உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருட முயன்றதாகவும், உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டை உளவு பார்க்கும் அமெரிக்காவில் ஏவலர்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. தங்கள் நாட்டு ராணுவ ரகரியங்களை உளவு பார்த்தாக அமைரிக்க இளைஞர் ஒருவரை ஆதாரங்களுடன் வட கொரியா சமீபத்தில் கைது செய்தது. குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதைபோல , மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் …
-
- 0 replies
- 575 views
-
-
செவ்வாய்க்கிழமை வரை பிரஸல்ஸ் விமான நிலையம் மூடல் பிரஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பயணிகள் விமான சேவை தொடங்காது என பெல்ஜிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெல்ஜியம் விமான நிலையம் கடந்த வாரம் அங்கு தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வு செய்யவுள்ளனர். இதனிடையே 31 பேர் உயிரிழக்கக் காரணமான அந்த குண்டுவெடிப்புகளை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா எனும் கேள்விகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இதற்கிடையில் பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் சாலாஹ் அப்தஸ்லாமிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் குற…
-
- 0 replies
- 390 views
-
-
தி இன்டிபென்டண்ட் நாளிதழின் அச்சுப் பதிப்பு நிறுத்தம் பிரிட்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக்கொள்கிறது. தி இன்டிபென்டெண்டின் முதல் இதழும் கடைசி இதழும். கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே படிக்கக் கிடைக்கும். பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும். 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறையாகும். 1986ல் நிறுவப்பட்ட இந்த நாளிதழ், ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கென பிரத்யேகம…
-
- 0 replies
- 351 views
-
-
ஈராக் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி! (படங்கள்) பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்துள்ளனர். அங்கு, ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாடில் இருந்த குபேயிசா நகரத்தை அரசுப்படைகளும் சன்னி பழங்குடியின போராளிகளும் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்ய ரசூல் தெரிவித்து இருந்தார். இந…
-
- 0 replies
- 327 views
-
-
அமெரிக்கத் தாக்குதலில் மூத்த ஐஎஸ் தலைவர் சாவு ராணுவத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் நிதியமைச்சர் என்று கருதப்படும் மூத்த தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என்ற இந்த நபரின் தலைக்கு அமெரிக்கா 7 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது. அந்த நபரின் பெயர் ஹாஜி இமாம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டர் கார்டர் தெரிவித்திருக்கிறார். அவரது உண்மைப் பெயர் அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என கூறப்பட்டுள்ளது. எப்படி, எங்கே அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் சொல்லப்படவில்லை. ஐஎஸ்ஸின் அமைச்சரவை என்று சொல்லப்படும் அமைப்பை தாங்கள் தொடர்சியாக அழித்துவருவதாக கார்டர்…
-
- 0 replies
- 514 views
-
-
ரஷ்யாவும் ஜப்பானும் உரிமைகோரும் சில தீவுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஆளில்லா விமானங்களையும் நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.குரில் தீவு எனப்படும் அந்தத் தீவுகளில் கடற்படைத் தளத்தை அமைப்பது குறித்தும் ரஷ்யா யோசித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவுகளை ஜப்பான் நார்தன் டெரிட்டரீஸ் என்று அழைத்துவருகிறது. அந்தத் தீவுகளில் ராணுவதளங்களை அமைக்கப்போவதாக ரஷ்ய அரசு முன்பே கூறியிருந்தது.இரண்டாம் உலகப் போரின் முடிவில் குரில் தீவுகளை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததையடுத்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=154168&category=WorldNews&language=tam…
-
- 0 replies
- 587 views
-
-
இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் சிறுபான்மையின இந்து மக்கள் அதிகமாக வாழும் உமர்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஒரேமகனான பிலாவல் பூட்டோ கலந்து கொண்டார். அவருக்கு ராஜஸ்தானி தலைப்பாகையை அணிவித்த இந்து மக்கள், அவர்மீது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் கூடியிருந்த மக்களின்மீது வண்ணப்பொடிகளை தூவி வாழ்த்து தெரிவித்தார். …
-
- 0 replies
- 284 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சற்று முன்னர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு நபரை காவலர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக பெல்ஜியத்தில் இருந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஊடக செய்திகள்; பிரஸ்ஸல்ஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கூறும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் பேட்டி; இராக்கிய கிராமம் மீது ஐ எஸ் அமைப்பு நடத்திய ரசாயனத்தாக்குதல் குறித்து அங்கு சென்ற பிபிசி செய்தியாளர் தரும் நேரடித் தகவல்கள்; நோய்த்தடுப்பு மருத்துவமுறை மூலம் முதல் ரக சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா? இதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 372 views
-
-
தேசப்பற்று என்பது ஆபத்தான ஒரு கருவியாகும். அதைப் பற்றுவோர், தத்தம் நாடுகளில் அழிவுக்கே வித்திட்டுள்ளனர். தேசப்பற்றைக் கையாளல், கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைய, முற்போக்கான திசைகாட்டிய தேசப்பற்றும் தேசநலனும், அடக்குமுறையின் ஆயுதங்களாகவும் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகவும் இன்று மாறியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லொவாக்கியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்லொவாக்கிய தேசியவெறியை, அதன் நவீன நாஸிச வடிவில் பரப்புகின்ற 'எங்கள் ஸ்லொவாக்கியா' கட்சியானது, 8 சதவீத வாக்குகளைப் பெற்று 10 சதவீத நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, முதன்முறையாக வாக…
-
- 0 replies
- 429 views
-
-
பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்பு சம்பவம் : பதற்றத்தில் மக்கள் பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரஸ்சல்ஸ் நகரில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சேத விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/4554
-
- 0 replies
- 345 views
-
-
தீவிரவாத தாக்குதல் சதி ஒன்று பிரெஞ்சு காவல்துறையினரால் முறியடிப்பு பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரெஞ்சு காவல்துறையினர் இரவு முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் சோதனை நடத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதல் சதி ஒன்று பிரெஞ்சு காவல்துறையினரால் முறியடிப்பு சிறிய அளவிலான வெடிபொருட்களை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புறநகர்ப் பகுதியான ஆஷான்டொய்யில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதால் சதி ஒன்று முன்கூட்டியே முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்த்துறை அமைச்சர் பெயர்னார் கஷ்னோவ் தெரிவித்தார். இந்த சதி திட்டத்திற்கும் பாரிஸ் தாக்குதல்,…
-
- 0 replies
- 341 views
-
-
சிரியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் உள்ளன. அதிபர் பஷர் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்குவதுதான் இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது,ஆனால், இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் சிரியா நாட்டு மக்கள்தான் என்பது ரஷியாவின் நிலைப்பாடாக …
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவில் சிவசேனாவுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளியான டேவிட் ஹெட்லி இன்று வாக்குமூலம் அளித்துள்ளான்.மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் அப்ரூவராக மாறி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை கோர்ட்டில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வருகிறான்.அவ்வகையில், மும்பை தீவிரவாத தடுப்பு கோர்ட் சிறப்பு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி, அபு ஜுண்டாலின் வக்கீல் நடத்திய குறுக்கு விசாரணையின்போது கூறியதாவது:- அமெரிக்காவில் சிவசேனா கட்சிக்கு நித…
-
- 0 replies
- 182 views
-
-
புருஸ்ஸெல்ஸ் நாயகன் அல்ஃபோன்ஸ் யூலா! புருஸ்ஸெல்ஸ் விமான நிலையத்தில், கடந்த செவ்வாய் அன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல உயிர்களை பலி வாங்கியது. அந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேரை, அந்த விமான நிலைய ஊழியர் அல்ஃபோன்ஸ் யூலா மீட்டு, அனைவரின் பாராட்டிற்கும் ஆளாகியுள்ளார். அந்த விமான நிலையத்திலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும் பயணிகளின் பேக்கேஜ் மற்றும் அந்த விமானங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யூலா, குண்டு வெடிக்கும் பொழுது, நுழைவு வாயிலின் அருகே இருந்தார். காயமடைந்த 7 பேரை, சம்பவ இடத்திலிருந்து அகற்றி, மருத்துவ உதவி பெறுவதற்கு அவர் உதவினார். பி.பி.சி -யின் ஐரோப்பிய செய்தியாளர் கேவின் லீ "குண்டு வெடிப்பின் போது யூலா பயணிகளின…
-
- 0 replies
- 271 views
-
-
பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை பெல்ஜியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்கயார்பீக் மாவட்டத்தில் இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இதேவேளை, பிரான்ஸிலும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130398/language/ta-IN/artic…
-
- 0 replies
- 374 views
-
-
சிறுவயதிலிருந்தே இந்தியாவை வெறுத்தேன்: ஹெட்லி டேவிட் ஹெட்லி சிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்ததாக தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி (55), தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி, சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சனால் முன்னிலையில் ஹெட்லியிடம் அப்துல் வகாப் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது: …
-
- 0 replies
- 362 views
-
-
முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ் ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார். கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது. பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்…
-
- 4 replies
- 559 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… * பிரஸ்ஸல்ஸில் கைதான பாரிஸ்-தாக்குதல் சந்தேகநபர் சலா அப்தெஸ்லாம், தன்னைப் பற்றி விளக்கமளிப்பதற்காக விரைவில் தன்னை பிரான்ஸிடம் ஒப்படைக்குமாறு கோரியிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறுகின்றார். * ஆர்ஜண்டீனாவில் ஆயிரக் கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக காரணமான இராணுவ சதிப்புரட்சியின் நாற்பதாவது ஆண்டு நிறைவில், அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு எதிராக போராட்டம். * லண்டனுக்கு அருகே அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மிதக்கும் கதிரொளி மின் உற்பத்தி நிலையம் செயற்படத் துவங்கியுள்ளது குறித்த சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 499 views
-
-
ஐரோப்பியர்கள் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐரோப்பியர்கள் தங்கள் புவி அரசியல் விளையாட்டுகளை ஓரம் கட்டிவிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டுமென ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷெர்ஜெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பியக் கண்டத்தில் பயங்கரவாதிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் லவ்ரோவ் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விவகாரத்தில் ஒத்துழைப்பு இர…
-
- 1 reply
- 395 views
-
-
"ரடொவான் கரடிச் குற்றவாளி"- ஐநா தீர்ப்பாயம் முன்னாள் போஸ்னிய-செர்ப் இனத் தலைவர் ரடொவான் கரடிச்சை மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் என்று ஐநா மன்றத் தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கும் ரடோவான் கரடிச் 1990களில் சரயோவா முற்றுகையின் போது, பொதுமக்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டதில் அவர் வகித்த பங்குக்காக, அவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த கரடிச், போஸ்னியப் போரின் போது இனப்படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், 8,000 முஸ்லீம்களும் சிறுவர்களும் கொல்லப்பட்ட ஸ்ரபரனிட்ஸா படுகொலை தொடர்பாக நீதிமன்றம் இன்னும் தீர்ப…
-
- 0 replies
- 385 views
-
-
"ஆப்ரிக்கக் கரையோரம் கிடைத்தது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் " இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த துகளாக இருக்கும் என்று கருதப்படும் , கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு ஒன்றை ஆராய்ந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது அந்த விமானத்தின் உடைந்த பகுதியாக இருப்பது அதிக அளவில் சாத்தியமானதே என்று கூறுகின்றனர். கிழக்கு ஆப்ரிக்கா கடற்கரையருகே கிடைத்த உடைந்த விமான பாகம் - இரண்டாண்டு ஆகியும் மர்மம் தீரவில்லை கிடைத்த இரண்டு துண்டுகளை தொழில் நுட்பரீதியில் ஆராய்ந்ததில், இவை ஏறக்குறைய நிச்சயமாக , காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்ததாக ஆஸ…
-
- 0 replies
- 457 views
-
-
'எச்சரிக்கையை உதாசீனம் செய்தது பெல்ஜியம்' பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில், விமான நிலையத்தில் தாக்குதல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களில் ஒருவர் தொடர்பாக, தங்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை, பெல்ஜியம் உதாசீனம் செய்ததாக, துருக்கி அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள துருக்கி, அவர் ஒரு 'வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி" என்ற எச்சரிக்கையையே விடுத்ததாகத் தெரிவித்துள்ளது. ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதலாவது தாக்குதல், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தற்கொலைத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை ம…
-
- 0 replies
- 518 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்: உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் செவ்வாயன்று நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் பிரஸ்ஸல்ஸில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த டஜன் கணக்கானோர் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பெல்ஜிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல்களில் முப்பத்தியோரு பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். பெல்ஜியத் தலைநகரில் ஒரு அவசரக் கூட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களும் நடத்தவுள்ளனர். இதனிடையே தனது குண்டு செயலிழந்துப்…
-
- 0 replies
- 297 views
-
-
தற்போதைய தேசியக் கொடியையே வைத்திருக்க நியுசிலாந்து மக்கள் முடிவு வெள்ளிநிற, ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான் கீ கடுமையாக ஆதரித்துவந்தார் பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே நியுசிலாந்து தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்டுள்ள 20 லட்சம் வரையான வாக்குகளின் முதற்கட்ட முடிவுகளின்படி, 57 வீதமான மக்கள் வேறு கொடியொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர். ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான்…
-
- 0 replies
- 251 views
-
-
பிரஸ்சல்ஸ் தாக்குதல்: தீவிரவாதி விட்டுச்சென்ற உயில் மீட்பு பிரசல்ஸ், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இருவரில் பிராஹிம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிராஹிம் தனது கணனியில் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளான். அதில் அவன், ‘‘நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை’’ என கூறி உள்ளார். ‘அவர்’ எ…
-
- 0 replies
- 471 views
-