Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கலேயிலிருந்து பிரிட்டனுக்குள் வரும் குழந்தைக் குடியேறிகள் வயதை உறுதிப்படுத்த மேலதிக சோதனை பிரெஞ்சு துறைமுகமான கலேயில் இருந்து வரும் சிலர், குழந்தை அல்லாமல் வளர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை அடுத்து, குடியேறிக் குழந்தைகளின் வயதை சரிபார்க்க மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். குடியேறி குழந்தைகள் என்று கருதப்படுவோர் மேலும் அதிகாரிகளால் விசாரணை மற்றும் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவது போன்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கான்செர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான டேவிட் டேவிஸ், குடியேறிகள் வயதை முடிவு செய்ய, அவர்களின் பற்களை சோதனை செய்யுமாறு கோரியுள்ளார். பிரிட்ட…

  2. சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா? சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்' என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அல் கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977-ம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு என்பதை, சவுதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. http://www.vikatan.com/news/world/69995-saudi-arabia-executes-a-prince.art

  3. அக­தி­யாக வந்து பழி­தீர்ப்பேன்.! ஜேர்­ம­னிய சிறைச்­சா­லை­யொன்றில் தூக்­கி­ட்டு தற்­கொலை செய்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிரிய அக­தி­யான சந்­தே­க­ந­பரின் சகோ­தரர் தனது உடன்­பி­றப்பின் மர­ணத்­துக்­காக பழி­தீர்க்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். ஜாபெர் அல்–பாக்ர் என்ற மேற்­படி சந்­தே­க­ந­பரின் குடி­யி­ருப்பில் வெடி­பொ­ருட்கள் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். தொடர்ந்து அவர் ஜேர்­ம­னியின் லெயிப்ஸிக் எனும் இடத்தில் வைத்து 3 சிரிய சகாக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே சிறைச்­சா­லையில் தூக்­கிட்டு உயி­ரி­ழந்­தி­ருந்தார். இந்­நி­லையில் அவ­ரத…

  4. 'என் வீட்டு அடுப்படி தான் மனை­விக்­கு சொந்தம்'; நைஜீ­ரிய ஜனா­தி­ப­தியின் கருத்தால் சர்ச்சை 2016-10-18 11:22:43 'என் மனைவி, எந்த கட்­சியைச் சேர்ந்­தவர் என தெரி­யாது ஆனால், என் வீட்டு அடுப்­படி தான் அவ­ருக்கு சொந்தம்,'' என, நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹாரி தெரிவித்துள்ளமை பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முஹ­மது புஹாரியுடன் மனைவி ஆயி­ஷா ஆபி­ரிக்க நாடு­களில் ஒன்­றான, நைஜீ­ரி­யாவின் ஜனா­தி­ப­தி­யாக முஹம்­மது புகாரி (73) உள்ளார். 1980இல், இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்த இவர், 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்­தலில் வெற்றி பெற்­றதன் மூலம் நைஜீரிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். இந்­நி­லையில் முஹ­மது ப…

  5. இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் மொசூல் நகரை மீளக்கைப்பற்றுவதற்கான மாபெரும் சண்டை ஆரம்பம்; மோதல் களத்தில் இராக்கிய படைகளுடன் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேக செய்திகள். * கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு போராட்டம்; ஆப்பிரிக்க மேற்குக்கரை எதிர்கொள்ளும் ஆபத்தை தவிர்க்க உருவாகிறது புதியதொரு சாசனம். * பேருரு மனிதர்கள் வாழும் பூமிக்கு அழைத்துச் செல்கிறது பிபிசி: அயர்லாந்தின் புராணக்கதைகளில் உண்மை இருப்பதாக சொல்கிறது மரபணு ஆய்வு.

  6. ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு இன்று கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்தில் கைவிட்டு விட்டனர். லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கிரீன்பீஸ் அமைப்பினர் எதிர்ப்பு விவசாயிகளின் சலுகைகளை குறைக்கும், தொழிலாளர் நலன்களை இல்லாமல் ஆக்கும் என்ற கவலைகளின் மத்தியில் இந்த ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை (அல்லது சிஇடிஎ -ஐ) பெல்ஜியத்தின் ஐந்து அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில் ஒன்று தடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறைஸ்டியா ஃபிரிலான்ட் (இடது) கனடா பேச்சுவார்த்தை அணிக்கு தலை…

  7. அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா? அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறுவதாக திரும்ப திரும்ப பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், அவ்வாறு பெரிய அளவிலான மோசடி நடைபெறுவது சாத்தியம்தானா? அமெரிக்க தேர்தல் இயந்திரம் அவ்வளவுக்கு பலவீனமானதா? என்பது பற்றி இந்த கட்டுரையில் வாஷிங்டன் செய்தியாளர் வனிசா பார்ஃபோர்டு ஆராய்கிறார். அமெரிக்காவில் "பெரிய அளவிலான போலி வாக்குகள்" போடப்படுவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற சாத்தியம் உள்ளதா? "நேர்மையில்லாத மற்றும் திரித்து கூறுகின்ற ஊடகங்கள்" மீது குற்றம் சுமத்தி, "தேர்தலில் தில்லுமுல்லு" நடைபெற…

  8. இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொசூல் மீதான தாக்குதல் துவங்கியது; அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பை துரத்துவதற்கான மாபெரும் நடவடிக்கை. * மியான்மரின் வடக்கே ரக்கைன் மாநிலத்தில் மீண்டும் வன்முறை; தீவிரவாதிகளே காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்ட, ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுகிறார்கள். * விண்வெளிக்கு பறந்த சீன வீரர்கள்; விண்ணிலுள்ள அந்நாட்டின் விண்ணாய்வுக் கூடத்தில் அடுத்த ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்வது அவர்களின் நோக்கம்.

  9. கலே முகாமில் குழந்தைகளின் நிலை: கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அவசர அழைப்பு கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது. பிரிட்டனில் தங்கள் குடும்பம் இருக்கும் அகதிக்குழந்தைகளுக்கான, விரைவுபடுத்தப்பட்ட விதிகள் மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள், இந்த வாரம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வ…

  10. மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இனதிய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது. வெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர். மியான்மர் அரசுக்க…

  11. புதுடில்லி:'வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப் பட்டுள்ள, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் நிறத்தை இழந்து வருவதற்கு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படு வதே முக்கியகாரணம்' என,இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால். விஞ்ஞானிகள் ஆய்வு: வெள்ளை பளிங்கு கற்களால் கட்டுப்பட்டுள்ள தாஜ்மஹால், தன் நிறத்தை, படிப்படியாக இழந்து வருகிறது. தாஜ்மஹாலின் இழந்த பொலிவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மினோசெட்டா பல்கலை, ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் மற்றும் கா…

  12. அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். டைசன் கேயின் மகள் டிரினிட்டி கே இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார் லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். 100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு…

  13. கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பூடான் நாடு வழியாக, அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கிராக்கி பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, மருந்துகள் தயாரிக்க, சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பாம்பு விஷத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நல்ல பாம்பு விஷத்தை கடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 200 கோடி மதிப்புள்ள…

  14. வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டு கொண்டுள்ளார். பயங்கரவாதம், வளமைக்கான "மிக தீவிர நேரடி அச்சுறுத்தல்" என மோதி விவரித்துள்ளார். கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, இந்தியாவின் அண்டை நாடுதான் "பயங்கரவாதத்தின் அடிதளம்" என்று கூறி மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார். இந்திய ராணுவ முகாமின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக இந்தியா, பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ள…

  15. சிரியா கைதி தற்கொலை; ஜெர்மன் சிறை கையாண்ட விதத்தில் 'தவறுகள்' கடந்த வாரம் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்து கொண்ட, குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவராக கருதப்பட்ட சந்தேக நபர் தொடர்பான சம்பவத்தில், தவறுகள் நடைபெற்றிருப்பதாக ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தின் நீதி அமைச்சர் ஒப்பு கொண்டுள்ளார். சனிக்கிழமை சந்தேக நபரின் குடியிருப்பில் தேடுதல் நடத்திய காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டனர் இஸ்லாமியவாத சந்தேக நபர்களை கையாள்வது தொடர்பாக சிறைச்சாலையின் அமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதிலிருந்து பாடங்களை கற்றுகொள்ள வேண்டும் என்று செபாஸ்டியான் கெம்கோக் என்பவர், வெல்ட் அம் ஸேண்டாக் என்ற ஜெர்மனி நாளிதழிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஊழி…

  16. பிரிட்டன் வெளியேற்றம்: போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி பிரசாரம் செய்த முன்னிலை அரசியில்வாதிகளில் ஒருவர், பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளதை பிரிட்டன் நாளிதழ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் பற்றி முன்னதாக எழுதியிருந்த ஆனால் வெளியாகாத கட்டுரை ஒன்றில் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்திரு்நதார் வெளியாகாத அந்த கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருப்பதால் ஆகின்ற செலவு மிகவும் குறைவானது என்ற…

  17. பான் கி-மூன் சாதித்தது என்ன? கடந்த 2014 அக்டோபரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் பான் கி-மூன் பயணம் செய்தார். அங்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் அமைத்திருந்த சுரங்கப் பாதையை அவரே நேரடியாக பார்வையிட்டார். நூறு மாடுகளை மேய்க்க ஒரு குச்சி போதும். 100 மனிதர்களை மேய்க்க 100 குச்சிகள் தேவை என்கிறது ஓர் ஆப்பிரிக்க பழமொழி. ஐ.நா. சபையை வழிநடத்துவதும் அப்படித்தான். 193 நாடுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்து வது சாதாரண விஷயமில்லை. பத்து ஆண்டுகள் ஐ.நா.வை வழிநடத்தியுள்ள பான் கி-மூன் கூறியபோது, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்துமே தங்களை தலைவராகப் பாவிக்கின்றன. தங்கள் சொல்படிதான் செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றன. அது எப்படி சாத்தியம…

  18. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து சிரியா குறித்து ஆலோசிக்க லண்டனிற்கு சென்று கொண்டிருகிறார். சனிக்கிழமையன்று ஸ்விட்சர்லாந்தில் ரஷியா மற்றும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கும் உடன்படாத சிரியாவின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கெர்ரி நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கெர்ரியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய யோசனைகள் ஆலோசிக்கப்பட்டன என்றும், சிரியாவில் அமைதி நிலவுவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு அது வழிவகுக்கும் என தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரஃப், ஆலோச…

  19. இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு புதிய கவுரவம் உலகின் மிக நீண்ட கால மன்னராட்சிக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ் (88) நேற்று முன் தினம் காலமானார். கடந்த 1946-ல் அரியணை ஏறிய அவர் 70 ஆண் டுகள், 4 மாதங்கள் மன்னராக நீடித்தார். உலகின் மிக நீண்டகால மன்னராக அவர் விளங்கினார். அவரது மறைவைத் தொடர்ந்து அந்தப் பெருமை தற்போது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது. 90 வயதாகும் அவர் 1952-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றார். அவர் 64 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்த…

  20. பிரிட்டனில் பேர் பயிற்சி பெறுவதற்காக வந்த லிபிய ராணுவ பயிற்சி படையினர் நடத்திய பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு பல இலட்சக்கணக்கான டாலர் இழப்பீட்டை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செலுத்தியிருக்கிறது. கேம்பிரிட்ஜ்க்கு அருகிலுள்ள படையினர் பயிற்சி தளம் 2014 ஆம் ஆண்டு முந்நூறுக்கும் மேலான லிபிய ராணுவ பயிற்சி படையினர் இங்கிலாந்தின் தென் பகுதிக்கு வந்தனர். கர்னல் கடாஃபியின் வீழ்ச்சிக்கு பின்னர் லிபியாவை ஸ்திரப்படுத்த உதவுவதற்கு உருவாக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் பகுதியாக அவர்கள் வந்திருந்தனர். பாலியல் தாக்குதல்கள் வெளிவர தொடங்கிய பிறகு, அந்த படைப்பிரிவினர் முன்னதாகவே தாயகம் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்களால் நடத்தப்பட்ட த…

  21. ஆஸ்திரேலிய புதுமணத் தம்பதியரை இலக்கு வைத்து தாக்கிய கோபமடைந்த பறவைகள் ஒவ்வோர் ஆண்டும் “திடீர் தாக்குதல் பருவத்தில்” குண்டுக் கரிச்சான் பறவைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் நூற்றுக்கணக்கானோரில் ஒரு புதுமணத் தம்பதியினர் தான் ஃபிலிப் மற்றும் சாரா மரியா புதிதாக திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் சிறந்த படமாக முதல் பார்வையிலேயே இது தெரிகிறது அல்லவா! கணவரும், மனைவியும் தங்களுடைய நெற்றியோடு நெற்றி வைத்து ஒட்டிக்கொண்டு, ரம்மியமான சூழலை அனுபவித்து இன்புறுகிறார்கள். சிவ பூஜையில் கரடி நுழைவது போல அங்கு வந்ததுதான் குண்டுக் கரிச்சான் குருவி. ஏதோ பறவைகள் பற்றிய கொடூர பழைய காட்சியை விவரிக்கிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவ…

  22. இரு புதிய நண்பர்களைவிட ஒரு பழைய நண்பரே சிறந்தவர்: புதின் முன்னிலையில் ரஷ்யாவுக்கு மோடி புகழாரம் ரஷ்ய அதிபர் புதின் (இடது), பிரதமர் நரேந்திர மோடி (வலது). | படம்: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம். புதிய நண்பர்கள் இருவரைவிட ஒரே ஒரு பழைய நண்பர் மேலானவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கோவாவில் நடைபெறும் 2 நாள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசித்தனர். பின்னர், அங்கு இருந்தபடியே கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பணியைத் த…

  23. கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர். இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது - மோதி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின. இந்…

  24. 1937 ஆம் ஆண்டு நான்ஜிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனத்திற்கு வழங்குகின்ற நிதி ஆதரவை ஜப்பான் நிறுத்தி வைத்திருக்கிறது. இரண்டாவது சீன தேசிய நான்ஜிங் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு இரண்டாம் உலகப் போரின்போது, முன்னாள் சீனாவின் தலைநகரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஜப்பான் படையினர் கொன்று குவித்தனர். ஆனால், நான்ஜிங் பாலியல் வல்லுறவு என்று அறியப்படும் இந்த படுகொலை பற்றி பெரிதாக பேசப்படுவதை ஜப்பான் விரும்புவதில்லை. எனவே, அது பற்றிய ஆவணங்கள் யுனெஸ்கொவில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, அவற்றை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்…

  25. தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் காலமானார் தாய்லாந்தின் மன்னர் பூமிபொல் அட்டுலியடேஜ், தனது 88ஆவது வயதில், இன்று வியாழக்கிழமை (13) காலமானார் என, தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அரச மாளிகையின் அறிவிப்புத் தெரிவித்தது. உலகில் அதிக காலம் அரச பொறுப்பில் காணப்பட்டவர் என்ற பெருமையைக் கொண்ட மன்னர், தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 18ஆவது வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னர் பூமிபொலின் 64 வயதான மகன், மகா வஜிரலோங்கொன், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/183…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.