துக்குள் ஆயுதம் தாங்கிய சிறுவன் கைது ட்ரம்ப் டவருக்குள் ஆயுதங்களுடன் நுழைய முற்பட்ட 19 வயது கல்லூரி மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை Alexander Wang என்ற மாணவன் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள 721 மாடி கட்டடத்திற்கு செல்ல முயற்சித்துள்ள நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியப்பிரிவு முகவர்கள் குறித்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது ஒரு பெரிய கத்தி, கைவிலங்குகள், தண்ணீர் துப்பாக்கி, M100 வெடிகள் மற்றும் garrote என்ற கயிறும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  19. தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக…

  20. பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர்கள் டிசம்பர் 4-ம் தேதி ராக்கா நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க…

  21.  பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஒரு நாள் மாநாட்டில், ரஷ்யா, உக்ரேய்ன், சிரியாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, தெரேசா மே உள்ளடங்கலான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். இது தவிர, புதிய இத்தாலியப் பிரதமரான பாலோ ஜென்டிலோனியையும் சந்திக்கவுள்ளனர். …

  22. இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவின் அரசபடைகள் அலெப்போவை முழுமையாக வெற்றிகொள்ளவுள்ள சூழலில், கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்படுவதாக ஐ நா குற்றஞ்சாட்டியுள்ளது. * இந்தோனீசியத் தலைநகரின் மேயர்,மதநிந்தனைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், தான் இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என அவர் கூறுகிறார். * மருத்துவ உலகில் ஒரு சாதனை. ஒலி அலைகளின் மூலம் மாத்திரம் மூளையின் உள்ளே அறுவைச் சிகிச்சை செய்யும் பிரிட்டிஷ் மருத்துவர்கள்.

  23. கடலில் தத்தளித்த 1,164 அகதிகள் இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,164 அகதிகளைத் தாம் மீட்டதாக இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (12) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை மீட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆறு இரப்பர் படகுகளிலும் ஒரு மரப்படகிலும் பயணித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடலோர பாதுகாப்புப் படையினர், ரேடியோ கருவி மூலம் நாவ்ஃபோர் மெட் மிஷன் என்கிற ஐரோப்பிய யூனியனின் மீட்புக் கப்பல்களிடம் உதவி கோரியுள்ளனர். மீட்புக் கப்பல்களும் படகுகளும் உடனடியாக குறித்த பகுதிக்கு வி…

  24. பிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பணம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணம் வழங்கியதாக தெரிவித்து பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முகமது அலி அகமது, ஜகாரியா போபா…

  25. சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின் சட்டத்தை மீறி தைரியமாக புகைப்படங்களை எடுத்து டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தலைமுதல் கால் வரை மறைக்கும் ஆடைகளையே (நிகாப்) சவுதி பெண்கள் அணிய வேண்டும் என சவுதி சட்டத்தில் உள்ளது. ஆனால் குறித்த பெண் அந்த சட்டத்தை மீறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Fawaz al-Maiman குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண் செய்த செயல் பல சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் அவர் நேற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.