உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது. நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்றத்…
-
- 0 replies
- 395 views
-
-
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து அடுத்து ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல வருகிற லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவும் அது தீர்மானித்துள்ளது. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவருமான யோகேந்திர யாதவ் அறிவிக்கப்படவுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. இதில் லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப…
-
- 0 replies
- 472 views
-
-
ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனமான பனிப் பொழிவு இன்று ஞாயிற்றுக் கிழமை ரொறன்ரோ பெரும் பாகத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது . ஒன்ராறியோவின் தென்பகுதி, ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம் 10 - 15 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் எனவும் ஞாயிற்று கிழமை இரவிற்குள் 20 சென்ரிமீற்றர்களை எட்டி, நடு இரவிற்குப்பின்னர் தொடங்கி திங்கள் கிழமை உறைபனி மழையாக மாறக்கூடும் எனவும் கனடா சுற்றுச் சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனத்த பனிபொழிவு பிற்பகல் தொடங்குமென எதிர்பார்க்கப் படுவதாகவும் வீதிகளின் போக்குவரவு நிலைமைகள் அபாயகரமானதாகவும், பார்க்க கூடிய நிலை கடினமானதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே சமயம் வெள்ளிக்கிழமை இரவு காணப்பட்ட அதிகுறைந்த வெப்பநிலையான -22…
-
- 1 reply
- 306 views
-
-
பத்தொன்பதாம் நூற்றாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளின் காலமாகத் திகழ்ந்தது.அவற்றுள் ஒன்றுதான் புகைப்படக்கலை. ஓவியர்கள் கண்டும், கற்பனையிலும் வரைந்த ஓவியங்களின் மூலமே முந்தையகால மேதைகளையும், மகான்களையும் நம்மால் உணர நேரிட்டது. ஆனால் புகைப்படக்கலை வந்த பிறகு அந்த மேதைகளின் உருவங்களை உள்ளது உள்ளபடியே காண நம்மால் முடிந்தது. அந்த வகையில் அப்போது அறிமுகமான புகைப்படக்கலையால் நாட்டின் பெருமைமிகு வீரத்துறவியான விவேகானந்தரின் பல்வேறுவிதமான புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அதே வேகத்தில் நாட்டின் சிறுமை கண்டு பொங்கியவர் இவர் ஒருவரே. விவேகானந்தரின் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப்போல அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன என்று அவரது…
-
- 0 replies
- 2.3k views
-
-
ராகுலால் அது முடியாது: அன்னா ஹசாரே உறுதி மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரசை ராகுல் காந்தியால் காப்பாற்ற முடியாது’’ என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ஜன்லோக்பால் மசோதாவுக்கு காங்கிரசார் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். பிற நடவடிக்கைகள் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் காங்கிரசுக்கு உதவ போவதில்லை. ஜன்லோக்பால் மசோதாவை ராகுல் காந்தி ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி. ஆனால், சமீபத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மக்களின் கோபத்துக்கு ஆளான பிறகுதான் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்தது. தோல்வியை சந்தித்த பிறகுதான் ஊழல் பிரச்சினையில் கவனம் செலு…
-
- 1 reply
- 512 views
-
-
தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9 திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். குருநாதன் கூறியதாவது: 1990ம் ஆண்டு 13 ஆயிரம் வா…
-
- 6 replies
- 1.5k views
-
-
FILE பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை என்று அராஜக ஆட்சி நடந்து வரும் அமெரிக்காவில் மக்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்த கஞ்சா கடைகளை வேறு திறந்து விட்டுள்ளனர். அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் சில்லரை கடைகளிலும், ஒரு சில மருந்து கடைகளிலும் அரசின் அங்கீகாரத்துடன் கஞ்சா விற்பனை செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 21 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனுமதி பெற்ற இந்த கடைகளில் அதிகபட்சமாக 28 கிராம் கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என கொலோராடோ மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் கள்ளச் சந்தை கஞ்சா விற்பனையை ஒழித்துவிட முடியும் என அரசு கருதுகிறது. மேலும், கஞ்சா கடைகளுக்கு அனுமதி அளிக்க…
-
- 11 replies
- 5k views
-
-
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளை கலங்கடித்த ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது. டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது. 23 பேர் கொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர …
-
- 0 replies
- 335 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bQIeZ1pNFfI பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை - கடற்கரையில் 30 அடி உயரம் வரை எழுந்த அலைகள்.. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101254/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 463 views
-
-
கனடாவானது 5,000 வரையிலான புதிய குடிவரவாளர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறது எனவும், இந்தப் புதிய குடிவரவாளர்கள் கனடாவில் வதிபவர்களின் பெ;றறோர்கள், மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை ஏற்றக்கௌ;ள விரும்புகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட உறவினர்களை வரவழைப்பவர்கள் சில கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் எனவும் தெரியவருகிறது. கனடிய குடிவரவுத்துறை அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இவ்வாறான நடவடிக்கையானது மிகவும் துரிதமான செயற்பாடாக இருக்கும் எனவும் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் காவலிருக்க வேண்டிய காலத்தின் அளவு குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார் எனக் கனடிய ஊடகமான சிபிசி செய்தித்தாபனம் வெள்ளிக்கிழமை அன்று தெ…
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து வருகிறது என்று மத்திய வங்கி கூறுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட்டி வீதங்களை அதிகரிக்கவில்லை என்றும், பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது பார்த்தால் அரசு கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது தெரியவரும் என பிபிசி தமிழோசையிடம் கூறினார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி. எனினும் கடந்த சில மாதங்களில் மறக்கறி போன்ற சில பொருட்க…
-
- 0 replies
- 387 views
-
-
காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்ப…
-
- 0 replies
- 379 views
-
-
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும். கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டி…
-
- 0 replies
- 401 views
-
-
மெல்போர்ன்:விமானத்தில் தொடர்ந்து புகை பிடித்ததால், ஜெர்மன் நாட்டு பயணி, கை கால் கட்டப்பட்ட நிலையில், நேற்று, கைது செய்யப்பட்டார்.சிங்கப்பூரிலிருந்து, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில், ஒரு பயணி, கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை, ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், நேற்று, கைது செய்தனர்.விசாரணையில், அவர், ஜெர்மன் நாட்டை சேர்ந்த, மதியாஸ் ஜார்க்,54, என்பது தெரிந்தது.இவர், விமானத்தில் ஏறியது முதல் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்ததாகவும், புகைப்பதை நிறுத்த சொன்ன, விமான ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புகைப்பதை நிறுத்தாத காரணத்தால், இவரை கட்டி போட்டுள்ளனர்.மதியாஸ் மீதான வழக்கை விசாரித்த, ஆஸ்திரேலிய நீதிமன்றம், அவருடைய பாஸ்போர்ட்டை…
-
- 8 replies
- 681 views
-
-
காணொளி:மெளனம் கலைத்த மன்மோகன் சிங் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vb7c8alVQ4M http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10937:2014-01-03-11-27-37&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 339 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவலால் நடிகர் விஷாலே அதிர்ச்சி அடைந்துள்ளார். டெல்லியில் திடீரென ஆட்சி அமைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஆம் .ஆத்மி கட்சி, பிற மாநிலங்களுக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கட்சியை விரிவுபடுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற செய்தி விஷாலின் காதுக்கு சென்ற போது, அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்றுமே புரியலையே என கேட்டுள்ளார். பிறகு அவரிடம் அக்கட்சி குறித்து விளக்கிய பிறகு, இது குறித்து தெரிந்துள்ளார். மேலும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர…
-
- 0 replies
- 1.5k views
-
-
டெல்லி: டெல்லி சட்டமன்ற சபாநாயகராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் 37 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எம்.எஸ்.திர்ரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்திஷ் முக்தி 32 பேரின் ஆதரவை பெற்றிருக்கிறார். http://tamil.oneindia.in/news/india/aap-candidate-ms-dhir-elected-delhi-assembly-speaker-190727.html
-
- 0 replies
- 762 views
-
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அங்கு கடும் பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அங்குலத்துக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=100558&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 405 views
-
-
எழுத்துத் தமிழும் காட்சி ஒளியும் கலந்து புரண்டு வரும் கற்பனை வளம் காண வாரீர்.. வந்திருக்கும் ஆண்டுக்கு வாணவேடிக்கை ஆண்டென்று பெயரிடலாம்.. வருடந்தோறும் புத்தாண்டு பிறந்தால் நடக்கும் வாண வேடிக்கையில் உலகில் எந்த நாடு முன்னணி வகிக்கிறது என்பதே ஊடகங்களின் புத்தாண்டு காலைச் செய்தியாக புலரும். அந்தவகையில் டுபாயில் உள்ள போரி கலிபா கோபுரத்தில் இதுவரை இல்லாத மாபெரும் வாண வேடிக்கை இடம் பெற்றுள்ளது, சுமார் 400 இலக்குகளில் நான்கு இலட்சம் வாணங்கள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டன. டுபாயில் மட்டும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சுமார் ஒரு மில்லியன் மக்கள் கண்டு களித்தனர், அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சுமார் 210 மீட்டர் நீளமான திரையில் காட்சி அமர்க்களமாக ஒளிபரப்பப்பட்டது. புத்தாண்டு நேர…
-
- 8 replies
- 975 views
-
-
மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க் கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்த போதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார். தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் …
-
- 13 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் LSSU எனப்படும் பல்கலைக் கழகத்தால் கடந்த 39 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில அகராதியில் தடை செய்ய வேண்டும் என்று கருதப் படும் சொற்களின் பட்டியல் வெளியிடப் படும். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிக மோசமாகப் பாவிக்கப் பட்டு இவ்வருடம் தடை செய்யப் பட வேண்டும் என்று கருதப்படும் சொற்களின் பட்டியலில் சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் புதிதாகச் சேர்க்கப் பட்ட செல்ஃபியே (Selfie) என்ற வார்த்தை அடங்கியுள்ளது. Selfie தவிர்த்து மற்றைய வார்த்தைகளாக 'Twerking' மற்றும் 'hashtag' ஆகியவை உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை நீக்குவதற்குக் குறித்த பல்கலைக் கழகம் கூறும் காரணம் ஒன்று இவை தவறாகப் பாவிக்கப் படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப் படுதல் அல்லது பிரயோசனம…
-
- 1 reply
- 631 views
-
-
பிரிட்டனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வந்த இடத்தில் பிரசவித்தால், அதற்கான செலவை, அரசே ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, பிரிட்டன், 20 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதை அறிந்த, அண்டை நாடுகளின் கர்ப்பிணி பெண்கள், நிறைமாத கர்ப்பிணியாக, சுற்றுலா, "விசா'வில் பிரிட்டன் வந்து விடுகின்றனர். ஏனெனில், பிற ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில், பிரசவத்திற்கு, நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை கொடுக்க முடியாதவர்கள், குழந்தை பெற்றுக் கொள்ள, பிரிட்டனுக்கு வந்து விடுகின்றனர். இலவசமாக பிரசவம் பார்த்து, குழந்தையுடன் நாடு திரும்பி விடுகின்றனர். இதை, பிரிட்டன் தாமதமாகவே அறிந்தது. சமீபத்தில், ருமேனியா, பல்கேரியா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளைச்…
-
- 0 replies
- 421 views
-
-
2028 இல் ஜப்பானை பின்தள்ளும் இந்தியா லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக இந்தியா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028 ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பட்டியலில் இந்தியா 11 வது இடத்தில் உள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு இந்தியா 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா 6 வத…
-
- 44 replies
- 2.5k views
-
-
கொரிய தீபகற்பத்தில் போர் உருவானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கமுடியாது: வடகொரிய அதிபர் மிரட்டல் கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானால் அங்கு அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் அமெரிக்கா எவ்விதத்திலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். புத்தாண்டையொட்டி அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாங்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் வீரர்களுக்கிடையேயான சிறு மோதல்கூட போருக்கு வழிவகுக்கும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைதிக்காக தாம் யாரிடமும் கெஞ்சப் போவதில்லை, எதிரிகளிடமிருந்த…
-
- 1 reply
- 802 views
-