Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏமனில் திருமண கோஷ்டி மீது சவுதி கூட்டுப் படை தாக்கியதில் 15 பேர் பலி ஏமனில் திருமண கோஷ்டியினர் மீது சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப் பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். தாமர் மாகாணத்தில் உள்ள சன்பன் நகரில், ஹவுதி புரட்சிப் படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பழங்குடியின தலைவர் ஒருவரின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, சவுதி கூட்டுப் படையினர் அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சில அதிகாரிகளும் சாட்சிகளும் தெரிவித்தனர். ஆனால் தங்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதுகுறித்து சவுதி கூட்டுப்படையினர் கருத்து எதுவும் சொல்லவில்லை. கடந்த 28-ம் தேதியும் ஒரு திருமண நிகழ்ச்…

  2. மூழ்கி விபத்துக்குள்ளாகிய அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகள் நிறுத்தம்![Thursday 2015-10-08 14:00] அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பஹாமஸிற்கு அருகே 33 பேருடன் மூழ்கி விபத்துக்குள்ளான எல் பாரோ அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகளை நேற்றுடன் (புதன்கிழமை) நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.735 அடி நீளமான குறித்த சரக்கு கப்பலானது, மூழ்கி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனை தேடும் முயற்சியில் பல தேடுதல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. அதன்போது கப்பலின் பாகங்கள், உயிர் காக்கும் அங்கிகள் மற்றும் கொள்கலன்கள் என்பன மீட்கப்பட்டதுடன், ஒரே ஒரு சடலம் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எவரையும் உயிருடன் மீட்க …

  3. ஆப்கன் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறுதலானது: அமெரிக்க ராணுவம் ஆப்கானுக்கான அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல். | படம்: ப்ளூம்பெர்க் ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல், தவறுதலாக நேர்ந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரை தாலிபான்கள் கடந்த திங்கள்கிழமை கைப…

  4. திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பதிக்க முடியாமல் தத்தளித்து வரும் பாரதிய ஜனதா கட்சி கணிசமான மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழவா சமூகத்தின் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலத்தில் 22% இஸ்லாமியர்களும் 19% கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரியும் மிகவும் வலுவான 'ஆளும் கட்சியாக' மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. இதனால் பாரதிய ஜனதா கட்சியால் இம்மாநிலத்தில் நுழையவே முடியாத ஒ…

    • 0 replies
    • 1.3k views
  5. இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: ஜெர்மனி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு பெங்களூருவில் உள்ள ஜெர்மனியின் ராபர்ட் போஷ் பொறியியல் நிறுவனத்துக்கு நேற்று சென்ற ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஊழியர்களுடன் உரையாடினார். உடன் பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ பெங்களூருவில் நடைபெற்ற இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்…

  6. ஏமனில் ஹோட்டல் மீது தாக்குதல்: 12 பேர் பலி ஏமன் நாட்டில் ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று குண்டு வீசப்பட்டதில் 12 பேர் இறந்தனர். ஏமன் நாட்டில் பதவியில் இருந்த அகற்றப்பட்ட அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதியின் கீழ் பிரதமராக பணியாற்றிய பஹாஹ் மற்றும் அரசு அதிகாரிகள் அந்நாட்டின் தெற்கில் உள்ள துறைமுக நகரான ஏடனில் தங்கியுள்ளனர். ஏடனில் இவர்கள் தங்கியிருக்கும் அல் கசார் ஹோட்டல் மீது கிளர்ச்சியாளர்கள் நேற்று ராக்கெட் மூலம் குண்டு வீசினர். இதில் ஐக்கிய அரபு அமீரக படை வீரர்கள் பலர் உள்பட 12 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதில் ஏமன் அதிகாரி கள் இறந்தனரா?, தாக்குதலின் போது பிரதமர் பஹாஹ், ஹோட்டலில் இருந்தாரா என்று தெரியவில்லை. இது தொடர்பாக ஏமன் அதிகாரிகள் தரப்பி…

  7. தொடர் சிக்கல்களில் துருக்கி - 1 துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதி. எட்டு நாடுகளால் சூழப்பட்டுள் ளது துருக்கி. சிரியா, இராக், ஈரான், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, பல்கேரியா மற்றும் கிரீஸ். கருங்கடல், மத்திய தரைக்கடல், ஏஜியன் கடல் ஆகியவையும் துருக்கியின் எல்லைகள்தான். இரண்டு கண்டங்களில் அமைந்த நாடு துருக்கி ஆசியா, ஐரோப்பா. துருக்கியில் அமைந்த ‘கிராண்ட் பஜார்’ குறித்த ஒரு தகவலைக் கேட்டால், தி.நகரிலிருந்து இஸ்தான்புலுக்கு ஹெலிகாப்டர் வசதிகள் இருக்கக் கூடாதா என்று தமிழகப் பெண்கள் ஏக்கம் கொள்ளக் கூடும். இஸ்தான்புல் கிராண்ட் பஜாரில் மொத்தம் 64 நீளமான தெருக்கள். 4000-க்கும் அதிகமான கடைகள். துலிப் மலர்களின் தாயகம் நெதர்லாந்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறா…

  8. மத்திய அரசு பள்ளிகளில் மீண்டும் ஜெர்மன் மொழிப் பாடம் கோப்புப் படம் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மீண்டும் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் பயிலும் மாணவர்கள் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத் தரப்பட்டு வந்தன. வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கர…

    • 1 reply
    • 1.3k views
  9. ஆந்திராவில் காங்கிரஸ் கட்திக் தலைவரை வரவேற்கும் விதமாக தீபாவளி ராக்கெட் பட்டாசில் புறாக்களை கட்டி விண்ணில் செலுத்தப்பட்டதில் ஏராளமான புறாக்கள் கொல்லப்பட்டன. ஆந்திர மாநி்ல காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாநில கட்சித் தலைவரின் வருகையை முன்னிட்டு புத்திசாலித்தனமாக அவரை வரவேற்கலாம் என்ற எண்ணம் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் உதித்தது. சமாதனத்துக்கு அடையாளமாக விளங்கும் புறாக்களை தனி பெட்டிகளில் அடைத்து அதை ராக்கெட் பட்டாசுகளில் கட்டி விண்ணில் செலுத்துவோம். ராக்கெட் பட்டாசு வெடிக்கும் போது பெட்டிகளும் வெடிக்கும் அப்போது அதில் இருக்கும் புறாக்கள் வானில் சிறகடித்து பறக்கும். இதனைப் பார்த்து…

    • 2 replies
    • 512 views
  10. இப்படி ஒரு சோதனையா... ராணுவ சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்!! டெல்லி: ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் வழக்கமாக பயன்படுத்தும் பிரத்யேக விமானம் திடீரென பழுதடைந்ததால் ராணுவ சரக்கு விமானம் மூலம் அவர் இந்தியா வந்து சேரநேரிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் இந்தியா வரும்போதெல்லாம் விமானம் ரூபத்தில் அவருக்கு சிக்கல் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார் ஏஞ்செலா மேர்கல். அப்போது அவரது விமானம் ஈரான் மீது பறப்பதற்கு அந்நாடு உரிய அனுமதியை வழங்கவில்லை. இதனால் அந்த விமானம் துருக்கி வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. …

  11. ஃபேஸ்புக் நிறுவனரின் குழந்தைக்குப் பெயர் சூட்ட மறுத்த சீன அதிபர்! நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன அதிபர் ஸி ஜிங்பிங் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க் ஸகர்பெர்க் காதல் திருமணம் புரிந்துகொண்ட ப்ரஸில்லா சான், சீன வம்சாவளிப் பெண் ஆவார். அகதியாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், அவரை காதலித்து வந்தார். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார். மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெர…

  12. இந்தியா வந்துள்ள சான்சலர் மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு புதுடில்லி: டில்லி வந்த ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலோ மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்களை மெர்கெல் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசுகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெர்கெல் இன்று (அக்டோபர் 05ம் தேதி) காலையில் டில்லி வந்தார் .இவரை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து மெர்கெலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி மெர்கெலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார் . நமஸ்தே மெர்க்கல்: ஏஞ்சலோ மெர்கெல் வருகை குறித்து பிரதமர் மோடி தனது …

  13. 'சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மிரா வளைவை தகர்த்தது ஐ.எஸ். 'தி ஆர்க் ஆஃப் ட்ரைம்ஃப்' | படம்:ஏஎப்பி. சிரியாவில் தொன்மையான பல்மைரா நகரத்தின் வளைவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்ததாக அந்நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து வருகின்றனர். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அடையாளம் காணப்பட்ட சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பகுதியின் பால் சாமின் கோயிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கெனவே தகர்த்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா நகரத்தை கடந்த மே மாதமே ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர…

  14. தற்பொழுது உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்பட்டு வரும் சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி மேற்கொண்டமைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் ஜூகர் பெர்க் செய்து கொண்ட ஒப்பந்தத்திலே அவர் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவர் ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் 17 லட்சம் டொலர்களுக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எனினும் அதனை பெர்க் நிறைவேற்ற வில்லை என்ற காரணத்திற்காகவே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=141660&category=WorldNews&language=tamil

  15. மலேசியா மற்றும் சிங்கப்பூரில், ஏற்பட்டுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக குறித்த நாடுகளில் உள்ள அனேகமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு உத்தவரவு விடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது இந்தோனேசியாவில் காய்ந்த சருகுகளால் ஏற்பட்டுள்ள பாரிய தீயின் காணமாகவே இந்த பெரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அங்கு இவ்வாறு ஏற்படுவதால் அண்டைய நாடுகளுக்கும் இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்பொழுது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு புகைமண்டலம் பரவியுள்ளது. இதனால் சுகாதார ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்பொழுத…

  16. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தால் சூழப்பட்டதில் வயோதிகர்கள் மூவர் உயிரிழந்தனர். இன்னொரு பெண் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளார். அங்கு போக்குவரத்து வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பினாலும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141623&category=WorldNews&language=tamil

  17. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஓர் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதலில் அம்மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 19 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளதுடன் விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனினும் இது ஒரு கொலைக் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141638&category=WorldNews&language=tamil

  18. ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தை பிரிட்டனில் கழித்தேன். சிரியா நாட்டு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான் அப்போது முக்கியச் செய்தி. துருக்கி கடற்கரையில் அகதிகளின் சடலங்கள் ஒதுங்குவது அதிகரித்தன. தங்கள் நாட்டு எல்லை வரை வந்த அகதிகளை ஹங்கேரிய போலீஸார் குண்டாந்தடி கொண்டு அடித்து விரட்டினர். இவையெல்லாம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. இச்சூழலில் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விவாதங்களும் எங்கும் எழுந்தன. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், "நம்மால் இனி அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்தது. அதற்கான காரணங்களும் அதில் தரப்பட்டிர…

  19. படம்: ஏபி அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யாமல் தடுப்பதன் மூலம் சீனாவிடம் தங்களை உதவி கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று இந்தியாவை நேபாளம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேபாள தூதர் தீப்குமார் உபாத்யாயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவிகளை நாடும் நிலைக்கு நேபாளத்தை இந்தியா தள்ளிவிடக் கூடாது. மற்ற நாடுகளிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக இந்தி…

  20. மலேசியாவில், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இந்தோனேசியாவில் தணலாக எரிந்துகொண்டிருக்கும் காய்ந்த சருகுகளால் பரவும் தீ தான் இந்த பெரும்புகை மண்டலம் உருவாகக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த புகைமாசு தான் முன்னெப்போதையும் விட மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனேமான இடங்களில…

  21. சிரிய பிரச்சினையை அமெரிக்க - ரஷ்ய போராக மாற்ற வேண்டாம்: ஒபாமா அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மீதான ரஷ்யாவின் தொடர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க, இதனை இரு நாடுகளின் மறைமுக போராக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சிரியாவில் நடுநிலையான கிளர்ச்சியாளர்களுக்கு தங்களது ஆதரவு நீடிக்கும் என்பதையும், சிரிய அதிபர் பஷர் அல் அசாதுக்கு எதிராக அமெரிக்கா நிலைப்பாடு கொண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதத்தில் பேசினார். இது குறித்து மேலும் அவர் கூறும்போது, "ரஷ்யா மீதான புத்திசாலித்தனமான முடிவாக சிரியா விவகாரத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளவ…

  22. பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் பாகல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல் தடவையாக சோனியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் ஒரு வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டார். மோடி நாட்டில் இருப்பதை விட விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதுதான் அதிகம். தேர்தலுக்காக மட்டுமே அவர் பீகாருக்கு லட்சக்கணக்கான மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி பீகார் மக்களை திசை திருப்பி வருகிறார். பீகாருக்கு அவர் அறிவித்திருக்கும் சிறப்பு நிதிஉதவி நடைமுறையில் சாத்தியமில்லாதது. பழைய திட்டங்களை புதியவைகளாக அறிவிப்பதில் மோடி கெட்டிக்கார…

  23. ஜெர்மனி இணைப்பு தின கொண்டாட்டம் இரண்டு ஜெர்மனிகளும் இணைந்ததன் 25ஆம் ஆண்டு தின கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் துவங்கியுள்ளன. இரண்டு ஜெர்மனிகளும் இணைந்ததன் 25ஆம் ஆண்டு தின கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் துவங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த தினம் அக்டோபர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. ஃப்ராங்ஃபர்ட் நகரில் நடந்த கொண்டாட்டங்களில் ஜெர்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கலும் அதிபர் ஜோவாச்சிம் காக்கும் கலந்துகொண்டனர். பெரும் எண்ணிக்கையில் குடியேறிகள் நுழைவதால், ஜெர்மனி திணறிவரும் நிலையில் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்துவருகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, இந…

  24. ஆப்கனில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி: சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். விமானம் தானாக கீழே விழவில்லை என்றும், தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாகவும் தலிபான் தீவிரவாதிகள் அறிவித் துள்ளனர். இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் ஏர் போர்ஸ் சி-130 ஜே ரக ராணுவ விமானம் ஜலாலாபாத் விமான தளத்துக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 11 பேரும் இறந்துவிட்டனர். இதில் 6 பேர் ராணுவ வீரர்கள், 5 பேர் பொதுமக்கள். விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிற…

  25. CNN)Ten people were killed when a gunman opened fire at Oregon's Umpqua Community College on Thursday, forcing the nation to face yet another mass shooting. Seven other people were injured, and the shooter is dead, Douglas County Sheriff John Hanlin told reporters. Earlier estimates had put the number of people hurt much higher. Multiple law enforcement officials familiar with the investigation identified the gunman as 26-year-old Chris Harper Mercer. Investigators have interviewed members of his family and friends, they said. "I will not name the shooter," Hanlin said. "I will not give him the credit he probably sought." Authorities credited a quick response by law e…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.