உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
மக்களை மதிக்காத மியான்மர் -1 இர்ரவடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகான் நகரம். பகான் மன்னராட்சிக் காலத்தில் 9-13ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்நகரமே பின்னாளில் நவீன மியான்மர் உருவாகக் காரணமாக இருந்தது. இரும்புத்திரை நாடு என்று முன்பு சோவியத் யூனியனைச் சொல்வார்கள். இன்றைக்கு அந்தப் பட்டத்தை மியான்மருக்கு அளித்துவிடலாம். மியான்மர் குறித்த செய்திகள் எளிதில் வெளியே கசிந்து விடுவதில்லை. அப்படி ஒரு ராணுவ ஆட்சி (இப்போது ராணுவ ஆட்சி இல்லையென்பது பெயருக்குத்தான்). ஆனால் சமீபகாலமாக மியான்மர் தொடர் புள்ள சில செய்திகள் இந்திய ஊடகங்களில் அழுத்தமாகவே பதிவாகி வருகின்றன. மியான்மரில் தமிழர்கள் பலர் உண்டு. (இது குறித்த பின்னணியைப் பிறகு பார்ப்போம்). மலேசியாவில் அதிக ஊதி…
-
- 10 replies
- 2.9k views
-
-
இம்பால்: 200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. 60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு…
-
- 0 replies
- 647 views
-
-
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத்தின் வலதுகரம் யேடா யாகூப் பாகிஸ்தானில் மரணம் 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான யாகூப் வாலி முகமது கான் என்ற யாடே யாகூப் பாகிஸ்தானின் கராச்சியில் இன்று மரணமடைந்தான். இவன் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வலது கரமாக செயல்பட்டவன். 1993ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கியவாளிகளான தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் உள்ளிட்டோர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாக…
-
- 0 replies
- 384 views
-
-
விரிவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் எகிப்தில் இன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் பிரதான கால்வாய் ஆழப்படுத்தப்பட்டிருப்பதோடு, அந்தக் கால்வாய்க்கு இணையாக 22 மைல் தூரத்திற்கு கூடுதல் கால்வாயும் வெட்டப்பட்டிருக்கிறது. விரிவாக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாயின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்குமென எகிப்து எதிர்பார்க்கிறது. இதன் துவக்கவிழாவில் மேற்கொள்ளப்பட்ட கப்பல் பயணத்தில் எகிப்தின் அதிபர் அப்தேல் ஃபடா அல் - சிசியுடன் வெளிநாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமிட்டன. சூயஸ் கால்வாயில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழாவின்போ…
-
- 2 replies
- 698 views
-
-
சவூதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதியில் உள்ள மசூதிகள் மீது இதற்கு முன்பும் இரு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த மசூதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மே மாதத்தில் இரு ஷியா மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது. தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கும் ப…
-
- 0 replies
- 438 views
-
-
வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச் சூடு: காயமின்றி தப்பினார் வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச்சூடு. | கோப்புப் படம்: ஏஎப்பி. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள அந்நாட்டு தேசிய விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்து வாசிமின் மேலாளர் அர்சலான் ஹைதர் கூறும்போது, "வாசிம் தனது காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது அவரது கார் அருகே மற்றொரு கார் இடிப்பதுபோல வந்தது. திடீரென உள்ளே இருந்தவர்கள் துப்பாக்கியால்…
-
- 0 replies
- 339 views
-
-
சென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென டயர் ஒன்று தனியாக கழண்டு ஓடியதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் எம்70 என்ற பேருந்து, இன்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து வேளச்சேரி செக்போஸ்ட் அருகே சென்ற போது, பேருந்தின் முன் பக்க டயர் ஒன்று தனியாக கழண்டு ஓடியது. இதை பார்த்த பயணிகள் அலறினர். மிதமான வேகத்தில் வந்த பேருந்து சாலையில் தரை தட்டி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த…
-
- 0 replies
- 580 views
-
-
கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 1 ஏதென்ஸில் உள்ள சாக்ரடீஸ் சிலை. உலகின் தலைசிறந்த காவியங்கள் என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய இரண்டு, இலியட் மற்றும் ஒடிஸி. இவற்றை எழுதியவர் ஹோமர். பார்வை இல்லாமலேயே இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார். மேற்கத்திய இசை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் யானி. அவரது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இசைத்துறைக்கு வருவதற்கு முன்பேகூட சாதனை படைத்தவர் இவர். தனது 14வது வயதிலேயே தேசிய அளவில் 15 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றவர். மேற்கத்திய தத்துவத்தின் பிதாமகன் என்று இன்றளவும் கருதப்படுபவர் சாக்ரடீஸ். பல நூறாண்டுகளைத் தாண்டியும் இவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்…
-
- 9 replies
- 5.4k views
-
-
இலங்கைப் பணிப்பெண் விற்பனைக்கு; சவூதி எஜமானர் இணையத்தில் விளம்பரம் 2015-08-05 11:36:43 சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவரை விற்பனை செய்வதற்காக அவரின் சவூதி அரேபிய எஜமானர் அநநாட்டு இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்துள்ளார். 25,000 சவூதி றியால்களுக்கு (சுமார் 870,000 ரூபா) இப்பணிப்பெண்ணை விற்பனை செய்வதற்கு உள்ளூர் ஏல விற்பனை இணையத்தளமொன்றில் மேற்படி நபர் விளம்பரம் வெளியிட்டுள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 30 வயதான இப்பெண்ணுடனான சேவை ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் விரும்புவதாகவும் அப்பணிப்பெண், தாயகம் திரும்புவதற்குமுன…
-
- 0 replies
- 739 views
-
-
ரயில்னா, நாலு எலி இருக்கத்தானே செய்யும்... சொல்வது ரயில்வே அமைச்சர்! டெல்லி: ரயில் பெட்டிகளில் எலிகள் நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்று ரயில்வே துறை ஒப்புக் கொண்டுள்ளது. ரயில்களில் புளிச்சுப் போன தயிர் சாதம், ஊசிப் போனா சாம்பார் சாதம், வயிற்றைக் குமட்ட வைக்கும் இதர உணவுப் பதார்த்தங்கள் மட்டும்தான் சகஜம் என்றில்லை. மூட்டைப் பூச்சி, கரப்பான், எலி போன்ற உயிரினங்களும் சரளமாகவே புழங்கி வருகின்றன. இதுதொடர்பாக பயணிகள் காட்டுக் கத்தல் கத்தியும் இதை சரி செய்யும் வழியைக் காணோம். லோக்சபாவில் ஒத்துக் கொண்ட அமைச்சர் ரயில்களில் எலித் தொல்லை குறித்து புகார்கள் வந்திருப்பதாகவும், எலித் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று லோக்சபாவில் ஒத்து…
-
- 3 replies
- 685 views
-
-
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது: கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார். கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்த…
-
- 5 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள் தீக்கிரையாகின. விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது என்றார். இந்த தீ விபத்தின் காரணமாக 13 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் அறிவுறுத்தல் விடு…
-
- 0 replies
- 525 views
-
-
கனடா-ரொறொன்ரோ Toronto’s Exhibition மைதானத்தில் செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Dufferin Gates ற்கு அருகாமையில் அதிகாலை 3.30மணியளவில் துப்பாக்கி சூடுகள் கேட்டதை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.Toronto’s Exhibition மைதானத்தில் 2015 OVO கலைநிகழ்ச்சியின் பின்னர் விருந்து வைபம் நடைபெற்ற முற்சிக் இரவு விடுதியில் மனிதன் ஒருவர் சுடப்பட்டு கிடந்ததை பொலிசார் கண்டுள்ளனர். சுடப்பட்டவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் மேலும் நால்வர் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரவு விடுதிக்கு வெளியே சுடப்பட…
-
- 0 replies
- 612 views
-
-
கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளியிட்டுள்ளார்.கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சனைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி முறைப்படி கோரிய பின்னரே தேர்தலுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு கால அவகாசம் வழங்கும் முகமாகவே இந்த அறிவிப்பை இப்பொழுதே வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, தேர்தல் பரப்புரைகளுக்கான செலவினங்களை அந்தந்த கட்சிகளே செய்ய வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தல் திகதி முன்னரே அறிவிக்கப்…
-
- 0 replies
- 532 views
-
-
வீட்டில் இருந்த படியே மாதம் 16 லட்சம் ரூபாய் உழைக்கும் சின்ன பொண்ணு பிரிட்டனில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மாதம் £7.650 பவுண்டுகள் உழைக்கின்றார். இது இலங்கை ரூபாயில் பதினாறு லட்சம் ரூபாய்க்கு மேல். இந்த கணக்கு விளையாட்டை நீங்களும் தான் கேட்டு பாருங்க... நம்மளுக்கு ஒண்ணுமே புரியல்ல உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதோ..? http://www.newjaffna.com/moreartical.php?newsid=39697&cat=sports&sel=current&subcat=5
-
- 1 reply
- 1.8k views
-
-
சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து: சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தருவோருக்கு சிறை புதிதாக கொண்டுவரப்படும் குடிவரவு சட்டமூலம் ஒன்றின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் உரிமையை இழக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியும். வாடகைக்கு குடியிருப்போரின் அரசியல் தங்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் இடத்து, சில நேரங்களில் நீதிமன்றங்களின் உத்தரவின்றியே அவர்களுடைய வாடகைக்கான ஒப்பந்தத்தை வீட்டு உரிமையாளர் ரத்துச் செய்யவும் முடியும். வாடகை ஒப்பந்தங்களை செய்துகொள்வ…
-
- 1 reply
- 491 views
-
-
மனைவி நள்ளிரவு விருந்தில்…. இன்றைய சமுதாயத்தில் மனைவி நள்ளிரவு விருந்துக்கு செல்வது கணவருக்கு மனரீதியிலான சித்ரவதை அல்ல என்று மும்பை ஐகோர்ட்டு, ஒரு விவாகரத்து வழக்கில் கருத்து கூறியது. விவாகரத்து வழக்கு மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 1999–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது திருமண வாழ்க்கையில் 2 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கேட்டு, மாலுமி 2008–ம் ஆண்டு, மும்பை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் அவர், ‘‘எனது மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு செல்கிறார். குடிபோதையில் வீடு திரும்புகிறார். சிறிய விஷயத்துக்கு கூட…
-
- 0 replies
- 1k views
-
-
மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஆளில்லா விமானத்தை சுட்டுத் தள்ளிய தந்தை கைது அமெரிக்காவின் கெண்டுக்கி மாநிலத்தைச் சேர்ந்த வில்லியம் எச். மெரிடெத் அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? தன் மகளின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதுதான்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் பின்பக்கம் ’சன்பாத்’ எடுத்துக் கொண்டிருந்த வில்லியமின் 2 மகள்களும், அவரிடம் ஓடி வந்து பக்கத்து வீடுகளின் மேலே ஆளில்லா விமானம் ஒன்று பறப்பதை, பதற்றத்துடன் தெரிவித்தனர். வில்லியமின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது இளம்பெண் அப்போது தான், நீச்சல் குளத்தில் குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.இருந்தாலும், அடுத்து வரக்க…
-
- 3 replies
- 663 views
-
-
கனடா-கனடிய ஆராய்ச்சியாளர்களால் சமூக பரிசோதனையாக உருவாக்கப்பட்ட தானியங்கி இயந்திர மனிதன் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. கனடா பூராகவும் பயணம் செய்ததுடன் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து கொண்டது.அமெரிக்காவில் சுற்று பயணத்தை மேற்கொண்டிருந்த சமயம் அதன் அழிவை சந்தித்துள்ளது.மசசுசெட்டில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கோ செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் முடியாது போய் விட்டதாகவும் கூறப்பட்டது.இதனை உருவாக்கியவர்களிற்கு அழிக்கப்பட்ட றோபோவின் படம் அனுப்பபட்டுள்ளது. ஆனால் அதன் பற்றறி செத்து விட்டதால் இடத்தை கண்டிறிய முடியவில்லை.ஏன் எங்கே அழிக்கப்பட்டதென தெரியவில்லை. ஏராளமான சிறுவர்கள் இதனை பெரிதும் விரும்பினர் எனவும் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட…
-
- 0 replies
- 605 views
-
-
"முதலில் உங்கள் நாட்டை திருத்துங்கள்”:அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்த ஆப்பிரிக்க இளைஞர்கள்[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 01:40.02 பி.ப GMT ] ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார். ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். கென்யாவில் உள்ள நைய்ரோபியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒப…
-
- 0 replies
- 483 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள்? ஆய்வு செய்யும் பிரான்ஸ் அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 06:54.03 மு.ப GMT ] இந்திய பெருங்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களின் புகைப்படத்தை வைத்து போயிங் விமான நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) நேற்று முன்தினம் ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது. இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பாகங்களின் புகைப்படத்தை ஆய்வு செய்வதற்காக, தொவ்லொசு நகருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மலேசிய வல்லுனர் குழுவு…
-
- 0 replies
- 280 views
-
-
சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 1 சிங்கப்பூரின் ஒரு பகுதி பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர். எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே. ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின்…
-
- 1 reply
- 4.3k views
-
-
“13 KM”மலையைக் குடைந்து சாலை அமைத்தவர் யார் தெரியுமா…? August 02, 20157:04 am பீகார் மாநிலத்தில் ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள …
-
- 0 replies
- 1.7k views
-
-
மதுரா: மதுராவில் கோளாறு காரணமாக பாதி வழியில் நின்ற ரயில் பஸ்ஸை பயணிகள் சேர்ந்து தள்ளிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. கார், பஸ் போன்றவற்றில் செல்ப் ஸ்டார்ட்டர் வேலை செய்யாத போது அவற்றைத் தள்ளி ஸ்டார்ட் செய்வது வழக்கம். ஆனால், இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி ரயில் பஸ்ஸை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துள்ளார் டிரைவர் ஒருவர். இந்த சம்பவம் நடந்தது மதுராவில். வடக்கு மத்திய ரயில்வே, மதுரா - பிருந்தாவன் இடையிலான, 12 கி.மீ., துாரத்திற்கு ரயில் பஸ் ஒன்றை இயக்கி வருகிறது. இரண்டு பெட்டிகள் மட்டுமே கொண்ட 'மீட்டர் கேஜ்' ரயிலான இது அடிக்கடி பாதி வழியில் ரிப்பேராகி நின்று விடுமாம். அந்த வகையில் மசானி அருகே சென்ரு கொண்டிருந்த போது சில தினங்களுக்கு முன்னர் இந்த ரயில் பஸ் திடீரென நின்று விட்டது. டிரை…
-
- 0 replies
- 569 views
-
-
வானில் இருந்து பாரசூட் மூலம் குதிக்கும் வீரர்கள் உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர். இலிநொய்ஸில், ஒட்டாவாவில் நடத்தப்பட்ட இந்தச் சாதனையின் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக 164 வீரர்கள் வானில் இருந்து குதித்து, நிலைக்குத்தாக அணிவகுத்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2012இல் ஒரு குழுவைச் சேர்ந்த 138 பேர் சேர்ந்து ஏற்படுத்திய இப்படியான சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். தாம் ஒன்றாக ஒரு பூவைப்போல வானில் அணிவகுத்த சில விநாடிகளிலேயே, இவர்கள் பிரிந்து தரையை பாதுகாப்பாக எட்ட வேண்டியிருந்தது. இந்தச் சாதனை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/08/150801_skydivers
-
- 0 replies
- 337 views
-