உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
"சிரியாவில் ஐ எஸ் அமைப்பால் ஏராளமானோர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்" சிரியாவிலுள்ள டியர் அல்-சௌர் நகரின் புறநகர் பகுதியிலிருந்து, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர் என சிரிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது ஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவு படையினரின் உறவினர்கள்…
-
- 0 replies
- 502 views
-
-
சஞ்சய் தத் விடுதலைக்கான காரணங்களை தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரிக்கை திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் இதை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார். சஞ்சய் தத…
-
- 0 replies
- 322 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு ஒபாமா உலகம் முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தொடரும்படி, அதிபர் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நேசநாடுகளின் படைகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு வெளியே ஐ.எஸ் தன் கிளையை வி…
-
- 0 replies
- 279 views
-
-
இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க் :நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்! இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, '' கடந்த 1…
-
- 1 reply
- 654 views
-
-
சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தாக்குதல்; 50 பேர் பலி [ Sunday,17 January 2016, 05:50:50 ] இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50ற்கும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசம் என அழைக்கப்படும், சிரியாவின் கிழக்கு பிரதேசமான டெயிர் அல்-சோஹர் பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் குறைந்தது 85 சிவிலியன்கள் பலியாகியிருப்பதோடு அதில் 50ற்கும் மேற்பட்டோர் இராணுவ வீரர்கள் எனவும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என …
-
- 0 replies
- 357 views
-
-
ஜேர்மனில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் தொல்லை ; மேலுமொரு முறைப்பாடு பதிவு[ Saturday,16 January 2016, 05:42:23 ] பொது நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரான புகலிடக் கோரிக்கையாளருக்கான கடை உத்தரவை ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜேர்மனில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விழாவில் பதிவாக பாலியல் துஷ்பிரயோக மற்றும் சேஷ்டை முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே தற்போது இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குறித்த நீச்சல் தடாகத்தை அண்மித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் முகாமிலுள்ள நபரே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இதேவேளை இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லை த…
-
- 1 reply
- 516 views
-
-
கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர். 80க்கும் அதிகமான கென்ய படையினரை கொன்று அவர்களது இராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக அல் சபாப் கூறியுள்ளது. அல் சபாப் பட…
-
- 0 replies
- 448 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உதவத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் பான் கி மூன் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார். பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க, தேவையான அறிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்" என்றார். முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை வேறு ஒரு நாளில் நடத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் தொலைபேசியில் ஆல…
-
- 0 replies
- 250 views
-
-
சுவிஸின் ஜெனிவா நகரில் UBS என்ற வங்கி இயங்கி வருகிறது. இதே பகுதியில் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த ஊழியரையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளனர். பின்னர், அருகில் இருந்த வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் மில்லியன் கணக்கில் பிராங்குகளை மூட்டை கட்டி அள்ளிச்சென்றுள்ளனர். இந்த தகவல் நேற்று காலை 8 மணியளவில் வெளியானதை தொடர்ந்து, அந்நகர பொலிசார் வங்கியின் முன்னால் திரண்டு விசாரணையை மேற்கொண்டனர். எனினும், நள்ளிரவு முழுவதும் கொள்ளையர்கள் வங்கியில் இருந்தனரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய Maria Lucinda என்ற ஊழியர், ‘வீட்டில் சிறை ப…
-
- 0 replies
- 367 views
-
-
Security forces in Burkina Faso battled suspected Islamist fighters late on Friday who were holding hostages at a hotel used by foreigners in the capital, Ouagadougou, gendarmes and witnesses said. The attack, claimed by al Qaeda in the Islamic Maghreb (AQIM), would be the first by Islamist militants in the capital of Burkina Faso. It follows a deadly raid on a hotel in Mali last November as well as attacks by militants in other countries in West Africa. The gunmen stormed the five-story Splendid Hotel in Ouagadougou's business district, burning cars outside and firing in the air to drive back crowds before security forces arrived, prompting an intense exchange …
-
- 1 reply
- 788 views
-
-
பர்கினோ பாசோவில் அல்காய்தா தாக்குதலுக்கு 20 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ) பர்கினா பாசோ நாட்டில், நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான இங்கு, குவாகோடாங் என்ற இடத்தில் ஸ்ப்லெண்டிட் என்ற விடுதி உள்ளது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனை குறிவைத்தே அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிரவாதிகள் பிணையாக பிடித்துவைத்திந்த 30 சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். …
-
- 0 replies
- 363 views
-
-
பிரான்சில் மருத்துவ பரிசோதனையில் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிசோதனையில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில் “புதிதாக கண்டுபிடித்த மருந்தை சோதிப்பதற்காக ஆறு பேர் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதார். ஐந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாரிஸ் அரசு …
-
- 2 replies
- 530 views
-
-
கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை! சர்ச்சைக்குப் பேர்போன ஃபிரெஞ்சுப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ, இறைத்தூதர் சர்ச்சையிலிருந்து வெளிவந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை; அதற்குள் ஒரு புத்தம்புது சர்ச்சையை உருவாக்கி உள்ளது இந்த வாரப்பத்திரிக்கை. சில மாதங்களுக்கு முன்னால், சிரியக் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவனான ’ஆலன் குர்தி’யின் நிழற்படம் காண்பவர் அனைவரையையும் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அந்தக் குழந்தை ஒருவேளை வளர்ந்து பெரியவனாகி இருந்தால், நிச்சயம் பெண்களுக்கெதிராக வன்கொடுமை இழைக்கும் ஒரு குற்றவாளியாகத்தான் வளர்ந்திருப்பான் என்று பொருள்படும்படி ஒரு கேலிச்சித்திரத்தைத் தீட்டி வெளியிட்டிருக்கிறது சார்…
-
- 0 replies
- 449 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவிலிருந்து வரும் அகதிகளை சிரியாவுக்கே திருப்பியனுப்புவதாக துருக்கி மீது குற்றச்சாட்டு! ஆனால் பிபிசியின் புலனாய்வில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது துருக்கி! - பிரிட்டிஷ் வரலாற்றின் மிகப் பெரிய கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீது குற்றம் உறுதி! இரண்டு கோடி டாலர்கள் மதிப்புள்ள நகைகள் லண்டனின் ஹட்டன் கார்டனில் கொள்ளையடிக்கப்பட்டன!
-
- 0 replies
- 547 views
-
-
ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தை அமெரிக்க ராணுவ அலுவலகம் உறுதி செய்துள்ளார். கடற்கரை காவல்கடையினர் ஹெலிகாப்டரின் எரிந்த பாகத்தை மீட்டுள்ளனர். ஆனால், யாரையும் உயிருடன் காணவில்லை என்று கூறினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.விபத்திற்கான முழுக்காரணம்…
-
- 0 replies
- 288 views
-
-
அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடௌ உள்ளிட்ட பலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாக்கியம் கடந்க 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த வாசகம் கிறிஸ்துவ ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.112 பக்கம் உள்ள அந்த மனுவில் 100க்கும் அதிகமான முறையில் கடவுள் (God) என்ற…
-
- 0 replies
- 475 views
-
-
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 15 பேர் காயம் இஸ்தான்புல் குண்டுவெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ். இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தனாமெட் சதுக்கத்தில…
-
- 2 replies
- 566 views
-
-
-
- 0 replies
- 602 views
-
-
புதுடெல்லி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தர ஆன்லைனிலேயே விசாக்களை பெற வழிவகை செய்யும் இ-டூரிஸ்ட் விசா வசதியை இந்த நிதியாண்டிற்குள் 150 நாடுகளுக்கு வழங்க மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ந்தேதி துவங்கப்பட்ட இந்த வசதி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து மேலும் 37 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது 113 நாடுகளில் இந்த வசதியை இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வசதியின் வாயிலாக சென்ற ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 635.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு இ-டூரிஸ்ட் விசா மூலம் வருகை தரும் டாப்-10 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விபரம் வருமாறு:- …
-
- 1 reply
- 408 views
-
-
மும்பை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று 66.85 காசுகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 44 காசுகள் வரை சரிந்து 67.30-ஆக உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி இந்திய ரூபாய் 67.63-ஆக சரிந்து காணப்பட்டது. பிறகு, அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் 4-ந்தேதி வர்த்தகத்தினிடையே 68.62 காசுகள் வரையும் சரிந்திருந்தது. http://www.dailythanthi.com/News/India/2016/01/14201120/Rupee-tumbles-by-44-paise-to-more-than-2year-low-at.vpf
-
- 0 replies
- 475 views
-
-
ஆஸ்திரேலியாவில் வெடிகுண்டு மிரட்டல்: ஆபெரா ஹவுஸிலிருந்து மக்கள் வெளியேற்றம் ஆஸ்திரேலியாவில் பிரபல சுற்றுலாத்தளமான ஆபெரா ஹவுஸுக்கு சமூக வலைத்தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மதியம் 2 மணிக்கு ஆபெரா ஹவுஸை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்து மக்களை வெளியேற்றினர். ஆபெரா ஹவுஸில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வேறு யாரும் அப்பகுதியை நெருங்க முடியாத அளவுக்கு போலீஸார் தடுப்புகளால் தடையை ஏற்படுத்தினர். ஆபெரா ஹவுஸுக்கு சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது என நியூ…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன:- 14 ஜனவரி 2016 இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடியாக கிடைத்துள்ள புகைப்படங்களில் குண்டுவெடிப்பில் சிக்கிய பலியானவர்களின் இருவரின் உடல்களை காணமுடிகின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127866/language/ta-IN/articl…
-
- 2 replies
- 488 views
-
-
அகதிகளான அழகு குழந்தைகள்... வாழும் இடத்தை பாருங்கள்! பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு, சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள டுன்கிர்க் (Dunkirk) நகரில் பலத்த மழை மற்றும் காற…
-
- 0 replies
- 810 views
-
-
வடக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! டோக்கியோ: ஜப்பானின் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வடக்கு ஜப்பானில் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளைவிட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். ஹோக்கைடோ பகு…
-
- 0 replies
- 682 views
-
-
பயணித்த விமானத்தின் சக்கரப் பகுதியில் 11 மணி நேரமாக தொங்கிய சடலம் பிரேசிலிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு பயணித்த விமான மொன்றின் சக்கரப் பகுதி யில் தொங்கிய நிலையில் நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரேசிலின் சாயோ போலோ நகரிலிருந்து மேற்படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட போது, குறிப்பிட்ட நபர் ஐரோப்பாவுக்கு சட்டவி ரோதமாக செல்லும் முயற்சியில் அந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து கொண்டிருந்திருக்கலாம் எனவும் அவர் அந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே மரண…
-
- 0 replies
- 544 views
-