உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு! [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 10:12.46 AM GMT ] பபுவா நியூகினியா அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், அவுஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியை சுற்றிய 300 கி.மீ. தூரத்திற்குள் சுனாமி …
-
- 0 replies
- 294 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை! - அருங்காட்சியத்தில் இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம்! [Friday 2015-05-01 12:00] இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின்…
-
- 0 replies
- 404 views
-
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து…
-
- 0 replies
- 366 views
-
-
முடியல்ல... இந்த அரசியல்வாதிங்க மட்டும் எப்படி இப்படி.. அடுத்தவனை கொப்பி பண்ணுறதில.. அவ்வளவு அவசரமா இருக்காங்க. அதுவும் இப்ப மேற்குலக அரசியல்வாதிங்களுக்கு பாடம் எடுப்பது.. ஹிந்திய மோடி.. சொறிலங்கா மைத்திரி. உலகம் உருப்பட்ட மாதிரித்தான். Election 2015: David Cameron sets out plan for 'first 100 days' David Cameron has said wages, welfare, housing and childcare will be at the heart of the Conservatives' programme for government in its first 100 days. http://www.bbc.co.uk/news/election-2015-32470837
-
- 7 replies
- 623 views
-
-
டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!! டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 34 replies
- 2k views
-
-
ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம் தீட்டியுள்ளது. உலகப் பயணம் செய்ய ஆர்வமுள்ள சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு சில ஆண்டுகளாக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப்பெரிய டெர்மினலை தொடங்க உள்ளது. 2018-இல் திறக்கப்படும் இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 700,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. வாடிக்கையாளர் நடைபயிற்சி தூரத்தை குறைக்கும் நோக்கத்திற்னான ஒரு ஆறு அடுக்கு கான்செப்ட் உருவாக்கவும் மற்றும் இணைப்பை அதிகரிக்கவும் பிரிட்டிஷ்-ஈராக் ஆர்கிடெக்ட், Zaha Hadid உடன் விமான ந…
-
- 0 replies
- 455 views
-
-
உத்தரவாதமாக ஆண் குழந்தை தரும் மருந்து, யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த மருந்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவதாகவும், அதுபோன்றதொரு பொருளுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆண் குழந்தையை உத்தரவாதமாக அளிக்கும் மருந்து பாபா ராம்தேவுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினையை மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கே.சி. தியாகி எழுப்பினார். “இதுபோன்ற ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒருநபர் எவ்வாறு, ‘பெண் குழந்தையைப் …
-
- 0 replies
- 365 views
-
-
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி இறந்துப் போனதாக ஈரான் வானொலி அறிவித்துள்ளது. வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் உள்ள ரக்கா நகரம் உள்ளிட்ட சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்ன…
-
- 3 replies
- 659 views
-
-
பால்டிமோரில் பொலிஸ் படுகொலை ஏப்ரல் 12 அன்று, 25 வயதான ஃப்ரெட்டி க்ரே, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி ஒருவரை "நேருக்குநேராக பார்த்தார்"; ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒரு காட்டுமிராண்டித்தனம் மற்றும் சித்திரவதைச் சம்பவத்தில், அவரது இடதுபுற மூன்று முதுகெலும்புகள் உடைந்து, அவரது முதுகு தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார். அந்த மனிதர் அனுபவித்த வலிநிறைந்த கொடூர அனுபவத்தின் வெறும் ஒரு பாகமாக மட்டுமே கருதக்கூடிய, ஒரு பார்வையாளரின் காணொளி, இறுகிய-முகத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழு பொலிஸ் வேனின் பின்னாலிருந்த ஒரு சிறிய இரும்பு கூண்டுக்குள் க்ரேயை உதைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, காயப்பட்டிருந்த அவர் கண்கூடாக வலியால் கதறுகிறார். முப்பது நிமிடங்களுக்குப் ப…
-
- 0 replies
- 385 views
-
-
பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்! [Thursday 2015-04-30 08:00] பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனம் ஒன்றில் முதல்தடவையாக இலங்கை தமிழர் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் தேர்தல் களத்தில் பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ம் 77ம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.அதில் “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் டேவிட் கெமரோன் மேற்கொண்ட விஜயத்தை அடுத்தே இந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த தேர்தல…
-
- 0 replies
- 347 views
-
-
மயூரன் சுகுமாரன் மற்றும் அவரது சகாக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவிற்கான தனது தூதுவரை மீள அழைத்துள்ளது. பாலி 9 என்ற ஆஸி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட மயூரன் சுகுமாரனையும், சானையும் மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக ஆஸி அரசாங்கம் இறுதிவரை கடும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருருந்தது. எனினும் தனது வேண்டுகோள்களுக்கு இந்தோனேசியா உரிய முறையில் செவிசாய்க்காதது குறித்து ஆஸி அரசாங்கம் கடும் சீற்றமடைந்துள்ளது. ஆஸி பிரதமர் டொனிஅபொட் தண்டனை குரூரமானது, தேவையற்றது குற்றவாளிகள் சிறையிலிருந்த காலப்பகுதியில் திருந்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தோ…
-
- 2 replies
- 510 views
-
-
நைஜீரியாவில் இராணுவத்தினர் போக்கோ ஹராமுக்கு எதிராக நடத்திய ஒரு தாக்குதலின்போது கிளர்ச்சிக்காரர்களின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கிட்டத்தட்ட முந்நூறு பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் விசாரித்து வருகின்றன. அவர்கள் யார் என்பதையும் எவ்வளவுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள முனைகிறார்கள். ஓராண்டுக்கு முன் சிபொக் என்ற ஊரிலிருந்து கடத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள் தற்போது மீட்கப்பட்டவர்களில் இல்லை. சிபொக் மாணவிகள் கடத்தல் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். போக்கோ ஹராமுக்கு எதிராக நைஜீரிய இராணுவம் பெரிய நடவடிக்கை எடுத்துவரும் சம்பீஸா வனப் பகுதியில், செயற்கைக்கோள் வழியாக கண்காணித்த…
-
- 0 replies
- 375 views
-
-
கருப்பு நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் அந்தப் பள்ளியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாரா என்று அழைக்கப்படும் 15 வயதான அந்தப் பெண், பிரஞ்சு அரசு கொண்டுவந்த அந்தச் சட்டத்துக்கு அமைவாக தலையை மறைக்கும்விதமாக அணிந்துவந்த முக்காடை பள்ளிக்குள் நுழைந்ததும் நீக்கினாலும், முழங்கால் வரை அணிந்திருந்த கருப்பு நிற பாவாடையை தடை செய்வதற்கு அந்தச் சட்டத்தில் வழியில்லை…
-
- 0 replies
- 625 views
-
-
வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. வியட்நாம் போரில் போராளிகளின் இழப்பே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் உறுதி தளராது போரில் வெற்றி பெற்றவர்கள் வடக்கு வியட்நாமியப் போராளிகளே. http://www.bbc.co.uk/news/in-pictures-32483307
-
- 0 replies
- 1.8k views
-
-
நேபாள பூகம்ப மையம். | படம்: யு.எஸ்.ஜி.எஸ். நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார். இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. …
-
- 0 replies
- 389 views
-
-
அமெரிக்காவின் Baltimore நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ,கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் Baltimore நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் Baltimore நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், Baltimore நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வ…
-
- 1 reply
- 636 views
-
-
நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள் அங்கே நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது, அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கடன் அட்டைகளை (கிரெடிட்/டெபிட் கார்ட்) பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லிய…
-
- 0 replies
- 335 views
-
-
ஒயின் தயாரிக்கப் பயன்படும் திராட்சைகளை வளர்க்கும் தோட்டங்களில் இப்போது சீனா பிரான்ஸையும் மிஞ்சிவிட்டது என புதிதாக வந்துள்ள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சீனாவில் ஒயினுக்கான திராட்சைத் தோட்டங்கள் அதிகரித்து வருகின்றன பிரான்ஸிலேயே மிகவும் சுவைகூடிய ஒயின்களைத் தயாரிக்கப் பயனபடும் திராட்சைகள் பயிரப்படுவதாக பொதுவான எண்ணப்பாடு ஒன்று உள்ளது. சீனாவில் இப்போது 800 மில்லியன் ஹெக்டேர்கள் அளவிலான பரப்பளவில் ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சைகள் பயிரப்படுகின்றன. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஒயினுக்கான திராட்சைகள் பயிரிடும் நாடாக சீனா உள்ளது என்று சர்வதேச ஒயின் மதிப்பீடுகளுக்கான அமைப்பு கூறுகிறது. தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் பிரான்ஸின் ஆளுமையே இன்னும் உள்ளது எனினும் …
-
- 3 replies
- 385 views
-
-
நேபாளத்தில் போர் கால அடிப்படையிலான மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர். | படம்:ஏ.பி. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கோயில். | படம்:ராய்ட்டர்ஸ். நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அ…
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்காவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற க்ரீன்காட் லோட்டரி சீட்டிழுப்பை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட்ட தொடர்பாடல் அதிகரி செலி ஸ்ரேன் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். இந்த சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக கூறி, சிலர் போலியான முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், மின்னஞ்சல்களை அனுப்பியும் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றுள்ளமை குறித்து என்ற அமெரிக்காவின் க்ரீன்காட் சீட்டிழுப்புக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே தெரிந்துக் கொள்ள முடியும். இந்த இணைத்தளத்தை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை. எனவே இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் மி…
-
- 0 replies
- 401 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்…
-
- 0 replies
- 220 views
-
-
கனடிய அரசாங்கம் இயற்கை பேரழிவு மதிப்பீட்டு குழு ஒன்றை பூகம்பத்தினால் பாதிக்கப்பட் நேபாலிற்கு அனுப்புவதோடு 5-மில்லியன் டொலர்களை நிவாரண நிதியாகவும் வழங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றொப் நிக்கல்சனின் காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை 2,500ற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் 5-மில்லியன் டொலர்கள் பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உணவு, குடி தண்ணீர், தங்குமிடம், உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்றனவற்றை வழங்க உதவும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறிஸ்ரியன் பரடிஸ் கூறினார். மேலும் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் உயிர்-காக்கும் த…
-
- 0 replies
- 210 views
-
-
கனடா- வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் யன்னல் ஊடாக விழுந்து மூன்று வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான. இச்சம்பவம் ரொறொன்ரோவின் மேற்கு எல்லையில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2-மணியளவில் நடந்துள்ளது. வெஸ்ரென் வீதி மற்றும் லோறன்ஸ் அவெனியுவில் ஹிக்கறி வீதியில் அமைந்துள்ள வானுயர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இத்துயர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடித் துடிப்பெதுவும் இன்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் அங்கு மரணமடைந்துள்ளான். கிட்டத்தட்ட 17-வது மாடியிலிருந்து விழுந்திருக்க வேண்டும் என அவசரமருத்துவ சேவைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கட்டிடத்தில் பல்கனி இல்லை. கட்டிடத்தின் யன்னல்கள் அசைக்க கூடிய ஒரு சிறுபகுதி ஸ்கிரீனை கொண்டதெனவும் அது தவிர்ந்த மற்றய பாகம் திறக…
-
- 0 replies
- 372 views
-
-
தண்டனையை ஒத்திவைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என இந்தோனேசிய அரசாங்க வழக்கறிஞரகள் வலியுறுத்துவதால் ‘பாலி ஒன்பது’ குழு அங்கத்தவர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்றூ சான் ஆகியோரின் குடும்பத்தினர் இந்தோனேசியா செல்கின்றனர். இவர்களிற்கான மரணதண்டனை நிறைவேற்றும் காலக்கெடு 72-மணித்தியாலங்கள் என சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மரணதண்டனை மூன்று நாட்களில் நிறைவேற்றப்படலாம் என கருதப்படுகின்றது. தண்டனை ஒத்தி வைக்கப்படும் என்ற கடைசி நிமிட நம்பிக்கையும் மறைந்து போய் நாட்டின் அதிகாரிகள் இந்த வார ஆரம்பத்தில் துப்பாக்கி படையினரால் இவர்களின் தண்டனையை நிறைவேற்ற போகின்றனர் என்பது தெளிவாகி விட்டதென தெரியவந்துள்ளது. அரசாங்க வக்கீல்கள் மூலம் இவர்களது குடும்பத்தினருக்கும் தூதரக அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் இதை எழுதுவதன் நோக்கம் மயூரனை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதோ அல்லது அவரது குற்றத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மாறாக , அவருக்கும், அவருடைய நண்பரான மைக்கேல் சானுக்கும் இந்தோனேசிய அரசும், நீதித்துறையும் நிறவேற்றத் துடிக்கும் மரண தண்டனை பற்றிய பின்புலத்தை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். முதலில், எனது சொந்த அனுபவத்திலிருந்து இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். 2006 மார்கழி, வேலை நிமித்தம் நானும் எனது 8 தோழர்களும் சிட்னியிலிருந்து இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்ட்டாவிற்குப் பயணமானோம். இந்தோனேசிய நேரப்படி இரவு 7 மணிக்கு கொட்டும் மழையில் ஜகார்ட்டாவில் வந்திறங்கியபோது எம்மை வரவேற்றது, "போதைவஸ்த்துக் கடத்துபவர்களுக்கான தண்டனை மரண த…
-
- 3 replies
- 536 views
-