உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26887 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் கிளர்ச்சிக்காரர்களின் வசம் எஞ்சியுள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பம். அரச ஆதரவு படைகள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் இடையே நேரடி மோதலும் நடந்தது. * டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்துவரும் நிலையில், யார் உள்ளே? யார் வெளியே? பிபிசியின் பார்வை. * போரினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், பேறுகால இறப்புகளைத் தடுக்கப் போராடும் பெண் மருத்துவர்கள்.
-
- 0 replies
- 323 views
-
-
ஆம்! சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன்: டுடெர்டே ஒப்புதல் டாவோ நகரின் மேயராக இருந்த போது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை,தானே கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபரான ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புக் கொண்டுள்ளார். சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை தானே கொலை செய்ததாக டுடெர்டே ஒப்புதல் பிலிப்பைன்ஸின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், டுடெர்டே இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸில் உள்ள பிரத்யேக கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்து முன்னதாக டுடெர்டே ஒப்புக்கொண்டும், மறுத்தும் இருவேறு நிலைகளை வெளிப்படுத்தியிருந்தார். மனிலாவில் தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் உரை…
-
- 0 replies
- 483 views
-
-
He, She இற்கு பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துங்கள்; ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல் பிரிட்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகள் He (அவன்), She (அவள்) போன்ற பதங்களுக்குப் பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாலின மாற்றம் செய்தவர்களின் மனதைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாம். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட பிரசுரமொன்றில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 392 views
-
-
ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பிரபல பொருளாதார நிபுணரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பு பொருளாதார அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக குருமூர்த்தி உள்ளார். தில்லியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரத்தில் தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனால்தான் மனை…
-
- 0 replies
- 450 views
-
-
இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை ராய்ப்பூர்: இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்க அதிபரின் கட்டத்துக்குள் ஆயுதம் தாங்கிய சிறுவன் கைது ட்ரம்ப் டவருக்குள் ஆயுதங்களுடன் நுழைய முற்பட்ட 19 வயது கல்லூரி மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை Alexander Wang என்ற மாணவன் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள 721 மாடி கட்டடத்திற்கு செல்ல முயற்சித்துள்ள நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியப்பிரிவு முகவர்கள் குறித்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது ஒரு பெரிய கத்தி, கைவிலங்குகள், தண்ணீர் துப்பாக்கி, M100 வெடிகள் மற்றும் garrote என்ற கயிறும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 1 reply
- 246 views
-
-
அலெப்போ போர் முடிந்தது சிரியா நகரான, அலெப்போவைக் கைப்பற்ற நான்காண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அலெப்போ போர் முடிந்தது நகரில் எஞ்சியிருந்த கிளர்ச்சிப் போராளிகள் நகரை விட்டு வெளியேற அனுமதிக்க போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த சில மணி நேரங்களாக அங்கு மோதல்கள் நடக்கவில்லை என்று நகரவாசிகள் கூறுகின்றனர். ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது என்று ரஷ்யா கூறியிருக்கிறது. சிரியா படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி சில பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன என்று ரஷ்யா கூறுகிறது. வரும் சில மணி நேரங்களில்,கடுமையாக காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள…
-
- 1 reply
- 591 views
-
-
பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர்கள் டிசம்பர் 4-ம் தேதி ராக்கா நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க…
-
- 0 replies
- 338 views
-
-
பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஒரு நாள் மாநாட்டில், ரஷ்யா, உக்ரேய்ன், சிரியாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, தெரேசா மே உள்ளடங்கலான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். இது தவிர, புதிய இத்தாலியப் பிரதமரான பாலோ ஜென்டிலோனியையும் சந்திக்கவுள்ளனர். …
-
- 0 replies
- 429 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவின் அரசபடைகள் அலெப்போவை முழுமையாக வெற்றிகொள்ளவுள்ள சூழலில், கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்படுவதாக ஐ நா குற்றஞ்சாட்டியுள்ளது. * இந்தோனீசியத் தலைநகரின் மேயர்,மதநிந்தனைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், தான் இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என அவர் கூறுகிறார். * மருத்துவ உலகில் ஒரு சாதனை. ஒலி அலைகளின் மூலம் மாத்திரம் மூளையின் உள்ளே அறுவைச் சிகிச்சை செய்யும் பிரிட்டிஷ் மருத்துவர்கள்.
-
- 0 replies
- 341 views
-
-
கடலில் தத்தளித்த 1,164 அகதிகள் இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,164 அகதிகளைத் தாம் மீட்டதாக இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (12) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை மீட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆறு இரப்பர் படகுகளிலும் ஒரு மரப்படகிலும் பயணித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடலோர பாதுகாப்புப் படையினர், ரேடியோ கருவி மூலம் நாவ்ஃபோர் மெட் மிஷன் என்கிற ஐரோப்பிய யூனியனின் மீட்புக் கப்பல்களிடம் உதவி கோரியுள்ளனர். மீட்புக் கப்பல்களும் படகுகளும் உடனடியாக குறித்த பகுதிக்கு வி…
-
- 0 replies
- 335 views
-
-
பிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பணம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணம் வழங்கியதாக தெரிவித்து பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முகமது அலி அகமது, ஜகாரியா போபா…
-
- 0 replies
- 366 views
-
-
சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின் சட்டத்தை மீறி தைரியமாக புகைப்படங்களை எடுத்து டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தலைமுதல் கால் வரை மறைக்கும் ஆடைகளையே (நிகாப்) சவுதி பெண்கள் அணிய வேண்டும் என சவுதி சட்டத்தில் உள்ளது. ஆனால் குறித்த பெண் அந்த சட்டத்தை மீறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Fawaz al-Maiman குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண் செய்த செயல் பல சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் அவர் நேற்ற…
-
- 0 replies
- 546 views
-
-
என்ன நினைக்கிறது உலகம்?- என்னாகும் கிரேக்கத்தின் எதிர்காலம்? கிரேக்க நாளிதழ் கிரேக்கத்தின் தற்போதைய சூழல், பொருளாதாரப் பேரழிவைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று மரியாதைக்குரிய பல வரலாற்றாசிரியர்களும், அறிவுஜீவிகளும் எச்சரித்திருக்கிறார்கள். கிரேக்கம் வெளிநாடுகளின் மேற்பார்வையில் இருக்கின்ற, திவாலான ஒரு தேசம். கிரேக்கத்தின் அரசு நிறுவனங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன; கிரேக்க சமூகமோ விரக்தியின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த நெருக்கடி இது. அதேசமயம், சர்வதேச அளவிலும் நிலைமை குழப்படியாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்த ஒரு வரலாற்றுக்கும் மாறாக, தற்போது ஒர…
-
- 0 replies
- 335 views
-
-
கத்தார்: வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற அரசு முடிவு கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது. 2022 கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் உள்கட்டமைப்பை உருவாக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது அமலில் உள்ள ''கஃபாலா'' அமைப்புக்கு பதிலாக அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய ஒப்பந்த அடிப்படையிலான சட்டம் கொண்டுவரப்படும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, வர…
-
- 0 replies
- 279 views
-
-
வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூயார்க் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் சுமார் ஆயிரம் மைல் தூரத்தை அந்த விமானம் …
-
- 1 reply
- 317 views
-
-
ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார் அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றார். வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் க…
-
- 6 replies
- 847 views
-
-
பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தீவிர வலதுசாரி இயக்கத்திற்கு தடை விதிப்பு ஒரு பிரிட்டீஷ் நவ நாஜீக்கள் இயக்கம் பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தடை செய்யப்படவிருக்கும் முதல் தீவிர வலதுசாரி இயக்கமாகியுள்ளது. இந்த குழுவிற்கு தடைவிதிக்க நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குழுவில் சேருவதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ கிரிமினல் குற்றமாகும். ஐக்கிய ராஜ்ஜியத்தில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனமானது தடை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், நேஷனல் ஆக்ஷன் என்ற இந்த அமைப்பு, இனவெறித் தன்மை கொண்ட்து, யூத எதிர்ப்பு சித்தாந…
-
- 0 replies
- 276 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * துருக்கியில் சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட நாற்பத்து நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தன. இருநூறுக்கும் அதிகமான குர்து ஆதரவாளர்கள் கைது. * சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்து ஓராண்டு. ஆனாலும் அங்கு ஏதாவது மாறியுள்ளதா? * வயதான பசுக்களுக்கு ரஷ்யாவில் ஓய்வு இல்லம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.
-
- 0 replies
- 308 views
-
-
"ஒரே சீனா கொள்கைக்கு" அமெரிக்கா கட்டுப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்; அவரின் அந்த அறிக்கை சீனாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரே சீனா கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்கு மாறாக, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், தைவான் அதிபர் சாய் இங்-வென்னின் தொலைப்பேசி வாழ்த்துச் செய்தியை ஒப்புக் கொள்ளும் டிரம்பின் முடிவுக்கு சீனா ராஜீய ரீதியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சீனா, தைவானை தனது நாட்டின் பிரிந்து நிற்கும் ஒரு பகுதியாகவே கர…
-
- 0 replies
- 381 views
-
-
ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப் எனது வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பது முட்டாள் தனமானது என டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ உளவுத்துறை ரகசிய அறிக்…
-
- 0 replies
- 298 views
-
-
லண்டன் - ஆஸ்திரேலியா: இடைநில்லா விமானச் சேவை - குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டன்: லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின…
-
- 8 replies
- 680 views
-
-
இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்பு Istanbul Besiktas stadium hit by explosion caption The attack appears to have targeted riot police At least one explosion has been heard outside Istanbul's Besiktas sports stadium, Turkish media and witnesses say. There are reports of several people wounded, in what appears to have been an attack on riot police. Ambulances and police were seen rushing to the scene, and TV footage showed a fire burning outside the stadium. Turkey has seen a recent spate of militant attacks in major cities that have left dozens of people dead. The blast on Saturday happened two hours after a football …
-
- 2 replies
- 446 views
-
-
கோஹினூர் வைரம் -- ஆறு கட்டுக்கதைகள் உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமாக கோஹினூர் வைரம் நம்பப்படும் நிலையில், "உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்" என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலுள்ள கோஹினூர் வைரம் பற்றிய ஆறு கட்டுக்கதைகளை உங்களுக்கு அறிய தருகின்றோம். கோஹினூர் வைரம் உலகிலுள்ள வைரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. மொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்…
-
- 0 replies
- 660 views
-
-
சிரிய போரும் மனித உரிமை மீறல்களும்! கோப்புப் படம்: ஏஎஃப்பி டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் * சவுதி அரேபியாவில் நடந்த ’வாய்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தச் சிறுமி அரேபிய மொழியில் பாடல் ஒன்றை பாடுகிறாள், சுற்றியுள்ள அனைவரும் மௌனமாகின்றனர். அந்தச் சிறுமியின் குரலும், அந்தப் பாடலின் வரியும் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. இதோ அந்தப் பாடல்..... நான் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு என் நாடு என்னை போலவே மிக சிறியது எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள…
-
- 1 reply
- 531 views
-