Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தீவிரவாதிகள் கொடுர தாக்குதல் : 25 இராணுவத்தினர் பலி பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் இராணுவ வாகணங்களின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி நடத்திய கொலைவெறி தாக்குதலில் 20 இராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியின் பெஷாவர் நகரில் இருந்து சுமார் 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆமண்டி சவுக் பகுதி வழியாக பண்ணு என்ற இடத்தை நோக்கி இன்று காலை இராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். பண்ணு-மிரான்ஷ் பகுதி சந்திக்கும் ரஸ்மக் கேட் அருகே வாகனங்கள் சென்றபோது,இடைமறித்த தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு இராணுவ வாகனம் வெடித்து தூள், தூளாக சிதறியது. வாகனத்துக்குள்ளே இருந்த 20வீரர்கள் உடல் சிதறி பரிதாப…

  2. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இப்போது அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பது ரஷ்யாவோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடுகளோ அல்ல.உலகின் பெரிய அண்ணன் என தமக்கிருக்கும் அந்தஸ்துக்கு ஆபத்து வரும் என்றால் அதுவும் அந்த ஒரு நாட்டால்தான் என்பதையும் அமெரிக்கா ஏற்கனவே கணித்துவிட்டது. அது நிச்சயமாக சீனாதான்.அமெரிக்காவின் இந்த அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையை கடந்த வாரம் ஆரவாரமின்றி அமைதியாகச் செய்து முடித்துவிட்டது சீனா.அது ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை. ஒலியைவிட சுமார் 10 மடங்கு வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது இந்த அதிநவீன ஏவுகணை. இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமும் சிறியரக ஹைபர்சானிக் ஏவுகணைகள் உள்ளன. ரஷ்யாவுடன் இணைந்து ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்ப…

  3. பிராஸ்ன் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்துக்கும் நடிகை ஜூலியா காயெத்துக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது குளோசர் சஞ்சிகை. பிரான்ஸ் அதிபரின் பாட்னராகவும் பிரான்ஸின் முதற் பெண்மணியாகவும் வலெரி திரியெர்வெய்லர் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஜூலியா காயெத்தை, பிரன்ஸுவாஸ் ஹாலந்து இரகசியமாக மோட்டார் சைக்கிளில் சென்று சந்தித்து வந்த விவகாரத்தை புகைப்படங்களுடன் போட்டுடைத்தது குளோசர் சஞ்சிகை. இதையடுத்து ஹாலந்து மீதான சர்ச்சை அதிகரித்தது. இத்தகவல்களால் அதிர்ச்சியடைந்த வலெரி திரியெர்வெய்லர் தன்னால் மன உளைச்சலை தாங்க முடியவில்லை என மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதி பெற்று இருந்து வருகிறார். …

  4. மும்பை: மும்பையில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மும்பை அருகே குர்கானில் இஸ்லாமிய மதகுரு தலைவர் முகமது புர்கானுதீன் மறைவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த திரண்டுள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தெற்கு மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. http://news.vikatan.com/article.php?module=news&aid=23468

  5. ஆப்கானிஸ்தானில், பெண் சுதந்திரத்திற்கு எதிராக, பயங்கரவாதிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாகவே, பெண் கல்வி மற்றும் அவர்களின் முன்னேற்றத்தில் பயங்கரவாதிகள், பழமைவாதிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு, தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், பெண்கள் சுதந்திரமாக இருப்பதில், இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு முதல் முறையாக, பெண் ஒருவரை, போலீஸ் உயர் அதிகாரியாக நியமித்துள்ளது. கர்னல், ஜமீலா பயாஜ், 50 என்ற பெண் போலீஸ் அதிகாரி, நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். பெண் போலீஸ் அதிகாரியான ஜமீலா, தலைநகரில் முக்கிய பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளது, ஆப்…

  6. சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று கடும் மூடுபனி நிலவியது. இதனால் காற்றில் மாசுதன்மை அதிகரித்தது. நேற்று காலை மூடுபனியால் இலட்சக்கணக்கான மக்கள் தாங்க முடியாத தலை வலிக்கு ஆளாகினர். மேலும், பீஜிங் நகரில் வாழும் சுமார் 2 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடந்தனர். சிலர் முகமூடிகளை அணிந்தபடியே தமது அன்றாட செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். வீதியை முழுமையான மூடுபனியால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நகரில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பீஜிங் ஷங்காய், பாகுயிங்– குயாங்ஷு, பெய்ஜிங்– ஹார்பின்…

  7. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 57 வயது பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. "டெடிபேர் பாரடைஸ்' என்று அறியப்படும் என்ற அந்த பெண்ணின் பெயர் டெனீஸ் ஓநீல். அதிபர் ஒபாமாவை கொல்லப் போவதாக அவருக்கு 15-பக்க கடிதம் எழுதியதாக கடந்த மாதம் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். வெறும் மிரட்டலோடு நின்று விடாமல், அந்த மிரட்டலை நிறைவேற்றும் எண்ணத்திலும் ஓநீல் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடம் வரை சிறை தண்டனையும், 2,50,000 டொலர்கள் வரை அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம். ஏற்கெனவே 2008-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர…

  8. மத்திய டெல்லியில் ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பஹர்கஞ் என்ற இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வழி தவறிய, இந்த 51 வயது பெண் சுற்றுலா பயணியை ஒரு கும்பல் தாக்கி அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்து, அவர் கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை கூறுகின்றனர். இன்று புதன்கிழமை காலை அந்த பெண் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. 2012 ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான…

    • 13 replies
    • 811 views
  9. போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 தடவை உலக சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையிலிருந்து ஒருபோதும் மீளாமல் போகக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 44 வயதான மைக்கல் ஷூமாக்கர் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது படுகாயமடைந்தார். அவரின் மூளையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார். பொதுவாக விரைவாக குணமடைவதற்காக இத்தகைய செயற்கை கோமா நிலைக்கு நோயாளிகள் உட்படுத்தபடுவர். இரு வாரங்களில் அவர்கள் சுயநினைவுக்கு திரும்பச் செய்யப்படுவர். ஆனால் மைக்கல் ஷூமாக்கர் 18 நாட்களாக கோமா நிலையில் உள்ளார். அவர் எதிர்பார்த்த அளவு வேகமாக குணம…

  10. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள சீனக் கப்பல்கள் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் பகுதிகளின் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஜப்பான் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஜப்பான் எங்களை சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜப்பான்தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்று தெரிவித்தார். தாது வளமும், எண்ணெய் வளமும் மிக்கதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகள் 2012-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், அப…

  11. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜ எம்பி மேனகா காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும் பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். ‘எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்க தயார்’ என்று ராகுல் காந்தியும் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், பாஜ …

  12. 'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள். 1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போ…

  13. இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு அந்தத் தாக்குதலுக்கு உதவியது என்று குறிப்புணர்த்தும் தமது அரசின் அதி கூடிய ரகசிய ஆவணங்கள் குறித்து ஒரு விசாரணக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உத்தரவிட்டுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கேள்விகள் இந்தத் தாக்…

  14. தீவிரவாத அமைப்பு என தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமத் சயீத் காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வெளியேறுகிறது. இந்நிலையில், இந்தியாவும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஹபீஸ் அடவாடியாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் இதனை தெரிவித்துள்ளார். ஹபீஸுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயகத்திற்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின்படி இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dailythanthi.com/2014-01-13-India-will-be-forced-to-Kashmir-just-like-US-in-Afghanistan-Hafiz-S…

  15. 2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஆர்ஜெண்டினாவின் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் ஃபிரான்ஸின் ஃபிரான்க் ரைபரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தேசிய அணியின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சிறந்த வீரர்களைப் பரிந்துரை செய்வர். இந்நிலையில் இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

  16. 19 புதிய கர்தினால்களை நியமனம் செய்யவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் பாப்பரசர் பிரான்சிஸ் புதிய கர்தினால்களை எதிர்வரும் மாதம் நியமிக்கவுள்ளார். அவர்களில் 16 பேர் 80 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களாவர் இதன் பிரகாரம் அவர்கள் பாப்பரசர் பதவி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டக்கூடிய நிலையிலுள்ளவர் களாவர். அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள வைபவத்தில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளனர். புதிய கர்தினால்கள் இத்தாலி, ஸ்பெ யின், ஜேர்மனி, நிகரகுவா, கனடா, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்கொரியா, சிலி, பிலிப்பைன்ஸ், சென்லூசியா தீவு, ஹெயிட்டி மற்றும் புர்கினோ பஸோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் ஸ்பெயின், இத்தாலி, சென் லூசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8…

  17. இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடிபணிய மாட்டார்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உறுதிபட தெரிவித்தார். இஸ்ரேல் – பாஸ்தீனம் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முயன்று வரும் நிலையில், அவருக்கும் இஸ்ரேலுக்கும் அப்பாஸ் விடுக்கும் தகவலாக இப்பேச்சு கருதப்படுகிறது. அப்பாஸின் இந்த அனல் பறக்கும் பேச்சு அவருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதையே காட்டுகிறது. அப்பாஸ் தனது ஆதரவாளர் களின் மத்தியில் பேசுகையில், “கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்படாவிட்டால் அமைதி திரும்புவதற்கு வாய்ப…

  18. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் தங்கள் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இந்த வாரம் நடைபெறும் பாஜக- காங்கிரஸ் கட்சிகளின் உயர்நிலைக் கூட்டங்களில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைப் பின்பற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2 நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, மக்களவைத் தேர்தலில் சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி …

  19. இந்தியாவின் அணு சக்தி சந்தை வளர்ந்து வரும் நிலையில், இங்கு அணுமின் நிலையத்தை அமைக்க தென் கொரியா விரும்புகிறது. ஆனால், மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. தென் கொரியாவின் அணுசக்தித் துறையைச் சேர்ந்த குழு, கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தது. அப்போது, இங்கு அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான தங்களது நாட்டின் விருப்பத்தை அக்குழு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கெனவே ரஷிய உதவியுடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் மீதமுள்ள 3 மற்றும் 4-வது உலைகளும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்ட ஜைதாபூர் அணுமின் நிலையப் பணிகளும், அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்ட மித்தி வீர்தி அணுமின் நிலையப் பணிகளும் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளன. எனவே, அப…

  20. குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் விடுபடும் நேரம் வந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ், அமேதி தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. முட்டை, கற்களை வீசுவதால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்று அவர்கள் நினைத்தால், அது தவறு. இது ஆம் ஆத்மிக்கும், ராஜகுமாரருக்கும் …

  21. மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது, நாட்டின் நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பதே வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். http://www.dinamani.com/latest_news/2014…

  22. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் மறியல் செய்து பேரணி நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. சமரச பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா மீண்டும் அழைப்பு விடுத்தார். தலைநகரை மூடும் போராட்டம் தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலகக்கோரி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி போராட்டங்கள் நடக்கின்றன. எனவே பிப்ரவரி 2–ந்தேதி தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்தார். ஆனால் அரசு எதிர்ப்பு போராட்டக்குழு அதை ஏற்கவில்லை.மேலும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 13–ந்தேதி தலைநகர் பாங்காக்கை மூடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனால் அரசாங்க அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் 10 ஆயிரம் போலீசாரும், 8 ஆயிரம் ராணுவ…

  23. பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods

  24. குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு தனது டிவிட்டர் இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் நாட்டில் நல்ல திட்டங்களை தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதால் செய்ய முடியுமா அல்லது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் செய்ய முடியுமா என்று அதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நரேந்திர மோடியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகில் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நரேந்திர மோடியை கலக்கமடைய செய்துள்ளது. மோடி காங்கிரசை குற்றம் சாட்டுவது புரிகிறது. ஆனால் தற்போது ஆம் ஆத்மி …

  25. சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ந்து நடைபெறும் மோதல்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் போராளிக் குழுக்கள், அரசுக்கு ஆதரவான நகரங்கள் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய சிரியாவில் அரசுப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாம்ஸ் பிராந்தியத்தில் உள்ள கோடா மற்றும் காம்-அல்-ஷமி பகுதிகளில் மோர்ட்டார் குண்டுகளை வீசி புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இது தீவிரவாத தாக்குதல் என்று அரசு ஊடக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.