Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கிரிக்கெட் கழகங்களுக்கு வெளியே உள்ளூர் மைதானங்களில் விளையாடும் பிரிட்டிஷ்- ஆசிய இளைஞர்களை ஊக்குவிக்கத் திட்டம் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தெருக்களிலும் உள்ளூர் மைதானங்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசிய இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலும் பயிற்சியளிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வாழ்கின்ற ஆசிய சமூகத்தவர்களில் மூன்றில் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் நாட்டம் உள்ளவர்கள் என்று புதிய புள்ளிவிபரம் ஒன்றில் தெரியவந்துள்ளமை குறிப்ப…

    • 0 replies
    • 593 views
  2. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்புடைய அமைச்சகங்களை ஒரு அமைச்சரின் பொறுப்பில் விடுவது மேம்பட்ட பலனளிக்கும் என கருதி 17 அமைச்சகங்களை இணைத்து 7 வெவ்வேறு அமைச்சர்களின் கீழ் கொண்டு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘குறைவான அமைச்சர்கள், நிறைவான ஆட்சி’ என்ற கொள்கை யின்படி புதிய சீரமைப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகங்கள் நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை சுஷ்மா ஸ்வராஜ் வசம் உள்ள வெளியுறவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதியும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறையும் ஒன்றா…

    • 0 replies
    • 588 views
  3. சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) இடம் பெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஐரோப்பிய நாடுகளிற் பல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிப் போவதை எடுத்துக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் சந்தேகப்படும் அரசியல் வாதிகளினதும், தீவிரவாத வலது சாரிகளினதும் பக்கம் ஒரு கண்டம் சார்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி(f)ரான்ஸ் நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஜனாதிபதி வி(f)றான்சுவா கோலாந்தின் தவறான அரசியல் அணுகு முறையும், வலதுசாரிக் கட்சிகளின் தேசியக் கூட்டு முன்னணிக்கு (FN) 24.9 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியினரை விட ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல…

    • 9 replies
    • 1.1k views
  4. பி.பி.சி. செய்தியாளர்களுக்குப் பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களைச் சந்திக்கப் பெரிய பிரயத்தனங்கள் தேவையாக இருக்காது. நட்சத்திர ஹோட்டல்களின் உணவகத்திலோ அல்லது வரவேற்பறையிலோ வி.ஐ.பி-க்களை விரட்டிப் பிடித்துவிட முடியும். காரணம், வி.ஐ.பி-க்கள் தங்கும் விலையுயர்ந்த ஹோட்டல்களில்தான் பி.பி.சி. செய்தியாளர்களும் தங்கவைக்கப் படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் செய்தியாளர்களின் ஹோட்டல் அறைகளுக்காக பி.பி.சி. செலவிட்ட தொகை, அதிகமில்லை வெறும் ரூ.116 கோடிதான். இந்தத் தொகை சென்ற ஆண்டை விட ரூ.30 கோடி அதிகம் எனத் தெரியவந்துள்ளது. செய்தியாளர்களுக்குச் செலவிடப்படும் தொகைகுறித்து தகவல் பெறும் சுதந்திரச் சட்டம் மூலம் யாரோ பொதுநல விரும்பி தாக்கல் செய்த மனுவுக்குக் கிடைத்த பதில்தான் மேற்கண்…

  5. தனிமையிலே........ தனிமையில் இனிமை காண முடியுமா என்று கேட்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதுமையில் தனிமை என்பது மிகவும் சலிப்பைத் தரும் விஷயமாகத்தான் இருக்கவேண்டும். பிரிட்டனில் பேசத் துணையில்லாமல் தனியே 'போரடித்து'க்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு, உதவ, அவர்களுடன் பொறுமையாகப் பேச அமைக்கப்பட்ட ஒரு உதவித் தொலைபேசி எண்ணுக்கு ( ஹெல்ப்லைன்), அது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 'கால்'கள் ( தொலைபேசி அழைப்புகள்) வந்துவிட்டனவாம். இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வந்திருக்கும் அழைப்புகள் , சமகால பிரிட்டனில் பல முதியவர்கள் சந்திக்கும், அனுபவிக்கும் தனிமைப் பிரச்சினையைக் கோடிகாட்டுவதாக இந்தச் சேவையை உருவாக்கிய அமைப்பான, சில்வர்லைன் எ…

    • 0 replies
    • 430 views
  6. மோடி பதவியேற்பு விழா: ரஜினி, விஜய் தவிர்த்தது ஏன்? பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும…

  7. மலேசியா: ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகிர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது உசேனியை சென்னை கொண்டு வந்து விசாரிக்க கியூ பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டனர். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், பிடியாணை கேட்டும் கியூ பிரிவு காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=28355

  8. புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதல் மற்றும் பயங்கரவாத பிரச்னைகளை அவர் எழுப்பினார். தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரை மோடி இன்று காலை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பகல் 12.45 மணி அளவில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இர…

  9. மாலாவத் பூர்ணா உலகில் மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற உலக சாதனையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி படைத்துள்ளார். ஆந்திர மாநில சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதியில் தங்கி படிக்கும் 30 மாணவ, மாணவர்களுக்கு பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான லட்சுமி தேவதாஸ் என்பவரது மகள் மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் (13) மற்றும் கம்மம் மாவட்டம் செர்ல மண்டலம் கலிவேரு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (16) ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விட்டனர். மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்த இவர்கள், தேசிய கொடியுடன்…

  10. நரேந்திர மோடியின்.... அமைச்சரவை. வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்? பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்? ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை? சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை? கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்? அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்? ரவி சங்கர் பிரசாத் சட்டம்? மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை -தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்- இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

  11. ஐரோப்பிய செய்தியாளர் - இங்கிலாந்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள், பூமி அதிர்ச்சியை ஒத்ததாக அமைந்துள்ளதாக ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைகெல் வெ(க)ரேஜ் குறிப்பிட்டுள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அரசியற் கொள்கையோடு, வெளி நாட்டவர்களின் குடியேற்றத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிற்கும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி, இது வரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 100 ற்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது வரையில் ஐக்கிய ராஜ்ய அரசியலில் சுதந்திரக்கட்சி, பழமைக்கட்சி, தொழில்கட்சி என மூன்று பெரும் கட்சிகள் அதிகாரத்திற்குப் போட்டியிட்ட காலம் மாறி, நான்காவது புதிய கட்சியும் இணைவதாக அரசியல் வட்டாரம் கருத்துத் தெரிவித்துள்ளது. அத்தோட…

  12. புதுடில்லி: இன்று பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடி அமைச்சரவையில் 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பு இணைஅமைச்சர்களாகவும் பதவி வகிப்பர். மாலை பொறுப்பேற்கும் மோடி அமைச்சரவையில் இன்னாருக்கு என்ன பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான பட்டியல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமராகும் மோடி பாதுகாப்பு துறையை கைவசம் வைத்துக்கொள்வார், காபினட் அந்தஸ்து யாருக்கு ? : சுஷ்மா -வெளியுறவு - , ஜெட்லி - நிதி, ராஜ்நாத்- உள்துறை, நிதின்கட்காரி- போக்குவரத்து, ரவிசங்கர் பிரசாத்- தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை, ராம்விலாஸ்பஸ்வான், ( வேளாண் துறை ) , வெங்கைய…

  13. பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக …

  14. எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்: என் இனிய இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும், வணக்கம்! இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறேன். மே 16, 2014 அன்று இந்திய மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். முன்னேற்றத்திற்கான, நிலையான நல்ல அரசுக்கான தீர்ப்பை அளித்தனர். இந்தியாவின் முன்னேற்றத்தைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல நாங…

    • 0 replies
    • 480 views
  15. பழங்குடி மக்களைத் துன்புறுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு முதன் முதலாக மன்னிப்பு கோரும் இயக்கத்தை நடத்திய நாள் இன்று. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய பழங்குடிகள் வாழ்ந்த இடத்தை முதலில் டச்சு நாட்டினர் 1606-ல் ஆக்கிரமித்தனர். பிறகு 1770-ல் இங்கிலாந்து கால் பதித்தது. அவர்கள் பழங்குடிகளைப் பலவகையிலும் துன்புறுத்தினர். அதன் உச்சமாக, 1869 முதல் 1969 வரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிறுவர்கள் காவல்துறையினராலும், கிறிஸ்துவ சேவையாளர்களாலும் பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். தாய்மொழி பேசினால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் திருடப்பட்ட தலைமுறையினர் …

    • 0 replies
    • 388 views
  16. பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் தலைவர்கள் பங்கேற்பு:- 26 மே 2014 நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக் காக 7,000 பாதுகாப்புப் படை வீரர் கள் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்கிறது. நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்ப…

  17. அர்ச்சகராகும் முதல் இந்தியப் பெண் மகாராஷ்ட்ரா மாநிலம் பந்தர்பூரில் உள்ள வித்தோபா ருக்மினி கோவிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்க கோவில் நிர்வாகம் பெண்கள் மற்றும் பிராமணரல்லாதோரை நேர்காணல் செய்திருக்கிறது. இதன்மூலம் 900 ஆண்டுகளாக தொடரும் இந்திய சாதியத்திற்கு எதிராகவும், ஆண் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராகவும் இருந்து வந்த நடைமுறைக்கும் கோவில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முன்வந்திருக்கிறது. இதற்காக கோவில் நிர்வாகம் பெண்கள் மற்றும் பிராமணர் அல்லாதோர் பலரையும் ஏற்கனவே நேர்காணல் செய்துவிட்டது. ருக்மினி கோவிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்கவிருக்கும் பதினாறு பெண்களில் ஒருவரான ஊர்மிளா பாட்டே முதல் 15 நாட்களுக்கு அர்ச்சகராக பணியாற்ற இருப்பதன் மூலம், அர்ச்சகராகும் முதல் இந்தியப் பெண்…

  18. நவாஸ் ஷெரீப் | கோப்புப் படம் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காராச்சியின் மாலிர் சிறை அதிகாரி சையத் நஸீர் ஹுசைன் கூறும்போது, பாகிஸ்தான் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில் இந்தியக் கைதிகள் 59 பேர் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர், பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் என்று அவர் மேலும் தெரிவ…

  19. மரணதண்டனையும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனமும் Capital punishment and the brutality of the American ruling class நான் அதை முழுவதுமாக பார்த்தேன். மெலானியை குறிப்பிட்டதக்களவு உறுதியாக வைத்திருக்க உதவிய அவரது கால்களைக் கட்டியிருந்த தோல் பட்டியை நீக்குதல் மற்றும் அவரது செருப்புகளை அவர் அமைதியாக கழற்றியது போன்ற ஒவ்வொரு விபரத்தையும் நான் குறிப்பெடுத்துக் கொண்டேன்—இனி ஒருமுறை அதை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. ஒருபக்கமாக திரும்பிய, கறுத்த துணியால் மூடிக்கட்டப்பட்ட தலையோடு, கைகளின் வழியே ஓடும் அந்த கருநீல கோடுகளோடு, அவர்களின் முன்னால் உயிரான சதையின் நிறம் மாறிக் கொண்டிருக்கும் அந்த நேராக விறைத்த சடலம் தொங்கி கொண்டிருப்பதை என்னால் இன்னமும் பார்க்க…

  20. பாங்காக்கில் இராணுவப் பிரசன்னம் கடுமையாகவுள்ளது. தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை செய்துள்ளவர்களை விமர்சிக்கக்கூடியவர்களாகக் கருதப்படும் புத்திஜீவிகள் மற்றும் மற்றவர்களை இராணுவ அதிகாரிகள் முன்பு தோன்றச் சொல்லி கடைசியாக விதிக்கப்பட்ட காலக்கெடுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 35 பேரை வரச்சொல்லி உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் எத்தனை பேர் சமூகமளித்தார்கள் என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை தடுத்துவைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரவும் பிற அரசியல் தலைவர்களும் ஒரு வார காலத்துக்கு தடுத்துவைக்கப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக சுமார் இருநூறு பே…

  21. 'இந்த கட்டுரையில் அரசியல் இருக்கும். ஆனா இருக்காது’. காமெடி சீன் டைலாக் போல் இருக்கிறதா? முதலிலேயே ஒன்றைத் தெளிவாக்கி விடுகிறேன். இந்த கட்டுரை அரசியல் சம்பந்தப்பட்டது. ஆனால் அரசியல் சார்பற்றது. ஒரு மார்க்கெட்டிங் கன்சல்டண்டாக வாடிக்கையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அறிவது என் வேலை. சமீபத்தில் பலரை மயக்கியிருப்பது நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரம். மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை ஆராயும் எனக்கு மோடியின் எலெக்‌ஷன் மேஜிக்கில் இருந்த மார்க்கெட்டிங் லாஜிக் கவர்ந்தது. இதில் மார்க்கெட்டிங் பாடங்கள் நிறைய இருப்பதும் நிறைவாக இருப்பதும் புரிந்தது. அவர் பிரச்சாரத்திலிருந்து மார்க்கெட்டர்கள் கற்க வேண்டிய டாப் டென் பாடங்களை பட்டியலிட்டுப் படித்தால் பயன் இருக்கும் என்று…

  22. உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஓங்கி வளர்ந்துள்ள செம்மரங்களை வெட்டி, பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திற்கு கடல் தாண்டி கடத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போலீஸ், வனத்துறையினர் முயன்றும் கடத்தலைத் தடுக்க முடியவில்லை. செம்மரங்கள் சாதாரணமாக அதிக உஷ்ணத்திலும், அதிக குளிர் பிரதேசத்திலும் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். இவ்விரு சீதோஷ்ணமும் ஒருசேர சேஷாசலம் வனப்பகுதியில் உள்ளதால், இம்மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. சேஷாசலம் வனப்பகுதி சுமார் 190 கி.மீ நீளம் கொண்ட மலைப்பிரதேசமாகும். தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூலி ஆட்கள் இந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்…

    • 0 replies
    • 695 views
  23. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா வர விரும்பினாலும் அந்நாட்டு ராணுவம் தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது இன்று திடீர் என்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹெராத்தில் உள்ள துணை த…

  24. இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள அந்நாட்டு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 26 ஆம் தேதியன்று நரேந்திர மோடி இந்தியாவின் 14 வது பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயம் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நி…

  25. புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.