உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
சென்னை: எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான் என முன்னாள் நீதிபதி மாக்கண்டேய கட்ஜூக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே? என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடை…
-
- 1 reply
- 596 views
-
-
சதாம் உசைன் பற்றி நம்மில் பலர் அறியாத விடயங்கள் https://www.facebook.com/photo.php?v=340957149391505
-
- 4 replies
- 913 views
-
-
காசா பிரச்சினை: பிரிட்டிஷ் கொள்கையை விமர்சித்து பதவி விலகிய வார்சி அம்மையார் ( பிரிட்டிஷ் பிரதமர் கேமரனுடன் - ஆவணப்படம்) பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் , சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார். காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு " தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார். தொடர்புடைய விடயங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் …
-
- 0 replies
- 627 views
-
-
எளிமையான பின்னணி கொண்ட ஒருவர், நாட்டின் மிக உயர்ந்த நிலைக்கு வருவதுதான் ஜனநாயகத்தின் அற்புதம். இந்தோனேசியாவின் அதிபராக ஜோகோ விதோதோ (53) தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதை அப்படித்தான் சொல்ல வேண்டும். மரக் கடைக்காரரின் மகனாகப் பிறந்த ஜோகோ, செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணியோ, ராணுவத்தின் ஆதரவோ இல்லாத சாமானியர். மேகவதி சுகர்ணோபுத்ரி தலைமையிலான ‘இந்தோனேசிய ஜனநாயகக் கட்சி - போராட்டம்' (பி.டி.ஐ.-பி.) சார்பாகப் போட்டியிட்டு தற்போது வெற்றிபெற்றிருக்கிறார். பதிவான வாக்குகளில் 53.15% அவருக்குக் கிடைத்தது. ஜோகோ விதோதோ 9 ஆண்டுகளுக்கு முன்னால் சோலோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குற்றச் செயல்கள் அதிகமாகக் காணப்பட்ட அந்த நகரத்தில், ஜோகோவி பதவியேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகளால் குற்…
-
- 0 replies
- 503 views
-
-
ஜெயா அவமதிப்பு விவகாரம்; சுஸ்மா கடும் கண்டனம்! இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவதை அவதூறாக சித்தரித்து சர்ச்சைக்குரிய வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தகுதியற்ற வகையில் இலங்கை மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், இலங்கையில் இந்த செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகவும் முக்கியமான விவகாரம் என்றும் இது தொடர்பாக இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இலங்கைக்குக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்…
-
- 0 replies
- 837 views
-
-
ராம்லாவியின் வீட்டை குறிவைத்து வீசப்படும் குண்டு (வட்டத்துக்குள்). வெளியே சென்று வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு உதாரணமாக இருக்கிறது பாலஸ்தீனத்தின் காஸா பகுதி. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸா மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. காஸா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை என்றும் இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது. 28 நாட்களாக நீடிக்கும் போர் என்பதாலோ என்னவோ, தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள். இதில் சில விசித்திரமான சம்பவங…
-
- 0 replies
- 671 views
-
-
நேபாள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், தன்னை காண காத்துக்கொண்டிருந்த மக்களை சந்தித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி.|படம்: பிடிஐ. நேபாள நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, அந்நாட்டு மக்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தது என நேபாளத்தின் பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியிருக்கிறது. நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, நேபாள மக்களின் உள்ளங்களை நெகிழ வைத்ததாக நேபாளத்தின் 'டெய்லி மண்டே' பத்திரிகை புகாழாரம் சூட்டியுள்ளது. நேபாள மக்களுக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, நேபாள மக்களின் எண்ணங்களை…
-
- 0 replies
- 305 views
-
-
சீனாவில் நிலஅதிர்வு: 381பேர் பலி; 12,000 வீடுகள் சேதம் திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014 08:42 தென் மேற்கு சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நில அதிர்வினால் 381இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி தெரிவிக்கிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. தென் மேற்கு சீனாவிலுள்ள யுன்னன் மாகாணத்தின் தலைநகலர் குன்பிங் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், நிலத்துக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி இருந்தது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்த போதிலும், 6.5 ரிக்டர் அளவில் தாக்கம் இருந்ததாக சீனா தெரிவித…
-
- 0 replies
- 443 views
-
-
ஐ.நாவில் செப்டம்பர் 27-ல் உரையாற்றுவார் நரேந்திர மோடி! [saturday 2014-08-02 20:00] செப்டம்பர் 27-ல், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள தலைவர்களின் உத்தேசப் பட்டியலை ஐநா வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ல் நடைபெறும் ஐநா கூட்டத்தின், 69 வது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உலக அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் ஆண்டு கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொது விவாதம், செப்டம்பர் 24 …
-
- 8 replies
- 613 views
-
-
‘தேர்தல் நடத்த வேண்டும்’ டெல்லி சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி ஒரு வாரம் ‘கெடு’ வீடு, வீடாக சென்று கையெழுத்து வேட்டை நடத்த அரவிந்த் கெஜ்ரிவால் திட்டம் புதுடெல்லி, ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் டெல்லியில் சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி கட்சி, ஒரு வாரம் ‘கெடு’ விதித்துள்ளது. புதிதாக தேர்தல் நடத்துமாறு அரவிந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார். ஜனாதிபதி ஆட்சி டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, காங்கிரசின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்தது. ஆனால், 49 நாட்களில், முதல்–மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். எந்த கட்சியும் மாற்று அரசு அமைக்க முடியாததால், ஜனாதிபதி ஆட்சி …
-
- 0 replies
- 344 views
-
-
என் தந்தையின் 40 ஆண்டு கால டைரி என்னிடம் உள்ளது. அதில் பல ரகசிய தகவல்கள் அடங்கி உள்ளன, என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறி உள்ளார். முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்சின் சுயசரிதை புத்தகத்தில் சோனியா குடும்பத்தினரை பற்றி குறிப்பிட்டுள்ளார். பலமுறை சோனியா தன்னை புறக்கணித்துள்ளார் என்றும், சோனியா பிரதமாவதை ராகுல் தான் தடுத்தார் என்றும், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு ராஜிவ் அமைதிப்படையை அனுப்பினார் என்றும் கூறியுள்ளார். இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த சோனியா, நட்வர்சிங்கிற்கு பதில் அளிக்கும் வகையில் தானும் ஒரு புத்தகம் எழுதப்போவதாக கூறி, விஷயத்தை மேலும் சூடாக்கினார். நட்வர்சி…
-
- 0 replies
- 513 views
-
-
சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் ‘மகாத்மா அய்யங்காளி இருக்கை’ நடத்திய சர்வதேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17 ஆம் தேதி) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பான்மையைத் தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது” என கூறினார். மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காந்திஜியை பற்றிய அருந்ததிராயின் இந்த விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்கள் எழச்செய்தது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. காந்திஜியை இழிவுபடுத்திய அருந்ததி ராயின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இருந்து பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள சார்புரூகேன் என்ற ஜேர்மானிய நகரத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 250 பயணிகள் இருந்தனர். இதேபோல் ஹங்கேரி நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றது. தெற்கு ஜேர்மனியில் உள்ள மன்ஹெய்ம் ரயில் நிலையம் அருகே 2 ரயில்களும் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமா…
-
- 0 replies
- 687 views
-
-
இலங்கை கடற்படையால் தாம் கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை கண்டித்தும், இராமேஸ்வர மீனவர்கள் இன்று சனிக்கிழமை (02) ஏற்பாடு செய்திருந்த, கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை குறித்த மீனவர்கள் வேர்கோடு பகுதியில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தி கச்சதீவு நோக்கி செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் மீனவர் சங்க பிரநிதிகளிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன், 10 நாட்களில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து கச்சதீவு செல்ல…
-
- 0 replies
- 359 views
-
-
லாபாஸ்: காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்…
-
- 4 replies
- 675 views
-
-
இலங்கையின் அவதூறு கருத்தை முடிந்து போனதாக கருத வேண்டும்: சுப்பிரமணிய சாமி புதுடெல்லி: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்க…
-
- 4 replies
- 854 views
-
-
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக, பா.ஜ., தலைவர், சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான, ராகுலுக்கு, டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட், 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை, அமலாக்கப் பிரிவும் விசாரிக்க துவங்கியுள்ளது. இது, சோனியாவுக்கும், ராகுலுக்கும், புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு துவக்கிய பத்திரிகை, நேஷனல் ஹெரால்டு. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக வெளிவந்த இந்த பத்திரிகைக்கு, டில்லியில் சொந்த கட்டடம் மற்றும் இடங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 2,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு பத்தி…
-
- 0 replies
- 399 views
-
-
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவுக்கு 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின் அதிபர்களை கினீயிலுள்ள கொனாக்ரியில் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.இபோலா நோய் அதன் சரித்திரத்தில் இதற்கு முன் இவ்வரவு பெரிய அளவில் பரவியது இல்லை என்று டாக்டர் சான் தெரிவித்தார். ஆனால் இந்த நோயைக் …
-
- 0 replies
- 285 views
-
-
மும்பை பங்குச் சந்தை, இன்று பெரும் வீழ்ச்சி கண்டது. ஒரே நாளில் 414 புள்ளிகள் சரிந்தன. கடந்த மூன்று வாரங்களில் இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சியாகும். உலக அளவில் அதிக அளவு பங்குகள் விற்கப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து 25,480 என்ற நிலையிலும், நிப்டி 118 புள்ளிகள் சரிந்து 7,602 என்ற நிலையிலும் இருந்தன. மாருதி, டிஎல்எப், அல்ட்ரா செம்கோ, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன. நேற்று மும்பை பங்குச் சந்தை, 192.45 புள்ளிகள் சரிந்தது, குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 299 views
-
-
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறா…
-
- 0 replies
- 536 views
-
-
அமெரிக்காவில் உடல் முழுதும் கறுப்பு உடையணிந்த வண்ணம் நடந்தே நாட்டைச் சுற்றிவரும் இந்த மர்ம பெண்மணி அமெரிக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இது வரை இவர் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார்.சமூக ஊடங்களில் இவர் பெரிய அளவு பேசப்படுகிறார். யாரிடமும் பேச மறுக்கும் இவர் பெயர் எலிசபத் போல்ஸ். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு குழந்தைகளின் தாய். அவரது கணவரும் தந்தையும் இறந்துவிட்டார்கள். போலிஸார் இவரது அந்தரங்க உரிமையை மதிக்குமாறு பொதுமக்களைக் கோரியிருக்கிறார்கள். http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/07/140731_uswomaninblack.shtml
-
- 1 reply
- 472 views
-
-
ஹமாஸ் கட்டிய சுரங்கங்கள் அழிக்கப்படும்வரை தாக்குதல் --இஸ்ரேல் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நேடன்யாகு கூறியிருக்கிறார். இந்த வேலையை முடிக்க இஸ்ரேலை அனுமதிக்காத எந்த ஒரு போர் நிறுத்தத் திட்டத்தையும் தான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். இந்த வேலையை முடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று காசாவில் இருக்கும் இஸ்ரேலியப் படைகளின் தளபதி கூறியிருக்கிறார். இதனிடையே, காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களும், இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களும…
-
- 5 replies
- 496 views
-
-
புதுடெல்லி: உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள நிலையில், தானும் சுயசரிதை புத்தகம் எழுதப்போவதாகவும், அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியவரும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் பா.ஜனதா தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என அறிவித்த சோனியா, மன்மோகன் சி…
-
- 0 replies
- 646 views
-
-
மலேஷியாவின் மற்றுமொரு விமானம் விபத்துக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், குறித்த விமான நிலையத்தில் இருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர். சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது. இ…
-
- 3 replies
- 577 views
-
-
இஸ்ரேல் தாக்குதலில் 1360 பாலஸ்தீனர்கள் படுகொலை , ஹமாஸ் இயக்கமே பொறுப்பு: கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குற்றச்சாட்டு! [Thursday 2014-07-31 09:00] இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியது. ஹமாஸ் தீவிரவாத இயக்கமே இதற்கு பொறுப்பு என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் - காஸாமுனை இடையிலான போர் கடந்த 8-ந் தேதி மூண்டது. காஸா முனை மீது இஸ்ரேல் முதலில் வான்வழி தாக்குதலைத்தான் நடத்தியது. ஆனால் ராக்கெட் வீச்சை நிறுத்த மறுத்ததால், காஸா முனை மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இந்தப் போர் நேற்று 24-வது நாளை எட்டியது. நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தா…
-
- 0 replies
- 370 views
-