உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் …
-
- 0 replies
- 401 views
-
-
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதை சவூதி நிறுத்த வேண்டும் - ஹிலாரி கிளிண்டன் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஒர்லாண்டோ தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் பேசிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், பள்ளிகளுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஒர்லாண்…
-
- 1 reply
- 297 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவின் மாஞாபி நகரத்தை மீட்க கடும் முயற்சி; கூட்டணிப்படையினரின் முன்னரங்கிலிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். சொவாடோ கிளர்ச்சி நடந்து நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நூற்றுக்கணக்கானோர் பலியான நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக வெட்டுக்கிளிகள் பெரும் படையெடுப்பு; காய்கறிகளையெல்லாம் வயலிலேயே அழிக்கும் இவற்றைத் தடுக்க வழி காண்பார்களா விஞ்ஞானிகள்? ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 484 views
-
-
'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது..!' பிரதமரை பின்னி எடுத்த இளம்பெண் (வீடியோ) 'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது' என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக இங்கிலாந்து நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையே பிரதமரான டேவிட் கேமரூன் விரும்புகிறார். இந்த நிலையில், ஃபேஸ்புக்கை கலக்கி வரும் இளம் தலைமுறையினருடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் கேமரூன், அவர்களின் கருத்தை கேட்டுள்ளார். அப்போது, யாஸ்மின் என்ற இ…
-
- 0 replies
- 608 views
-
-
புளுகு மூட்டையா துருக்கி ஜனாதிபதி எர்டொவான்? தனது அரசியல் வாழ்வில் தனது 44ஆவது கௌரவ கலாநிதிப் பட்டத்தை இந்த மாதம் பெற்றுக்கொண்ட துருக்கி ஜனாதிபதி றெசெப் தய்யீப் எர்டொவான், தனது உண்மையான கல்விப் பட்டங்கள் குறித்துப் பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-04 காலப்பகுதியில் பிரதமராகப் பதவி வகித்து, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் எர்டொவானின் கல்விப் பட்டங்கள், வெறுமனே அரசியல் பிரச்சினையன்று. துருக்கியின் அரசியலமைப்பின்படி, நான்கு ஆண்டுகள் நீடித்த பல்கலைக்கழகப் பட்டமொன்றைப் பூர்த்திசெய்து, அதில் சித்தியடைந்தவரே அந்நாட்டு ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியானவராவார். ஜனாதிபதியின…
-
- 0 replies
- 361 views
-
-
ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஒரு பாலுறவுக்காரர்களின் பாலியல் தன்மை காரணமாக, அவர்களை தாக்குபவர்களுக்கு எதிராகப் பேச, பிரிட்டன் அரச குடும்ப அரியணைக்கு ஏற இரண்டாவது நிலையில் உள்ள இளவரசர் வில்லியம், ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையொன்றின் முன் அட்டையில் தோன்றியுள்ளார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஆண் ஒரு பாலுறவுக்காரர்கள், பெண் ஒரு பாலுறவுக்காரர்கள், இரு பாலுறவுக்காரர்கள் மற்றும் அரவாணிகள் ஆகியோர் தாங்கள் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று ‘அட்டிட்யூட்’ எனப்படும் அந்த பத்திரிக்கையில் வில்லியம் தெரிவித்துள்ளார். இங்கில…
-
- 0 replies
- 319 views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் பிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது. சிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/06/1606…
-
- 0 replies
- 222 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டால், 45 பில்லியன் டாலர் அளவுக்கு வரி உயர்வுடன் கூடிய அவரசகால நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ன் எச்சரித்துள்ளார்.அதே நேரத்தில், பெருமளவு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்பர்ன் தெரிவித்துள்ளார்ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக, அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், வெளியேறுவதற்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்கு, நமக்கு நாமே கட்டாய சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் போன்றது என்றும், பொருளாதார…
-
- 0 replies
- 190 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *ஒர்லாண்டோ படுகொலைகளையொட்டி ஒபாமாவுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! எதிர்காலத்தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பதிலும் கருத்து மோதல்!! *உடல் பருமனானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு! பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கொழுப்பும், சர்க்கரையும் உப்பும் அதிகமாகவும் இருப்பதாக எச்சரிக்கை!! *ஆழ்கடலின் அரிய பொக்கிஷத்திற்குள் செல்ல பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு! கடல் மடியில் இறுதித்துயில் கொண்டிருக்கும் Titanicஇன் சகோதரிக் கப்பலின் அரிய காட்சிகள்!! ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 283 views
-
-
அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது. அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர். 'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்…
-
- 0 replies
- 203 views
-
-
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக 'ஊடுருவல்' ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிலரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கணினி வலைஅமைப்புகள் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல் நடவடிக்கை குழுக்கள் ஆகியவைகளும் இந்த ரஷிய குழுக்களின் இலக…
-
- 0 replies
- 237 views
-
-
ஓர்லாண்டோ தாக்குதலில் ஈடுபட்ட ஒமர் மடீனின் மனையிடம் எஃபிஐ விசாரணை ஓர்லாண்டோவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி, 49 பேரை கொன்றதாக கூறப்படும் ஒமர் மடீனின் மனையிடம் எஃபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒமர் மடீனின் மனைவி நூர், அவரின் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கலாம் என்றும், அவர் அறிந்த தகவல்களை அவர் வெளிப்படுத்தாமல் இருந்ததற்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின், என்பிசி நியூஸ் என்ற தொலைக்காட்சி, அவர் இந்த தாக்குதலை நடத்த வேண்டாம் என தனது கணவரை இணங்க வைக்க முயன்றார் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவத்தில…
-
- 0 replies
- 282 views
-
-
தீவிரவாதி ஒமர் மடீனைவிட என் மீதே ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டிரம்ப் சர்ச்சைப் பேச்சு டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். ஆர்லாண்டோ தீவிரவாதி மீதான கோபத்தைவிட ஒபாமாவுக்கு தன் மீதே அதிக கோபம் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் ப்ளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐ.எஸ். ஆதரவாளர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், "நமக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சிக்கல் இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவ…
-
- 1 reply
- 282 views
-
-
ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி சிரியாவில் அமெரிக்கா தலைமை யிலான கூட்டு ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டார். அபு பக்கிர் அல் பாக்தாதி, ரமலான் மாதத்தின் 5-வது நாளில் கொல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இச் செய்தி குறித்து கூட்டு ராணுவப் படை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இராக் செய்தி தொலைக்காட்சி அல் சுமாரியா மற்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளன. http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-தலைவர்-பாக்தாதி-பலி/art…
-
- 0 replies
- 425 views
-
-
கொலைப் பட்டியலுடன் நடமாடிய பிரான்ஸ் கொலையாளி பிரான்சில் போலிஸ் தளபதி ஒருவரையும் அவரது துணைவியையும் அவர்களது வீட்டில் கொன்றவர், கொல்லப்பட இலக்கு வைத்திருந்த பிற நபர்கள் பட்டியலை வைத்திருந்தார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த இலக்குகளில் அடங்குவர் என்று பாரிஸ் அரச வழக்குரைஞர் பிரான்சுவா மொலின் தெரிவித்தார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் கொண்ட அவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட அஞ்சலி செலுத…
-
- 1 reply
- 327 views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக 'த சன்' செய்தித்தாள் பரிந்துரை அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரிட்டனில் அதிகமாக விற்கப்படும் 'த சன்' செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வீணானது, அச்சுறுத்துவது, திறமையற்றது என்பது பரவலாக உறுதியாகி இருக்கிறது என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிடுவது பிரிட்டனின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்யவும், கலாசாரத்தை பாதுகாக்கவும் செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ட…
-
- 0 replies
- 558 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஓர்லேண்டோவின் ஒமர் மதீன் நாற்பத்தி ஒன்பது பேரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு கொடூரமான கோபத்தின் பின்னிருந்த காரணம் என்ன? இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒருபாலுறவாளர்களுக்கான ஓர்லேண்டோ இரவு விடுதிக்கு பல முறை சென்றது ஏன்? பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா என்று ஆராய்கிறது உலக சுகாதார நிறுவனம்; சிகா வைரஸ் பரவல் அச்சத்தால் இந்த மறுபரிசீலனை. ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் நவீன அடிமைத்தனம்; பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு சம்பளமின்றி வேலைவாங்கப்பட்ட கிழக்கு ஆப்ரிக்கப்பெண்மணியின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 288 views
-
-
மலேசியாவின் 'இஸ்லாமிய' விமானத்துக்கு தடை மலேசியாவில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் முதல் விமான நிறுவனமான, ரயானி ஏர், விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், ஹலால் உணவை மட்டுமே பரிமாறியது. பயணிகளுக்கு மது தரப்படுவதில்லை. மேலும், விமானப் பணியாளர்கள் அடக்கமாக உடை உடுத்தியிருப்பார்கள். இரண்டு போயிங் 737-400 விமானங்களையும், எட்டு விமானிகளையும், 50 ஊழியர்களையும் வை…
-
- 0 replies
- 365 views
-
-
ஜெர்மனி: பத்தாண்டு அரசுக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சி ஜெர்மானிய அரசின் பத்தாண்டு கடன்பத்திரங்களின் வட்டி விகிதம் முதல்முறையாக பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியை தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பலவீனம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படுகின்ற ஜெர்மானிய அரசின் கடன்பத்திரத்தை வாங்க விரும்புவோர் யாராக இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இந்த வட்டி விகித வீழ்ச்சி காட்டுகிறது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட பிற நாடுகளில், இந்த மைல் கல்லுக்கு கீழ் வட்டி விகிதம் ஏற்க…
-
- 0 replies
- 203 views
-
-
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கவே பிரிட்டன் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கு பதிவாகும் வாக்காக அமையும் - ஜெரெமி கோர்பயின்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கும் வலிமையான காரியத்திற்கு அவர்கள் (தங்கள் கட்சியினர்) அனைவரும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் புடை சூழ்ந்திருக்க லண்டனின் மத்திய பகுதியில் நடைபெற…
-
- 0 replies
- 181 views
-
-
சுட்டவர்கள் இறந்தார்களா என்பதை சோதித்த கொலையாளி அமெரிக்காவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தன்னால் சுடப்பட்டவர்கள் இறந்து விட்டார்களா என்பதை உறுதிசெய்ய அவர்களிடம் எப்படி திரும்ப வந்தார் என்பதை விவரித்துள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்து, ஓர்லாண்டோ மருத்துவனையில் இருக்கும் ஏஞ்சல் கோலன், தான் காலில் மூன்று முறை சுடப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட 29 வயது ஒமர் மடீன் தனது தலையில் சுடுவதற்கு குறிவைத்ததாகவும் ஆனால் அந்த குண்டு குறி தவறியது என்றும், பின்னர் தான் இறந்தவர் …
-
- 0 replies
- 351 views
-
-
பங்களாதேஷில் 8,559 பேர் கைது பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில் 8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின்…
-
- 0 replies
- 339 views
-
-
அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் தகுதி, இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் "டான் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டி வருமாறு:என்எஸ்ஜியில் உறுப்பினராக விரும்பும் நாடுகளுக்கு, அந்த அமைப்பு சில விதிகளை நிர்ணயிக்கும்பட்சத்தில், அந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே அதிக தகுதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில், என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்த பிறகு, நாங்…
-
- 0 replies
- 231 views
-
-
இரவு விடுதி தாக்குதலை அடிப்படைவாத இஸ்லாத்துடன் தொடர்புபடுத்த மறுத்த பராக் ஒபாமா பதவி விலக வேண்டும் ; டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒர்லான்டோவில் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடிப்படைவாத இஸ்லாத்துடன் தொடர்புபடுத்த தவறியமைக்காக அவர் பதவி விலக வேண்டும் என குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதி பதவி நிலைக்கான போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். “எமது நாட்டை அடிப்படைவாத இஸ்ல…
-
- 0 replies
- 211 views
-
-
புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிதாரியின் தந்தை ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒர்லாண்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீனின் (29 வயது) செத்திக் மதீன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு வழங்கி வந்ததாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது. அத்துடன் செத்திக் மதீன் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள பாராளுமன்றம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அவர் அமெரிக்க வெளிநாட்டு விவகாரம் தொடர்பான சபையின் தலைவர் எட் ரோய்ஸ் உள்ளடங்கலாக முக்க…
-
- 0 replies
- 249 views
-