உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
பிரான்ஸின் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுக்கும் அவரின் காதலி வலேரி திரையர்வெய்லருக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட், திருமணம் செய்யாத நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் வலேரி திரையர்வெய்லருடன் இணைந்து வாழ்ந்தார். 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிராங்சுவா ஹொலண்டே பதவியேற்றது முதல் வலேரி திரையர்வெய்லரே அந்நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கினார். ஆனால், சில மாதங்களாக பிரான்ஸின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜூலி காயெட்டுடன் ஜனாதிபதி ஹொலண்ட்டுக்கு இரகசிய தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் ஜூலி காயெட்டின் வீட்டுக்கு ஜனாதிபதி ஹொலண்ட் இரகசியமாக செல்வதை 'குளோசர்' எனும் பிரெஞ்சு சஞ்சிகையான …
-
- 0 replies
- 398 views
-
-
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படகொன்று கவிழ்ந்ததால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உல்லாசப் படகில் சுமார் 43 உல்லாசப் பயணிகள் பேர் பயணம் செய்துள்னர். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு அருகிகிலுள்ள வடகுடாவுக்கும் ரொஸ் தீவுக்கும் இடையில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் இப்படகு மூழ்கியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படகு விரைவாக மூழ்கியதால் பயணிகள் தப்புவதற்கு அதிக அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3958#sthash.RztgGecs.dpuf
-
- 2 replies
- 499 views
-
-
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப் போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார். அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பேசிய ஹிலாரி, தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன் என்று கூ…
-
- 0 replies
- 255 views
-
-
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திடீர் மாற்றம் உக்ரைன் ( Ukraine ) அரசியலில் நேற்றைய சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஜனுகோவிற்ச் ( Janukowitsch ) தன் அரசியல் எதிரிகளுக்கு அரசாங்கத்தில் பல உயர் பதவிகள் தர முன் வந்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகாரச் செயலரான அர்செனி ஜசென்யுக்கிற்கு ( Arseni Jazenjuk) முதன் மந்திரிப் பதவியும், குத்துச்சண்டை வீரரான விற்றலி கிலிற்ச்கோ விற்கு உதவிப் பிரதமர் பதவியும் தர முன்வந்துள்ளார். நாட்டில் சட்டதிருத்த மசோதா கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. தற்போதைய பிரதமர் நிக்கோலை அசரோவ் ( Nikolai Asarov ) ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிபந்தனை ஏற்கனவே பாராளுமன்ற அவசரகால இருப்பின் போது சென்ற நாட்களில் முடிவெடுக்கப்பட்டதாகும். புதிய முதன்…
-
- 1 reply
- 357 views
-
-
புதுடெல்லி: நடிகர் கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன்; தொழில் துறை மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஆர். எஸ். மஷெல்கருக்கு பத்ம பூஷன் விருதும், நடிகை வித்யா பாலன், பரேஷ் ராவல் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு வீரர்களான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீரர் பல்லிக்கல் மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் டி.எச்.வினாயக்ராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 2.8k views
-
-
மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 'ஐட்டம் பாய்' என பாலிவுட் குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது பத்திரிகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாலிவுட் குத்தாட்ட நாயகி ராக்கி சாவந்த்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைவிட ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார் என்றும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராக்கி சாவந்த், ''உத்தவ்ஜி எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சி செய்வதற்காக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். அவர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது. சட்டங்கள…
-
- 1 reply
- 576 views
-
-
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே அவருக்கு மிகப்பெரிய சிலை ஒன்று எழுப்பபட்டு உள்ளது.வெண்கலத்தால் 9 மீட்டர் உயரமும் 4.5 டன் எடையும் கொண்டதாக இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஒருமைபாட்டு தினமான டிசமபர் 16-ந்தேதி சிலை நிறுவபட்டது. நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தங்களது தயாரிப்பு என்பதைக் குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் ஒரு பித்தளையிலான முயல் ஒன்றை வைத்து உள்ளனர். இதை கண்டறிந…
-
- 0 replies
- 377 views
-
-
சுனந்தாவின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு: யார் அந்த நபர்? டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு இருந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விஷத்தால் இறந்திருக்கலாம் என பின்னர் பேசப்பட்டது. மேலும் அவர் இறக்கும் முன்பு யாருடனோ போராடியுள்ளார் என்றும், அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் அவரது உடலில் உள்ளது என்றும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் சுனந்தாவின…
-
- 2 replies
- 602 views
-
-
அமெரிக்க பெண்களில், ஐந்தில் ஒருவர் பலாத்காரம்! வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்…
-
- 6 replies
- 903 views
-
-
கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் நாட்டு கடற்படை மீட்டுள்ளது. ஓமன் கடற்பகுதியில் கடந்த 18ம் தேதி பிரான்ஸ் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அவர்கள் மீடப்பட்டுள்ளனர் என்று புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடற்கொள்ளையர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சென்ற கடற்படையினர். அப்போது 11 இந்திய மாலுமிகளை கட…
-
- 2 replies
- 464 views
-
-
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண் ஒருவர், பஞ்சாயத்து தீர்ப்பு காரணமாக 13 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், ஒருவர் அந்த பகுதியில் உள்ள வேறுசாதி வாலிபரை காதலித்தார். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப் பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தார் ரூ.2,000 அபராதம் விதித்தனர் அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டு மானாலும் இலவசமாக…
-
- 8 replies
- 793 views
-
-
1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் பீட்டர் ராயப்பன் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு என மனு தாக்கல் செய்தார். மனுதாரர் வாதத்தை மறுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவுக்கு கப்பல் போக்குவரத்து 1976 இல் ரத்து செய்யப்பட்டதாகவும், 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துதுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=387312596123454556#sthash.lhX3QxqJ…
-
- 1 reply
- 477 views
-
-
மேலூர் பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.சாமி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– தமிழக முதல்–அமைச்சர் அம்மா அவர்களின் 2001–2006 ஆம் ஆண்டு ஆட்சியின்போது எனது கோரிக்கை ஏற்று 2006–ம் ஆண்டு மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தர விட்டார். ஆனால் அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சியின் போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நான் இது குறித்து பல முறை அப்போது சட்டசபையில் பேசினேன். தற்போது தமிழகத்தின் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன் அம்மா அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்…
-
- 20 replies
- 1.3k views
-
-
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் தெய்திருக்கிறார். சித் நாத் சர்மா என்னும் ஒரு வழக்கறிஞர், தனது மகனான ''சுஸாந்த் ஜசு'' ஒரு கோடி ரூபாய்கள் நஸ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஜாதிப்பெயராகவும் இருக்கும் தனது குடும்பப் பெயரை தனது பெயரில் அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தியாவில், மிகவும் பெரிய விவகாரமாக சாதி கருதப்படுவதுடன், சாதி மாறி திருமணம் செய்துகொள்பவர்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் பல சந்தர்ப்பங்களில் தள்ளியும் வைக்கப்படுகிறார்கள். ஒரு வங்கி அதிகாரியான பெண்ணை திருமணம் செய்த, வரி அதிகாரியாக பணியாற்றும் ஜசு மீது இந்த மாத மு…
-
- 4 replies
- 622 views
-
-
புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார். டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்த…
-
- 4 replies
- 493 views
-
-
தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தற்போது மேற்கு வங்காள கவர்னராக இருக்கிறார். டெல்லியில் நேற்று நடந்த தேசிய பாதுகாப்பு அமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது தலிபான்களின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து எம்.கே.நாராயணன் பேசியதாவது:– தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீவிரவாத குழுக்கள் நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். இதுவரை அறியப்படாத முறைகள் மற்றும் நுட்பங்களை கையாள்கிறார்கள். லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியன் முஜாகிதின் மூலம் இந்தியா முழுவதும் 12 நெட்வொர்க்குகளை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளன. இளைஞர்களை மூளை சலவை செய்து பயிற்சிக்காக பாகிஸ்தான…
-
- 10 replies
- 687 views
-
-
சிங்கப்பூர்: கலவரம் எதிரொலியாக சிங்கப்பூரில் பொது இடங்களில் மது அருந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 295 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 57 பேர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுபோன்ற கலவரங்கள் இனி நடைபெறாமல் தடுக்க சிங்கப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிங்கப்பூரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் எங்கும் வாங்க முடியும். அதேபோல், பொது இடங்களில் மது குடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிங்கப்பூரில் பொது இடங்கள…
-
- 0 replies
- 426 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி காவல்துறையில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் தர்ணா போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 7.45 P.M. போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநருடன் பேச்சு நடத்திய பின் முதல்வர் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 6.45 P.M. போராட்டத்தை கைவிட கெஜ்ரிவால் மறுப்பு ஆம் ஆத்மியின் இந்த போராட்டம் மத்திய அரச…
-
- 1 reply
- 442 views
-
-
கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை குற்றவாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும், மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை …
-
- 0 replies
- 336 views
-
-
மதுவை விட அபாயகரமான போதைப் பொருளாக கஞ்சாவை (மரிவானா) தான் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தனது பிள்ளைகள் அதனைப் புகைப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை, கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது பல சமூகப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகும் என்று சிந்திப்பது தவறு என்றும் அவர் எச்சரித்துள்ளார். கஞ்சா பாவனைக்காக வறிய மக்களே, பொருத்தமற்ற தண்டனைகளுக்கு உள்ளாவதாக ஒபாமா கூறுகிறார். ஆனால் வசதிபடைத்தவர்கள் கடுமையான தண்டனைகளிலிருந்து அனேகமாக தப்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். த நியு யோர்க்கர் சஞ்சிகைக்காக அளித்த தொடர் நேர்காணல்களின் தொடர்ச்சியாகவே அதிபர் ஒபாமா இந்த விடயம் பற்றியும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 7 replies
- 829 views
-
-
18 வயதிற்கும் குறைவான பிரெஞ்சுச் சிறார்கள் ஜிகாத் போருக்காக சிரியா நோக்கிச் சென்று கொண்டும் சென்றும் உள்ளார்கள் என பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். 'இந்த வாரம் மட்டும் துலூஸ் பகுதியிலிருந்து இரண்டு 15 வயதுச் சிறார்கள் ஜிகாதிகளாக சிரியா சென்றுள்ளார்கள் எனத் தெரிவித்தார். பிரான்சிலிருந்து சிரியாவையும் சிரியாவை அண்டிய பகுதிகளை நோக்கியும் இது வரை 700 பிரெஞ்சுப்பிரஜைகள் சென்றிருப்பதைப் புலனாய்வுத்துறை கணக்கிட்டுள்ளது. இது வரை 21 பிரெஞ்சுக்காரர் சிரியாவில் ஜிகாத் யுத்தத்தில் இறந்துள்ளார்கள். பன்னிரண்டு சிறார்கள் கடந்த வாரம் சென்று இருப்பதும் இன்னும் ஆறு பேர் தயாராவதும் மிகவும் ஆபத்தானது. 2013 இன் கடைசியிலிருந்து 2014 ஆரம்பம் வரை மிக வேகமாக சிறா…
-
- 0 replies
- 331 views
-
-
பிலாஸ்பூர்: மருத்துவர்கள் இல்லை என காரணம் கூறி, ஊழியர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட கர்ப்பமான பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே அழகிய குழந்தை பிறந்தது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த வருடம் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த அப்பெண், சோதனை செய்து கொண்ட போது அவருக்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த நிறைமாத கர்ப்பிணியான அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே அவர் பிரசவத்துக்காக பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்…
-
- 0 replies
- 557 views
-
-
டெல்லி: கடந்த வாரம் தெற்கு டெல்லியில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி மால்வியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி. அவர் தான் டெல்லியின் சட்ட அமைச்சராக உள்ளார். அவர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை இரவு கிர்கி எக்ஸ்டென்ஷனுக்கு சென்று உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் என்று மொத்தம் 4 ஆப்பிரிக்க பெண்களை பிடித்து அவர்கள் விபச்சராம் செய்வதுடன் போதைப் பொருள் விற்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள…
-
- 2 replies
- 573 views
-
-
ஆப்கானில் பிரபல உணவகத்தின் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல உணவகமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்கானுக்கான பிரதிநிதி உட்பட குறைந்தது 21 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். லெபனானிய உணவகமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பலியானவர்களில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளும் 8 ஆப்கானிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர். மேற்படி தாக்குதலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்கானிஸ்தானிலுள்ள அலுவலகத்தின் தலைவரான வாபெல் அப்துல்லா (60 வயது), அந்த உணவகத்தின் உரிமையாளரான லெபனானைச் சேர்ந்த கமால் ஹமடி ஆகியோருடன் இரு கனேடியப் பிரஜைகள், அமெரி…
-
- 0 replies
- 368 views
-
-
http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html
-
- 1 reply
- 680 views
-