Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹிலாரி கிளிண்டன் வெற்றி . Wednesday, 05 March, 2008 10:41 AM . டெக்சாஸ், மார்ச் 5: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ரோடி தீவு மாகாணத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். . ஓகியோவிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரக் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில மாகாணங்களில் ஹிலாரியை விட அதிக வாக்குகள் பெற்று ஒபாமா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட நேற்றைய வா…

    • 0 replies
    • 790 views
  2. சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார். தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. சூடானின் பாராளுமன்றத்தில் தென் சூடானின் ஆள…

  3. குஜராத் மாநிலம் வடோதரா அருகே நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 43 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த தலித் மாணவர்கள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச்.............................................................. ........ தொடர்ந்து வாசிக்க+வீட்யோவைபார்க்க............. ..... http://isoorya.blogspot.com/2008/04/43_16.html

    • 0 replies
    • 602 views
  4. இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ் இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது. பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணங்கியது. எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/403155/இடைக்கால-போர்-நிறுத்தத்-திட…

  5. [size=4]மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த வார இறுதி விருந்தில் கலந்து கொண்ட இளம்பெண்களை அடித்து உதைத்த இந்து அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=3][size=4]கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.[/size][/size] [size=3][si…

  6. ஈரான் தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை பொய்- ஈரான் தகவல் ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் எந்தவித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லையென வெள்ளை மாளிகை குறிப்பிடும் தகவல்கள் பொய் என ஈரான் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது. அந்நாட்டின் ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கொமேனியின் கீழ் உள்ள செய்திச் சேவையான “மெஹர்” ஊடகமே இதனைக் கூறியுள்ளது. ஈரானின் தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஈரானின் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீ…

    • 0 replies
    • 712 views
  7. துபாய் அபுதாபியில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு(வீடியோ) துபாய்: ஐக்கிய அரபு நாட்டில் துபாய்,அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. கன மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலையில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் பேய்க் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தொடரும் மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான ச…

  8. சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும்: துருக்கி மிரட்டல்! துருக்கி இராணுவ வீரர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குகுதல் நடத்தினால் சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார். சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில், அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 துருக்கி இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த துருக்கி உடனடியாக பதிலடி அளித்தது. இந்த நிலையில் துருக்கி இராணுவ வீரர்கள் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு துருக்கி நாடாளுமன்றத்தில் எர்டோகன் கடும் கண்டனம் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் இராணுவ வீரர் மீது மீண்டும் சிரியா தாக்குதல் …

  9. ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை (03) அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கான ஒரு பெரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது. குடியரசுக் கட்சி தலைமையிலான சபை இந்த சட்டமூலத்தை 218–214 என்ற குறுகிய வாக்குகளில் நிறைவேற்றி கையொப்பமிட அவருக்கு அனுப்பியது. இந்த வாக்கெடுப்பு, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய சட்டமன்ற வெற்றியைக் குறிக்கிறது. அவரது குடியேற்ற ஒடுக்குமுறைக்கு நிதியைப் பெறுதல், அவரது 2017 வரி குறைப்புகளை நிரந்தரமாக்குதல் மற்றும் 2024 தேர்த…

  10. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் …

  11. அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு.... 28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை.. ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது. 26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்." - என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை. ராமர் குடிப்பார் அவருக்கு …

    • 0 replies
    • 1.7k views
  12. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன. இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலி…

  13. காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் October 8, 2025 12:58 pm இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும். போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை…

  14. முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் கார் மீது, பின்னால், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மோதியது. இதில், கலாம் காயமின்றி தப்பினார்.கேரள மாநிலத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் சென்றுள்ளார். அவர், நேற்று முன்தினம் கோழிக்கோட்டிலிருந்து, காரில் கண்ணூர் மாவட்டம் தலசேரிக்கு சென்றார். அவரது காருக்குப் பின், போலீசார் பாதுகாப்பு வாகனங்களில் வந்தனர். கொயிலாண்டி பகுதியில், கலாமின் கார் சென்ற போது, வாலிபர் ஒருவர், திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, கலாமின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் வாகனம், சற்று வேகமாகச் சென்றது. இதனால், கலாம் சென்ற காரின் பின் பகுதியில், போலீசார் வாகனம் மோ…

  15. தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில்,உண்மை அம்பலம்! (படங்கள் இணைப்பு) காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டா…

  16. 2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா ரஷியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கடந்த மாதம் இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது ரஷ்யா. ஆவணப்படம் மாஸ்கோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் வெளியே வேலை செய்யும் ரஷ்ய பாதுகாப்பு காவலருடன் ஒரு மோதல் சம்பவத்தில், வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தார் என்று துணை வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி ரியப்கோவ் தெரிவித்தார். காவலரின் முகத்தில் அந்த தூதரக அதிகாரி தாக்கியதாக ரஷியா கூறியுள்ளது. ஆனால் காவலர்தான் கோபத்தைத் தூண்டி, தூதரக அதிகாரியைத் தாக்கியதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு ரஷ்ய அதிகா…

  17. உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்? பிரபல விஞ்ஞானி வெளியிட்ட எச்சரிக்கை உலக அளவில் லட்சக்கணக்கில் மக்களை பலி எடுத்த, கொரோனா வைரஸை விட மோசமான வைரஸ், கோழிப் பண்ணைகளிலிருந்து பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அறிவியலாளரும் பிரபல புத்தக ஆசிரியரான டாக்டர். மைக்கேல் கிரேகர் என்பவரே இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார். உலகின் பாதி மக்கள் தொகையை காலி செய்ய அந்த வைரசால் முடியும் என்கிறார் அந்த விஞ்ஞானி. அந்த வைரஸ் பெயர் அபோகலைப்டிக் (apocalyptic) என்ற தகவலையும் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டாலும், உலகில் அடுத்த பெருந்தொற்று நோய் என்பது கோழிப் பண்ணைகளில் இருந்து தான் உருவாகும் என்று அவர்…

  18. அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்! அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பிய ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரியை, துணை வெளியுறவு அமைச்சர் ஹொசைன் ஜாபேரி அன்சாரி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்த இரண்டு நாட்களுக…

  19. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் பண்டைய இந்தியா மற்றும் ஹிந்து மதம் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்தப் பாடத்திட்டத்தில் இருந்து முஸ்லிம் மதத்தைத் தவறாகச் சித்திரிக்கும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.கலிஃபோர்னியாவில் அமலில் உள்ள பள்ளி பாடத்திட்டங்களில் புதிய தகவல்களை இணைத்து திருத்தங்கள் செய்வது தொடர்பாக, கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பண்டைய இந்தியாவை தெற்காசியா என்று மாற்ற வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சர்ச்சை எழுப்பியது உள்பட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. கல்வியாளர்களின் எதிர்ப்புகளுக்கு இடையிலும், இந்தியாவுக்கு ஆதரவாக கலிஃபோர்னியா கல்வி வா…

  20. புதுடெல்லி செல்லும் முதல்வர் தலைமையிலான தூதுக்குழுவின் பயணம் தள்ளி வைக்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. வரும் 4 ம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு தேதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 25 ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கை நவம்பர் 28ந் தேதி எம்.பி.க்கள் குழு சந்திப்பது என்றும், 4 ம் தேதி முதல்வர் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்களை கொண்ட தூதுக்குழு சந்தித்து பேசுவது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக எம்.பி.க்கள் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டது. நவம்பர் 28ந் தேதிக்கு பதிலாக டிசம்…

  21. ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ராயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார். தலிபான்களை ஒடுக்கும் பணியில், ஹெல்மான்ட் மாகாணத்தில், இவர், அக்., மாதம் ஈடுபட்டிருந்தார்.பிரிட்டன் விமானப் படையின், அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றார் என, பிரிட்டன் பத்திரிகைகள், தற்போது செய்தி வெளியிட்டு உள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%AA-%E0%…

  22. செக்ஸ் குற்றவாளிகள் போக்கிமான் - கோ விளையாட வருகிறது தடை பாலியல் குற்றவாளிகள் பரோலில் இருக்குபோது போக்கிமான் - கோ விளையாட்டை விளையாடுவதை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் தடை செய்யவுள்ளது. மிகவும் பிரபலமான இந்த இணையதள விளையாட்டை விளையாடுகின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாகாண ஆளுநர் ஆன்ரூ குவோமோ தெரிவித்திருக்கிறார். இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றிதிரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர். இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்…

  23. மியன்மார் மண்சரிவில் 162 பேர் பலி! மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (02) காலை 6:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 200 சுரங்க தொழிலாளர்கள் வரை மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த 54 பேர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://newuthayan.com/மியன்மார்-மண்சரிவில்-162-பே/

  24. கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 06:51 AM ஜெனீவா சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக ச…

  25. அமெரிக்காவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டவை என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் மிருகத்தனமான பொருளாதாரத் தடைகள் நமது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் நோக்கம் பிராந்தியத்தில் நமது செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நமது ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை நிறுத்துவதும் ஆகும் எனினும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் மூலம் தனது இலக்குகளை அடைய வேண்டும் என்ற அமெரிக்க கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையோ அல்லது அணுசக்தி திட்டங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.