Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும…

      • Haha
    • 4 replies
    • 545 views
  2. Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு …

  3. இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயாராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை காசாவிலும் லெபனானிலும் தனது சகாக்கள் அழிக்கப்பட்டதை பார்த்துள்ளதால் யுத்தமொன்றை தவிர்ப்பதற்கு முயல்கின்றது. இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்வதற்காக பல இராணுவதிட்டங்களை வகுக்குமாறு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கொமேனி பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் நான்கு அதிகாரிகள் இத…

  4. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என…

  5. போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ். காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும் வரை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க ஹமாஸ் மறுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எகிப்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கெய்ரோவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரான ஹம்தான், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறினால் மட்டுமே, தனது அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1405731

  6. அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்சினை பார்த்து நீங்கள் எனது மன்னரில்லை என அவுஸ்திரேலிய செனெட்டர் ஒருவர் கோசமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் நீங்கள் எனது மன்னரில்லை என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டு;ள்ளார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் …

  7. துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அலியெர்லிகயா தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதை சிசிடிவி காண்பித்துள்ளது. தலைநகரிலிருந்து 40கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் துருக்கி ஊடகங்கள் தெர…

  8. மார்ச் மாதம் பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜை அழித்த கொள்கலன் கப்பலுக்கு சொந்தமான மற்றும் இயக்கிய இரண்டு நிறுவனங்களுடன் நீதித்துறை $100 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு ஒரு தீர்வை எட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினெர்ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் - இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் - நிறுவனங்களின் செலவுக் குறைப்பு மற்றும் கப்பலின் பராமரிப்பில் கவனக்குறைவு ஆகியவை பேரழிவுகரமான மோதலுக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிவில் உரிமைகோரலைத் தீர்க்க கிட்டத்தட்ட $102 மில்லியன் செலுத்தும். 213 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சரக்குக் கப்பல் ஆற்றலை இழந்து பாலத்தில் மோதியதில் ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்த ஆறு மாதங்களு…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி, இந்தியா செய்தியாளர் 24 அக்டோபர் 2024, 06:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் இரு பெரும் பணக்காரர்களான ஈலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானிக்கு இடையே ஒரு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் அந்தப் போட்டி. இந்தப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இருந்து வந்தது. ஆனால், பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை, ஏலத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவ…

  10. இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன் பெரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மறுபுறம், உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு. இங்கு…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா …

  12. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை ப…

  13. பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய ஜனாதிபதிக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஜனாதிபதியை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாட்ரிக் ஜான்சன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் கொண்ட, மதத் தலைவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகரின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஹஷேம் சஃபியத்தீன் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், ஹெஸ்பொலா அமைப்பு இதுவரை ஹஷேம் சஃபியத்தீனின் இறப…

  15. டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ் பட மூலாதாரம்,ELIZABETH RUSH கட்டுரை தகவல் எழுதியவர், எலியட் ஸ்டெய்ன் பதவி, பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்ட…

  16. கட்டுரை தகவல் எழுதியவர், நேதன் வில்லியம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ரஷ்யச் சிறுமி, ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுப்பதை எதிர்க்கும், சமாதானச் செய்தியுடனான ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் உலகளாவிய செய்தியானது. இப்போது அந்தத் தந்தை, ‘தண்டனை காலனி’ என்றழைக்கப்படும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அலெக்ஸி மொஸ்கலேவ் என்ற அந்த நபரின் மகள் மாஷா வரைந்த அந்த ஓவியத்தில் ‘போர் வேண்டாம்’ என்றும் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தைக் குறித்து 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. …

  17. அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்றிரவு இது ஒரு சோகமான நிகழ்வு. இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். இருப்பினும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்…

  18. 85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா! ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று (21) தெரிவித்தார். ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்கிழமை இருதரப்பு சந்திப்பை நடத்துவார். இதன்போது, மீதமுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெ…

  19. பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்! இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்களன்று (21) ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை வெளிப்படுத்தியது. அதில், பெய்ரூட்டில் உள்ள ஒரு வைத்தியசாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் ஹெஸ்புல்லா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளமை கண்டறியப்பட்டதாக கூறியது. ஹெஸ்புல்லாவின் நிதி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர்…

  20. தனது ஆன்லைன் மனுவில் கையெழுத்திடுவோருக்கு அன்றாடம் $1 மில்லியன் டொலர்கள் பரிசு – எலோன் மாஸ்க் அதிரடி! பில்லியனர் எலோன் மாஸ்க், அமெரிக்க அரசியலமைப்பை ஆதரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் ஜனாதிபதி தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக சனிக்கிழமை (19) உறுதியளித்தார். பேச்சுரிமை மற்றும் ஆயுதம் தாங்கும் உரிமையை ஆதரிக்கும் நோக்கில் இந்த மனு வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை அணி திரட்டும் நோக்கில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை அறிவித்தார். அத்துடன் இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றியாளர்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம் 28 செப்டெம்பர் 2024, 05:20 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ…

  22. யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபைசல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கி.பி. 629இன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Chang'an) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாகப் புறப்பட்டார். அந்தப் பயணியின் பெயர் யுவான் சுவாங். அது சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயம். எனவே, பயணம் செய்வதற்குச் சரியான நேரமாகக் கருதப்படவில்லை. ஏனெனில்,…

  23. காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 உயிரிழந்தனர் எனஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …

  24. பட மூலாதாரம்,REUTERS 17 அக்டோபர் 2024, 14:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது. கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்ற…

  25. இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.