Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தாக்குதல் பற்றி கருத்தெதும் தெரிவிக்காமல் உள்ள இந்திய முஸ்லீம்களின் மௌனம் குறித்து பாலிவூட் நடிகர் இர்பான் கான் நேற்று தனது முகநூலில் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரின் இந்தப் பதிவு, உடனடியாக பலரது கவனத்தையும் பெற்று சமுக வலைதளமான முகநூலில் வேகமாகப் பரவியது.இர்பான் கானின் பதிவுக்கு 1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிலாக கிடைத்துள்ளன. இர்பான் கான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பல முஸ்லீம்கள் பதிலளித்துள்ளனர்.டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளரான வாசிம் அக்ரான் தியாகி இது குறித்து குறிப்பிடுகையில், ''ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் முஸ்லீம்கள் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிர…

  2. டாக்கா உணவக தாக்குதலுக்காக தீவிரவாதிகளாக மாறிய பணக்கார இளைஞர்கள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான உணவகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் என்றும் அதில் ஒருவர் ஆளும்கட்சி தலைவரின் மகன் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. டாக்காவில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உண வகம் மிகவும் பிரபலமானது. சுற்றுலா வுக்கு வரும் வெளிநாட்டு பயணி களுக்கு இந்த உணவகம் பிடித்த மான இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏழு பேர் அங்கி ருந்த 19 வயது இந்தி…

    • 1 reply
    • 354 views
  3. பிரிந்தாலும் பிரச்சினை! கடந்த இரு வாரங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. ஆர்பிஐ கவர்னராக இரண்டாம் முறை நீடிக்கப் போவதில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டார் (ரெக்ஸிட்). அடுத்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறலாம் என பொது வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துவிட்டன (பிரெக்ஸிட்). மூன்றாவது சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துவிட்டார் லயோனல் மெஸ்ஸி (மெக்ஸிட்). இந்த மூன்றில் இரண்டு விஷயங்கள் இந்திய பொருளாதாரத்துடன் இணைந்தவை. ரெக்ஸிட் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் சரியும் போக்கு காணப்பட்டது. பிரெக்ஸிட்டால் பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. ரெக்ஸிட்டால் ஏற்பட்ட பாதிப்பை சி…

  4. இன்றைய நிகழ்ச்சியில் * டாக்காவில் வெள்ளியன்று நடந்த இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் தொடர்பில் வங்கதேசத்தில் இருவர் கைது. * பாக்தாதில் ஞாயிறன்று நடந்த குண்டுத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நூற்று அறுபத்தைந்தாக அதிகரிப்பு. கவலையீனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் இராக்கிய பிரதமர். * கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை வறட்சி பிடித்து ஆட்டும் நிலையில் ஒட்டக பாலுக்கான வணிக வாய்ப்பு அதிகரிப்பு.

  5. சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் திங்களன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மதீனா நகரில் அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளி வாசலின் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அருகில் கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் தற்கொலை குண்டுதாரியுடன் படையினர் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புனித மதீனா நகரிலுள்ள அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளிவாசல் இதேவேளை கத்தீவ் நகரிலும் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் தற்கொலை குண்டுத்தாக்குல் ஒன்று இடம்பெற்றதாக செய்தி…

  6.  பதவி விலகினார் நைஜல் ஃபராஜ் ஐக்கிய இராச்சியத்தின் தேசியவாதக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் பராஜ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு, முக்கியமான இருவரில் ஒருவரான பராஜ், அவ்வாறு விலகி இரு வாரங்களுக்குள், தனது கட்சித் தலைமையிலிருந்து விலகியுள்ளார். எப்போதுமே, முழுநேர அரசியல்வாதியாக இருப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த பராஜ், ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகியுள்ள நிலையில், அரசியல்வாதியாகத் தன்னால் அடையக்கூடியவற்றை, தான் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். "விலக வேண்டுமென்ற தரப்பு, சர…

  7. டாக்காவில் தாக்குதல் நடத்தியவர்களில் புகைப்படங்கள் வெளியீடு பங்காளதேஷின் தலைநகர் டாக்காவில் குல்‌ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின் புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது. அவர்களது பெயர் ஆகாஷ், பிகாஷ், டான், பட்கான் மற்றும் ரிபான் என வெளியிட்டுள்ளது. இவர்கள் டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர்களாகும். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்களாகும்.கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியில் இருந்து மாயமாகி இருந்தனர். …

  8. இந்திய மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை எந்தெந்த தேவைகளுக்காக செலவிடுகிறார்கள்? என்பது குறித்து மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மாதிரி சேவை நிறுவனம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு நடத்தியது.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு உட்பட்ட 7,969 கிராமங்களை சேர்ந்த 47 ஆயிரத்து 535 குடும்பங்களிலும், 6,048 நகரங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 65 குடும்பங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சலூன் மற்றும் அழகு நிலைய சேவைகள், தொலைக்காட்சி, ரேடியோ சேவை, சலவை, பழுதுபார்த்தல், பராமரித்தல், தகவல் தொடர்பு, மதவழிபாடு, பொழுதுபோக்கு, கலாசார சேவைகள், வியாபாரம், பயணங்கள், தையல் என 14 சேவைகளுக்கான செலவினங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. …

  9. ஹிலாரியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக இருந்த போது, அலுவலகத் தேவைகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்தினார் என்பது தொடர்பான விவகாரத்தில், ஹிலாரி கிளின்டனிடம் மூன்றரை மணிநேரங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விசாரணைகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அதிக கவனத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமானவரா என்பதில், இந்த மின்னஞ்சல் விவகாரமும் அடிக்கடி உரையாடப்படும் நிலையில், இந்த விசாரணைகள் இடம்…

  10. கிளி சாட்சியம்? கிளி ஜோசியம் கேட்டிருப்போம். கிளி சாட்சியம் சொல்லி கேட்டிருக்கிறோமா? அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கணவர் மனைவி இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கணவர் கொலையில் முடிந்திருக்கிறது. துப்பாக்கியை எடுத்து வந்து கணவனை குறிவைத்த போது, 'ஹனி டோன்ற் சூட் மீ' என்று கணவர் பல தடவை அவலக்குரல் எழுப்பியுள்ளார். இந்த அவலக்குரலை அப்படி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கூண்டுக்கிளி. கொலை, வீடு பூந்த கொள்ளையடிக்க வந்தவர்களால் நடந்தது என்று மனைவி சொல்வதற்கு ஆப்பு வைத்த கிளியால் மனைவி கைதாகி நீதிமன்றில் நிற்கிறார். கிளியும் கோட்டுக்கு சாட்சியமளிக்கப் போகிறது. மனைவியின், சட்டத்தரணிகள் ஏற்கப்…

  11. சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல் சவுதி அரேபியா,ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை நடத்திய தற்கொலை தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே இன்று அதிகாலை தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று அதிகாலை ஜெட்டாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

  12. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமுன் நாடாளுமன்ற ஒப்புதல் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு நோட்டிஸ் பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வழிமுறையை, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொடங்கமாட்டோம் என்ற உறுதிமொழிகளை பிரிட்டிஷ் அரசிடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாக, லண்டனிலிருந்து செயல்படும் சட்ட நிறுவனம் ஒன்று கூறுகிறது. அத்தகைய ஒரு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று நோட்டிஸ் கொடுப்பது சட்டபூர்வமற்றதாக இருக்கும் என்றும் அத்தகைய முடிவு சட்டச்சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் என்றும், மிஷ்கான் தெ ரேயா என்ற இந்த நிறுவனம் கூறுகிறது. அது பெயர் குறிப்பிடப்படாத வர்த்தகர்கள் மற்றும் கல்வியாளர்கள…

  13. சிரிய எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கில்லிஸ் பகுதியில் துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் பேசுகையில், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போருக்கும், அதனால் ஏற்பட்ட 6 லட்சம் உயிரிழப்புகளுக்கும் மூலக்காரணமாக இருந்தவர் அதிபர் ஆசாத்துதான். ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிகப் பெரிய தீவிரவாதி ஆசாத் என கடுமையாக விமர்சித்துள்ளார். தற்கொலைப்படை தாக்குதல் நடந்த துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு ரகசியமாக வருகை தந்த அதிபர் எர்டோகன் அங்கு வைக்கப்பட்டிருந்த தாக்குதலில் உயிரிழந்த விமான நிலைய பணியாளர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு துருக்கி குடியுரிமை வழங்கப்படும் எனவும் உறுத…

  14. நியூயார்க் நகரில் குண்டு வெடிப்பு?: ஒருவர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மத்திய பூங்காவில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த இச்சம்பவம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில் இது ஒரு வெடி விபத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். http://www.dinamani.com/latest_news/2016/07/03/நியூயார்க்-நகரில்-குண்டு-வெ/article3512144.ece

  15. குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது. விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார். முகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ht…

  16. ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைய சாத்தியகூறு ஆஸ்திரேலியாவின் பொது தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறு நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாயப்பு பெரும்பான்மை பெற்று அரசு அமைக்கலாம் என்று நம்புவதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். கீழவையில் மட்டும் பிரதமரின் கன்சர்வேடிவ் கூட்டணி குறைந்தது 11 இருக்கைகளை இழந்திருக்கிறது. தொழிலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இத்தேர்தல் முடிவு என எதிர்க்கட்சி தலைவர் பில் ஷாட்டன் கூறியிருக்கிறார். …

  17. விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அல்லது நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும். அதேபோன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ, விம்பிள்டனின் அகமது விமான நிலையங்களையும் தாக்குவோம் என மிரட்டியுள்ளனர். எனவே விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து இருநாட்டு விமான நிலையங்களிலும் பாத…

  18. மியான்மர் மசூதி தீ வைத்து தகர்ப்பு மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யா…

  19. பிரான்சில் சௌதிக்கு சொந்தமான மசூதி திறப்பு சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி ஒன்று, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள நீஸ் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் நீஸ் நகரில் சௌதி அரேபியாவுக்கு சொந்தமான மசூதி திறப்பு ( படத்தில் பாரிஸில் உள்ள பெரிய மசூதி- ஆவணப்படம்) பல ஆண்டுகளாக இந்த மசூதி திறக்கப்படுவதற்கு அதிகார வட்டாரங்களில் எதிர்ப்பு நிலவியது. நீஸ் நகர மேயர் பிலிப் ப்ரதால் இந்த மசூதி திறக்கப்பட ஒப்புதல் அளிக்க மறுத்ததன் பின்னர், அப்பகுதியின் பிராந்திய நிர்வாகி, அதற்கு ஒப்புதல் வழங்கினார். ப்ரதாலுக்கு முன்னர் மேயராக இருந்த கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி , இந்த மசூதிக்கு சொந்தக்காரரான, சௌதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சர், ஷேக் சலே பின்…

  20. பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video) ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். பாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 130 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று…

  21. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகி விடும் : ஆன்டிரியா உறுதி ஐரோப்பிய யூனியனில் இருந்து எதிர்வரும் ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும் என அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஆன்டிரியா லீட்சோம் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கடந்தமாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 இலட்சத்து 69 …

    • 1 reply
    • 515 views
  22. தாலிபான் இஸ்லாமியவாத அமைப்பின் தலைவர், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரிப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த மே மாதம் தலைவராக அவர் நியமிக்கப்பட்டத்திலிருந்து அவரிடமிருந்து வரும் முதல் செய்தி இதுவாகும்.ஆப்கானிஸ்தானில் நிலவும் உண்மை நிலையை வாஷிங்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும், பயனில்லாத பலப்பிரயோகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் மவுலவி ஹயபத்துல்லா அகுந்த்ஸாதா கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இருப்பதால் ஜிஹாதிகளின் போராட்ட உறுதியை பலவீனமாக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். கடந்த வியாழன் அன்று, ஆப்கன் தலைநகர் காபூ…

  23. 9/11 இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான ‘கோப்பு எண் 17’ வெளியிடும் ரகசிய தகவல்கள் 9/11 பயங்கரவாதத் தாக்குதல். | கோப்புப் படம்: ஏ.பி. 9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கோப்பு எண் 17-ன் மூலம் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இந்தக் கோப்பை அமைதியாக வெளியிடப்படுவதற்கான ஆவணமாக்கியுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியாவுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ‘தீவிரமான சவுதி ஆதரவு அமைப்பு’ “பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் தீவிர சவுதி ஆதரவு இருந்துள்ளது. கோப்பு எண் 17-ல் கூடுதலாக விடை தெரியாத சில கேள்விகல் எழுந்துள்ளன. 9/11 பற்றி இப்படித்தான் நாங்கள் சிந்திக்கிறோ…

  24. உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள் 2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது. ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது. கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில…

  25. அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல் ; கன்சர்வேடிவ் கூட்டணி முன்னிலையில் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகிய வண்ணமுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் அடிப்படையில் கன்சர்வேடிவ் கூட்டணி 3 ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. http://www.virakesari.lk/article/8436

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.