உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும். பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட க…
-
- 20 replies
- 1.1k views
-
-
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, இந்திய தேசிய விமான நிறுவனமான ஏயர் இந்தியா ஞாயற்றுக்கிழமை முழுக்க முழுக்க பெண் பணியாளர்கள் மற்றும் பெண் விமானிகளைக் கொண்ட விமானங்களை லேடீஸ் ஸ்பெஷலாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்பாக 1985-ம் ஆண்டு இதைப்போன்று பெண்களுக்காக விமானங்களை இயக்கியிருந்தது ஏர் இந்தியா, பெண்களுக்காக பிரத்யேகமாக விமானங்களை இயக்கியது, அதுவே உலகில் முதல்முறையாகும். ஏயர் இந்தியா இன்று உள்நாட்டில் AI806 (மும்பை-டெல்லி) AI475 (டெல்லி-ஜோத்பூர்-மும்பை) பாதைகளில் இரண்டு லேடீஸ் ஸ்பெஷல் விமானங்களும், சர்வதேச அளவில் டெல்லி-மெல்போர்ன் மற்றும் மும்பை-மஸ்கட்-மும்பை பாதைகளில் இரண்டு விமானங்களை…
-
- 1 reply
- 334 views
-
-
லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் லண்டனின் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும் இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதை கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர். சுமார் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிய…
-
- 0 replies
- 452 views
-
-
ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நி…
-
- 2 replies
- 742 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா. வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது ய…
-
- 6 replies
- 461 views
-
-
17b922c12c9293c5c7ce115687e57e6c
-
- 0 replies
- 309 views
-
-
யுஎஸ்.-வட கரோலினாவில் தேசிய ரயில்சாலை பயணிகள் கூட்டுத்தான வண்டியான ஆம்ரக் ரயில் வண்டி ஒன்று டிரக்டர்-ட்ரெயிலர் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 40-பயணிகள் வரை காயமடைந்துள்ளனரென கூறப்பட்டுள்ளது. 25-பேர் பேரூந்து மூலமும் 15-பேர் அம்புலன்ஸ் மூலமும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை பிற்பகல் விபத்து நடந்துள்ளது. விபத்தில் ரயில் எஞ்சின் பக்கவாட்டில் கவிழ்ந்ததுடன் முதல் இரண்டு கார்களும் மோதலின் பின்னர் கவிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. 212 பயணிகளும் எட்டு பணிகுழுவினரும் ரயிலில் இருந்ததாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தேசிய ரயில்சாலை பயணிகள் கூட்டுத்தானமான ஆம்ரக்கி…
-
- 0 replies
- 370 views
-
-
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும்போது நாம் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், ''தைரிய செயல்கள் மற்றும் புகழ்மிக்க சாதனைகள் நிகழ்த்திய பெண்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நமது நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை அனைவரும் மனதில் நிலைநிறுத்தி செயல்படுவதில் உறுதியாக இருப்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்போது நாம் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்கும்போதுதான் நாம் தோள் நிமிர்த்தி நிற்க முடியும். எனவே, நம் நாட்டில் இதுபோன்ற செயல்கள் நடக்காத சூழல் உருவாக வேண்டும். அதற்காக நாம் அ…
-
- 2 replies
- 382 views
-
-
ஒட்டாவா- ஈராக்கின் வடக்கில் இடம்பெற்ற நட்பு ரீதி துப்பாக்கி சூட்டில் ஒரு கனடிய சிறப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த துருப்புக்கள் உள் நாட்டு படைகளிற்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது ஒரு கவனிப்பு இடுகைக்காக முன் வரிசையில் திரும்பிய போது குர்தீஸ் போராளிகளால் தவறுதலாக சுடப்பட்டார்கள் என தேசிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நடந்துள்ளது. கொல்லப்பட்ட வீரர் கனடிய சிறப்பு நடவடிக்கை படைபிரிவு பெற்றவாவா, ஒன்ராறியோ தளத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் அன்ட்றூ ஜோசப் டொய்ரோன் என இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. காயமடைந்த மூவரும் மருத்துவ பராமரிப்பு பெற்று வருகின்றனரெனவும் அவர்களது காயங்களின் விபரங்களோ அல்லது பெர…
-
- 3 replies
- 448 views
-
-
யுஎஸ்-யுட்டா மாநிலத்தின் ஸ்பானிஷ் வோக் ஆற்று பகுதியில் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கார் ஒன்றிற்குள் சனிக்கிழமை ஒரு பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டாள். ஆனால் அவளது தாயார் விபத்தில் இறந்துவிட்டார். விபத்து நடந்து கிட்டத்தட்ட 13-மணித்தியாலங்களின் பின்னர் ஒரு மீனவர் இந்த நொருங்கிய காரை ஆற்றிற்குள் கண்டுள்ளார். தாயார் ஸ்பிரிங்வில் என்ற இடத்தை சேர்ந்த லின் ஜெனிவர் குரொஸ்பெக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரின் குழந்தையின் அடையாளம் வெளியிடப்படவில்லை. சிறிய பெண் ஸ்திரமான் ஆனால் இக்கட்டான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளாள். குரொஸ்பெக் இறந்த நிலையிலும் அவரது 18-மாத பெண் சிறுமி உயிருடன் வாகனத்தின் பின் பக்கத்தில் உறைபனி நிலையில் உள்ள தண்ணீ…
-
- 0 replies
- 334 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…
-
- 0 replies
- 285 views
-
-
கனடா- மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வார இறுதியிலும், நவம்பர் மாத முதல் வார இறுதிநாளிலும் கடிகாரம் நகர்த்தப்படுகின்றது. வசந்தகால ஆரம்பமான மார்ச் மாதத்தில் கடிகாரம் முன்நோக்கியும் முன்பனிக்காலமான நவம்பர் மாதத்தில் பின்நோக்கியும் நகர்த்தப்படுகின்றது. இதனை “spring ahead” and “fall back.” என்று கூறப்படுகின்றது. இந்த நேரமாற்றமானது பெரும்பாலான மக்களின் உடல் கடிகாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதென கூறப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை அதிகாலை 2-மணிக்கு இந்த பகலொளி சேமிப்பு நேரம் ஆரம்பமாகின்றது அதாவது ஒரு மணிநேர விலைமதிப்பற்ற தூக்கத்தையும் கண்களை மூடும் நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada…
-
- 0 replies
- 280 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்காவை பழிவாங்குவதற்காக வாஷிங்டன் நகரின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட கிரிஸ்டபோர் லீ கார்னெல் என்பவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உளவுப்படையினர் கைது செய்தனர். தற்போது கென்டக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த தீவிரவாதியின் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சிறையில் இருக்கும் அவனிடம் ஓஹியோ மாநிலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கண்டது. நீங்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்ற நிருபரின் கேள்விக்கு சற்றும் தயங்காமல், ”துப்பாக்கியை எடுத்துச் சென்று ஒபாமாவின் தலையில் வைத்து சுட்டுக் கொன்றிருப்பேன். பாராளுமன்றத்தில் இருக்கும் சில எம்.பி.க்…
-
- 0 replies
- 345 views
-
-
கனடா-சனிக்கிழமை அதிகாலை சட்பெரிக்கு வடக்கில் இரண்டரை மணித்தியால தொலைவில் கோகமா என்ற இடத்திற்கருகில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடம்புரண்டதால் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை என கனடிய தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது. சிரேஸ்ட நடவடிக்கைகள், பொறியியல் பிரிவினர் ,ஆபத்தான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட்ட பல அணியினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். தடம்புரண்ட பகுதிக்கு அண்மித்த நெடுஞ்சாலை 144 மற்றும் நெடுஞ்சாலை 560ற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மற்றகமி றிசேவ் வீதி பகுதிகள் பாதுகாப்பு கருதி 24முதல் 36-மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருக்கும் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 215 views
-
-
சிரியாவில் இயங்கி வரும் அல்கய்தா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத இயக்கத்தினருடன் நேற்று நடைபெற்ற வான்வழி தாக்குதலில், அதன் தலைவர் சுட்டு கொல்லப்பட்டார் என்று சிரிய ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக அல்கய்தா தீவிரவாத இயக்க ஆதரவு பெற்ற நுஸ்ரா முன்னணி பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களின் தாக்குதலில் இதுவரை ஏராளமான ராணுவத்தினரும் மக்களும் பலியாகி உள்ளனர். அவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்க சிரிய ராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் இருக்கும் ஹபீத் கிராமத்தில் நேற்று மதியம் நுஸ்ரா தீவிரவாத முன்னணி தலைவர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக சி…
-
- 0 replies
- 252 views
-
-
http://youtu.be/z8jWYJ5n79s புதுடெல்லி: தடையை மீறி 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பி.பி.சி. மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், யூ டியூப்பிலும் அந்த ஆவண படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்திற்கு டெல்லி காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில், மேற்கூறிய ஆவண படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்துள்ள போதிலும், அந்த படம் யூ டியூப்பில் இடம் பெற்றுள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட…
-
- 4 replies
- 913 views
-
-
கனடா- மத்திய அரசு கனடாவில் தலிடோமைட் மருந்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125,000.00 டொலர்களை மொத்த தொகையாக வழங்குகின்றது. ஆனால் உயிர் பிழைத்தவர் ஒருவர் இது போதாது என தெரிவித்துள்ளார். தலிடோமைட் என்பது ஒரு அரச அங்கிகாரம் பெற்ற குமட்டல்-எதிர்ப்பு மருந்து. இம்மருந்து 1950 மற்றும் 1960 காலப்பகுதிகளில் கர்ப்பினி பெண்களிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த தொகை வரி விலக்கு உள்ளதெனவும் அவசர சுகாதார பராமரிப்பு தேவைகளை பூர்த்திசெய்ய கூடியதாக இருக்கும் எனவும் கனடிய சுகாதார அமைச்சர் றொனா அம்ப்றோஸ் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப் பட்ட இழப்பீட்டு தொகுப்பாக 168-மில்லியன் டொலர்கள் வரை நடந்து கொண்டிருக்கும் மருத்துவ உதவிகளிற்கு தனிப்பட்ட சூழ்நிலைகளிற்கேற்ப உள்ளடங்கும…
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு படுகாயம் அடைந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு (வயது 72), சிறியரக விமானம் ஒன்றை ஓட்டி சென்றார். விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் பகுதியில் விபத்துக்குள் சிக்கியது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தை ஓட்டிய நடிகர் ஹாரிசன் படுகாயம் அடைந்தார். விமானம் விபத்துக்கு உள்ளானது குறித்து தகவல் அறிந்ததும், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அவரது மகன் பென்…
-
- 2 replies
- 357 views
-
-
கனேடிய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய மைக்கல் ஸெஹாஃப் பிபோ தயாரித்த ஒளிப்பதிவை நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பாதுகாப்புக் குறித்த குழுவிற்கு RCMPயினர் இன்று காண்பிப்பார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒளிப்பதிவைக் காண்பிக்குமாறு RCMPயினரைக் கோரும் தீர்மானம் ஒன்றை அந்தக் குழு கடந்த மாதம் நிறைவேற்றியது. கடந்த ஆண்டு நாடாளுனம்றத்தின் மீது தாக்குதல் ,இடம்பெற்ற சில நாட்களில் கருத்து வெளியிட்ட RCMP ஆணையாளர் பொப் போல்சன் (Bob Paulson), அதனை வெளியிடப்போவதாக கூறியபோதிலும், பின்னர் அந்த நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். ரொறன்றோவில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதம மந்திரி ஸ்ரீஃபன் ஹாப்பர், அந்த வீடியோ, காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியெனவும், அதை எப்போ…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத…
-
- 6 replies
- 434 views
-
-
பிரான்சின் தலைநகர் பாரீஸில் உள்ள மோனோபிரிக்ஸ் என்ற பல்பொருள் அங்காடியில், கட்டிடத்தின் திருத்த பணிகள் நடைபெற்ற போது 200க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்பொருள் அங்காடியின் மேலாளர், தேசிய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பு பிரிவினருக்கு (INRAP) தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இந்த எலும்புக்கூடுகள் பற்றி அகழ்வராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த பல்பொருள் அங்காடி இருக்கும் இடம், 11ம் நூற்றாண்டில் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடமாக இருந்தது என்றும், நோயின் தாக்கம் அல்லது பசிக்கொடுமையினால் இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 401 views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்: கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது கனடா தான், முதன் முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது. கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம் சமரசம் என்ற ஒன்றிற்கு முன் தமிழருக்கான …
-
- 0 replies
- 296 views
-
-
யுஎஸ்- அட்லான்டா விமானம் ஒன்று நியுயோர்க் நகர லாகாடியா விமானநிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்கிய போது ஓடுதளத்தில் சறுக்கிவிட்டது. பனிப்புயல் காரமாக இந்த விபத்து நடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டது. சறுக்கிய விமானம் ஒரு சங்கிலி-தொடர் வேலியை நொருக்கி உட்சென்று அதன் மூக்கு ஒரு பனி வளைகுடா விளிம்பில் முட்டியுள்ளது. பயணிகள் பைகளை சுமந்தவாறு பாரமான கோட்டுகள் மற்றும் கழுத்து துண்டுகளையும் சுற்றியவண்ணம் வெளியேற்றும் சரிவு மூலம் பாதுகாப்பாக பனிபடர்ந்த நடைபாதையை வந்தடைந்தனர். டெல்ரா விமானம் 1086, 125 பயணிகளையும் ஐந்து பணிக்குழவினரையும் சுமந்த வண்ணம் ஓடபாதையை விட்டு காலை 11.10மணியளவில் திசைமாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆறு பேர்கள் உயிர் ஆபத்தற்ற காயங்களால் பாதிக்கப்பட்டதாக த…
-
- 0 replies
- 319 views
-
-
தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் Mark Lippert மீது நபரொருவர் கத்தியொன்றினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சியோலில் விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சவரக் கத்தி தாக்குதலினை அடுத்து, அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகிய Mark Lippert காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர் வடகொரியாவைச் சேர்ந்த நபரென இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - See …
-
- 0 replies
- 157 views
-
-
சிங்கப்பூரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றங்களுக்காக ஜெர்மனியர்கள் இருவருக்கு 3 பிரம்படிகளும் 9 மாதச் சிறையும் தண்டனைகளாக அளிக்கப்பட்டுள்ளன. ரயில் தரிப்பிடம் ஒன்றுக்குள் நுழைந்துள்ள இருவரும் ரயில் ஒன்றின் மீது ஸ்ப்ரே மூலம் எழுத்துக்களை கிறுக்கியுள்ளதாக குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றம் இழைத்துள்ள இருவரும் இருபதுகள்-வயதில் இருப்பவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் குற்றங்களை இழைத்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து வெளியேறியிருந்த இருவரும், பின்னர் அண்டை நாடான மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் மிகவும் கவலைப்பட்டவர்களாக காணப்பட்ட இருவரும் தங்களின் செயல்களை 'முட்டாள் தனமான தவறுகள்' என்று கூறியுள்ளனர்…
-
- 3 replies
- 303 views
-