உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹரிஷ் ரவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கூறும் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது.இதற்கிடையில், வரும் 28-ம் தேதி சட்டசபையில் ஆளும்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அம்மாநில கவர்னர் கிருஷ்ணகாந்த் பால் கேட்டுக் கொண்டுள்ளார். பா.ஜ.க.வின் இந்த மனப்பான்மைக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்…
-
- 0 replies
- 256 views
-
-
'தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவிருந்தேன்' கடந்தாண்டு நவம்பர் 13ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், உயிருடன் காணப்படும் பிரதான சந்தேகநபரான சாலா அப்டெல்சலாம், விளையாட்டரங்கை தற்கொலைத் தாக்குதல் மூலம் தாக்கவிருந்ததாகவும், ஆனால் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பரிஸ் தாக்குதலின் முக்கிய சந்தேகநபரான இவர், தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, நான்கு மாதங்களாகத் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், பிரசெல்ஸில் வைத்து, காலில் சுடப்பட்டு, அவர் பிடிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்திலேயே, இவ்விடயத்தை அவர் வெளிப்பட…
-
- 0 replies
- 359 views
-
-
பிரித்தானியாவில் வாழும் சில முஸ்லிம் சமுகத்தினர் தமது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வகுப்புகளை ஒழுங்கு செய்து படிப்பிக்கிறார்கள்.சிலர் தமது பிள்ளைகள் கேலி வதைகளுக்கு உட்படுத்தப்படுவதை காரணமாக தெரிவித்தே பிள்ளைகளை வீட்டில் வைத்து படிப்பிக்கிறார்கள் வாழ்க்கைமுறைமை, மதம், கேலி வதை ஆகிய காரணங்களுக்காக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டிலே பிள்ளைகளைபடிப்பிக்கும் முறைமை, கடந்த ஆறு ஆண்டுகளில் பிரித்தானியாவில் பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக தெரிவிப்பட்டாலும் தீவிரவாத எதிர்ப்பு வியூகத்தின் ஒரு பகுதியாக அரசு விசாரிப்புகளை மேற்கொள்வதால் இம்மாதிரி வீட்டிலேயே தமது குழந்தைகளை படிப்பிப்பதாக சிலர் பிபிசிக்க…
-
- 0 replies
- 355 views
-
-
உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த திபெத்தியர்கள், தங்களுக்கென்று உள்ள பாராளுமன்றத்திற்காக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது. இந்த உள்நாட்டு போரின் போது ஏராளமான திபெத்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றனர். சுமார் 90 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் தற்போது உள்ளனர். இவர்களுக்கென்ற மாதிரி பாராளுமன்றம்…
-
- 0 replies
- 236 views
-
-
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் பயணம் செய்த சுமார் 900 குடியேறிகள் நான்கு நடவடிக்கைகள் மூலம் இத்தாலி நாட்டின் சிசிலி கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் …
-
- 0 replies
- 285 views
-
-
சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…
-
- 0 replies
- 261 views
-
-
குடியேறிகளை துருக்கிக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை அமலாகிறது. கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகள் மீண்டும் துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற புதிய உடன்படிக்கை ஒன்று அமலுக்கு வந்துள்ள சூழலிலும் குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன கிரேக்க தீவான ரோவிற்கு கிட்டத்தட்ட 40 குடியேறிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்றிலிருந்த இரண்டு பெண்பிள்ளைகள் கடலில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இரண்டு வயது என்றும், மற்றொருவருக்கு ஒரு வயது எனவும் கூறப்படுகிறது. இதனிடையே புதிய விதிமுறைகள் தொடர்பில்,கிரேக்கத…
-
- 0 replies
- 352 views
-
-
எல்லைப் பகுதியில் கூடுதல் படையினரை பிரான்ஸ் நிறுத்துகிறது கடந்த வெள்ளிக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஜிகாதி தீவிரவாதி எனும் சந்தேகத்தின் பேரில் சாலாஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது. பிரான்ஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் பாரிஸில் 130 பேர் உயிரிழக்க காரணமானத் தீவிரவாதத் தாக்குதலில் அப்தஸ்லாம் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுகிறது. பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் எனும் அச்சுறுத்தல் மிகப் பெரிய அளவில் உள்ளது என உள்துறை அமைச்சர் பெர்ணாட் காசந்யூவே தெரிவித்துள்ளார். இதனிடையே அப்தஸ்லாமின் கூட்டாளிகள் ஐரோப்பாவ…
-
- 0 replies
- 192 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் …
-
- 0 replies
- 381 views
-
-
குடியேறிகளின் சடலங்களுக்கு துருக்கி மயானத்தில் இறுதிச் சடங்கு துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கி படகுப் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகளில் இந்த ஆண்டில் இதுவரை 360க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். துருக்கியில் கரை ஒதுங்கும் சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன மத்தியதரைக் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. துருக்கியில் இவ்வாறு கரை ஒதுங்கிய பிரேதங்களில் அனேகமானவை இனம் காணப்படவில்லை. இவ்வாறான சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் அடக்கம் செய்யப்படுகின்றன. `உரிமை கோரப்படாத சடலங்கள…
-
- 0 replies
- 292 views
-
-
பிணைக் கைதியாக உள்ள பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ வீடியோவை ஐ.எஸ்.வெளியிட்டது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள, பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான ஜான் கான்ட்லீ தோன்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸிடம் பிணைக் கைதியாக உள்ள புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ இந்த வருடத்தில் முதல் தடவையாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இராக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள மோசூல் நகரிலிருந்து வெளியிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கருப்பு நிற ஆடை அணிந்து மெலிந்த தோற்றத்துடன் காணப்படும் கான்ட்லீ, இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றபடி, அமெரிக்க விமானப்படையினர், ஐ.எஸ்.இன் ஊடகப் பிரிவு மீது தாக்குதல் நடத…
-
- 0 replies
- 311 views
-
-
பாலஸ்தீனத்தில் பதின்ம வயது சிறுவன் சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான இந்தச் சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 351 views
-
-
கைதான நபரை விரைவில் நாடுகடத்த வேண்டும்: ஃப்ரான்ஸ் அதிபர் பாரிஸ் தாக்குதல் தொடர்பாக நேற்று ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கைதுசெய்யப்பட்ட சலா அப்தேசலாம் மருத்து சிகிச்சை முடிந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காவல்துறையால் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும் சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கியில் சுடப்பட்டு காயமடைந்த சலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த், விரைவிலேயே ஃப்ரான்ஸிற்கு நாடுகடத்தப்படுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாதக் குழுவுக்கு இருக்…
-
- 0 replies
- 545 views
-
-
இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு; குறைந்தது நான்கு பேர் பலி துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை காவல்துறையினர் முழுமையாக மூடியுள்ளனர். இஸ்திக்லால் தெரு என்ற தெருவில் நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் காவல்துறையினரும் விரையும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். குர்திய தீவிரவாத இயக்கமான டிஏகே அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. …
-
- 0 replies
- 299 views
-
-
அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம் படம்: ஏ.பி. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே லுஃப்தான்சா பயணிகள் ஜெட் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 200 அடிக்கு அருகில் ஆளில்லா போர் விமானம் ஒன்று மோதும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானத்தை தரையிறக்கியவுடன் லுஃப்தான்சா ஏ380 விமானத்தின் பைலட் புகார் அளித்தார். விமானம் அப்போது 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு 14 மைல்கள் கிழக்காக பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த ட்ரோன் அபாயம் ஏற்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக அதிலிருந்து திசைதிருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். ஆளில்லா போர் விமான பற்றிய தகவல் இல…
-
- 0 replies
- 376 views
-
-
அமெரிக்காவில் நிலநடுக்கம்:பொதுமக்கள் அச்சம் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியன. கடலுக்கடியில் சுமார் 10 கீ.மீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/60855-earthquake-hits-off-alaska.art
-
- 0 replies
- 439 views
-
-
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் “தமிழுக்கு ஓர் இருக்கை” - 6 மில்லியன் டொலர் நிதி திரட்டும் முயற்சி தீவிரம் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைப்பதற்காக உலகெங்குமுள்ள மக்களிடம் நிதியுதி கோரப்படுகிறது. 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகமானது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு அப்பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பதற்கு (Tamil chair) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 6 மில்லியன் டொலர் ( சுமார் 85 கோடி…
-
- 1 reply
- 710 views
-
-
நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கட…
-
- 23 replies
- 2.9k views
-
-
ரஷ்யாவில் விமான விபத்து ; 61 பேர் பலி [ Saturday,19 March 2016, 04:22:33 ] பிளை டுபாய் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று இன்று சனிக்கிழமை ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர். டுபாயில் இருந்து பயணித்த எப் இசட் 981 ரக பயணிகள் விமானம் தெற்கு ரஷ்யாவில் உள்ள ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல…
-
- 1 reply
- 502 views
-
-
பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட பிரதான நபர் கைது பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் பெல்ஜிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரமாகத் தேடப்பட்ட சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் உள்ள மொலன்பீக் பகுதியில் முன்னதாக துப்பாகி சுடும் சத்தம் கேட்டது. சலா அப்தேஸ்லாம் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் …
-
- 0 replies
- 322 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் நெருக்கடி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, போகும் இடமறியாது ஆயிரக்கணக்கான அகதிகள் தவிக்கிறார்கள். - சிறைக்கம்பிகளுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை. துனிஸிய பெண்கள் சிறையில் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசி. - அழிந்துவரும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க புதிய பிரிவை திறக்கும் லண்டன் மிருகக்காட்சிசாலை.
-
- 0 replies
- 339 views
-
-
சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் பீஜிங்கை தளமாக கொண்ட பத்தி எழுத்தாளர் ஒருவர் ஹாங்காங்குக்கு புறப்பட்டுச் சென்றவேளை காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் பிபிசிக்கு கூறியுள்ளார். சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் செவ்வாயன்று இரவு ஜியா ஜியா என்னும் அந்த பத்தி எழுத்தாளர் விமானத்தில் ஏறச் சென்ற பிறகு, எவராலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகக் கோரும் அனாமதேய கடிதம் ஒன்றை பிரசுரிப்பது தொடர்பில் இவர் தனது பத்திரிகை ஆசிரியரான நண்பர் ஒருவரை எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது. அரசாங்கத்துடன் தொடர்புடைய இணைய தளம் ஒன்றில் அந்தக் கடிதம் பிரசு…
-
- 0 replies
- 519 views
-
-
அகதிகள் முகாமில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு நையப்புடைப்பு கிறீஸ் நாட்டில் உள்ள ஐடோமெனி அகதிகள் முகாமில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்நாட்டு போரால் ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ் நாட்டின் வழியாகவே செல்கின்றனர். கிரீஸில் அண்டை நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதால் ஏராளமான அகதிகள் கிரீஸ் – மெசிடொனியா எல்லையருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 45 ஆயிரம் அகதிகள் வரை கிரீஸ் நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகாமை சேர்ந்த அகதி ஒ…
-
- 0 replies
- 386 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளை பற்றி உளவு பார்த்த ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு கட்டி, வெடிக்கச் செய்து கொடூரமாக, கொலை செய்த செய்தி வெளியாகியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு என்பது ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. ஐ.ஸ். இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிராக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக முறையில் கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில், ஈராக் அரசாங்கத்துக்காக ஐ.எஸ் உளவு அமைப்பை உளவு பார்த்த 6 பேரை அவர்கள் கொ…
-
- 0 replies
- 415 views
-
-
சிரியாவின், தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. அதனால், சிரிய அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தன.இதனையடுத்து, சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 221 views
-