உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26996 topics in this forum
-
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்! தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கானி தனது அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இவர், ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் தலிபானின் சக்திவாய்ந்த பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார். இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு பொறுப்பேற்றது. …
-
- 0 replies
- 193 views
-
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்! பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம்…
-
-
- 30 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீப மாதங்களில் ரஷ்யா கிழக்கு யுக்ரேன் பிராந்தியத்தில் நிலையாக முன்னேறி வருகிறது எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது. மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. "நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கி…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள் 10 Dec, 2024 | 12:16 PM ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவ…
-
- 3 replies
- 263 views
-
-
சிரியா விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை விரைவில்! ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியது குறித்து ஐ.நா.வின் மூடிய கதவு கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட கூட்டத்தின் பின்னர் உரையாற்றிய ரஷ்யாவுக்கான ஐ.நா.வின் தூதுவர் வசிலி நெபென்சியா (Vassily Nebenzia), சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமையைப் பாதுகாப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தேவைப்படும் மக்…
-
- 0 replies
- 325 views
-
-
அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என…
-
- 1 reply
- 256 views
-
-
தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள்; பாதுகாப்பினை அதிகரித்த தைபே! தாய்வானின் இராணுவம் திங்களன்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது. தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு ப…
-
- 0 replies
- 223 views
-
-
பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
-
- 1 reply
- 293 views
-
-
சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் - நடப்பது என்ன? டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற…
-
-
- 1 reply
- 381 views
-
-
29 NOV, 2024 | 08:30 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்…
-
-
- 10 replies
- 660 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது த…
-
-
- 3 replies
- 617 views
- 1 follower
-
-
06 DEC, 2024 | 08:03 PM இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய …
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும்…
-
- 2 replies
- 339 views
- 1 follower
-
-
மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள…
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட பிரசன்னா பின்னர் காணாமல் போனார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார். பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம். அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான தண்டனை தொடரு…
-
- 2 replies
- 779 views
-
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு! இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன், இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்…
-
-
- 21 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொட…
-
- 1 reply
- 228 views
-
-
வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., …
-
- 0 replies
- 285 views
-
-
‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ர…
-
- 2 replies
- 469 views
- 1 follower
-
-
மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
04 DEC, 2024 | 01:50 PM இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன், அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா! கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சீனாவுடனான வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்நிலையிலேயே , சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும…
-
- 1 reply
- 776 views
-
-
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்! கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான ஹவுஸ் செலக்ட் துணைக்குழுவானது 1.1 மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற தொற்று நோய் குறித்த இரண்டு ஆண்டு கால விசாரணையை நிறைவு செய்த பின்னர் மேற்கண்ட அறிவிப்பினை திங்களன்று (2) வெளியிட்டது. AFP செய்தி நிறுவனத்தின்படி, குழுவானது 25 கூட்டங்கள், 30 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் அதன் முடிவை எட்டியது. 520 பக்க அறிக்க…
-
-
- 1 reply
- 290 views
-
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இரு…
-
-
- 2 replies
- 379 views
-
-
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார ந…
-
- 1 reply
- 310 views
-