Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில்… - ஸீகா வைரஸ் உடலுறவு மூலம் பரவிய ஆபூர்வ சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. பொதுவாக இது கொசுக்களின் மூலமே பரவும். - அடைக்கலம் தேடிச் சென்ற தங்களை, ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, மூன்றாவது நாடுகளில் கொண்டுபோய் இஸ்ரேல் தள்ளுவதாகக் கூறும் ஆப்பிரிக்க குடியேறிகளுடன் பேசியது பிபிசி. - ஒல்லிதான் பேஷன் என்ற காலம் மாறுகிறது. மிகவும் ஒல்லியாக இருக்கும் மாடல்களை ஃபேஷன் துறையில் பயன்படுத்த தடை கொண்டுவருகிறது பிரான்ஸ்.

  2. பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 03:46.15 AM GMT ] பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர் நடந்த போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அப்பாவி இந்து மக்களை கொடூரமாக கொன்று குவித்தனர். அங்கு அப்படி சுமார் 30 இந்துக்களை கொன்று குவித்ததுடன், 450 கடைகளுக்கு தீயும் வைத்ததாக பாகிஸ்தான் துணைப்படையான ரஜாக்கர் பானியின் ஒபைதுல் ஹக் தார் (வயது 66), அதாவுர் ரகுமான் நானி (62) ஆகிய இருவர் மீது குற்ற…

  3. பாகிஸ்தானில் இந்துக்கோவில் மீது தாக்குதல்: - சிறுபான்மை மக்களிடையே பதற்றம் [Wednesday 2016-02-03 08:00] பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.அவர்களை நோக்கி அந்த நபர்கள், “கோவிலை விட்டு வெளியேறுங்கள், கோவில் வளாகத்துக்குள்ளே இருக்கக்கூடாது” என உத்தரவிட்டனர். அதில் அவர்கள் பயந்து போய் வெளியேறினர். பாகிஸ்த…

  4. ஐயோவாவில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி வெற்றி ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு, கடந்த திங்கட்கிழமை (01), ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஜனநாயகக் கட்சியில், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார். மேற்படி ஐயோவா மாநில, ஜனநாயகக் கட்சியின் பிரதிநிகளுக்கிடையேயான வாக்கெடுப்பில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனுக்கும் நீண்ட காலமாக செனட்டராக இருந்து வரும்…

    • 1 reply
    • 498 views
  5. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான அயோவா உட்கட்சித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் டெட் குரூஸ் முதலிடம் பெற்றார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனின் வெற்றியில் தெளிவில்லை. - ஸீகா பரவலை உலக சுகாதார நிறுவனம், ''உலக சுகாதார அவசர நிலையாக'' பிரகடனம் செய்த போதிலும், ரியோ ஒலிம்பிக் ரத்தாகாது என்கிறது பிரஸில். - சிந்திக்கும் ஆற்றல் மிக அதிகமாகத் தேவைப்படும் மேலும் ஒரு ஆட்டத்தில் அண்மையில் கணினி மனிதனை வீழ்த்தியுள்ளது.

  6. வேகமாக பரவும் ‘ஜிகா’ வைரஸ்... சர்வதேச அவசர நிலை பிரகடனம்! ஜெனிவா: ‘ஜிகா’ வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது. டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதையடுத்து…

  7. சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது குறித்த சர்வதேசமாநாடு இன்று ரோமில் ஆரம்பம் 02 பெப்ரவரி 2016 சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று ரோமில் ஆரம்பமாகின்றது. 23 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் லிபியாவில் எவ்வாறு ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. ரோமில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் 23 நாடுகளும் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆராயவுள்ளன.. சமீபத்தில் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீள கைப்பற்றப்பட்ட திக்ரித் நகரில் எவ்வாறு ஸ்திரதன்மையை ஏற்படுத்துவத…

  8. இன்றைய நிகழ்ச்சியில்… - மியன்மாரில் சுதந்திரமான தேர்தலின் மூலமாக தேர்வான முதல் நாடாளுமன்றம் கூடியது! ஆனால், கிழக்கில் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்கின்றன! - எத்தியோப்பியாவில் வறட்சி, பஞ்சம்! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினி கிடக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது பிபிசி! - பறக்கும் தேவதை! பளபளக்கும் பழங்காலத்துப் பட்டாடைகள்! நீரில் மிதக்கும் வெனிஸ் நகரம் தற்போது வீதிக் கொண்டாட்டங்களில் மிதக்கிறது!

  9. மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்! கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச் சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் துருக்கி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. காவலர் ஒருவர் அச்சிறுவனின் உடலை எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று, துருக்கி கடல் பகுதியில், கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்த துருக்கி கடற்பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர. இதில், 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். …

  10. 3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ) பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்…

  11. நடுவானில் பழுதான சக்கரங்கள்: ரியல் ஹீரோவாக மாறிய விமானி! பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை பத்திரமாக விமானி தரையிறக்கினார். பிஏ295 (BA295) என்ற விமானம், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார். விமானம் தரை இறக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்…

  12. நைஜீரியாவில் போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல்: அப்பாவி மக்கள் 86 பேர் பலி போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற டேலோரி கிராம மக்கள் எரிந்து போன வீட்டின் சாம்பலைப் பார்க்கின்றனர்..| படம்: ஏ.பி. நைஜீரியாவில் உள்ள டேலோரி என்ற கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் பல குழந்தைகள், பெண்கள் உட்பட 86 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு போகோ ஹராம் நடத்திய இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு நபர் மரத்தின் கிளைகளில் மறைந்திருந்து தான் கண்ட கொடூர காட்சிகளை அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். எரிந்த நிலையில் உடல்களும், தோட்டாக்காயங்களுடனான சடலங்களும் தெரு முழுதும்…

  13. 10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருட…

  14. யுத்தம் முடிவடைந்ததும் அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவர் - ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் 2016-02-01 10:54:51 ஜேர்­ம­னிக்கு சென்­றுள்ள சிரியா மற்றும் ஈராக் அக­திகள் அந்­ நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்­ததும் சொந்த நாட்­டுக்கு திரும்பிச் செல்­வார்கள் என அந் ­நாட்டு சான்­சலர் ஏஞ்­சலா மேர்கல் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜேர்­ம­னிக்குள் வரும் அக­தி­களை தடுக்க பல தரப்­பினர் எதிர்த்து வந்­தாலும் ஏஞ்­சலா மேர்கல் அக­தி­களை தொடர்ந்து ஏற்று வரு­கிறார். கடந்­தாண்டு சுமார் 1.1 மில்­லியன் அக­தி­களை ஜேர்­மனி ஏற்­றது. அந்த அகதி­களை ஜேர்­ம­னிய சமூ­கத்­திற்குள் ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான முயற்­சிகள் …

  15. பிரபல ஒலிபரப்பாளர் டெர்ரி வோன் காலமானார் பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக இருந்த, மூத்த ஒலிபரபாளர் டெர்ரி வோன் தமது 77ஆவது வயதில் காலமானார். ஒரு ஒலிபரப்பாளராம தனித்துவம் பெற்றிருந்தார் டெர்ரி வோன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதை குறுகிய காலத்திற்கு தைரியமாக எதிர்கொண்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அயர்லாந்தில் பிறந்த, டெர்ரி வோன் 1960களில் பிபிசியில் சேர்ந்தார். விரைவில் வானொலியில் நேரடியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு ஒலிபரப்பாளராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது மென்மையான ஒலிபரப்பு பாணி மற்றும் உடனடி நகை…

  16. சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் பலர் இதில் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அரச ஊடகம் கூறுகின்றது. ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம். முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்…

  17. ஜனாதிபதியாக தெரிவான பின் முதன்முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒபாமாவின் இந்த சந்த…

  18. சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…

  19. கொலம்பியாவில் சீகா தொற்றினால் 2 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிப்பு [ Sunday,31 January 2016, 06:24:22 ] தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சீகா தொற்று நோய்க்கு இலக்கான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாக கொலம்பிய தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொலம்பியா முழுவதும் 20 ஆயிரம் பேர் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொலம்பியாவில் 5 லட்சம் பேர் சீகா தொற்றினால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடு…

  20. ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர் ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குழந்தைகள் அடங்கலாக குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் கூறியுள்ளார். வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ…

  21. ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார். அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட…

  22. ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு ரஷ்யாவில் கிழக்கு பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் யெலிசோவோ நகருக்கு வடகிழக்கே 95 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் 7.0 ரிக்டராக இருந்தாலும், தேசிய பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது. இதுவரை சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. http://tamil.thehindu.com/world/%…

  23. லெபனானில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியக் கழுகு விடுதலை லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கழுகின் உடல்பகுதியில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது. இருநாட்ட…

  24. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஐநா அணுசரணையில் நடக்கும் சமாதானப் பேச்சுகள் ஜெனீவாவில் ஆரம்பிக்கவுள்ளன! ஆனால் எந்தெந்த எதிரணி கலந்துகொள்கிறது என்பதில் இன்னும் குழப்பம்! - ஸீக்கா வைரஸ் வேகமாக பரவ, பிரேசிலில், தேங்கிய தண்ணீரை சுத்தம் செய்ய வீடுவீடாக நடவடிக்கை! - மிதக்கும் மருத்துவமனை! வங்கதேசத்தின் நதிக்கரையோரத்து வறிய கிராமங்களுடைய சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு புதிய வழி!

  25. பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன். அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.