உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மஸ்கட்: ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி வரை மோசடி செய்த பெண் அந் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார். அவர் இப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் வசிப்பதாகத் தெரிகிறது. ஓமன் நாட்டில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும் டெண்டர் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், இதற்காக நிதி திரட்டி வருவதாகவும், இந்த நிதிக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்தியர்களை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார். போர்ஜரி செய்யப்பட்ட ஓமன் நாட்டு அரசின் ஆவணங்களைக் காட்டி இந்தியர்களை நம்ப வைத்துள்ளார். ஓமன் நாட்டின் பல்வேறு சர்ச்சுகள், பள்ளிகளுக்கு வந்து இந்தியர்களை சந்தித்து தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இவரை நம்பிய பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தந்துள்ளனர். அதற்கு ரசீதுகளையும் தந்துள்ளார்…
-
- 0 replies
- 1.7k views
-
-
டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…
-
- 0 replies
- 330 views
-
-
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸில் அடுத்தவாரம் இதற்கான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ஒபாமாவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் அமெரிக்க புலனாய்வு விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் சிரியாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படக் காரணமான ஸரின் நச்சுவாயுத் தாக்குதலை அரசாங்கம் நடத்தியுள்ளதாக ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிறுவுவதற்காக இந்தப் புலனய்வு விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.கோடைகால விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள், புலனாய்வு விளக…
-
- 0 replies
- 433 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். முஷாரஃப் கைது செய்யப்படும் போது ( பழைய படம்) தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதிக்குள் பாகிஸ்தானியத் துருப்புகள் அதிரடியாக நுழைந்தபோது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் தீவிரவதாக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த மதகுருவான அப்துல் ரஷீத் காசியும் அடங்குவார். புட்டோ கொலையிலும் தொடர்பு? சுட்டுக் கொல்லப்பட்ட பேனசீர் புட்டோ பாகிஸ்தானை 1999 மு…
-
- 0 replies
- 297 views
-
-
சிரியா மீது எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், அங்கு பதட்டம் நிலவுகிறது. அதற்கு எந்த விதத்திலும் குறையாத பதட்டம் இஸ்ரேலில் நிலவுகிறது. அமொிக்கா, சிரியா மீது 48 மணிநேர மட்டுப்படுத்திய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அமொிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந் நடவடிக்கையில் நாசகாரி நீர்மூழ்கிகள் மூலம் 100 ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய இலக்குகளாக கட்டளை மையங்கள், விமானத் தளங்கள், ஆயுத தளபாட விநியோக மையங்கள், புலனாய்வுத் தளம், இராணுவப் பயிற்சி முகாங்கள் தெரிவாகியுள்ளது. தாக்குதல் தொடுக்கப்பட்டால் சிரியா உடனடியாக திருப்பி தாக்கப்போவது, இஸ்ரேலை நோக்கித்தான். இதனால், இஸ்ரேலிய நகரங்களில் பலத…
-
- 0 replies
- 988 views
-
-
பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்களுடன் கைதான மர்ம மனிதன் தீவிரவாதியா? டொரண்டோ போலீஸார் தீவிர விசாரணை. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த 25 வயது நபர் ஒருவர் டொரண்டோவில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். அவன் தீவிரவாதி இயக்கத்தை சேர்ந்தவனா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். டொரண்டோவில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் northwest, near Kipling and Finch avenues, என்ற இடத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு குழுவை சேர்ந்த சிலர் போலீஸாரிடம் வந்து, ஒரு மர்ம மனிதன் போலீஸாரை பார்த்ததும் சந்தேகத்திற்கிடமாக ஒடுவதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் காட்டிய பாதையில் போலீஸார் சென்று பார்த்தபோது ஒரு மர்ம மனிதன் ஓடிக்கொண்டு இருப்பது த…
-
- 0 replies
- 613 views
-
-
டெல்லி: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் கூறியுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதி கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றை…
-
- 7 replies
- 659 views
-
-
பல நாட்களாக மருத்துவமனையில் இருந்துவந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வீடு திரும்பியுள்ளார். பிரெட்டோரியாவிலுள்ள மருத்துவமனையிலிருந்து விடப்பட்டதை அடுத்து ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வீட்டுக்கு மண்டேலா அழைத்துவரப்பட்டார். நெல்சன் மண்டேலா மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், சில நேரங்களில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு அது மோசமடைவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது. மருத்துவமனையில் அவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விதமான தீவிர சிகிச்சைகளுமே அதேயளவில் வீட்டில் வைத்தும் அவருக்கு வழங்கப்படும் என மண்டேலாவின் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படும் விதமாக அவரது வீட்டில் மாற்ற…
-
- 0 replies
- 470 views
-
-
இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டம் தடுத்தாலும் பெண்களிடம் இருந்து வரதட்சணை வாங்கும் நிலை நீடித்துவரவே செய்கிறது. "பெண்ணைப் பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கிறோம்"2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது. எழுத்தாளர் வ. கீதா தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதி…
-
- 0 replies
- 371 views
-
-
டுபாய் காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவுத் தலைமையகத்தை வெடிக்கச் செய்யப் போவதாக பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடலில் வெடிபொருட்களை கட்டியிருப்பதாகவும், கட்டடத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறு வயது சிறுமி ஒருவரையும் குறித்த பெண் அருகில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ரஸ்ய மொழியில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. டுபாய் ஆட்சியாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், குண்டை வெடிக்கச் செய்ய நேரிடும் என பெண் அச்சுறுத்தியுள்ளார். இதனால் குறித்த கட்டடத்தில் இருந்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். கட்டடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குடும்பப் பிரச்சினை காரணமா…
-
- 0 replies
- 356 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அ…
-
- 0 replies
- 379 views
-
-
உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார். நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டி…
-
- 0 replies
- 470 views
-
-
UK நாடாளுமன்றில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது இவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ ந…
-
- 10 replies
- 767 views
-
-
டமாஸ்கஸ்; ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது. இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஐ.…
-
- 1 reply
- 593 views
-
-
ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேல்சபையில் இன்று விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல்வேறு உள்நாட்டுக் காரணிகளும் காரணங்களாக உள்ளன. சர்வதேச பொருளாதார வீழ்ச்சியும்,ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. சிரியாவில் தற்ப…
-
- 8 replies
- 624 views
-
-
எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார். சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர். எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்று…
-
- 20 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே, இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்....... அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்.......... இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இத…
-
- 23 replies
- 2.2k views
-
-
சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf
-
- 0 replies
- 411 views
-
-
மாஸ்கோ: சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை …
-
- 4 replies
- 895 views
-
-
எங்கள் தேசிய #மொழி #தெலுங்கு. இந்திய பாராளுமன்றத்தில் எங்கள் மொழியில் பேச எங்களுக்கு உரிமை இல்லையா? - ஹரி கிருஷ்ணா தெலுங்கு தேச எம்.பி சாடல். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கான விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஹரி கிருஷ்ணா பேசும் போது அவருடைய தாய் மொழியில் தான் பேசுவேன் என்று கூறினார் . பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தாய் மொழியில் பேசலாம் என்ற விதி உள்ளது . அமைச்சர்கள் மட்டும் தான் தங்கள் #தாய் மொழியில் பேச உரிமை இல்லை. இருந்தும் பாராளுமன்ற நாயகர் மலையாளி குரியன் அதற்கு அனுமதி மறுத்தார். தனக்கு தெலுங்கு மொழி தெரியாது அதனால் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ ஹரிகிருஷ்ணா பேசுமாறு கூறினார் . அதற்கு ஹரி கிருஷ்ணா கூறிய பதில்கள்.. #ஆந்திரா எங்கள் நாடு. தெலுங்கு எங்கள் தேசிய மொழி.…
-
- 0 replies
- 744 views
-
-
இஸ்லாமாபாத்: துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் பிரதிநிதிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 5 இந்திய ராணுவ வீரர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசுவர் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்களின் பிரதிநிதிகளாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலர் செர்யார் கான், இந்தியாவின் முன்னாள் தூதர் லம்பா ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வம…
-
- 0 replies
- 348 views
-
-
ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ராணுவத்தினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டம் பிராங் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிந்து நதியை கடக்க முயற்சித்தபோது ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அசுதுல்லா என்ற தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/30/india-j-k-security-forces-kill-five-terrorists-in-an-encounter-182400.html
-
- 0 replies
- 240 views
-
-
இந்தியா இராணுவத் தேவைகளுக்கான தனது முதல் செயற்கைக் கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜி சாட் 7 என்ற பெயரிடப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் பிரன்ச் கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப் பாதையில் அடுத்தவாரம் நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கைக் கோள் இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவறியும் திறமையையும் மேம்படுத்தும். ஏரியான் ராக்கெட் ஏற்கனவே இருக்கம் செயற்கைக் கோள்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முடியும் என்றாலும், இந்தச் செயற்கைக்கோள் இராணுவத்தினரின் பிரத்யேக தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தியா பல தொலைத் தொ…
-
- 1 reply
- 298 views
-
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று விளக்கம்! டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற …
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 5ந் தேதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதையொட்டி ஹாசன் கைது செய்யப்பட்டு கன்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை 13 அதிகாரிகளை நீதிபதியாக கொண்ட ராணுவ கோர்ட்டு விசாரித்து நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இஸ்லாமியரான அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அமெரிக்க ராணுவ கோர்ட்டு சுமார் 52 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மரணதண்டனை விதித்…
-
- 0 replies
- 397 views
-