உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது. லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது. இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகம…
-
- 0 replies
- 627 views
-
-
புதுடெல்லி: பிறந்த குழந்தைகள் ஆண்டுதோறும் தெற்காசியாவில் 4 லட்சம் பேர் இறப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. உலக அளவில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 29 சதவீதமாக உள்ளது. 186 நாடுகளில் உள்ள உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் தெற்காசியாவில் உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 40 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டு தோறும் 28 ஆயிரம் மற்றும் 60 ஆயிரமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=14601
-
- 0 replies
- 570 views
-
-
பங்களாதேஷில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா தலைமையில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஹிபாசத்-இ-இஸ்லாம் என்று புதிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மதத்தை அவதிக்கும் நாத்திகர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கு வகை செய்யும் மத அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ”டாக்கா முற்றுகை” என்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் 5 லட்சம் ஆதரவாளர்கள் குவி…
-
- 0 replies
- 355 views
-
-
செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன? ______ செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா? ______ செய்தி: திருப்பதி ஏழுமல…
-
- 0 replies
- 1.3k views
-
-
லெபனான் தீவிரவாதிகளுக்கு சிரியா ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் புகார் கூறிவந்தது. இதை தடுக்கும் விதமாக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வீசிய குண்டு டமாஸ்கஸ் நகரை அதிர வைத்தது. அங்குள்ள ராணுவ முகாம், ஆயுதக்கிடங்கு மற்றும் போர் விமான பிரிவு ஆகிய 3 இடங்களை குறி வைத்து வீசப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனால் இந்த தகவலை சிரியா வெளியிடவில்லை. எனினும் இந்த தாக்குதல் குறித்து ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு அமைதி காக்கவேண்டும் என…
-
- 0 replies
- 493 views
-
-
மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை, மும்பை நகர போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க மையம் மற்றும் தூதரக அதிகாரிக்கு வந்த மர்ம கடிதத்தில் ஜூலை 21ம் தேதியன்று மும்பை மற்றும் கோல்கட்டாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் தலைப்பில் அல்-ஜிகாத் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது பெயரா அல்லது இயக்கத்தின் பெயரா என தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அமெரிக்கர்கள் தூதரகத்தை காலி செய்துள்ளனர். இதனால் ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில…
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன. காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவி…
-
- 0 replies
- 440 views
-
-
மன்மோகன் சிங்கால் டெல்லியில் எதுவும் பேசமுடியாது: முதல்வர் நரேந்திர மோடி [ டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே அவரால் பேச முடியும். அதனால் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக நேற்று இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. பெல்காமில் நடைபெற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கால், டில்லியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. டில்லியை விட்டு, வெளியே வரும் போது பேசுவார். அதுவ…
-
- 1 reply
- 353 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்துள…
-
- 1 reply
- 375 views
-
-
மலேசியாவில் மீண்டும் தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சி அமைகிறது. மிகவும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் பிரதமர் நஜீப் ரசாக் தலைமியிலான தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்களை அக்கட்சி வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசிய நேரம் நள்ளிரவு 2 மணி நிலவரப்படி ஆளும் கூட்டணி 119 இடங்களிலும் எதிர்தரப்பு 69 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசியக் கூட்டணி 140 இடங்களிலும், எதிர்தரப்பான மக்கள் கூட்டணி 82 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் இம்முறை ஆளும் கூட்டணி கடந்த தேர்தலை விட கணிசமான அளவில் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றுள்ளன. எத…
-
- 0 replies
- 408 views
-
-
கேள்வி 1: நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ? கேள்வி 2: தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ? கேள்வி 3: வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ? - தளபதி பிரபு _____________________________________________ அன்புள்ள தளபதி பிரபு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 19 வயதான ஷோக்கர் சர்னயேவ்வை விசாரணை செய்தபோது, இந்த வெடிகுண்டுகளை அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவல் கிடைத்திருப்பதாக, தெரியவருகிறது. வெடிகுண்டுகள் அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்கப் பட்டிருந்தால், உயிர் சேதம் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியிருந்தும், ஏன் அதற்கு முன்னர் மராதன் ஓட்டத்தின்போது வெடிக்க வைக்கப்பட்டன? ஆர்வக் கோளாறுதானாம்! அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க வெடிகுண்டுகளை தயாரித்தவர்களுக்கு, ‘இன்ப அதிர்ச்சி’யாக, வெடிகுண்டுகள் சீக்கிரமே தயாராகி விட்டனவாம். இதனால், ஆர்வக் கோளாறில் அவற்றை முதலிலேயே வெட…
-
- 0 replies
- 426 views
-
-
சிரியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று இஸ்ரேலிய போர் விமானங்களால் தாக்கி அழிக்கப்பட்டது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை சிரியாவோ, இஸ்ரேலோ உறுதி செய்யவில்லை. பென்டகனும் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏ.பி. செய்தி ஏஜென்சி, ராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் அமெரிக்காவில் பங்கு ஏதும் கிடையாது எனவும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த வேர்ஹவுஸ் ஒன்றே அதிகாலையில் தாக்கப்பட்டது என்றும் இன்று காலை குறிப்பிட்டது. அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் டிவி சேனல், “இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியா வான் பகுதிமேல் பறந்து தாக்கினவா, அல்லது சிரியா எல்லைக்கு வெளியே இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை” என்கிறது…
-
- 0 replies
- 460 views
-
-
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. வெயில் கொடுமையால் வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா.ஜ வேட்பாளர் திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் காங்கிரஸ் 224, பா.ஜ 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222, பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இத்தனை அணிகள் போட்டியிட்டாலும், காங்கிரசுக்கும், பா.ஜ.வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ ஏற்கவில்லை. இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் தொலைதொடர்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இந்த விளக்கத்தை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்க வ…
-
- 0 replies
- 275 views
-
-
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெ…
-
- 7 replies
- 1.1k views
-
-
லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்து கண்ணாமூச்சி காட்டும் சீனாவுக்கு, ஈரான் நாட்டில் ஆப்பு வைத்திருக்கிறது இந்தியா. அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தலைநகர் டெஹரானில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த சாபகார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல், சீனாவுக்கு எதிராக வெளியுறவுக் கொள்கையில் இந்தியா அடைந்துள்ள வெற்றியாக கருதப்படுகிறது. சீனாவின் முத்து மாலை திட்டத்தின் படி, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு…
-
- 0 replies
- 793 views
-
-
பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/worl…
-
- 12 replies
- 1.1k views
-
-
3 மே, 2013 இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இருந்த பாகிஸ்தானிய கைதி ஒருவர் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் உத்தரவிட்ட மறுதினம், சனவுல்லா ஹக் என்னும் இந்த பாகிஸ்தானிய கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய சிறைக் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் ஒரு இந்திய கைதியான சரப்ஜித் சிங் வியாழனன்று மரணமானார். உளவுபார்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது கிராமத்தில் அவரது இறுதி நி…
-
- 1 reply
- 338 views
-
-
இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி என பொருள் கூறும்படியாகவே கூறப்பட்டுவரும் பாலஸ்தீனத்தை தனி நாடாக குறிப்பிட்டுள்ளது கூகுள். இஸ்ரேல் ஆதிக்கத்திலுள்ள பலஸ்தீனை எப்படி குறிப்பிடுவது என்பதில் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இஸ்ரேல் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகவே இது வரை பலஸ்தீனத்தை சித்தரித்த நிலையில் முதல் முறையாக பலஸ்தீனை தனி நாடாக கூகுள் அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடு எனும் ஸ்தானம் கொடுக்கப்பட்டதே கூகுளின் இம்முடிவுக்கு காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதை தாண்டி கூகுள் பல விஷயங்கள…
-
- 0 replies
- 365 views
-
-
பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்குமிடங்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஓரக்சாய் மாகாணத்தின் அஸ்மத் கங்கா, ஷென் குவாமர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 4 பதுங்குமிடங்கள் முற்றிலுமாக அழிக்…
-
- 0 replies
- 312 views
-
-
http://www.bbc.co.uk/news/magazine-22356306 ஏன் புத்த மதம் பிற மதங்களை வெறுக்கிறது என்று ஆராய்கிறார் அலன் ச்ற்றதேர்ன், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம். முக்கியமாக இலங்கையும், பர்மாவும் இந்த ஆய்வில் இடம் பிடிக்கின்றது. நான் நினைகின்றேன் புத்த மதவாதிகளின் தீவிரவாத போக்கினால் தான் அவர்கள் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டார்கள் என்று. தற்போதைய நிலையில் புத்த சமயம் அன்பை போதிப்பதை நிறுத்தி விட்டது. இது போன்ற கட்டுரையாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மதவாதிகளின் முகத்திரை கிழி தெரியப்பட்டு நமது தாயக மீட்புக்கு மேலும் உரம் சேர்ப்போம்.
-
- 2 replies
- 571 views
-
-
சென்னை: திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சி மாவட்டம் - திருவெறும்பூர் வட்டம் - சூரியூர், கிராமத்து அருகில் எல்.ஏ. பாட்லர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், டி.பி.எப். மினரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் ஆறு ராட்சச ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. இத்தண்ணீர் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனத்தின் குளிர்பானத் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பது லட்சம் லிட்டர் குளிர்பான உற்பத்தி நடைபெற்று வருகின்றது. சுத்திகரிக…
-
- 0 replies
- 332 views
-
-
2013-04-27 பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியர் சரப்ஜித் சிங் மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். கடந்த, 1990ல், லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களில் நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்தியர் சரப்ஜித் சிங், கைது செய்யப்பட்டார். 1991ல், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, சரப்ஜித் சிங், ஏற்கனவே, ஐந்து முறை கருணை மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எனினும், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள், அவரை கடுமையாக தாக்கியதில் சரப்ஜித் சிங் படுகாயமடைந்தார். தலையில் காயமடைந்த அவர…
-
- 13 replies
- 639 views
-
-
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி கருணாநிதியின் தனக்குத் தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80ல் கூறியிருப்பதைப் பார்க்கலாம். *1944ம் ஆண்டு எனக்கும்,பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால்,மனவமைதி குறையத் தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால்,வாழும் காலம் எப்படி போய் முடிவது?என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வ…
-
- 6 replies
- 2.5k views
-