Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன? 2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ? அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது. எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்? அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் "இயற்கையான முறையில்" அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமக…

  2. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஐந்து நாட்களே உள்ளநிலையில் முக்கிய மோதல் களமான ஃப்ளோரிடா மாநிலத்தின் கறுப்பினத்தவரின் வாக்கைக் கவர இரு வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருப்பது குறித்த செய்தி. * போரில் பலியானவர்களை நினைவு கூறும் தினத்தில் பாப்பி அணிய இங்கிலாந்து கால்பந்து வீரர்க்ளுக்கு உலக கால்பந்து அமைப்பு தடை; பெரும் கோபத்தில் பிரிட்டிஷ் பிரதமர். * ஆப்பிரிக்கா எங்கும் மருத்துவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இதற்குத் தீர்வு காணுமா நமீபியாவின் புதிய மருத்துவ கல்லூரி?

  3. இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா இந்த நாட்டிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார். சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்…

  4. ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகப்பெரிய சவால்! ஊடகத் துறை தொடர்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருது வழங்கினார். பின்னர் பேசிய மோடி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் நம்பகத்தன்மை என்பது ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- நம்பகத்தன்மையை தக்கவைத்து கொள்ளது ஊடகங்களுக்கு முக்கியமானது. மக்களுக்கு தற்போது நிறைய செய்திகள் சென்று சேர்கிறது. ஆனால் அந்த செய்திகளில் நம்பகத் தன்மை என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றின் மீதும் எல்லோர் மீதும் கருத்து சொல்ல ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதும், அது மற்றவர…

    • 0 replies
    • 283 views
  5. செளதி அரச குடும்ப இளவரசருக்கு சிறையில் சவுக்கடி தண்டனை செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மற்றுமொரு இளவரசருக்கு, அதிகாரபூர்வ தண்டனையாக சிறையில் சவுக்கடிகள் வழங்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன. செளதியின் தற்போதைய அரசர் சல்மான் இளவரசரின் அடையாளமோ அல்லது அவர் புரிந்த குற்றங்கள் பற்றிய தகவல்களோ இதுவரை வெளியிடவில்லை. இந்த நிகழ்வு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவும் இல்லை. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் சவுதி அரசக் குடும்பத்தில் இம்மாதிரியான நீதிமன்ற தண்டனையை எதிர்க்கொள்வது அரிதான ஒன்று. இஸ்லாமிய சட்டம் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறது என்று கூறி சவுத…

  6. ஹிலரி அமெரிக்க அதிபரானால் பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்? வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிலரி கிளிண்டனை பின் தொடர்ந்த கேள்வியும், பல ஆயிரக்கணக்கில் கூகுள் தேடுதளங்களில் தேடப்பட்டதும் ஒரே கேள்வி தான் . எவ்வாறு அழைக்கப்படுவார் பில்? ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது கணவரான பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்? - இது தான் அந்த கேள்வி. உலக அரங்கில் , பில் கிளிண்டன் முக்கிய அரசியல் பங்கு வகிப்பது புதிதில்லை. ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கணவரும், வேதியல் பேராசிரியருமான யோவாசிம் ஜார், அவரது இயற் பெயரால் தான் அழைக்கப்படுகிறார். அதே போல் தான், புதிய ப…

    • 5 replies
    • 752 views
  7. இன்றைய நிகழ்ச்சியில்.. * மொசூலின் புறநகர் பகுதிக்குள் நுழைந்த இராக்கிய படைகள் நகரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக நகருகின்றன. * மொறோக்கோவில் மீன் வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு பகலாக போராட்டம். இரு போலிஸார் உட்பட பதினொரு பேர் கைது. * எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே ஆபத்தான ஏரியை சீர் செய்யும் நேபாளிகள். நீர்வரத்து பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை இது பாதுகாக்கும்.

  8. புலியை... நேருக்கு நேர் சந்தித்து, போட்டோ எடுத்த பிரதமர் மோடி! ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா "ராஜ்யோத்சவம்' என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார். பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற…

  9. பிரான்சின் கலே முகாமிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர் ஜங்கிள் என்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தற்போதும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், பிரான்சில் உள்ள புதிய மையங்களுக்கு இன்று கூட்டிச் செல்கின்றனர். பிரிட்டனுக்குப் பயணம் செய்வதற்கான நம்பிக்கையுடன் அந்த முகாமில் கப்பல் கொள்கலன்களைத் தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு சுமார் 1,500 இளைஞர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், இனிமேல் ஐக்கிய ராஜ்யத்திற்கு மாறிச் செல்வதற்கான மனுக்கள் எதுவும் கலேயில் கையாளப்படாது என்று கூறப்பட்டுள்ளது . செவ்வாயன்று இரவு நேரத்தில், பதின்ம வயதில் உள்ள எரித்திரி…

  10. ஹிலாரியை சற்றே முந்தினார் டிரம்ப்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப். | கோப்புப் படம்: ஏபி அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அமெரிக்க தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏபிசி/வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின் முடிவில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியை விட 1% முன்னிலை பெற்றிருக்கிறா…

  11. வீதியோர கடைகளில் விற்கப்படும் பூனை கறி பிரியாணி: - அதிர வைக்கும் சம்பவம்! [Monday 2016-10-31 17:00] சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார்…

  12. ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தக…

  13. இரண்டாம் உலகப் போரின் 'ஹீரோ' மரணம்..?! கடந்த 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகக் போர் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெர்மனியின் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு சில நாடுகளும் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும் இரு தரப்பாக போரிட்டன. கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் போரில் பங்கேற்றனர். இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் நிகழ்வுகளை சந்தித்த போர் இது. கடந்த 1939-ம் ஆண்டு நாஜி ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஜெர்மனி தன்னை சுற்றியிருந்த பல நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஹிட்லரோ தன் வீரர்கள் மீது அக்கறை காட்டுவதை விட, யூதர்களை தேடி தேடி கொல்வதையும் கொடுமைப்படுத்துவதையும்தான் மு…

  14. என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன், மிச்செல் ஒபாமா. படம்: ஏபி. அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மிச்செல் ஒபாமா குறித்த …

  15. இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கிய அரச படைகள் மொசூல் நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிப்பு; "சரணடை அல்லது செத்துமடி" - ஐ எஸ் போராளிகளுக்கு இராக்கிய பிரதமரின் இறுதி எச்சரிக்கை. * இணையத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படும் வங்கதேசப் பெண்ணின் கதை; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பதினைந்து ஆண்டுகளின் பின்னும் தொடரும் கொடுமை. * உலகின் முழுமையான முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்து எண்பது ஆண்டுகள் ஆகின்றன; அந்த முதல் ஒளிபரப்பு எப்படி நடந்தது?

  16. இன்றைய நிகழ்ச்சியில், * FBI சட்டத்தை மீறி செயற்பட்டதா? ஹிலரி தொடர்பான மின்னஞ்சல் புகாரை மீண்டும் விசாரிப்பதாக FBI அறிவித்திருப்பது சட்டமீறல் என ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு. * இத்தாலியை தாக்கிய கடுமையான பூகம்பத்தை அடுத்து ஆபத்தான பின்னதிர்வுகள் தொடர்கின்றன; பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு கோரிக்கை. * தென்கொரிய அதிபர் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழலின் மையத்தில் இருக்கும் ஒரு பெண், தனது செய்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

  17. அகதிகளின் மரணங்களைத் தவிர்ப்பது எப்படி? ஆபத்தான பயணங்களைத் தடுக்க, அகதிகளுக்கான போக்குவரத்து உதவிகள் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் பரந்துவிரிந்த கடல். அருகில் அடிவானம். கடலில் இருக்கும்போது உங்களால் எந்தத் தொலைவையும் அறிய முடியாது. ஒவ்வொரு அடி உயரும்போதும் அடிவானம் விலகுகிறது. கடல் எல்லைக்கு மேல் ஐந்து அடிக்கு மேல், ஒரு மிதவையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - கரையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால். மூழ்கிக்கொண்டிருக்கும் உங்கள் படகிலிருந்து, லிபியாவை உங்களால் பார்க்க முடியும்; மீட்புக் குழுவினரின் வருகையையும். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், உதவிக் குழுக்களும் இத்தாலியக் கடல் காவல் படையினரும் லிபியா…

  18. சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோப்புப்படம் செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம…

  19. நியூயார்க் இசை-நாடக அரங்கில் தூவப்பட்ட மர்ம தூள் மனித சாம்பலா? அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற மெட்ரோபொலிட்டன் ஓபரா ஹவுஸ் என்ற இசைநாடக அரங்கில் சனிக்கிழமையன்று (நேற்று) பார்வையாளர்களில் ஒருவர் தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை அவ்வரங்கில் இருந்த இசை குழுவின் மீது தெளித்த பிறகு, அவ்வரங்கத்தில் நடைபெற வேண்டிய பிற்பகல் காட்சி நிறுத்தப்பட்டது. ஓபரா ஹவுஸ் கியோம் டெல் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், இது குறித்து சோதனை நடத்த தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகள் இந்த அரங்கு அமைந்துள்ள லிங்கன் மையத்துக்கு வந்தன. இந்த சம்பவம் நடைபெற்ற போது , அரங்கில் இருந்த ஒரு நபர் தனத…

  20. துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் துருக்கியில் கடந்த ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமாக இருந்ததாகப் பழிபோடப்பட்ட ஒரு மதகுருவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை துருக்கி ஆட்சியாளர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். துருக்கி அதிபர் எர்துவான் நேற்று (சனிக்கிழமை) மாலைக்கு பின் அவசரகால ஆணை ஒன்றில் துருக்கி அரசு இந்த பணி நீக்கப்பட்டியலை வெளியிட்டது. அதில், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரும் அடங்குவார்கள். இதுவரை துருக்கியில் 15 செய்தி ஊடகங்களை மூடக…

  21. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பா விரையும் கனடா பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேரம் பேசி தீர்வு காண ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரஸல்ஸ் செல்கிறார். இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இதுவரை போராட்டங்கள் தடுத்து வந்துள்ளன பெல்ஜியத்தின் வல்லோனியா பிராந்தியம் எழுப்பிய எதிர்ப்புக்களால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் தொடர்ந்து வந்தது. ஆனால் வியாழக்கிழமை இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இறுதியில் பெல்ஜியம் சனிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பொருட்களுக்கான சுங்க வரிகளில் 99 சதவீத வரிகளை இந்த …

  22. தஞ்சம் கோருபவர்கள் ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்? தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. நருவில் உள்ள தடுப்பு மையம் ( கோப்புப் படம்) இதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கு அனுமதிப்பதை தடுக்கவோ வழிவகையுள்ளது. ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் …

  23. இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 என்று பதிவாகியுள்ளது. ஞாயிறு காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி தெருவுக்கு வந்தனர். நோர்சியாவில் கன்னியாஸ்த்ரீகள் சர்ச்சிலிருந்து வெளியே வந்தனர். மணிக்கூண்டு ஒன்று ஆடியபடி கீழே விழுந்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்…

  24. எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

  25. ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வி ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில் ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 47உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2017ஆம் ஆண்டுக்காக 14உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் ஐ.நா பொதுச்சபையில் நேற்று வெள்ளிக்கிழமை மனித உரிமை பேரவைக்கு எஞ்சிய அங்கத்துவ உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் பங்கேற்று இரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் சிரியாவில் இடம்பெறும் விடயங்களுக்கு மூலகாரணமாக ரஷ்யாவே காணப்படுகின்றத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.