உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமைத் தாங்கினார். செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சிறிதர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். நாளை இந்த இரத்த கையெழுத்துக்கள் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi24.com/news/32614/64…
-
- 2 replies
- 401 views
-
-
கௌதம புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறப்படும் ஒரு பாத்திரத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்று வரவேண்டும் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகுவன்ஷ பிரசாத் சிங் என்பவர் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார். புத்தபெருமான் தான் பரிநிர்வாணம் (ஞானம்) அடைவதற்கு முன்னதாக இந்தப் பாத்திரத்தை பயன்படுத்தியதாக கூறும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், புத்த மதம் செழித்திருந்த கனிஷ்கரின் காலப்பகுதியில், இந்தப் பாத்திரம் வைசாலியில் இருந்து அவரின் தலைநகரான புருஷபுத்ரா அதாவது தற்போதைய பெஷாவர் நகருக்கு போனதாகவும், அங்கிருந்து அது காந்தகாருக்கு போயிருக்கும் என்றும் கூறுகிறார். தற்போது அந்தப் பாத்திரம் காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க…
-
- 0 replies
- 378 views
-
-
இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. 25 வருட உழைப்பின் பலன் இது கலைக்களஞ்சியத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான ரோசஸ்டெர் தொழில்நுட்ப மைய பேராசிரியர் டாக்டர் வி வி ராமன் இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது. தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்…
-
- 0 replies
- 420 views
-
-
டெல்லி: ரூபாய் மதிப்பு, பொருளாதார தடுமாற்றம், பங்குச் சந்தை சரிவு போன்றவற்று முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனதாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார தடுமாற்றம் போன்றவற்றுக்கு பொதுவாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையை காரணமாக சொல்வார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அண்மைக்காலமாக உள்நாட்டு நடவடிக்கைகளும்கூட இந்த சிக்கல்களுக்குக் காரணம் என்று பேசி வருகிறார் ப. சிதம்பரம். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பேசிய ப.சிதம்பரம், 2009-11ஆம் ஆண்டு காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதாவது அப்போது நிதி அமைச்சரா…
-
- 0 replies
- 407 views
-
-
கொல்கத்தா: மேற்கு வங்க கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரின் மனைவியை காப்பியடிக்க விடாததால் கல்லூரி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள இதாஹரில் செயல்பட்டு வருகிறது மேக்நாத் சாஹா கல்லூரி. அந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் மனைவி தேர்வு எழுதினார். தேர்வு அறையில் அவர் காப்பியடித்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்வப்னா முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் விடைத்தாளை வாங்கிவிட்டு அனுப்புமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வினாத்தாள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் 10 முதல் 12 பேர் கல்லூரிக…
-
- 0 replies
- 324 views
-
-
மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சிக்கு தள்ளிவிட்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல சரிவை எதிர்கொண்டு வந்து கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவோ மணிக்கொரு வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்து வருகிறது. இன்று இதுவரை இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐ தாண்டிச் சென்றுவிட்டது. விரைவில் இது 70ஐயும் கடக்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/28/india-rupee-has-lost-over-20-this-year-182241.html
-
- 0 replies
- 363 views
-
-
கோழிக்கோடு: கேரளாவில் கட்டாய திருமணம் செய்துகொண்டு தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஐக்கிய அரபுக்குடியரசு நாட்டைச் சேர்ந்த நபரின் மேல் மைனர் சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர்,கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அ…
-
- 0 replies
- 468 views
-
-
சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜான் கெர்ரியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிரியாவில…
-
- 4 replies
- 709 views
-
-
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால் அதுதொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே கவலைப்படத் தேவையில்லை என்று எய்மஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மக்களவையில் திங்கள்கிழமை இரவு உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் 8.15 மணியளவில் நாடாளுமன்றத்தில் இருந்து சோனியா காந்தி வெளியேறினார். மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந…
-
- 7 replies
- 645 views
-
-
முக்கிய செய்திகள். இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா…! ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்… 1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி (தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா ) இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் …
-
- 2 replies
- 2.7k views
-
-
அகமதாபாத்: நமது நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்கவே முடியவில்லை என்று காட்டமாக சாடியிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒருகாலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இப்போது அது தன் குரல் வலிமையை இழந்துவிட்டது. அதைப்போலத்தான் நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சும் கூட.. ரூபாய் மதிப்பைப் போல அவரது பேச்சும் வலிமையை இழந்து ஊமையாகிப் போய்விட்டது அவரது பேச்சையெல்லாம் இப்போது கேட்க முடிவதில்லை என்றார். அண்மையில் சுதந்திர தின நிகழ்ச்சியின் போதும் கூட பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாகவே மன்மோகன்சிங் தாக்கிப் பேசியிருந்தத…
-
- 2 replies
- 629 views
-
-
டெஹ்ரான்: ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான். ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது. இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்திய…
-
- 3 replies
- 712 views
-
-
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் அரபிக்கடல் வழியாக இலங்கையை வந்தடைந்து, அங்கிருந்து பரந்து விரிந்த தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2009 க்கு முன்னர் தமிழக கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் தமிழக காங்கிரஸ் காரர்களும் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளே தாக்குவதாகவும் அவர்களால் தமிழகத்துக்கு ஆபத்து என்று கதை விட்டபோது அதை மறுத்து 2007 ம் ஆண்டு நான் எழுதி பதிவிட்ட கட்டுரை இது. இப்போதுள்ள சூழலில் சிறீலங்காவின்…
-
- 2 replies
- 374 views
-
-
இம்பால்: மணிப்பூரின் மோரே அருகே மியான்மர் ராணுவம் ஊடுருவலை அதிகரித்து இருப்பதுடன் இந்திய கிராமங்களையும் ஆக்கிரமிக்க மும்முரம் காட்டுவதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக குழு நேற்று அப்பகுதிகளை பார்வையிட்டது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் லடாக் , வடகிழக்கின் அருணாசலப்பிரதேசத்தின் சீனாவின் ஊடுருவல்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட மணிப்பூர் கிராமங்களையே தமக்குரியதாக உரிமை கோரி ஊடுருவலை நிகழ்த்தி வருகிறது மியான்மர். இந்தியா- மியான்மர் இடையேயான உறவிரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்புதிய ஊடுருவல். நீண்டகாலமாகவே மணிப்பூர் எல்லைகளை குறித்துவைத்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்தது மியான்மர். தற்போது இதில் பெரும் பாத…
-
- 0 replies
- 681 views
-
-
மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்று சொல்லும் மெட்ராஸ் கஃபே திரைப்படம், நிஜங்கள் பலவற்றையும் புதைத்திருக்கிறது என்று மூத்த அரசியல் பார்வையாளர் தவ்லீன்சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக http://www.niticentral.com இணையதளத்தில் தவ்லீன்சிங் எழுதியுள்ளதன் சுருக்கம்: (Madras Cafe brings back memories) மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடங்கிய உடனேயே ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் திரைப்படம் இது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. இலங்கையில் தனிநாட்டுக்கான தமிழர்களின் போராட்டம், காடுகளில் தமிழ் புலிகளின் தலைமையகத்தின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லுகிறது இத்திரைப்படம். வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்தி…
-
- 0 replies
- 458 views
-
-
இம்பால்: மணிப்பூர் எல்லையில் தமிழர் கோயில் உள்ளிட்ட இந்திய கிராமங்களை மியான்மர் ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனி குமார் என்று எல்லைப் பகுதியான மோரே நகருக்கு சென்று தமிழ்ச் சங்கப் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் எல்லையான மோரே நகரத்தைச் சுற்றிய இந்திய கிராமங்களில் முகாம்களை அமைக்க, எல்லை வேலிகளை அமைக்க மியான்மர் ராணுவம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு அங்கு முகாமிட்டிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இந்திய அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோரே நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள பிரம்மாண்ட தமிழர் கோயில்தான் வடகிழக்கு மாநிலங்களிலேய…
-
- 0 replies
- 389 views
-
-
Sentamil Karthik ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் , இந்தியாவின் நட்பு நாடு எத்தனை ??? ஈரான் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போன்ற பல முஸ்லீம் நாடுகள் அனைத்தும், பாகிஸ்தான் ஆதரவு நாடுகள்.... ஸ்ரீலங்கா , பங்களாதேஷ் , மியான்மர் போன்றவை எல்லாம் சீனாவின் விரல் அசைவிற்கு வளையும் நாடுகள்.. பாகிஸ்தான் + சீனா இந்தியாவின் அண்டை நாடுகள்... அவை இரண்டும் இந்தியாவை எதிரியாகவே பார்க்கிறது... (முகத்தில் சிரிப்பு . உள்ளத்தில் எதிர்ப்பு ) நாளை போர் நடந்தால், இந்தியாவை இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்தே தாக்கும்.. இன்று இந்தியா தனிமை படுத்த பட்டுள்ளது... // இந்தியாவின் (மத்திய காங்கிரஸ் கட்சியின் ) வெளியுறவு கொள்கையின் லட்சணத்தை பார்த்தீர்களா ??? => வாஜ்பாய் பிரதமராக இருக்கும் …
-
- 3 replies
- 14k views
-
-
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக சரிந்தது. கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது. 62, 63 என சரிந்த ரூபாய் மதிப்புஇன்றைய காலை வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத வகையில் 64.90 ஆக தொடங்கியது. பின்னர் இது 65.13யை தொட்டியது. தொடர்ந்து 65.50 என்ற மதிப்பை அடைந்தது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக அதிகரிப்பதால் பங்குச் சந்தைகள் கடும் சரிவை எதிர்கொள்ளக் கூடும். http://tamil.oneindia.in/news/2013/08/22/business-rupee-opens-at-64-90-per-us-dollar-hits-65-181757.html
-
- 1 reply
- 366 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala மானங்கெட்டவனுக்கு எதுக்குடா ஆயுதம்???? "யாரிடமும் போருக்கு போக மாட்டேன். யாராவது, என்னிடம் வம்புக்கு இழுத்து அடிச்சாலும், பேசாமலே இருப்பேன். பேச்சு வார்த்தை மூலம், பிரச்னையை இழுத்தடிப்பேன்' என்று சொல்லும் ஒரு நாட்டிற்கு, எதற்கு, 3 லட்சம் கோடியில், மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்... அழகு பார்க்கவா? இன்றைய சூழலில், நம்மை சுற்றி, பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம் உள்ளதால், அவர்களை ஒடுக்க, நமக்கு ஆயுத பலம் தேவை தான். ஆனால், வல்லரசு பலம் இருந்தும், சுண்டைக்காய் அளவில் இருக்கும் இலங்கையை, நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது, நமக்கு எதற்கு ஆயுதம்? தமிழக மீனவர்கள், 567 பேரை, குருவியை சுட்டுக் கொல்வதை போல், சுட்டுக் கொலை செய்துள்ளனர். இத…
-
- 1 reply
- 704 views
-
-
ஜகர்தா: இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற…
-
- 1 reply
- 554 views
-
-
மும்பை: ஈழத் தமிழரது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர்களும் இன்று கண்டன போரட்டம் நடத்தினர். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் இந்தப் படத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகின்றன. சென்சார்டு போர்டு அனுமதி இல்லாமல் மெட்ராஸ் கஃபே படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர் அமைப்பினர் பலரும் இணைந்து மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர் .இந்தத் திரைப்படம் ஈழத் தமிழர…
-
- 3 replies
- 783 views
-
-
சென்னை:பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BDL), இந்திய ராணுவத்திற்கு இன்வார் எதிர்ப்பு டாங்கி ஏவுகணைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,000 கோடியாகும். T-90 டாங்குகள் முலம் ஏவப்படும் இந்த ஏவுகணைகள் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு வழங்கும். இத்தகைய ஏவுகணைகள் கண்டிப்பாக நம் இந்திய ராணுவத்திற்கு வலிமையை சேர்க்கும். இந்த ஏவுகணைகள் 5 கிமீ தொலைவில் இருந்து தாக்க வல்லமைப்படைத்தவை. இது எதிரிகளின் வெடிப்பு எதிர்விணை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட டாங்கிகளையும் வீழ்த்தக் கூடியவை. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்…
-
- 3 replies
- 750 views
-
-
லக்னோ/பைசாபாத்: அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தடையை மீறி யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. அயோத்தியில் இன்று பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 25-ந் தேதி முதல் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாத்திரையை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாநில அரசோ இந்த யாத்திரைக்குத் தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி யாத்திரையை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இன்று பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 விஸ்வ ஹி…
-
- 4 replies
- 343 views
-
-
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் படு அசமஞ்சமாக இருந்ததை நன்றாக நோட்டமி்ட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பகுதி தாக்குதல் படையினர் நன்கு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியே ஐந்து இந்திய வீரர்களைக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்கள் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளைக் கூடக் கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரே ராணுவ வீரரான சாம்பாஜி குத்தேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. : http://tamil.oneindia.in/news/2013/08/23/india-indian-soldiers-were-sitting-ducks-august-6-ambush-tactical-lapses-181845.html
-
- 5 replies
- 526 views
-
-
சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது. காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும், சீன வீரர்கள், அங்கு முகாம்களையும் அமைத்து வருகின்றனர். இதையடுத்து, சீனாவுக்கு, ராணுவ பலத்தை காட்டுவதற்கான நடவடிக்கையில், இந்திய ராணுவம் ஈடுபட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்துக்கு, இந்திய விமானப் படைக்கு சொந்தமான, சூப்பர் ஹெர்குலிஸ் விமானம், நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த …
-
- 7 replies
- 837 views
-