உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26687 topics in this forum
-
மலேசிய விமானம் - அமெரிக்க இழைஞன் புதிய தகவல்! மலேசிய விமானம் தொலைந்தது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அன்ரூ ஓட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பெரும் காற்றினால் தாக்கப்பட்டு கதவு திறந்திருக்கும், வெளியில் இருந்து காற்று வேகமாக உள்நுழைந்திருக்கும். சமகாலத்தில் உட்புற அமுக்கமும், வெளிப்புற அமுக்கமும் சேர பயணிகள் மயக்கமுற்றிருப்பார்கள், முற்றிலும் உடையாத நிலையில் விமானம் சுழன்று வேறு பாதைக்கு ஓடியிருக்கும். அறிவு மயங்கியவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் விமானம் தறிகெட்டு ஓடி எங்கோ தொலைந்திருக்க வேண்டும். ஆகவேதான் தற்போது தேடப்படும் இடங்களுக்கு முற்றிலும் சம்மந்தமில்லாத இடத்தில் அது விழுந்திருக்க வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்க எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று புறப்பட தயாரான வேளையில் அதன் சக்கரம் உடைந்து அந்த விமானத்தின் முன்பகுதி ஓடு பாதையில் மோதுண்ட பரபரப்பு சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது அந்த எயார் பஸ் 320 விமானத்தில் 149 பயணிகளும் 5 விமான உத்தியோகத்தர்களும் இருந்துள்ளனர். மேற்படி அனர்த்தத்தில் ஒருவருக்கு மட்டும் மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பின்னர் வேறொரு விமானத்தில் போர்ட் லோடர்டேல் நகருக்கு பயணத்தை மேற்கொண்டனர். video https://vine.co/v/MbXZrzIP…
-
- 3 replies
- 780 views
-
-
மீண்டும் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருக்கின்றன. நியூயார்க் தெற்கு மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குற்றச்சாட்டுகள், தேவயானிக்கு எதிராக போடப்பட்ட முந்தைய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இரண்டு நாட்களில் வருகின்றன. தேவயானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது ராஜியப் பாதுகாப்பு இருந்ததால் அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தா…
-
- 1 reply
- 558 views
-
-
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அண்மையில் நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், பாஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஏற்கெனவெ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கேஜ்ரிவாலின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ்ரிவால் தனது பேச்சில் கூறியது: "கடந்த ஓராண்டாக ஊடகங்கள் மோடி புகழ்பாடுகின்றன. …
-
- 0 replies
- 385 views
-
-
ரஷ்யா போரை விரும்பவில்லை என ஐ.நா.தூதர் தகவல்! [Friday, 2014-03-14 12:43:44] ரஷ்யாவுக்கு போரில் விருப்பம் இல்லை என்று மாஸ்கோவிற்கான ஐ.நா தூதர் வைடலி சுர்கின் தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற வைடலி சுர்கின் இது குறித்து பேசியதாவது - ரஷ்யா போரை விரும்பவில்லை. அதை ரஷ்யர்களுக்கு செய்வதையும் விரும்பவில்லை. கிரீமியா ரஷ்யாவுடன் சேர வேண்டுமா? என்பதை முடிவு செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைன் பிரதமர் அரசியலமைப்புக்கு முரணாக பதவியிலிருந்து இறக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்கு அது இல்லாமல் போயிருந்தால் உக்ரைனில் மக்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப…
-
- 0 replies
- 743 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்திகளின் ஐரோப்பியசெய்தியாளர் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சரித்திரத்தில் இடம் பெறும் தகைமை கொண்ட தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. தீவிரமாகப் பண்டைய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் யூதர்களும், வருங்காலங்களில் ராணுவ சேவையில் கட்டாயம் ஈடுபடவேண்டுமென பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 67 எதிர்ப்பு வாக்குகளுக்கெதிராக 120 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியினர் வாக்களிக்க மறுத்தமையும், இச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும்போது அரசியல் வாதிகளும் பாதிப்படைவர் எனும் கருத்தும் வலுப்பெற்றதாக ஜெறுசலத்திலிருந்து வரும் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது. யூதர்கள் மத்தியில் காணப்படும் அபிப்பிராய பேதங்கள் களையப்படுவது மிகவும் முக்கியமானதென்…
-
- 2 replies
- 378 views
-
-
கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்! Posted Date : 16:12 (12/03/2014)Last updated : 16:24 (12/03/2014) கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை. ரேடாரில் இருந்து மாயமாவதற்கு சில நொடிகளுக்கு முன் விமானம் தனது பாதையில் இருந்து கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தவிதத் தகவல்கள…
-
- 9 replies
- 1.5k views
-
-
இந்திய விமானத்துக்கு தவறான வழிகாட்டியது பாகிஸ்தான்! – பெரும் விபத்தில் இருந்து தப்பியது ஏர்இந்தியா ட்ரீம் லைனர். [Thursday, 2014-03-13 17:29:53] பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமான நிலையம் அருகே பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்துக்கு தவறான சிக்னல் கிடைத்ததால், மிகப்பெரிய விபத்து நிகழ இருந்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவின் டீரீம் லைனர் விமானம் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது, கராச்சி விமான நிலையத்தில் இருந்து தவறான தகவல் இந்திய விமான ஓட்டிகளுக்குக் கிடைத்துள்ளது.இதனால், அவர்கள் சென்ற பாதையில், துபாயில் இருந்து வந்து கொண்டிருந்த பிலிப்பை…
-
- 1 reply
- 566 views
-
-
காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த போயிங் 777 விமானம் பறந்த மொத்தம் சுமார் 5 மணி நேர காலத்திலான தரவுகள் அந்த விமானத்தின் இயந்திரங்களிலிருந்து தன்னியக்க ரீதியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தரையிலுள்ள நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். …
-
- 0 replies
- 580 views
-
-
வலியின்றி மிருகங்களை அறுக்குமாறு பிரிட்டனில் கோரிக்கை! [Thursday, 2014-03-13 13:08:10] பிரிட்டனில் சமய வழக்கங்களுக்காக மிருகங்களை வெட்டும்போது மனிதத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டின் மூத்த மிருக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முஸ்லிம்கள் அல்லது யூதர்களின் இறைச்சி சந்தைகளுக்காக மிருகங்களை வெட்டும்போது, முதலில் உணர்விழக்கச் செய்துவிட்டு- மிருகங்கள் வலியை உணராதபடி அவற்றைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டனின் மிருக மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஜோன் பிளக்வெல் கூறியுள்ளார். அது சாத்தியப்படாவிட்டால், அவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று அந்த இறைச்சியில் லேபல் குத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அல்லாவிட்டால், இந்த …
-
- 2 replies
- 557 views
-
-
தென்சீனகடலில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்து சீனா 3 செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மூன்று சந்தேகத்திற்குரிய விடயங்கள் காட்டப்பட்டுள்ளன. 22 மற்றும் 24 மீட்டரில் எடுக்கப்பட்ட ஒரு படமும் 13 மற்றும் 18 மீட்டரில் எடுக்கப்பட்ட படமும் 14 முதல் 19 மீட்டர் அளவிலான ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும், இது சந்தேகத்திற்குரியதுதான் என்பதால் 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி 6 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த விமானத்தில் 154 சீனப்பயணிகளும் 5 இந்தியர்களும் இருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் இருந்து 42 கப்பல்கள் 39 விமானங்கள் , போயிங் 777-200 விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 389 views
-
-
திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன். 1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும். பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் வ…
-
- 1 reply
- 536 views
-
-
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகி உள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி, கடலில் விழுந்துவிட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 40 கப்பல்கள், 22 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வியட்நாம் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விமானத்தில் சென்ற நால்வர் போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளதும், இருவர் விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதற்கு பயங்கரவாத பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கருதி, அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்கள் விமானம் விபத்தில் சிக்கவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிபட தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.as…
-
- 32 replies
- 2.6k views
-
-
டொரோண்டோ மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு பனிப் புயல் எச்சரிக்கை! [Wednesday, 2014-03-12 10:52:35] டொரோண்டோ மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கான சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றினை சுற்றுச்சூழல் கனடா இன்று விடுத்துள்ளது. கிழக்கு ஒன்டாரியோவின் Peterborough மற்றும் Kawartha Lakes பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. கன்சாஸ் மாகாணத்தில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று டொராண்டோவின் ஏறிப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும் , எதிர்வரும் புதன்கிழமை இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகப்படியான பனிப்பொழிவை கொண்டு வரும் என்றும் எச்சரிக்கின்றனர் கால நிலை அவதானிகள். இதைத் தொடர்ந்து Niagar…
-
- 0 replies
- 304 views
-
-
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …
-
- 0 replies
- 370 views
-
-
அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயர் - இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரிப்பு! [Tuesday, 2014-03-11 09:31:36] அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயரை, இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, ஏ.இ.ஜி., நிறுவனத்தின் தலைவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆப்ரகாம் பனிகோட். அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களை, இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத் தலைவரான ஆப்ரகாம், இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், அக்ரான் பல்கலைக்கழகத்தில், பாலிமர் சயின்ஸ் ப…
-
- 2 replies
- 367 views
-
-
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …
-
- 1 reply
- 880 views
-
-
கூட்டணி அமையாததால் போட்டியில் இருந்து ஒதுங்கினார் மத்திய அமைச்சர் வாசன்! [Tuesday, 2014-03-11 18:10:15] காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளாத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இருப்பினும், இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. மாறாக, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவேன். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யும் வகையில…
-
- 3 replies
- 1.1k views
-
-
கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திசை மாறி, மலாக்கா ஜல சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகி கிடப்பதாக ராடார் மூலம், மலேசிய ராணுவம் கண்டறிந்துள்ளது. மலாக்கா ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது நேர் எதிர் திசையில், மலாக்கா ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் விமானம் விபத்திற்குள்ளானதாக கண்டுப்பிடிக்கப்படடு்ளது. மேலும்பார்க்க .... தகவல்...தினமலர்.....
-
- 0 replies
- 827 views
-
-
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி 22ம் திகதி தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்! [Tuesday, 2014-03-11 18:49:05] இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் மத்திய அரசு முன் மொழிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அருண்குமார், ஜெயபிரகாஷ், சிவராஜ், யுவராஜ் ஆகிய 5 பேர்கள் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் அன்னை கல்லூரி மா…
-
- 1 reply
- 334 views
-
-
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், ஒரு தொழிலாளி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். சுக்மா மாவட்டத்தின் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள், டோங்காபால் - ஜெரூம் காட் பகுதியில் வந்தபோது நக்சல்கள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதேவேளையில், மலைப் பகுதிகளில் மறைந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர…
-
- 0 replies
- 291 views
-
-
இதனை சாதாரணமாக எடுக்கக் கூடாது. ராகுல் தமிழகம் வர உள்ள நிலையில்.. அவரை காங்கிரஸ் கூலிகளே ஆட்களை வைச்சு.. கொல்லத்திட்டமிட்டிருப்பதன் ரகசியத்தின் கசிவாகவும் இருக்கலாம். ராஜீவ் கொல்லப்பட முன்னரும் சுப்பிரமணியம் சுவாமியும் இவ்வாறு..அறிவிப்புக்களைச் செய்திருந்தவர்.. ராஜீவ் செத்திட்டார் என்று. !!!!
-
- 6 replies
- 1.2k views
-
-
கறுப்புப் பணம் தொடர்பான விபரங்களை இந்திய அரசிற்கு வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து விளக்கம் [Tuesday, 2014-03-11 11:34:44] இந்திய அரசு அதிகாரிகள் கேட்ட கறுப்புப் பணம் தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. சட்டப்பூர்வமாக தரப்பட வேண்டிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் முறையற்ற வகையில் பெறப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் அடிப்படையில் தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் கண்டறியும் தங்கள் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கடந்த மாதம் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருந்த நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது. http://www.seithy.c…
-
- 1 reply
- 344 views
-
-
இந்திய இராணுவம், சிபிஐயின் 3000 கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்கள் திருட்டு! [sunday, 2014-03-09 19:20:45] டில்லியில் உள்ள ராணுவம் மற்றும் சி.பி.ஐ., அலுவலகங்களில் உள்ள 3000க்கும் அதிகமான கம்ப்யூட்டர்களில் ஊடுருவி சில வெளிநாட்டு அமைப்புக்கள் தகவல்களை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜீட்டன் ஜெயின் கூறுகையில், 'இந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் சர்வர்களை நிறுவி, அவற்றின் மூலமாக ஊடுருவி உள்ளன. மிகவும் நவீன பாதுகாப்பு தொழில் நுட்பங்களை கொண்ட இந்த கம்ப்யூட்டர்களில், அந்த நிறுவனங்கள் திறமையாக நுழைந்துள்ளன. இது குறித்து அரசுக்கும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில்சிபலுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,' என்றார். http:/…
-
- 2 replies
- 414 views
-
-
உக்ரேனிய கிறிமியா பிராந்தியத்தை இணைப்பதற்கு ரஷ்யாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நகர்வும் அந்நாட்டுடனான இராஜதந்திர கதவுகள் மூடப்படுவதற்கு வழிவகை செய்யும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கிறிமியா உக்ரேனின் ஒரு பாகம் எனவும் ரஷ்யா அங்கு இராணுவ தலையீட்டை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சொர்கேயி லாவ்ரோவிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உக்ரேனிய நெருக்கடி தொடர்பில் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். கிறிமியாவுக்குள் நுழைய முயற்சித்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று அங்கு தீர்க்கப்பட்ட எச்சரிக்கை வேட்டுகளால் திரும்ப நேர்ந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்…
-
- 2 replies
- 702 views
-