உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26996 topics in this forum
-
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்…
-
- 0 replies
- 199 views
-
-
03 FEB, 2025 | 04:49 PM யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க் நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும், அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட…
-
-
- 10 replies
- 858 views
- 1 follower
-
-
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு 19 Jan, 2025 | 11:50 AM ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் இன்று காலை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் தன்னிடமுள்ள சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள…
-
-
- 9 replies
- 955 views
- 1 follower
-
-
அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய …
-
- 0 replies
- 259 views
-
-
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சில…
-
- 0 replies
- 354 views
-
-
லெபனானின் சுரங்கப் பாதை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கத்தினூடாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. நேற்றிரவு இஸ்ரேலின் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீதே வான்வழித் தாக்குதலை நடத்தியது. கடந்த நாட்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே…
-
- 0 replies
- 230 views
-
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு! உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் உக்ரேன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்…
-
-
- 5 replies
- 570 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மா…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உத…
-
- 0 replies
- 140 views
-
-
சீனாவில் பாரிய நிலச்சரிவு: 30 பேர் மாயம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து,தனது அனுதாபத்தை…
-
- 0 replies
- 133 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 8 பிப்ரவரி 2025, 15:37 GMT சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், 'மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது பிரமாண்டமான ஒரு திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கா…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர். எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரிய…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை! டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை உத்தரவினை முன்னதாக பிறப்பித்ததன் மூலம் ஹேக் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஊழியர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சில நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது விசாரணை அல்லது வழக்குத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டதாக உறுதிசெய்தா…
-
- 5 replies
- 493 views
- 1 follower
-
-
இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது …
-
- 0 replies
- 271 views
-
-
அலாஸ்கா விமான விபத்தில் 10 பேர் பலி. அலாஸ்காவில் சிறியரக விமானம் வீழ்ந்ததில் அதிலிருந்த 10 பேரும் பலியாகியுள்ளனர்.மூவரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிதைந்த விமானங்களுக்குள் மற்றையவர்களின் உடலங்களும் இருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு யாழுடன் இணைந்திருங்கள். https://www.cnn.com/2025/02/07/us/alaska-cessna-bering-air-hnk/index.html
-
- 4 replies
- 650 views
- 1 follower
-
-
காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை! காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி செவ்வாயன்று (04) வெள்ளை மாளிகையில் முன்மொழிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீர்வுக்கான தேடலில், நாம் பிரச்சினையை மோசமாக்கக் கூடாது. சர்வதேச சட்டத்தின் அடிப்பகுதிக்கு உண்மையாக இருப்பது இன்றியமையாதது. இனச் சுத்திகரிப்பு எந்த வகையிலும் தவிர்க்கப்பட வே…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயா…
-
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்! இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. …
-
-
- 2 replies
- 501 views
-
-
ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு …
-
- 2 replies
- 243 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா விரைவான பதிலடி! சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் செவ்வாயன்று (04) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது. இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்தது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10% வரி அமெரிக்காவிற்குள் அனைத்து சீன இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 (0501 GMT) மணிக்கு அமுலுக்கு வந்தது. இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சகம், அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% …
-
- 1 reply
- 219 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்குள் “அமெரிக்க எதிர்ப்பு” இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் தெரிவித்து…
-
- 2 replies
- 230 views
-
-
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…
-
- 0 replies
- 199 views
-
-
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!
-
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
உலகின் முதல் 10 தரவரிசையிலான நாடுகள் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளமுடன் இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சக்திவாய்ந்த நாடுகள் எனினும் இந்தியா இந்த 10 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படாமை குறித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றபோதும், அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய இராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை ஏன் இந்த பட்டியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியே எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பட்டியல், ஐந்து முக்கிய காரணிகளை மாத்திரமே அ…
-
-
- 4 replies
- 1k views
-
-
சீனா, ஹொங்கொங்கின் பொதிகள் சேவைக்கு தடைபோட்ட அமெரிக்கா! மறு அறிவிப்பு வரும் வரை சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகள் சேவையை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது. எனினும், இந்த இடைநீக்கத்தினால் கடிதங்கள் விநியோக சேவை பாதிக்கப்படாது என்று அமெரிக்க தபால் சேவையின் இணையத்தள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. USPS இந்த முடிவிற்கான காரணத்தை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் மேலதிகமாக 10% வரி விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா சில அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரியை அம…
-
- 0 replies
- 220 views
-