உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
வடகிழக்கு மாநிலங்களில் சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ""சீனாவுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிழக்குப் பகுதிகளுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம்.எஸ். ராய் அமைச்சரிடம் விளக்கினார். எல்லையில் மிக உயரமான மலைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் எடுத்துரைக்கப்பட்டது'' என்று தெரிவித்தனர். http://…
-
- 0 replies
- 347 views
-
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பல்வேறு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசி நாள் கூட்டத்தில் மட்டும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட…
-
- 0 replies
- 379 views
-
-
ஊழலை ஓழிக்க ஜன்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை உண்ணா விரதம் இருந்தார். தற்போது டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது மாநிலத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் டெல்லி சட்டசபையில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. லோக்பால் மசோதா தாயாரிப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புற வளர்ச்சிதுறை, சட்டம் மற்றும் நிதித்துறை செயலாளர், பிரபல வக்கீல் ராகுல் மெக்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஒன்றிணைந்து சுதந்திரமாக செயல்பட்டு லோக் பால் மசோதாவை தயாரிப்பார்கள் என்று அறி…
-
- 0 replies
- 321 views
-
-
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவுசாம்பி என்ற இடத்தில் அவரது வீடும், கட்சி அலுவலகமும் உள்ளது. கட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் இந்து ரக்ஷாதள் அமைப்பினர் தாக்கினார்கள். இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச மாநில அரசு முன் வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மறுத்து விட்டார். http://www.maalaimalar.com/2014/01/10141153/z-Security-Arvind-Kejriwal-rej.html
-
- 0 replies
- 352 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களின் சந்திப்பு குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சாதாரண சந்திப்பே என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-10-Rahul-Gandhi-meets-Manmohan-Singh
-
- 1 reply
- 319 views
-
-
சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கத்திய நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் அலெப்போ நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிரியா விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சிரியா அரசு அந்நாட்டு மக்கள் மீது நடத்தி வரும் கொடூரமான தாக்குதல் குறித்து பிரிட்டன் தயாரித்த வரைவு அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர் நாடுகள் முன் செவ்வாய்க்கிழமை இரவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு ரஷியா…
-
- 1 reply
- 532 views
-
-
ஆந்திராவை பிரிந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் ‘‘ஆந்திர மறு சீரமைப்பு மசோதா’’ மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மீதான விவாதம் நடத்த முடியாதபடி உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டு வருவதால் சட்டசபை நடவடிக்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நேற்று ஐதராபாத் வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவை பிரிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 2014–ம் ஆண்டு நடக்கும் பாராளு மன்ற தேர்தலுக்கு முன் ஆந்திராவில் 2 மாநிலம் ஏற்பட்டு விடும் என்று நம்புகிறேன். 2 மாநிலத்துக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கும். தெலுங்கானா மசோதா …
-
- 0 replies
- 321 views
-
-
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கடந்த அக்டோபர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதையடுத்து வெளியே வந்தார். பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்ற அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தயங்கினார். எனினும், பீகாரில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை வலுப்படுத்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அவசியம் என்பதை மூத்த தலைவர்கள் வலியுறுத்…
-
- 0 replies
- 292 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவை கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை நியமித்துள்ளார். தமிழகத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், உறுப்பினராக சுபாங்கர் சர்கார், மாநிலப் பொறுப்பாளரும், பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. கோபிநாத் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் குலாம் நபி ஆசாத் தலைவராகவும், சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் பிரதேச கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்ப…
-
- 0 replies
- 389 views
-
-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலில் பிரியங்கா தீவிரமாக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சோனியா போட்டியிடும் ரேபரேலி மற்றும் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதிகளை பிரியங்கா கவனித்து வருவதால், இந்த தொகுதிகளில் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரப்பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் ராகுல், சோனியா ஆகியோரின் பிரசார திட்டங்கள் குறித்தும் மட்டுமே கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் நேற்று சோனியா காந்தியை டெல்லியில் பிரியங்கா சந்தித்து பேசினார். பின்னர் சோனியா காந்தி த…
-
- 2 replies
- 419 views
-
-
டெல்லி முதல் மந்திரியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகாராஷ்டிராவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷடிர மாநில தலைவரான அஞ்சலி டமானியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டியிட செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 600 பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது மகார…
-
- 0 replies
- 381 views
-
-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த சின்னம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நைதிக் கட்சிக்கு உரியது என, அக்கட்சி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த சந்திர பூசன் பாண்டே என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘உத்தரபிரதேசத்தில் கடந்த 2012–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிப…
-
- 0 replies
- 336 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித்தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நடந்தது. பின்னர் தன்னிடம் சோனியா காந்தி, இந்த மாதத்தில் மீண்டும் உங்களை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறேன் என்று கூறியதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் கூட்டணி இந்த முறை நிச்சயம் ஏற்படும் என்று நான் முழு உறுதியுடன் கூறுகிறேன். அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் மதவாத சக்திக்கு எதிராக ஒன்றாக இருக்கிறோம் என்று லாலு பிரசாத் கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை லாலு பிரசாத் யாதவ் டெல்லி…
-
- 0 replies
- 311 views
-
-
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதாவுக்கு கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-09-BJP-must-take-the-AAP-challenge-seriously-Mohan-Bhagwat
-
- 5 replies
- 469 views
-
-
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி தனது தொகுதியான அமேதியில் 10ம் தேதி முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மோசமான வானிலை நிலவுவதால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பெய்து வருவதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தில் தண்ணீர் தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தனது தொகுதியில் 9 ஸ்டேட் வங்கி கிளைகளையும், எப்.எம். ரேடியோவையும் தொடங்கி வைக்கிறார். மேலும் ரெயில் நீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் சுற்று பயணம் தொடர்பான அடுத்த தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் இந்த மாத இறுதியில் அவர் பயணம் மேற்கொள்ளலாம் என்ற…
-
- 0 replies
- 279 views
-
-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காளர்களை கவரும் யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு புகழை உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்திய என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் ரூ. 500 கோடி ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளது என்று செய்தி வெளியானது. மேலும் இந்த நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்கும். ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும…
-
- 3 replies
- 470 views
-
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுவது குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காசியாபாத்தில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதுடன் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்ப…
-
- 0 replies
- 300 views
-
-
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவோருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த படியாக 3–வது பெரிய கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இதற்காக இளைஞர்களிடையே ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 300 தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுக…
-
- 0 replies
- 310 views
-
-
டெல்லி விஞ்ஞான பவனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இந்த மாநாட்டில் இன்று பேசியதாவது:– கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இடையேயான தரம் தாழ்ந்த அரசியல் நாட்டின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. இந்தியா முழுவதும் பா.ஜனதா ஆதரவு அலை வீசி வருகிறது. 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைக்கும் உறுதியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முன்னோக்கி செல்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கூறினார். அந்த நல்ல நாட்கள் விரைவில் வரும். அதற்காக இன்னும் 4 முதல் 6 மாதம் வரை காத்திருங்கள் ஆனால் அந்த நல்ல நாட்கள் கண்டிப்பாக வரும். பிரதமர்…
-
- 0 replies
- 402 views
-
-
கடந்த ஓராண்டுக்கு முன் பா.ஜனதா கட்சியிலிருந்து விலகி கே.ஜே.பி கட்சியை தொடங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று தனது கட்சியை மீண்டும் பா.ஜனதாவுடன் இணைத்துக்கொண்டார். பெங்களூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் எடியூரப்பா பேசியதாவது:- கட்சியிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்தது தவறு என்றும், நடந்ததை மறந்து நடப்பவை நல்லவையாக நடக்க பாடுவோம். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் நமது வியூகம் அமையவேண்டும். கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் போகும்படி கட்சி அளிக்கும் பணியை செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கடந்த ஒரு வாரத்திற்…
-
- 1 reply
- 334 views
-
-
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். வருகிற 12–ந் தேதி கோவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவா மாநில பாரதீய ஜனதா செய்து வருகிறது. பொதுக் கூட்டத்துக்கு 1 லட்சம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு ரூ. 5 கட்டணத்துடன் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு பெறுவதற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்க சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை முன்பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள். அதாவது 25 ஆயிரம் சிறுபான்மையினர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சிறு…
-
- 0 replies
- 333 views
-
-
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில் மோடி குஜராத் முதல்வராக இருப்பதால் எந்த பிரசாரக்கூட்டத்திற்கு சென்றாலும் குஜராத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். இந்தியா முழுவதும் அவர் தேசிய பிரச்சனைகள் பற்றியே பேச வேண்டும். அதற்காக குஜராத் முதல்வர் பதவியில் இருந்து மோடி விலக வேண்டும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE…
-
- 0 replies
- 254 views
-
-
ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தனது ஊழல் தடுப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மின்விநியோக நிறுவனங்களின் வரவு-செலவுகளை தணிக்கை செய்ய முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் நீக்கம், தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் என அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்ணை (011-27357169) நேற்று அறிமுகம் செய்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் ஊழல் புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளில் நியாயமான அழைப்புகள் 15 வல்லுநர்கள் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஏற்பா…
-
- 0 replies
- 269 views
-
-
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மல்லேஸ்வரத்தில் மாநில பாஜக தலைவர் பிரகலாஜோஷி முன்னிலையில், ஏராளமான பாஜக தொண்டர்களின் கரகோஷங்கள் முழங்க, எடியூரப்பா பாஜகவில் இணைந்தார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/article1991299.ece
-
- 1 reply
- 324 views
-
-
ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐதரசன் வாயுக்களின் தாக்கங்களினால் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3723#sthash.sdHaw1AP.dpuf
-
- 0 replies
- 306 views
-