உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக்ஹ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ ஓ சியின் புதிய தலைவர் தாமஸ் பாக்ஹ் கடந்த 12 வருடங்களாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ழாக் ரோக் அவர்களை அடுத்து தாமஸ் பாக்ஹ் அந்தப் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புவனஸ் எய்ரிஸின் இடம்பெற்ற தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்டனர். வழக்கறிஞரான தாமஸ் பாக்ஹ் இதுவரை ஐ ஓ சி யின் துணைத் தலவராக இருந்தார். 1976 ஆம் ஆண்டு கனடாவின் மொண்ட்ரியோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் தாமஸ் பாக்ஹ் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒலிம்பி…
-
- 0 replies
- 658 views
-
-
மாஸ்கோ/டமாஸ்கஸ்: ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவற்றை அழிக்க சிரியா ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி 1400 பேரை படுகொலை செய்தது சிரியா என்கிறது அமெரிக்கா. இந்த ரசாயன ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றால் பேரழிவு ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதனாலேயே சிரியா மீது ராணுவ நடவடிக்கை அவசியம் என்று அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் சிரியா அமைச்சர் இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார். ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வோம் ச…
-
- 0 replies
- 473 views
-
-
ஜெய்ப்பூர்: ஊழல்களின் அடிப்படையில்தான் ஆங்கில எழுத்து வரிசையை படிக்க வேண்டும் என காங்கிரஸ் புது கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதாவது A-ஆதர்ஷ் ஊழல்.. B- போபர்ஸ் ஊழல்.. C- காமன்வெல்த் ஊழல்" என்றுதான் இனி மாணவர்கள் படிக்க வேண்டியது இருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், முன்னாள் முதல்வர் வசுந்தரராஜேவின் யாத்திரையால் பாரதிய ஜனதா கட்சி இம்மாநிலத்தில் வலுவடைந்துள்ளது. ராஜஸ்தான் மக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தலின் போது தவறு செய்துவிட்டதாக கூறுகின்றனர். கடந்த தேர்தலில் தாங்கள் செய்த அந்த தவறுக்கு பிராயசித்தம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.…
-
- 0 replies
- 491 views
-
-
சிட்னி: மேற்கு சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு பதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் ப்ளூ மவுன்டெய்ன்ஸ் மற்றும் மேற்கு சிட்னி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு பரவியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மொத்தம் 63 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் அதில் 31 கட்டுக்கடங்காமல் உள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த காட்டுத் தீயால் சிட்னியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்களில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. இந்த தீயால் சிட்னியில் …
-
- 1 reply
- 406 views
-
-
சென்னை: பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பெய்து வரும் மழை தொடர்ச்சியாக செப்டம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/09/10/tamilnadu-dmk-s…
-
- 0 replies
- 421 views
-
-
டெஹ்ரான்: ஈரானில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளாவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதன் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீதும் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில்…
-
- 0 replies
- 459 views
-
-
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதலில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஈவ் டீசிங்கில் தொடங்கிய மோதல் மூன்று கொலைகளாகி இரு பிரிவினரிடையேயான வன்முறையாக வெடித்து 38 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார். இந்த வன்முறையில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திரு…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார். ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ''இலங்கையில் புனர்நிர்மாணம், நல்லிணக்கம், போரின் பின்னரான பொறுப்புக் கூறல் ஆகியவற்றுடன், மத சகிப்பின்மை, ஆளுகையும் சட்டத்தின் ஆட்சியும் போன்ற பரந்துபட்ட மனித உரிமைகள் நிலவரம் ஆகியவற்றிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து நானறிவதற்கு ஏதுவாக எனது அண்மைய விஜயத்துக்கு ஏற்பாடு செய்த…
-
- 0 replies
- 521 views
-
-
டில்லி அருகே மாணவி ஒருத்தியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு தண்டனை புதன்கிழமை விதிக்கப்படும் . இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். டில்லி பாலியல் வல்லுறவு வழக்கு-- பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவர் சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையம் ஒன்றில் கழிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச் மாதத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதத்தில் டில்லி அருகே ஓடும் பஸ்ஸில் நடந்த இந்த சம்பவம் இந்தியாவெங…
-
- 0 replies
- 481 views
-
-
கென்யாவின் துணை அதிபர் வில்லியம் ரூட்டோ மீதான விசாரணை தி ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு, கென்யாவில் இடம்பெற்ற சர்ச்சைகுரிய தேர்தலை அடுத்து எழுந்த வன்முறைகளை அவர் ஏற்பாடு செய்து நடத்தினார் என்று ரூட்டோ மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. வில்லியம் ரூட்டோ இதே போல மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உஹுரு கென்யாட்டா தம்மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் எதிர்கொள்கிறார்.ஆனால் தன் மீது குற்றமில்லை என்று அவரும், அவருடன் கூட்டாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஒலிபரப்பாளர் ஜோஷுவா அரப் சாங்கும் கூறியுள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரித்திரத்திலேயே, கேள்…
-
- 0 replies
- 364 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாகச் செல்ல, உலகெங்கிலிருந்தும் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க 'மார்ஸ் ஒன்' எனப்படும் அந்தத் திட்டக் குழுவினர் எண்ணியுள்ளனர். மிகவும் ஆபத்தான, ஏழு மாதப் பயணத்தை விண்வெளியாளர்களால் எதிர்கொள்ள முடியும் என்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த நிரந்தரத் தளம் அமைக்கப்படும் . திட்டம் உள்ளது, தொழில்நுட்பம் தேவை செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டி விண்கலன். இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் டச்சு பொறியாளர் ஒருவர், 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்…
-
- 0 replies
- 291 views
-
-
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுமார் 1,000 துருப்புக்கள் அந்தப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கலவரம் பாதித்த முசாபர்நகர் பகுதி உள்ளூர் பெண்மணி ஒருவர் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை ஆட்சேபித்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த மத மோதல்கள் வெடித்தன. பின்னதாக, இரண்டு பேர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதாகக் காட்டும் ஒரு போலி வீடியோ விநியோகிக்கப்பட்டதை அடுத்து மேலும் வன்செயல்கள் வெடித்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், பல உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த ரத்த…
-
- 2 replies
- 601 views
-
-
நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கைக்கு, போர் கப்பல்கள் வழங்கப்படுகின்றன என, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். டில்லியில் இருந்து நேற்று சென்னை வந்த அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க வேண்டும் என்று, இலங்கையில் உள்ள தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரதமர், இலங்கை வந்தால், அங்குள்ள தமிழர்களுக்கு நன்மைகள் நடக்கும் என அவர்கள் நம்புகின்றனர். பிரதமர், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இலங்கைக்கு, போர் கப்பல்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, …
-
- 1 reply
- 369 views
-
-
தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ? ராஜ்யசபாவில் சீறிய 'இந்தி' எம்.பி! சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறப்புமிகு எம்.பி.யின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரெஞ்சு அரச பள்ளிகளில் புதிய மதச்சார்பின்மை பிரகடனம் பிரெஞ்சு அரசு பள்ளிகளில் புதிய " மதச்சார்பின்மை பிரகடனம்" ஒன்று கட்டாயமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இன்றிலிருந்து வைக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். பள்ளியின் கல்வித்திட்டத்தை மதக் காரணங்கள் காட்டி மாணவர்கள் ஆட்சேபிக்க முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவே இந்தப் பிரகடனம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த புதிய பிரகடனத்தில் 15 ஷரத்துக்கள் இருக்கின்றன. முதல் பிரகடனம் பிரெஞ்சுக் குடியரசு ஒரு பிரிக்கமுடியாத, ஜனநாயக, சமூக, மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை ஆசிரியர் நடத்துவதை மாணவர்கள் தங்களது மத மற்றும் அரசியல் கொள்கைகளைப் பயன்படுத்தி …
-
- 3 replies
- 409 views
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் தொழிற்கட்சி பெரும் தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பொறுபேற்கவுள்ள டோனி அபாட். அங்கு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு லிபரல் தேசியக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து டோனி அபாட் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இந்தத் தேர்தலில் பொருளாதாரம், படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்படும் சுற்றுச்சூழல் வரியை குறைப்பது ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது அவசியம். கடந்த ஜூன் மாதம் தொழிற்கட்சியின் தலைமையில் மாற்றம்…
-
- 0 replies
- 506 views
-
-
அரபு லீக் அமைச்சர்களுடன் ஜான் கெர்ரி சிரிய அரச எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதன் மூலம், சர்வதேச சகிப்பெல்லைக்கோட்டை சிரிய அரசு தாண்டிவிட்டது என்கிற அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் முழுமையாக உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருக்கிறார். பாரிஸில் நடந்த அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு கெர்ரி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். ரசாயன ஆயுதங்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமே சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாகவும் கெர்ரி கூறினார். இவர் இப்படி கூறினாலும், ரசாயன ஆயுதங்களை த…
-
- 0 replies
- 299 views
-
-
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதஉரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில்பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்றநாடுகள் ஆகியவற்றின் மனித உரிமை நிலைமைகள் குறித்துவிரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன் சில நாடுகளின் மனித உரிமை நிலைமைகள்தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.குறிப்பாக சிரியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றநிலைமைகள் தொடர்பாக விசேட அறிக்கையாளர்கள் அறிக்கைகளை தாக்கல் செய்யவுள்ளதுடன் பரிந்துரைகளையும்முன்வைக்கவுள்ளனர். இதே…
-
- 0 replies
- 492 views
-
-
அகமதாபாத்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவின் கடிதத்திற்குப் பொறுப்பற்று முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பந்த் நடத்த குஜராத் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை. வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந…
-
- 1 reply
- 403 views
-
-
தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என கூறி அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருக்கிறார். சிரியா மீது குறைந்தபட்ச தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, துருக்கி, ஜெர்மனி நாடுகள் ஆதரவு கொடுத்தன. சிரியா விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை திரட்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜேன் கெர்ரி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐரோப்பிய யூனியன் மந்திரிகளை சந்தித்து பேசினார். இதற்கிடையில் ஐரோப்பிய யூனியனில் இடமபெற்றுள்ள 28 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் சிரியா அரசாங்கம் கடந்த 21ந் தே…
-
- 0 replies
- 544 views
-
-
புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட் அறிவித்துள்ளதையடுத்து புதிய பிரதமராக டொனி அபோட் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், தனது தலையாய கடமைகள் இரண்டு எனவும், ஒன்று முந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கார்பன் வரியை நீக்குவதா, இல்லையா என்று முடிவெடுக்கவேண்டும். மற்றது ஆசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து புகலிடம் தேடி படகில் வருவோரின் பிரச்சினை. படகுகளில் வருவோரை கடல் என்லையிலேயே மறித்து திருப்பி அனுப்புவதுதான் சிறந்த முறையென்றும் கிறிஸ்மஸ் தீவு போன்ற மற…
-
- 0 replies
- 390 views
-
-
அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு 3 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் …
-
- 3 replies
- 488 views
-
-
ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார். ‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை…
-
- 4 replies
- 866 views
-
-
கேரள கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விவரங்களை சேகரிக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து தேவசம் போர்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வில் முக்கியமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குருவாயூர், மலபார் தேவசம் போர்…
-
- 1 reply
- 381 views
-