உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் மூன்று மலேசிய கொமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் 100 -300 வரையிலான பிலிப்பைன்ஸ்காரர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் படகுகளில் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்ப…
-
- 0 replies
- 373 views
-
-
2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டு குழுவும் விசாரித்து வருகிறது. இந்த குழுவில் காங்கிரஸ் உள்ளிட்ட, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கை பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ராஜா, "இந்த விசாரணையில் என் தரப்பு வாதத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, என்னையும் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கும், கூட்டு குழு தலைவர் சாக்கோவுக்கும் கட…
-
- 1 reply
- 442 views
-
-
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா முடிவு: சிரியா, ஈரான் எதிர்ப்பு சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டங்களை கிளர்ச்சிக் குழுக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கு 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உதவிகளை உயிரைக்கொல்லும் ஆயுதங்களாக வழங்காமல், கிளர்ச்சிக் குழுக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.தெஹரானில் நேற்று சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாலித் அல் மௌ…
-
- 0 replies
- 356 views
-
-
1000 கி.மீ. பரப்பளவை தாக்கும் சீனாவின் நவீன போர் விமானம் 1000 கி.மீட்டர் பரப்பளவை தாக்கும் அதிநவீன போர் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெ.15 ரக அதி நவீன போர் விமானத்தை வடிவமைத்து ராணுவத்தில் சேர்த்துள்ளது. இந்த விமானம் 1000 கி.மீட்டர் சுற்றளவு பரப்பளவை குண்டு வீசி தாக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் இது விமானம் தாங்கி கப்பலில் நிலை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக தாக்குதல் ஒத்திகை நடத்தி பரிசோதிக்கப்பட்டது. ஜெ.15 ரக போர் விமானம் சன்சாங் என்பவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் எப்-18 ஹார்னெட் போர் விமானத்துக்கு இணையானது என ஜெ.15 ரக விமானத்தை வடிவமைத்த சன் காங் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணை…
-
- 0 replies
- 528 views
-
-
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு இளைஞன் டீன் ஏஜ் இளம்பெண் ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள இளம்பெண், சமூக வலைத்தளங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பழிவாங்கியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் Charles Andrew Capps, என்ற 21 வயது இளைஞர் 14 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ச்சியாக ஃபேஸ்புக மூலம் ஆபாச படங்களை அனுப்பியதோடு, தன்னோடு பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இந்த விஷயத்தை அறிந்த இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் டெக்சாஸ் காவல்துறையினர் ஐ.ப…
-
- 1 reply
- 513 views
-
-
சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு எரிகல் விழுந்து சுமார் 1500 பேர் வரை காயமடைந்த செய்தியே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில் அதை விட பலமடங்கு பெரிய ஒரு எரிகல்லை அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற ஜப்பான் மற்றும் பெல்ஜிய விஞ்ஞானக் குழுவினர் சுமார் 40 பவுண்டு எடையுள்ள ஒரு எரிகல்லை கண்டுபிடித்துள்ளனர். இந்த எரிகல் எப்பொழுது விழுந்தது என தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பெரிய எரிகல் இதுவரை பூமியில் கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யம். Vinciane Debaille, என்ற பெல்ஜிய புவியியல் ஆராய்ச்சி நிபுணர் இந்த எரிகல் பற்றி கூறும்போது "இந்த எரிகல் பூமியில் விழுந்திருந்த காலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏ…
-
- 0 replies
- 425 views
-
-
பெரும் நெருக்கடிக்குள்ளும், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளும் சிக்குண்டு கிடக்கும் அமெரிக்காவை மீட்க புதிய மீதம் பிடிக்கும் பொருளாதார திட்டத்தை அதிபர் ஒபாமா இன்று அறிமுகம் செய்தார். அமெரிக்கக் காங்கிரஸ் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அமெரிக்க பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 85 பில்லின் டாலர்கள் முதல் வெட்டு விழும். இதன் காரணமாக பாடசாலைகள், விமான நிலையக் கண்காணிப்புக்கள், படைத்துறை என்று பல தரப்பும் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டுப்பட இருக்கின்றன. பலருடைய வேலைகள் பறிபோகும், சம்பளம் குறையும் இன்று ஐரோப்பா சந்திக்கும் சிக்கல்கள் அமெரிக்காவிலும் தலைவிரித்தாடும். இந்த மீதம் பிடித்தல்…
-
- 0 replies
- 378 views
-
-
வெனிசுலா நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு துணை அதிபர் நிக்கோலஸ் மார்கோ கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கியூபா சென்று சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களுக்காக போராடிய சாவேஸ்,தனது வாழ்வை நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.இதனால் அவர், தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை எனதுணை அதிபர் கூறினார். http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B5-114500126.html As Chávez fights cancer, Venezuela prepares for life after the president While a gravely ill president undergoes a new, tougher cours…
-
- 1 reply
- 532 views
-
-
மாநில துணை முதல்வர் அஜீத் பவாருக்கு, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராஜ் தாக்கரே கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டால், எனது ஆதரவாளர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குவார்கள் என அஜீத் பவாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13055:ajith-raj-thakararey&catid=37:india&Itemid=103
-
- 1 reply
- 498 views
-
-
மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட் அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவரின் இயற்பெயர் முகம்மது கெடிர். லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுக…
-
- 1 reply
- 533 views
-
-
கொலைப்பட்டியலை வெளியிட்டது அல்கைதா! "இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை" என்ற தலைப்பில், அல் கொய்தா இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த இணையதள இதழை வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள "மிடில் ஈஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியுட்" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில் குரானின் பிரதியை எரித்த பாஸ்டர் ஜான் டெர்ரி, அமெரிக்காவின் கேலி சித்திர ஓவியர் மொல்லி நோரிஸ், சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதியான அயான் ஹிர்சி அலி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் படங்களுடன் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. …
-
- 0 replies
- 434 views
-
-
மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் இரு மலேசிய காமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் குறைந்தபட்சம் 100 பிலிப்பைன்ஸ்காரர்களாவது இரு வாரங்களுக்கு முன்னர் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் …
-
- 0 replies
- 617 views
-
-
இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலைக் குமுறல் இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகில் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்று. இந்த எரிமலையில் இருந்து திடீரென்று கரும்புகையும், சாம்பலும் வெளியேறத் தொடங்கியுள்ளது. எரிமலையின் உச்சியில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள உட்குழிவான பகுதியில் இருந்து சாம்பல் வெளியேறுகிறது.கரும்புகை வெளியேறினாலும் அருகில் உள்ள கடனியா (Cஅடனிஅ) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், எரிமலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மூல…
-
- 0 replies
- 367 views
-
-
கியூபா நாட்டிற்கு சுற்றுலா சென்ற கனடிய நபர் ஒருவர் கடல் அலை இழுத்து சென்றதால் மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இறந்த சுற்றுலா பயணி கனடாவை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டாலும், அவருடைய பெயர் மற்றும் மற்ற விபரங்கள் தெரியவில்லை எனவும், அதுகுறித்து கியூபா போலீஸாருடன் கனடா தூதரகம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கியூபா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்ஷச அலை கனடிய நபரை இழுத்து சென்றதாகவும், கடலலை மீட்புக்குழுவினர் மூவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவருடைய மரணத்தை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. http://www.thed…
-
- 0 replies
- 486 views
-
-
சீனாவின் பொருளாதார டேட்டா மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த காரணத்தினால் டொரண்டோ பங்குச்சந்தையில் இன்று கமாடிட்டி பொருட்களின் விலையில் இறக்கம் காணப்பட்டது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவு நிலையில் இருப்பதால் அதன் தாக்கம் கனடாவில் எதிரொலித்தது. எனவே இன்றைய டொரண்டோ பங்குச்சந்தையில் இந்த வாரத்தின் மிகப்பெரிய இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான கனடிய டாலரின் மதிப்பு இன்று காலையில் 97.02 டாலராக இருந்தது. மேலும் தாமிரம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. டொரண்டோ பங்குச்சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1582 என்ற விலையில் கைமாறியது. சீனாவின் பொருளாதார டேட்டா வீழ்ச்சியால் ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவ…
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின் Central Middle School என்ற பள்ளியில் Gabrielle என்ற மாணவி 6வது கிரேட் என்ற வகுப்பில் படித்து வருகிறார். அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து Gabrielle என்ற மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் Tammie Jackson பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார். கேலி…
-
- 18 replies
- 44.2k views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மணிவிழா ஸ்டாலின் மணிவிழா நிகழ்ச்சி அடையாறு ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பட்டு வேட்டி, சட்டையுடன் மு.க.ஸ்டாலினும், பட்டுப்புடவை அணிந்து அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினும் மாலை மாற்றிக் கொண்டனர். துர்காவுக்கு மங்கல நாணையும் ஸ்டாலின் அணிவித்தார். இதையடுத்து இருவரும் கருணாநிதி மற்றும் அன்பழகன் காலில் விழுந்து…
-
- 12 replies
- 930 views
-
-
ஜப்பானில் கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் புற்றுநோய் பரவும் ஆபத்து! [Friday, 2013-03-01 17:57:46] ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி 9 ரிக்டர் அளவில் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதனால் புகுஷிமா அணு உலை வெடித்து கதிர்வீச்சு வெளியானது. இதனால் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களில் கதிர் வீச்சு பரவியது. அதை தொடர்ந்து அப்பகுதியில் 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அணு கதிர் வீச்சு கசிவு சரிசெய்யப்பட்டது. இருந்தும், புகுஷிமா பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், அங்கு வாழ்பவர்களுக்கு புற்று நோய் பரவும் அபாயம் உள்ளது தெரியவ…
-
- 1 reply
- 321 views
-
-
மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி! இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். ”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு. “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தரு…
-
- 5 replies
- 858 views
-
-
நாடகமாடுகிறார் கருணாநிதி... நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி) புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' ''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் …
-
- 2 replies
- 650 views
-
-
பிரிட்டனின் மாபெரும் ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்படும் கொள்ளையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு நடத்திய கொள்ளையன் ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் இறந்துவிட்டார். லண்டனின் வடமேற்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த மெயில் ரயிலை தடுத்து நிறுத்தி, இன்றைய பண மதிப்பில் பார்த்தால், சுமார் 60 மில்லியன் டொலர்கள் பணத்தைக் கொள்ளையடித்த குழுவிற்கு ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் தலைமை தாங்கினார். அவர் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டு, பின்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலையான பின்னர் அவர் கொள்ளையடிப்பது தொடர்பாக தயாரான திரைப்படம் ஒன்றிற்கு ஆலோசகராக வேலைசெய்தார். "ஒரு திருடனின் சுயசரிதை" என்ற புத்தகத்தையும் எழுதினார். 81 வயதான அவர் தூக்கத்தில் இறந்தார் என்று அவரது மகன் கூறினார்…
-
- 0 replies
- 267 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வால்மார்ட் கடையில் $499 விலையில் வாங்கிய ஐபேட் பெட்டியில், உள்ளே வெறும் பிளாஸ்டிக் டப்பா மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. அமெரிக்காவின் வால்மார்ட் கடையில் Suzanne Nassie என்ற பெண், $499 கொடுத்து ஐபேட் ஒன்றை வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்ததில் ஐபெட் இருப்பதற்கு பதிலாக வெறும் பிளாஸ்டிக்கினால் ஆன வெற்று டப்பா மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே மீண்டும் கடைக்கு சென்று தனது பில்லை காண்பித்து புகார் தெரிவித்தார். வால்மார்ட் கடை ஊழியர் வேறு ஐபேட்டை மாற்றிதர மறுத்ததால், Suzanne Nassie கடை மானேஜரிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரனை செய்து, அந்த பெண…
-
- 0 replies
- 440 views
-
-
மிஸ். அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகி, தனக்கு கிடைத்த அழகி கிரீடத்தை தன்னை பார்க்க வந்த சிறுமிகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார். மிஸ் அமெரிக்க அழகியாக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட Miss America Mallory Hagan தன்னை பார்த்து வாழ்த்து கூற வந்த 10 குழந்தைகளில், மூன்று குழந்தைகளுக்கு தான் பரிசாக பெற்ற அழகி கிரீடத்தை அணிவித்து அவர்களை மகிழ்ச்சியுற செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கிரீடத்தை அவர்கள் தலையில் அணிவித்ததும் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுக்கு தாங்கள் மிஸ். அமெரிக்காவாக வரவேண்டும் என்ற எண்ணத்தை அது தோற்றுவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார் குழந்தைக்கு கீரீடம் சூட்டி அழகு பார்க்கும் மிஸ…
-
- 0 replies
- 432 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலுள்ள Emerson கல்லூரியில் Donnie Collins(20) என்பவர் படித்து வருகிறார். பிறவியில் பெண்ணாக அவதரித்த போதிலும் 17 வயதிற்கு மேல் இவருக்கு ஆண் போன்ற உணர்வு ஏற்படத்தொடங்கியது. எனவே ஆண் நண்பர்களுடனேயே தங்குகிறார். இதனால் அவருக்கு ‘செக்ஸ்’ மாற்று அறுவை சிகிச்சைக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதன் செலவுக்காக மாணவர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிப்ரவரி 9ஆம் தேதி நிதி திரட்ட ஆரம்பித்த மாணவர்கள் $4800 வரை மொத்தம் நிதி திரட்ட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு $16000 வரை நிதி குவிந்துள்ளது. இன்னும் நிதி வந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் மாணவரி…
-
- 0 replies
- 542 views
-
-
முகேஷ் அம்பானியை தாக்குவோம் - இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் கடந்த 24ம் திகதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஊழியரிடம் கவரொன்றை கொடுத்துவிட்டு சென்றார். அதைப் பிரித்து படித்துப் பார்த்தபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துள்ளமை தெரியவந்தது. முகேஷ் குஜராத் முதல்வர் மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரையும், அவரது 27 அடுக்குமாடி வீடான ஆன்டில்லாவையும் தாக்கப் போவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்யாவிட்டால் முகேஷ் அம்பானிக்கு தான் கேடு என்றும்…
-
- 0 replies
- 351 views
-