உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
விசாகப்பட்டினம், விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய போர் கப்பல் மூழ்கியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் மாயமானார்கள். போர்க்கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளம் அருகே இரவு 8 மணி அளவில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறிய கப்பல் கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த கப்பல் மூழ்கத் தொடங்கியது. 23 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் இருந்த கப்பல் படை வீரர்கள் தத்தளித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவர்களை மீட்டு வர ஒரு கப்பல் அனுப்பப்பட்டது. ஒருவர் பலி அதற்குள் மூழ்கிய கப்பலில் இருந்த ஒரு வீரர் பலியானார். 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் இதில் மேலும் 4 வீரர்கள் காணாமல் போய்விட்டனர். …
-
- 2 replies
- 430 views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆக்ரா: இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானிய…
-
- 0 replies
- 328 views
-
-
குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் எருமை மாடு மீது விமானம் மோதியதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் விமானம் சேதம் அடைந்துள்ளது. சூரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 140 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட போது, எருமை மாடு குறுக்கே வந்த எருமை மாடு மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து இயக்கப்படும் தங்களது விமான சேவைகளை நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமான நிலையம் ஓடுபாதையில் அடிக்கடி விலங்குகள் வருவதால், சேவையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. எருமை மாடு மீது வி…
-
- 2 replies
- 444 views
-
-
மும்பை மாராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டம் ஷகிடா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா அகேலா இவர் தது தாலியை விற்று வீட்டில் கழிவறை கட்டு உள்ளார்.இதற்கு மராட்டிய மாநில கிராம வளர்ச்சி மந்திரி பங்கஜ் முண்டே சங்கீதாவை அழைத்து பாரட்டினார்.பின்னர் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியின் கழிவறைகள் தேவை குறித்து விழிப்புணர்வை உருவாக்க தனது புதிய தாலியை வழங்கினார். பின்னர் பேசிய பங்கஜ் முண்டே கூறியதாவது:- கழிவறைகள் நாட்டின் பல இடங்களில் இல்லை. இதன் விளைவாக பெண்கள பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது.எனது பதவிக்காலத்தில் எனது எம்..எல்.ஏ தொகுதி நிதியில் 25 சதவீதத்திற்கு,கழிவறைகள் கட்டுவேன்.பெண்களுக்கு எந்த இடையூறு இருக்காத வகையில் அதிக அளவு கழிவறைகளை கட்டுவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர…
-
- 0 replies
- 422 views
-
-
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கு தீவிரமடைய அடைய, இந்தியாவைச் சுற்றி எந்த அளவுக்கு தீவிரவாதிகள் நாச சதி வலையைப் பின்னியுள்ளார்கள் என்ற திடுக்கிடு்ம் தகவல்களும் குவிந்து கொண்டே வருகின்றன. மேலும் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்பு ஒரு சாதாரண தீவிரவாத அமைப்பாக இல்லாமல், படு பயங்கரமான சதிகளை அரங்கேற்றும் அபாயகரமான அமைப்பாக விளங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பின் 58 தீவிரவாத பிரிவுகளை மட்டும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடிக்கவில்லை. மாறாக வங்கதேச பிரதமரைக் கொல்லும் அதி பயங்கர சதித் திட்டத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜமாத்தின் சதித் திட்டம் ஏற்கனவே பல்வேறு குழப்…
-
- 0 replies
- 426 views
-
-
நியூயார்க் உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டிடம் மீது விமானம் மூலம் மோதி தாக்குதல் நடத்த்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமாக விளங்கிய அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் 2011 மே மாதம் சுட்டு கொன்றது. 40 நிமிடத்தில் அமெரிக்க சீல் சிறப்பு கடற்படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்தனர்.பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்…
-
- 2 replies
- 737 views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியா புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்ய…
-
- 3 replies
- 2k views
-
-
இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…
-
- 3 replies
- 424 views
-
-
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது இந்திய இறையாண்மைக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். விடுதலைப்புலிகள் அ…
-
- 9 replies
- 684 views
-
-
உலகின் அதிகாரமிக்க பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 15 வது இடத்தை பிடித்திருப்பதாக சர்வதேச பொருளாதார பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 72 பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 15வது இடத்தில் உள்ளார். திரையுலகைச் சேராதவராக இருப்பினும், நாட்டின் புதிய நட்சத்திரமாக மோடி விளங்குவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வர்ணித்துள்ளது. பா.ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்து, பிரதமராகியுள்ள மோடியால் நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்றுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை புடின் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர…
-
- 0 replies
- 326 views
-
-
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார். முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட…
-
- 0 replies
- 251 views
-
-
தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ராஇந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை வந்ததாக கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்தியக் கடற்படை தினத்த…
-
- 0 replies
- 533 views
-
-
ஈரான் நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கான்ச்சே கவாமி. | கோப்புப் படம்: ஏ.பி. ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பெண்கள் கலந்து கொள்ள கூடாது இது குறித்து ஈரான் …
-
- 10 replies
- 653 views
-
-
சீர்குலையும் சிரியா - 1 வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சி…
-
- 4 replies
- 1.6k views
-
-
கடந்த 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தில் நடத்திய தாக்குதலில், இக்கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிகளவில் பாதித்தது. 13 வருடத்திற்கு பிறகு வோல்டு டிரேட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த இரட்டை கோபுர கட்டிடத்தில் ஒன்று மட்டும் உயிர் பெற்று தற்போது வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. முதல் நாள் இக்கட்டிடத்தை இன்று வர்த்தகத்திற்காக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் துறைமுக ஆணையத்தின் தலைவர் பேட்ரிக் போயி திறந்து வைத்தார். முதல் நாளான இன்று இக்கட்டிடத்தில் சுமார் 175 பணியாட்கள் பணியாற்றினர். இச்சம்பவத்திற்கு முன்பு, இக்கட்டிடத்தை டி…
-
- 1 reply
- 500 views
-
-
'நாடற்றவர்' நிலையை ஒழிக்க ஐநாவிடம் 10-ஆண்டுத் திட்டம் உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. மலேசியாவில் 'நாடற்றவர்கள்' நிலையில் உள்ள மக்கள் நடத்திய போராட்டம் ( கோப்பு படம் குடியுரிமையோ கடவுச்சீட்டோ இல்லாத நிலையில் உள்ளவர்களே 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ளனர். உலகெங்கிலும் இப்படியான 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் சுமார் ஒரு கோடிப் பேர் இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. இப்படியான மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ, போதுமான கல்வி வசதிகளோ அரசியல் உரிமைகளோ இருப்பதில்லை. அகதி முகாம்களில் பிறக்கும் பிள்ளைகளும் ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களுமே இந்த 'ந…
-
- 0 replies
- 561 views
-
-
சென்னை, நவ. 4- அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ள பாராளுமன்ற கீழவை (பிரதிநிதிகள் சபை), மாகாணசபைத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். அவர்களில் முக்கியமான மூன்று இளம் தலைவர்கள் மீது மட்டும் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹாலே, காங்கிரசை சேர்ந்த அமி பெரா மற்றும் ரோ கண்ணா ஆகியோர்தான் அவர்கள். இவர்கள் அனைவரும் அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்கள் ஆவார்கள். நாளை முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கும். அந்நாட்டில் வாழும் மூன்று மில்லியன் இந்திய-அமெரிக்கா சமூகத்தினர் இம்மூவரும் கண்டிப்பாக வெல்வார்கள் என நம்புகிறார்கள். நிக்கி ஹாலே இரண்டாவது முறையாக தெற்கு கரோலினா கவர்னர் …
-
- 0 replies
- 559 views
-
-
மனைவி உடந்தையுடன் 59 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கனடா வாலிபர் கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்தார். இதுபோல் 59 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகினர். அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அனிட்பிட்ரோ (வயது 32) என்பவரை கைது செய்தனர். இந்த பாலியல் வல்லுறவுகளுக்கு அவரது மனைவி ஜெகனாரி உடந்தையாக இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார். அனிட்பிட்ரோ மீது 99 பிரிவுகளிலும், உடந்தையாக இருந்த மனைவி ஜெகனாரி மீது 6 பிரிவிகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு குறித்து அனிட்பிட்ரோ கூறு…
-
- 3 replies
- 790 views
-
-
கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தும் தடியடி நடத்தியும் கலைத்தனர். கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க வந்த சிவசேனா உள்பட பல்வேறு இயக்கத்தினரை காவல் துறையினர் தடியடி நடத்தியும், மிளகு ஸ்பிரே அடித்தும் விரட்டினர். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஓட்டலில் காதலர்கள் கும்மாளமிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாஜக இளைஞர் அமைப்பான முத்தி மோர்ச்சா அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து உடைத்தனர். இதனைக் கண்டித்து நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொச்சி மரைன் டிரைவ் பகுதியி…
-
- 6 replies
- 721 views
-
-
நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது. எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி அவர்களை அலைக்கழித்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலி அவர்களிடம் பிடிபட்டது. இதனால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றது. அதுவரை பயணிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விமானத்தில் எலி இருந்தால் அதில் எந்திர பகுதிக்குள் சென்று ஒயர்களை கடித்து சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு. அப்போது விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதை தடுக்கவே எலியை பிடித்த பிறகே விமானம் புறப்பட அனுமதிக…
-
- 0 replies
- 651 views
-
-
எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன…. எவ்வளவோ விசாரணைகள் நடந்தன…. எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன …. ஆனால் ஒரு முக்கியமான, மிக மிக முக்கியமான கேள்வி - இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….? -என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …? இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை காணப்படாமலே போகக்கூடும்.. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில் சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…! தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்க…
-
- 3 replies
- 3.8k views
-
-
நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிக்குழுவால் கடத்தப்பட்ட 200க்கு மேற்பட்ட சிறுமிகளை தமது போராளிக்குழு உறுப்பினர்களுக்கு அந்தக் குழு திருமணம் செய்து வைத்துள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் என தன்னைத்தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அபூபக்கர் ஷிகாயு என்ற அந் நபர் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வடகிழக்கு சிபொக் நகரிலிருந்து கடத்தப்பட்ட 219 சிறுமிகளும் தற்போது தமது கணவர்மாரின் வீடுகளிலுள்ளதாக கூறினார். ''அவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றப்பட்டுள்ளதுடன் புனித குர்ஆன் நூலின் இரு அத்தியாயங்களையும் மனனம் செய்துள்ளனர்'' என அவர் தெரிவித்தார். ''நாங்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள…
-
- 0 replies
- 541 views
-
-
கட்டுப் படுத்தப் படாத தொடர்ச்சியான கணிய எரிபொருள் (fossil fuel) அகழ்வு மற்றும் பயன்பாடு நீடித்தால் 2100 ஆம் ஆண்டளவில் அது தீர்ந்து விடும் எனவும் அதனுடன் ஆபத்தான பருவநிலை மாற்றமும் ஏற்படும் என்றும் ஐ.நா ஐப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் IPCC எனும் கால நிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு எச்சரித்துள்ளது. IPCC மேலும் கூறுகையில் 2050 அளவில் உலகின் மிகப் பெரும்பான்மையான மின் பேட்டரிகள் மிகக் குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளில் கட்டாயம் தயாரிக்கப் பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதுடன் இல்லாவிட்டால் உலகம் மிக மோசமான அதே நேரம் மீளத் திரும்ப முடியாத காலநிலை சீர்கேட்டை நிச்சயம் சந்தித்தே தீர வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளது. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் கடந்…
-
- 2 replies
- 700 views
-
-
இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…
-
- 12 replies
- 1.1k views
-