உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு JUN 02, 2015 | 1:32by கி.தவசீலன்in செய்திகள் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில், அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்தி அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை கடந்த மாதம் 30ம் நாள் ஹிலாரிக…
-
- 0 replies
- 349 views
-
-
மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது JUN 01, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவிஸ் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சின் சியோன்சியர் நகரில் இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றது. ஜோன் கெரியின் மிதிவண்டி நடைபாதை ஓரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வேளையில் எந்த வாகனமும், அங்கு இருக்கவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து அவரது கால் முறிந்த போதிலும், ஜோன் கெரி சுயநினைவை இழக்க…
-
- 4 replies
- 393 views
-
-
பழைய காலாவதியாகும் திகதியுடனான ஒரு புதிய விசா, மற்றும் ஆவணங்கள் தபாலில் காணாமல் போதல் உட்பட்ட அதிகாரத்துவ தவறுகளிற்கான விலையை கனடாவிற்கு புதியவர்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வெளிநாட்டு மாணவன் ஏற்கனவே காலாவதியான திகதியுடன் கூடிய ஒரு புதிய விசாவை பெற்றுள்ளான். ஜமேக்கா மனிதரொருவருக்கு அவரது குடிவரவு விண்ணப்பம் செயல்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தது. ஒரு மாதத்தின் பின்னர் வேறொரு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னவென்றால் நீண்ட காலத்திற்கு முன்னரே பூர்த்தி செய்யப்படாத அவரது விண்ணப்ப தொகுப்பு திருப்பி அனுப்பபட்டு விட்டது என்பதாகும். அவரது கோப்பு இப்போது எங்கே என்பது எவருக்கும் தெரியாது. அ…
-
- 0 replies
- 335 views
-
-
கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள residential school system என்று சொல்லப்படும், தங்கியிருந்து கல்வியைப் பெறும் நடைமுறையில் இதுவரை 6000 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 19 நூற்றாண்டு முதல் பழங்குடியினக் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள இந்தக் கல்வித்திட்ட முறை தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் தற்சயம் வெளியாகியுள்ளது. பாலியல் ரீதியான தாக்குதல்கள், தனிமை மற்றும் குடும்பத்தில் இருந்தான பிளவு போன்ற காரணங்களே, இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன என்று இத்தகவலை வெளியிட்ட உண்மையைக் கண்டறியும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இது ஓர் கலாச்சாரப் படுகொலை என்று கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதி Beverly McL…
-
- 0 replies
- 386 views
-
-
பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றச் சாட்டுக்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் கனடிய பிரஜா உரிமையை இரத்துச் செய்தவற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.கடந்த யூன் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரஜா உரிமை மற்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.மிகவும் பாரதூரமான குற்றங்;களை இழைத்த பலர் கனடிய பிரஜா உரிமையை இழக்கின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், தேசத் துரோகம், வெளிநாட்டு அரசாங்கத்துக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் கனடிய பிரஜா உரிமையை இழப்பர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் வெளிநாடுகளின் இராணுவம் அல…
-
- 0 replies
- 479 views
-
-
மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறது. அங்கே ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனஅற அளவில் இருக்கிறது. ஏனையஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்துவருகிறது. போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆக இருக்கிறது. இத்தாலியில் இது 9.3 ஆக இருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறப்பு வீதம் 13 …
-
- 4 replies
- 783 views
-
-
தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள ஷியா மசூதியான அல் அனௌத் மசூதியில் இன்று மதியம் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தா அணிந்து வந்தார். அவர் பெண்கள் மசூதிக்குள் நுழையும் வாயிலுக்கு சென்றார். அந்த வாயில் பூட்டியிருந்ததால் ஆண்கள் செல்லும் வழியாக மசூதிக்குள் நுழைய முயன்றார். அப்போது புர்காவில் இருந்த அந்த நபரை பாதுகாவலர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர், பாதுகாவலர்கள் இருவர் மற்ற…
-
- 0 replies
- 229 views
-
-
டெல்லி: ஜப்பானில் 7.9 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்கு பதிவான நில நடுக்கத்தால் அந்த நாடே சின்னாபின்னமாகி போனது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த அச்சம் நீங்கும் முன்பாக, ஜப்பானில் இன்று 7.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பல கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை எதிரொலித்தது. டெல்லி மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்ததால், வீதிகளுக்கு ஓடிச் சென்றனர். கிழக்காசிய நாடுகள் சுனாமி பீதியடைந்தாலும், சுனாமி எச்சரிக்கைவிடப்படாததால் மக்கள் ந…
-
- 0 replies
- 189 views
-
-
உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனாவை மிஞ்சி உள்ளது என்று ஐ.நா.வின் ஆண்டு பட்டினி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்…
-
- 1 reply
- 366 views
-
-
லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- சிம்பாவே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலியாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சரியாக 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவல…
-
- 0 replies
- 172 views
-
-
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அருணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நர்ஸ்கள். உள்படம்: அருணா படம்: விவேக் பிந்த்ரே மும்பை மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றியபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த அருணா ஷன்பாக் (66) நேற்று காலை காலமானார். இதுகுறித்து, கேஇஎம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அவினாஷ் சுபே நேற்று கூறும்போது, “அருணாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது. குழாய் மூலம் உணவுப் பொருட்கள் செலுத்தப்பட்டது. இந்நிலையில்…
-
- 4 replies
- 499 views
-
-
இந்தியாவில் பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள்! [Thursday 2015-05-28 18:00] பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல். இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நால…
-
- 0 replies
- 438 views
-
-
மலையில் மோத சென்ற விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 37 பயணிகள் [ புதன்கிழமை, 27 மே 2015, 11:21.43 மு.ப GMT ] ஏர் பிரான்ஸ் விமானம் தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலை மீது மோதி விபத்தில் சிக்கவிருந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மே 2ம் திகதி 37 பயணிகளுடன் மாலபோவில் (Malabo) இருந்து கேமரூவின் பெரிய நகரமான டூலாவுக்கு (Douala) ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. இந்த விமானம் மாலபோவில் இருந்து கிளம்பும் போதே விமானத்தின் தானியங்கி எச்சரிக்கை மணி பிரச்சனையாக இருந்துள்ளது. இந்த சமயத்தில் புயல் காரணமாக விமானமானது அதன் நிலையான பாதையில் இருந்து மாற்றி வேறு பாதைக்கு அனுப்பட்டது. இந்நிலையில் விமானம் 13, 255 அடி உயரமுள்ள கேமரூன் மலையில் மோ…
-
- 0 replies
- 358 views
-
-
புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை! பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் ப…
-
- 21 replies
- 3k views
-
-
FIFA ஊழல் பல பெரும் புள்ளிகள் கைது உலக உதைபந்தாட்டச்சங்க வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சங்கத்தின் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக உதைபந்தாட்டச் சங்கத்தின் மாநாடு சூரிச்சில் நடைபெற உள்ள நிலையில் சுவிஸ் மற்றும் அமெரிக்கக் காவற்துறையினரின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஏழு அங்கத்தவர்களின் மீது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. fifa தலைவர் செப் பிளெற்றரின் நேரடி வாரிசாகக் கருதப்பட்ட FiFa உதவித்தலைவர் Jeffrey Webb மற்றும் Eugenio Figueredo , Eduardo Li, Julio Rocha, Costas Takkas, Rafael Esquivel ,Jose Maria Marin ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். …
-
- 1 reply
- 977 views
-
-
வியன்னா விமான நிலையம் ஊடாக இலங்கை அகதிகள் கடத்தல்! - ஊழியர்கள் உடந்தை [Wednesday 2015-05-27 07:00] வியன்னா விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையர்கள் உட்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் தோரணையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதாக அவுஸ்திரேலிய செய்தி ஒன்று கூறுகிறது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் 13 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தனியார் பாதுகாப்பு பணியாளர் ஒருவரால் சட்டவிரோதமாக அனுப்பப்படவிர…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே கணேசன் தெரிவித்துள்ளார். நட்பு நாடு என்ற அடிப்படையில் அணுகாது தமிழக அரசாங்கமே இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமை வியப்பானது என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி ம…
-
- 4 replies
- 524 views
-
-
இந்த 'மாய்' வகை டால்ஃபின்கள் 1.5 மீட்டருக்கும் குறைவான நீளமுடையவை உலகில் மிகவும் அரிதானதும், மிகச் சிறியதுமான மாய் வகை டால்ஃபின்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 15 வருடங்களுள் அவை முற்றாக அழிந்து போய்விடும் என, புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது 'மாய்' எனப்படும் இந்த வகை டால்ஃபின்கள், உலகளவில் ஐம்பதுக்கும் குறைவாகவே உள்ளன என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி வலைகளில் சிக்கி ஏராளமான அவ்வகை டால்ஃபின்கள் உயிரிழக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அருகி வரும் இந்த மாய் டால்ஃபின்கள், நியூசிலாந்தின் கடலுக்கு அப்பாலுள்ள ஆழமில்லாத கடற்பரப்பில் மட்டுமே காணப்படுகின்றன. 1970கள் முதல் இந்த வகை டால்ஃபி…
-
- 0 replies
- 393 views
-
-
வினிபெக்கில் கோழிக்குஞ்சுகளுடன் தொடர்பு கொண்டதால் சல்மொனெல்லா தொற்று ஏற்பட்டு 34-பேர்கள் சுகயீனமுற்றதாக நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5 தொடக்கம் மே 12வரையிலான காலப்பகுதியில் அல்பேர்ட்டாவில் 17பேர்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13, மற்றும் சஸ்கற்சுவானில் நான்கு பேர்கள் சுகயீனமுற்றமை குறித்து விசாரனை செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். சல்மெனெல்லா தொற்றின் அறிகுறிகள் சல்மொனெலொசிஸ் எனப்படும். காய்ச்சல், தசைபிடிப்புக்கள் மற்றும் வாந்தி போன்றனவும் காணப்படும். ஆரோக்கியமான மக்களிற்கு சிகிச்சை இன்றி குணமடையும் எனவும் ஆனால் சிலருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொது…
-
- 1 reply
- 461 views
-
-
நியூசிலாந்து: சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர். ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விர…
-
- 4 replies
- 329 views
-
-
அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில், தண்ணீர் பஞ்சம் முன்னேப்போதும் இல்லாத அளவில், அதிகரித்துள்ளது. நெஸ்லே நிறுவனம் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால், அங்குள்ள தேசிய வனப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால், அம்மாகாணத்தில் தண்ணீரைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால் பெருநகரங்களில் தண்ணீர் உபயோகத்தில் 25 சதவீதத்தை குறைக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்…
-
- 5 replies
- 594 views
-
-
மும்பை: விமான நிலையத்தின் மீது மர்ம பொருள் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மும்பை விமான நிலையத்தின் மீது 5 பாராசூட்கள் போன்ற உருவத்தில் மர்ம பொருட்கள் பறந்தன. இவற்றை ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விமான போக்குவரத்துறை பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக விசாரணை நடதவில்லை. விஷயம் விஸ்வரூபமெடுத்ததும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஜூகு கடற்கரையில் இருந்து சீன லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டதாகவும், அது திசை மாறி விமானங்கள் பறக்கும் பகுத…
-
- 0 replies
- 359 views
-
-
இந்தியாவில் வீசும் கடுமையான வெப்பக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது நாட்டின் பல பகுதிகளில் வீசி வரும் இந்த வெப்பக்காற்று காரணமாக சில பகுதிகளில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸைத் எட்டியுள்ளது. தென் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவிலேயே வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த இரு மாநிலங்களில் 750 பேர் வரை வெயிலின் உக்கிரத்தால் பலியாகியுள்ளனர். வெப்பக்காற்றின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும், வெளியே செல்வதானால் குடிநீர் எடுத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு…
-
- 0 replies
- 177 views
-
-
பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பிற்காக பறந்த போர் விமானங்கள்...நடுவானில் அதிரடி சம்பவம் (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 07:29.57 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு பயணிகள் விமானத்திற்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, நடுவானில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் போர் விமானங்களின் பாதுகாப்புடன் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Flight AF022 என்ற பயணிகள் விமானம் தலைநகர் பாரீசிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகருக்கு நேற்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் கூட்டு கண்காணிப்பு நிறுவனமான NORAD அலுவலகத்திற்கு ஒரு அ…
-
- 0 replies
- 192 views
-
-
மலேசியாவில் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள்! - அகதிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம். [sunday 2015-05-24 19:00] தாய்லாந்துடனான மலேசியாவின் எல்லைப் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட முகாம்களுக்கு அருகே பெருமளவு புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைகுழிகளில் காணப்பட்ட குறைந்தது நூறு சடலங்களும் மியன்மார் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகளுடையதாக இருக்கலாம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த கடத்தல் முகாம்கள் ஐந்து ஆண்டுகளாக அங்கு இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக மலேசியாவின் உள…
-
- 0 replies
- 361 views
-