உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
சவுதி அரேபியாவின் மரண தண்டனைகளை இந்த உலகம் ஆதரிக்கிறதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். சிலர் கேக் வெட்டி, பலூன் வெடித்துக் கொண்டாடினார்கள். சவுதி அரேபியாவின் ஸ்டைல் சற்றே மாறுபட்டது. தலையை வெட்டி, துப்பாக்கியால் சுட்டு ரத்தக் கரங்களுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறது அந்நாடு. ஒரே நாளில் 47 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள 12 சிறைச்சாலைகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த சனிக்கிழமை சவுதி அறிவித்துள்ளது. 8 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அசாதாரணமான நிகழ்வை உலகம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது? …
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆத்திரமூட்டும் வட கொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா சபதம் ஜான் கெர்பி. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது. வட கொரியா ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை செய்துள்ளதாக அறிவித்தது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. ஆனால், இதனை தங்களால் உறுதி செய்யமுடியவில்லை என ஐ.நா. அணு ஆயுத பரிசோதனை விரிவான தடை ஒப்பந்த அமைப்பும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளன. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் தென் கொரியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின…
-
- 2 replies
- 565 views
-
-
வடகொரியாவில் நிலநடுக்கம்: 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை காரணமா? சியோல்: பேரழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதால் வடகொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் மட்டும் ராணுவ உபயோகத்திற்காக ஹைட்ரஜன் குண்டுகள் இருக்கும் நிலையில், வடகொரியாவின் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை வெற்றிகரமாக இன்று(புதன்) நடத்தப்பட்டுள்ளது.இது வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியில் ஒருமுக்கிய படியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”வடகொரியா ஜனவரி 6-ம் தேதி காலையில் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது,” எ…
-
- 0 replies
- 821 views
-
-
கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்! [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 09:58.23 PM GMT ] துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர். எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள். அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம…
-
- 1 reply
- 561 views
-
-
அதி பயங்கர ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்து வட கொரியா பரபரப்பு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏற்கெனவே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் மற்றும் அமைதி அமைப்புகள் பலவற்றால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதித்துள்ளது. வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) ஹைட்ரஜன் வெடிகுண்டை வ…
-
- 0 replies
- 526 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐ எஸ் அமைப்பின் அண்மைய வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், பிரிட்டனில் இந்துக் குடும்பத்தில் பிறந்து மதம் மாறியவர். - அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அதிபர் ஒபாமா நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விதிகளை அறிமுகப்படுத்த திட்டம். - சட்டவிரோத வேட்டையால் அழிந்துவரும் காண்டாமிருகங்களை காப்பாற்ற, தடுமாறும் தென்னாப்பிரிக்கர்களின் பிரயத்தனம்.
-
- 0 replies
- 360 views
-
-
துருக்கிய கடற்கரையில் குடியேறிகளின் சடலங்கள் துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 21 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல ஆபத்துக்களுக்கு இடையேயும் பலர் ஐரோப்பா நோக்கி வருகின்றனர் இவர்களில் சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய நகர்களாக அய்வலெக் மற்றும் டிக்கிலி நகரங்களுக்கு அருகே அவர்களின் உடல்கள் கிடைத்தன என்று கூறப்படுகிறது. கொந்தளிப்பான கடல் ஒன்றின் மணற்பாங்கான கடற்க…
-
- 0 replies
- 594 views
-
-
ஒரு சக்கரத்தில் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம் (வீடியோ) இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிர்மின்கம் விமான நிலையத்தில்தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் தாக்கியதோடு, மழை கொட்டி தீர்த்தது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே பிர்மின்கம் விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத…
-
- 0 replies
- 503 views
-
-
இவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்? புதுடெல்லி/இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். கடந்த டிசம்பர் 25 -ம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 66-வது பிறந்த நாளாகும…
-
- 1 reply
- 898 views
-
-
திருமணமாகி 45 நாட்கள்தான்... பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில், ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். 'திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம்' என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர். ஹரியானா மாநிலம், அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங், தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்த…
-
- 0 replies
- 680 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஷியா மதகுருவுக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்ற, மேலோங்கியது இரானின் ஆத்திரம்! ராஜீய உறவுகளைத் துண்டித்து இரானிய அதிகாரிகள் வெளியேற சவுதி விதித்தது காலக்கெடு! - இஸ்லாமிய அரசுக்கு எதிரான கடும் சண்டை நடக்கும் இராக்கின் ரமாடி நகரில் பிபிசி! போர் முன்னரங்கிலிருந்து மக்கள் நிலை குறித்து நேரடித் தகவல்! - நடக்கவே முடியாமல் போனாலும், உள்ளத்து உறுதியால் அக்ராவில் சக்கரம் கட்டிக்கொண்டு பந்து விளையாடும் போலியோ பாதித்தவர்கள்!
-
- 0 replies
- 453 views
-
-
பஞ்சாப் - பதான்கோட் தாக்குதலுக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்பு பதான்கோட் விமானப்படை தளத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன் தெரிவித்துள்ள தகவல்களின் படி, 'ஹைவே ஸ்குவாட்' என்ற அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கியுள்ளனர். “இந்திய அரசும் அதன் ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன.…
-
- 0 replies
- 571 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். சிறிது காலமாக கொலை வீடியோ வெளியிடாமல் இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். அதில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சர்வதேச படைகளுக்கு உதவும் 5 உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ரக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இந்த வீடியோவில் இங்கிலாந்தில் ஒரு ஐ.எஸ்.தீவிரவாதி பேசி இருக்க…
-
- 0 replies
- 527 views
-
-
ஒரு ட்விட்டுக்கு ஒரு டாலர் : திட்டினால் நன்கொடை தரும் பெண்! யாரோ ஒருவர் போட்ட ஸ்டேடஸை தேடி பிடித்து, கமெண்ட் போட்டு சண்டையும் போடும் இந்த காலத்தில், தன்னை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு வேறுவிதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் ஒரு இஸ்லாமிய பெண். ஆஸ்திரேலியாவை சார்ந்த சூசன் கார்லாண்ட். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறு, ஐஎஸ்ஐஎஸ்சுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, நீ ஒரு ஜிஹாதி என சராமரியாக இவரை குறிவைத்தன சில ட்வீட்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு ட்வீட்கள் சூசனுக்கு குவிந்தன. தன்னை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் சமூகத்தை மாற்ற இயலாமல் அவர்களை சூசன் ப்ளாக் செய்தார். ஒரு சில முறை அவர்கள் சொல்வத…
-
- 0 replies
- 570 views
-
-
பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி? பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி நேற்று விவரித்தார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 2 தீவிரவாதிகள் அங்கு மறைந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரர்கள் 7 பேரும் வீர மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயல…
-
- 0 replies
- 469 views
-
-
மதகுரு கொலை:இரானில் சவுதி தூதரகம் தாக்கப்பட்டது பிரபலமான ஷியாப் பிரிவு முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைபவேற்றியதை அடுத்து, தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்துக்குள் இரானிய போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். nசவுதி அரசுக்கு எதிராக இரானில் போராட்டம் அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது. ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத…
-
- 1 reply
- 648 views
-
-
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அமைந்துள்ள மசார் இ ஷெரீப் பகுதியை காட்டும் கூகுள் மேப் புகைப்படம். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் குறித்து ஆப்கனுக்கான இந்திய தூதர் அமர் சின்ஹா கூறும்போது, "தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தூதரகத்தை சுற்றிவளைத்துள்ள தீவிரவாதிகளை அப்புறப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார். இந்நிலையில், தூதரகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆளுநர் அட்டா முகமது நூர் தெரிவித்துள்ளார். நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவ…
-
- 0 replies
- 418 views
-
-
பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ராணுவம் சுற்றிவளைப்பு பதான்கோட் விமானப் படை தளத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் | படம்: ஏ.பி. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விமானப் படை தளத்தை சுற்றி கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப் படை தளத்தினுள் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பதான்கோட் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் நகரைச் சேர்ந்தவ…
-
- 0 replies
- 565 views
-
-
இந்தியாவில் நில அதிர்வு: 6 பேர் பலி; 100 பேர் காயம் 04-01-2016 10:27 AM இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 4.36 மணியளவில் உணரப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/162973/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.y1kZbH7O.dpuf
-
- 0 replies
- 479 views
-
-
சுவீடன் எல்லை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது [ Monday,4 January 2016, 05:17:55 ] ஐரோப்பிய நாடான சுவீடன் எல்லைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது. இதன்பிரகாரம் டென்மார்க்கில் இருந்து தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சுவிடன் அறிவித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்குடன் சுவிடன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஊரெட்ன்சென்ட் பாலம் ஊடாக ரயில், பேரூந்து அல்லது படகு சேவை மூலம் நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் உரிய ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ப…
-
- 0 replies
- 446 views
-
-
யேர்மனியில் இதுவரை அகதிகளாக விண்ணப்பித்தோர் தொகை, 2008: 28,000 2012: 77,700 2013: 127,000 2014: 202,800 2015: 425,000 Ludwigsburger Kreiszeitung
-
- 1 reply
- 533 views
-
-
மெக்சிக்கோவின் பெண் மேஜர் பதவி ஏற்று இரண்டாவது நாள் சுட்டுக்கொலை [ Sunday,3 January 2016, 06:15:46 ] பதவி ஏற்று இரண்டாவது நாளில் மெக்சிக்கோவின் பெண் மேஜர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ தென் பிராச்தியதிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டெமிக்ஸ்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை மேஜராக பதவி ஏற்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இனந்தெரியாத நான்கு நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்காண்டதாகவும் இரண்டு நபர்களை பொலிஸார் சுட்டு கொன்றுள்ள அதேவேளை தப்பியோடிய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இத…
-
- 2 replies
- 585 views
-
-
மாற்றியளிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ்! 2 நிமிடம் மட்டும் பிரபஞ்ச அழகியான கொலம்பியா அழகி! 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஐக்கிய ராஜ்ஜியம் அளவுள்ள பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியை உருவாக்குகிறது பிரிட்டன் அசென்ஷன் தீவையொட்டிய கடற்பரப்பில் உலகின் மிகப்பெரிய மர்லின் மீன்கள் வாழ்கின்றன தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் இருக்கும் அசென்ஷன் தீவையொட்டிய கடலுக்குள் ஏறக்குறைய ஐக்கிய ராஜ்ஜியம் அளவுக்கு பெரியதொரு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பை உருவாக்கும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா, சிலி மற்றும் நியூசிலாந்த் ஆகிய மூன்று நாடுகளுமே தமது கடற்பரப்புகளை பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தன. கடற்பகுதிகளை பாதுகாக்க அரசுகள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுப்பது தற்போது உலக அளவில் வேகம் பிடித்து வருகிறது. அசென்ஷன் தீவை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பில் உலகில…
-
- 0 replies
- 632 views
-
-
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இருக்கும் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அங்கு மேலும் இரு தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ள பதன்கோட்டின் இருக்கும் அந்த விமானப் படைத் தளத்தில் தாக்குதலாளிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்துள்ளது. இத்தாக்க…
-
- 1 reply
- 564 views
-