உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி பலி துருக்கியிலிருந்து கீரீஸுக்கு வந்த அகதிகள் படகு மூழ்கியது, நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் மீட்புப் பணியினர். | படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள். ஆனால், 144 பேர் காப்பாற்றப் பட்டதாக கிரீஸ் நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கின. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகில் காலிம்னோஸ் தீவுக்கு இந்த அகதிகள் வந்துள்ளனர். இதே போல் ரோட்ஸ் அர…
-
- 1 reply
- 664 views
-
-
பின்லேடன் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி அம்பலமானது பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை கொன்று குவிக்க பின்னணியில் இருந்து இயக்கியவர், அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். அந்த தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கழித்து, பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத்தில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் திகதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்…
-
- 0 replies
- 575 views
-
-
வரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதாக்கள்! வேலுநாயக்கராக வந்த கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும். 'நாயகன்' கதைக்கு கருவாக இருந்தவர்தான் மும்பையின் பிரபல டான் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியார். இப்போதைய மும்பை நிழலுக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் இவரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள். நடிகர் திலீப்குமார், அவரது மனைவி சாயீரா பானுவுடன் மஸ்தான் மஸ்தான் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களது 'தாதா வாழ்க்கை' தாங்கள் சார்ந்த தமிழ் சமுதாயத்தை காக்கவே பெரும்பாலும் உதவியதாக சொல்லப்படுவதுண்டு. தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார்,…
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவின் ஒரு குடும்பம் ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வருகிறது சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது. இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி , அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறுகிறது. சீனாவில் குழந்தைப்பேறு விகிதத்தைக்குறைக்கவும், மக்கள் தொகை அதிகரிப்பு விகிதத்தை மந்தப்படுத்தவும் இந்த சர்ச்சைக்குரிய கொள்கை தேசிய அளவில் 1979ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவின் முதியார் பிரச்சனை பற்றிய கவலைகள் காரணமாக இந்தக் கொள்கை மாற்றப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் தோன்றின. இந்…
-
- 1 reply
- 557 views
-
-
உலகை உலுக்கிய வியட்நாம் போரில் காயமடைந்த சிறுமிக்கு இப்போது சிகிச்சை! (வீடியோ) 1972-ம் ஆண்டு வியட்நாமில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது தெற்கு வியட்நாம் வீசிய பெட்ரோலிய குண்டு (நாப்பம்) வெடித்து, கிம் ப்ஹுக் என்ற சிறுமியின் உடையில் நெருப்பு பற்றிக் கொள்ள, தனது உடைகளை எல்லாம் கழற்றி விட்டு நிர்வாணமாக சில சிறுவர்களுடன், ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுபுகையின் பின்னணியோடு அலறியபடி ஓடிவந்த எட்டு வயதே நிரம்பிய அந்த சிறுமியை புகைப்படமெடுத்தார் நிக்வுட். அவர் எடுத்த அந்த புகைப்படம், 19 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்த நிக்வுட்க்கு புகைப்படத்துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதும் கிடைத்தது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக …
-
- 0 replies
- 1.1k views
-
-
சவுதியில் சிறை, 1,000 கசையடி தண்டனை பெற்ற எழுத்தாளருக்கு ஐரோப்பிய யூனியன் விருது சவுதி எழுத்தாளர் ரைஃப் பதாவி தண்டனையை எதிர்த்து ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிப்.6, 2015-ல் நடைபெற்ற பேரணி. | ஏ.பி. தனது எழுத்துக்கள் மூலம் இணையதளத்தில் இஸ்லாம் மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறை, மற்றும் 1,000 கசையடித் தண்டனை பெற்ற ரைஃப் பதாவி என்ற எழுத்தாளர் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ரீ சவுதி லிபரல்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கி எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகளை வலியுறுத்திய செயல்பாட்டாளர் ரைஃப் பதாவி இஸ்லாமிய மதகுருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு …
-
- 0 replies
- 500 views
-
-
டோக்கியோ கண்காட்சியில் மன்னிப்புக் கோரினார் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ டோக்கியோவில் நேற்று தொடங்கிய 44-வது மோட்டார் கண்காட்சியில் மன்னிப்பு கோரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவன ஜப்பான் பிரிவு இயக்குநர் ஸ்வென் ஸ்டெய்ன். டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி ஹெர்பெர்ட் டயஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகை அளவு வெளியேற்ற கருவி யில் நிகழ்ந்த மோசடிக்காக அவர் மன்னிப்பு கோரினார். வாடிக்கை யாளர்களிடையே நம்பகத் தன் மையை மீண்டும் தங்கள் நிறுவனம் பெற வேண்டும். அதுதான் பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் நிகழ்ந்த இந்த செயல் காரணமாக டீசல் கார்களின் அறிமுகம் தள்ளிப் போடப்பட்டுள்ள…
-
- 0 replies
- 334 views
-
-
பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நாவில் அதிபர் அப்பாஸ் கோரிக்கை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் புதன் அன்று பாலஸ்தீனர்களுக்கு உலகப் பாதுகாப்பு கோரியுள்ளார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளால் மனித உரிமை மீறப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேலிய பிதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பாலஸ்தீனர்கள் மீது இனப்படுகொலை புரிந்துவருவதாகவும் அப்பாஸ் குற்றஞ்சாட்யுள்ளார். ஐ.நா. சபை சார்பாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் கவுன்சிலில் தனது கோபம் கொப்பளிக்கும் பேச்சின் ஊடே அப்பாஸ் இதைத் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தில் அமைதியைக்கொண்டுவர வேண்டிய முயற்சிகளை ஐ.நா. உடனடியாக மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தையில் மட்டுமே நேரத்தை வீணடிப்பதில் எந்தப் பயனும் இல்லை. சர்வதேச…
-
- 0 replies
- 286 views
-
-
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை இன்று மணக்கிறார் ஹர்பஜன்சிங்: ஜலந்தரில் கோலாகல ஏற்பாடுகள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் - நடிகை கீதா பாஸ்ரா திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் இருவரும் உற்சாகமாக பங்கேற்றனர். படங்கள்: பிடிஐ இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (35) கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை (31) காதலித்து வந்தார். இதையடுத்து இருவருக் கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதன்…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?- அனுசரணையாக கேட்கும் துபாய் போலீஸ்: மகிழ்ச்சியான நகரங்களில் இடம்பிடிக்க முயற்சி துபாய் போலீஸார் | கோப்புப் படம்: ஏ.பி. துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு. ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். மகிழ்ச்சியாக இ…
-
- 0 replies
- 420 views
-
-
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து, பயிற்சியும் அளித்தது: முஷாரப் ஒப்புதல் பர்வேஸ் முஷாரப். | கோப்புப் படம் லஸ்கர்-இ-தாயிபா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்தும், பயிற்சி அளித்தும் வந்தது என்று முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார். “1990-களில் காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் லஸ்கர் மற்றும் 11-12 தீவிரவாத அமைப்புகள் தோன்றின. நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து, பயிற்சியும் அளித்தோம், காரணம் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காஷ்மீரில் இவர்கள் சண்டையிட்டார்கள்” என்று பர்வேஸ் முஷாரப் துனியா நியூஸ் சானலில் தெரிவித்தார். அவர் மேலும் தீவிரவாதிகளான ஹபீஸ் சயீத், மற்றும் லக்வி ஆகியோர் ஹீரோக்கள் தகுதியுடன் அப்…
-
- 0 replies
- 359 views
-
-
சுலேவேனிய எல்லையில் வேலியமைக்கப் போவதாக ஆஸ்திரியா அறிவிப்பு சுலோவேனியா எல்லை வழியாக ஆஸ்திரியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுலேவேனியாவுடனான தனது எல்லையில் தடைகள் மற்றும் வேலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது. சுலோவேனியா எல்லை வழியாக ஆஸ்திரியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுலேவேனியாவுடனான தனது எல்லையில் தடைகள் மற்றும் வேலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது எல்லைகளை மூடும் நடவடிக்கையல்ல என்றும், ஒருவித ஒழுங்கு முறையை உறுதிப்படுத்துவதற்கானதொரு செயல் என்றும் ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் ஜொஹானா மிக்க…
-
- 0 replies
- 415 views
-
-
இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்! புதுடெல்லி: இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது" என்று கூறினார். பின்னர் அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மார்க் அளித்த பதில்களும் வருமாறு: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது? ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட் இந்தியா. இங்குதான்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், தம்மை 3 நாட்கள் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் மூவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மாளிகையொன்றில் பணிப்பெண்களாக கடமையாற்றுவதற்காக கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் தாம் நியமிக்கப்பட்டிருந்ததாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 29 வயதான இளவரசர் மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் புதல்வர்களில் ஒருவராவார். இவர் கடந…
-
- 0 replies
- 892 views
-
-
நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க் மார்க்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த படம் இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நேற்று (செவ்வாய்க் கிழமை), தாஜ்மகாலுக்கு சென்றிருக்கிறார். உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மகாலுக்குச் சென்ற மார்க், அங்கே கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மாலை 04.30 மணி அளவில் பதிவேற்றப்பட்ட அப்பதிவில், 'டவுன்ஹால்- கேள்வி பதில்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறேன். இந்தியா வருவது குறித்த திட்டத்தின் போதே, தாஜ்மகாலுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்…
-
- 0 replies
- 527 views
-
-
சவுதியில் பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் Reuters சவுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன( ஆவணப் படம்) சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு …
-
- 0 replies
- 418 views
-
-
குடியேறிகளின் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டம் bbc ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகளை சமாளிக்க மேலும் ஒரு லட்சம் தற்காலிக குடியிருப்புகளை அமைக்க பல நாடுகள் இணங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைய முயற்சிக்கும் மேலும் ஒரு லட்சம் குடியேறிகளுக்கான தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு, மத்திய ஐரோப்பிய மற்றும், பால்கன் நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர். பிரசல்ஸில் இடம்பெற்ற அவசர மாநாட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்லோவேனியா, மற்றும் கிரேக்கம் ஆகியவை தமது எல்லைகளை பாதுகாத்துகாத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உ…
-
- 1 reply
- 573 views
-
-
தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இளவரசர் உட்பட்ட நால்வரையும் லெபனான் சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசரின் பெயர் அப்த் அல்-முஹ்சின் பின் வலீத் பின் அப்துல் அஜிஸ் அல் ஸௌத் என தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73848
-
- 3 replies
- 1k views
-
-
பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 12 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் …
-
- 2 replies
- 468 views
-
-
நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது சோட்டா ராஜன். | கோப்புப் படம். இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய போலீஸ் அளித்த துப்புத் தகவலின் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜியைக் கைது செய்தனர். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான சோட்டா ராஜன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு, மற்றும் பல கடத்தல் கொலை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இதனையடுத்து, இந்தியா கோரிக்கை வைத்தால் சோட்டா ராஜன் இந…
-
- 19 replies
- 3.8k views
-
-
துனீசிய நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இடையே சமரசப் பேச்சுகளை நடத்தி, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட 4 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015-ம் ஆண்டுக்கான சமாதான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. துனீசிய பொதுத் தொழிற்சங்கம், துனீசிய தொழில்துறைக் கூட்டமைப்பு, துனீசிய மனித உரிமைகள் லீக், துனீசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே இந்த ஆண்டின் நோபல் சமாதானத் தூதர்கள்! துனீசியாவில்தான் 2011-ல் முதன்முதலாக ஆட்சியாளருக்கு எதிராக மக்களுடைய கிளர்ச்சி மூண்டது. அதை ‘மல்லிகைப் புரட்சி’ என்று வர்ணித்தார்கள். அது பிற நாடுகளில் ஏற்படுத்திய தொடர்ச்சியான கிளர்ச்சியைத்தான…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் இருந்து இன்று நாடு திரும்புகிறார் கீதா கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளை இல்லத்தில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை நிருபர்களுக்கு காட்டுகிறார் கீதா. படம்: ஏஎப்பி பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா (23) இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறிய கீதா பாகிஸ் தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அவரை போலீஸார் மீட்டு கராச்சி யில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற் போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை…
-
- 0 replies
- 547 views
-
-
லிபியா கடற்கரையில் 40 சடலங்கள் : தொடரும் அகதிகளின் சோகம் சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றிவந்த படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து, மூழ்கியுள்ளது. குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 40 பேரின் சடலங்கள், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 30 பேரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/25/லிபியா-கடற்கரையில்-40-சடலங்கள்-தொடரும்-அகதிகளின்-சோகம்
-
- 1 reply
- 423 views
-
-
லண்டன் : லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இராக் விவகாரத்தில் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிரிட்டனின் முன்னாள் பிரதமாரான டொனி பிளயர், இராக் போரே இஸ்லாமிய அரசின் உதயத்துக்கு காரணம் என்ற கூற்றில் உண்மையும் இருப்பதாக கூறியுள்ளார். இராக் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிளயர் சதாம் ஹுசைனை அகற்றிய தமக்கும் இன்றைய இராக் நிலைமையில் பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் ஒளிபரப்பாளர்களுக்கு செவ்வி வழங்கிய பிளயர், 12 வருடங்களுக்கு முன்னதாக இராக் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தாம் இணைந்ததில் எந்த விதமான தவறும் கிடையாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், சதாமை பதவியில் இருந்து அகற்றியதற்காக மன்னிப்பு கோருவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2015/10/151025…
-
- 0 replies
- 1.1k views
-