Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெய்ஜிங்: இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஒட்டுமொத்த ஆசியாவின் அமைதியை சீர்குலைக்கும்விதமாக உள்ளதாக வெளியுறவுத் து…

  2. ரூ. 360 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: மே.வங்க கவர்னர் எம்.கே.நாராயணனிடம் சிபிஐ விசாரணை Read more at: http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html

  3. ஐ.நா./புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் சுமார் 5 கோடியே 80 லட்சம் பேர் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளதாகவும், இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா 10 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக குறைந்துள்ள…

  4. புதுடெல்லி: ஆபாசம் இல்லாத பாலியல் கல்வியை தாம் எதிர்க்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எய்ட்ஸை கட்டுப்படுத்துவதில் ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண பந்தமே மேலானது என்று ஹர்சவர்தன் அண்மையில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணிக்க முற்படுகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹர்சவர்தன், "தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளின் அமைப்புகளாக இருந்தாலும் சரி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பான உறவு பற்றியே வலியுறுத்தப்படுகிறது. இதிலேயே ஒரு இணையுடன் மட்டுமே உறவு என்ற கருத்தும் அடங்கியுள்ளது. பாதுகாப்பான உறவுக்…

  5. எரிவாயுக் குழாய் வெடிப்பு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று வெடித்ததில் இதுவரை குறைந்தது 14 பேராவது இறந்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 'கெயில்' என்ற இந்திய எரிவாயு ஆணையத்தின் கட்டடத்தில் உள்ள ஒரு குழாயிலிருந்து தீப்பிழம்புகள் எழுவதை பார்க்க முடிகிறது. 'கெயில்' நிறுவனம் இந்தியாஅரசாங்கத்திற்கு சொந்தமான மிக பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும்.குறைந்தது 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. நகரம் கிராமத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின்(ஒ.என்.ஜி.சி) எண்ணெய் சுத்திகர…

    • 0 replies
    • 999 views
  6. ஐசிஸ் தீவிரவாதக் குழுவினர் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. செயற்கை கோள் வழியாக எடுகப்பட்ட படங்கள் மற்றும் புகைப்படங்களின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே, ஐசிஸால், இவ்வளவு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் கணக்கிட்டுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.திக்ரித் நகரை, இந்த மாதத்தின் முற்பகுதியில் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகே இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது. இரண்டு நீண்ட குழிகளில், உடல்கள் நிறைந்திருந்ததை செயற்கைகோள் படங்களும், இதர ஆவணங்களும் காட்டுகின்றன என்று அ…

    • 0 replies
    • 752 views
  7. கணினித் தொழில் நுட்பத்துக்கு அடிமையதலைத் தடுக்க புதிய மையம் கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா ? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா ? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? கணினி யுகத்தில், நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத சில நவீன கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ட்ரன்க் கால் வசதி மூலம் நீண்ட தொலைவில் இருந்த உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது அந்த காலம். ஸ்கைப் வசதி மூலம் கடல் கடந்து வாழும் உறவினர்களை நேரில் பார்த்தபடி பேசுவது இந்த காலம். தொழில்நுட்ப கண்ட…

    • 0 replies
    • 491 views
  8. சேலம் ஆட்டசியர் அலுவலகம் முன்பு தன்னேழுச்சியாக திரண்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தில் இருந்து உயிர் தஞ்சம் கோரி வருகை தந்த ஈழத்து உறவுகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும். சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூடக்கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்டசியரை சந்திக்கக் கோரியபோது மறுத்துவிட்டார் , பின் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருந்தும் சிறப்பு முகாம் மூடுமவரை எமது போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/31947/57//d,article_full.aspx

  9. கோலாலம்பூர்: மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. மேலும், காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்திருக்கலாம் என்று புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், விமானத்தை தேடும் பணி நிறைவடைய இன்னும் பத்தாண்டுகள் நீடிக்கலாம் என்று மலேசியன் ஏர்லைன்சின…

  10. புதுடெல்லி: பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலம் தவறாக பயன்படுத்தபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்பட 4 பேர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 'நேஷனல் ஹெரால்ட்' மற்றும் 'குவாமி அவாஷ்' ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரால்டு ஹவுஸ் என்ற இடமும், மிகவும் விலை மதிப்பு மிக்க நிலமும் உள்ளது. இந்நிலையில் சோனியாவும்,ராகுலும் சேர்ந்து தொடங்கிய 'யெங் இந்தியன்’ என்ற நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் பெரும்பாலான பங்க…

  11. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில், அவரது ஆரம்ப நடவடிக்கைகள் பாராட்டுக்களை பெற்று தந்த போதிலும், ஆட்சியில் அமர்ந்து ஒருமாதம் முடிவதற்குள்ளாகவே ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட சாமான்ய மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து கடந்த மே 26 ஆம் தேதியன்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த ஒரு மாத காலத்தில் தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் மோடி, அவர்களது ஆடம்பர செலவுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பதவியேற்ற உடன…

  12. பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். …

    • 15 replies
    • 1.4k views
  13. 2008 ஆம் ஆண்டில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை செய்த முஸ்லிம் பெண் ஒருவர் வேலை நேரத்தில் தனது முக்காட்டினை நீக்க மறுத்தது பாரதூரமான தவறு என்று காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிரான்சின் உயர் நீதிமன்றத்தில் (La Cour de cassation) முறையிட்டிருந்தார். நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே என்று இன்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வேலைத் தளங்கள் பாடசாலைகள் போன்றவற்றில் மத அடையாளங்களைப் பாவிக்கக் கூடாது என்பது பிரான்சில் பொதுவான விதிகளில் ஒன்று. இத் தீர்ப்பினைத் தொடர்ந்து அப்பெண் ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யக் கூடும் என்று தெரிவி…

    • 1 reply
    • 552 views
  14. ஹைதராபாத்: கங்கையை தூய்மைப்படுத்துவது தனது முன்னுரிமை திட்டங்களில் ஒன்று என பிரதமர் மோடி அறிவித்துள்ள போதிலும், தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்பதை வலியுறுத்தும்விதமாக, கங்கை நீரில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைந்ததும் கங்கையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கங்கையை சுத்தப்படுத்த மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது; அதில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே புற்று நோய் உருவாகும் தன்மை இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் இயங்கி வரும் அணுசக்தி தேசிய மையத்தின…

  15. இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது. உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது. 1) ஆங்கிலம் உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர்…

  16. உலகக் கோப்பை சூதாட்டத்தால் சீனாவில் மாடியிலிருந்து குதித்து மாணவன் பலி தென்அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் இப்போட்டிகளை விரும்பிப் பார்ப்பார்கள். தீவிர ரசிகர்களாக இருக்கும் இவர்களிடத்தில் போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து சூதாட்டமும் நடைபெறும். இங்கு அரசே நடத்தும் உலகக் கோப்பை தொடர்பான லாட்டரி டிக்கெட் விற்பனையும் உண்டு. இந்த விற்பனை கடந்த சனிக்கிழமையுடன் அந்த நாட்டு பண மதிப்பின்படி நான்கு பில்லியன் யுவானைத் தொட்டுள்ளது என்றும் மொத்த விற்பனை 10 பில்லியன் யுவானைத் தாண்டக்கூடும் என்றும் சீனாவின் விளையாட்டு பொது நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கு தெற்கு மாகாணமான குவாங…

  17. Posted Date : 15:34 (24/06/2014) ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பல்வேறு பொருட்களுக்கு விளம்பர மாடலாக உள்ளார். இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'பிசினஸ் டுடே' இதழில் தோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் அட்டைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிசத் தலைவர் ஷியாம் சுந்தர், அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து…

  18. கரூர்: கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் கரூரில் நடந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா (17). பிளஸ் 2 முடித்திருந்த வினிதா, வரும் 1ஆம் தேதி கல்லூரியில் சேர இருந்தார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக வினிதா, கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிராமத்தில் இருந்து சைக்கிளில் வரும் வினிதா, கிருஷ்ணராயபுரத்தில் சைக்கிளை வைத்து விட்டு, பேருந்தில் சென்று கரூரில் 5 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து பேருந்தில் கிரு…

  19. ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைன் ஆட்சி செய்து வந்திருந்தார். இவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவளித்தனர். மேலும், சதாமின் பாத் கட்சியும் தடைசெய்யப்பட்டது. பின்னர் பதுங்கு குழியொன்றில் மறைந்திருந்த சதாம் ஹுஸைன் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், இவர் 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியவர் நீதிபதி ரவூப் அப்துல் ர…

  20. மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று (திங்கள்கிழமை) மதியம் அறிவித்தது. உலகப் பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர். தற்போது நடைபெற்று வரும் 38-வது தேர்வு கமிட்டி கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குஜராத்…

    • 0 replies
    • 393 views
  21. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலித்துகளுக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க சாதியினர் சலூன் கடைக்காரர்களை மிரட்டியுள்ளனர். இதை மீறி தலித்துகளுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்க‌ள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் பெல்லாரி மாவட் டம், தாலூர் பகுதியில் சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன. தாலூரில் தலித்துகள் சலூன் கடைகளில் சுழல் நாற்காலியில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்துகொள்ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்துதான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். தலித்துகளுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை சாதி இந்துக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மீறினால…

  22. புதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை கோரி, முறைப்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு, அங்குள்ள வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், அந்த பட்டியலை இந்தியாவுக்கு தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''சுவிட்சர்லாந்தில் கருப்பு பணம் பது…

  23. பதான்: உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள், கடந்த மே 27-ஆம் தேதி திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. மறுநாள் மரம் ஒன்றில் தூக்கிலிட்டவாறு கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து நடந்த மருத்துவ பரிசோதனையில், அந்த சகோதரிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இரு சிறுமிகளுக்கு ஏற்பட்ட இந்த கொடூரம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல…

  24. டொரண்டோவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை ஒரே இரவில் மிக அதிகமாக விலையேற்றம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இராக்கில் ஏற்பட்டு வரும் பதட்டநிலை காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று எரிபொருள் விலை டொரண்டோவில் மிக அதிகபட்சமாக லிட்டர் ஒன்றுக்கு 141.9 செண்ட் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு மிக அதிக விலையாக 141.1 செண்ட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று பெட்ரோல் ஸ்டேஷன் விற்பனையாளர்கள் கூறிவருகின்றனர். உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையே…

  25. ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை கடத்தப்போவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், நாங்கள் கூறும் அத்தனையையும் நரேந்திர மோடி செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் வெளியான இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த தகவல் வெளியானவுடன் இது குறித்து குஜராத் மாநில காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்திநகரில் வசித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. இருப்பினும், ஃபேஸ்புக் கருத்து குறித்து பதிலள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.