Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை. கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார். மேலும், இத…

  2. நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள். நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது. நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது. மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாச…

  3. சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும். இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக…

  4. பட மூலாதாரம்,TVBS கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ் பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய் 3 ஏப்ரல் 2024, 03:32 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நிலநடுக்க…

  5. Published By: SETHU 04 APR, 2024 | 06:33 PM இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது. காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை. எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மா…

  6. போன வாரம் அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது. https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-…

      • Haha
      • Thanks
      • Like
    • 19 replies
    • 1.5k views
  7. தாய்வானில் பாரிய நிலநடுக்கம். 25 வருடத்துக்குப் பின் 7.4 அளவில் நில நடுக்கம். இதுவரை 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.900க்கும் அதிகமானோர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர். https://www.cnn.com/asia/live-news/taiwan-earthquake-hualien-tsunami-warning-hnk-intl/index.html

  8. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உள்…

  9. Published By: SETHU 01 APR, 2024 | 01:15 PM ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180130

  10. 31 MAR, 2024 | 10:28 AM லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில் எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது…

  11. நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார். தொலைக்க…

      • Confused
      • Like
      • Haha
    • 5 replies
    • 576 views
  12. நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷியா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள். எனவே மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷியா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என பேசினார். மேலும் அவர் கூறுகையில், “உக்ரைன் தனது மேற்கத்திய…

  13. Published By: RAJEEBAN 30 MAR, 2024 | 06:22 AM இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது. …

  14. தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத …

  15. Published By: SETHU 28 MAR, 2024 | 04:11 PM லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ் நோயானது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியதாகும். இதனால் சிலவேளை மரணங்களும் ஏற்படலாம். இந்நிலையில், லாவோஸில் இம்மாதம் அந்த்ராக்ஸினால் பல மாடுகள் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 54 மனிதர்களுக்கும் அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நோய் லாவோஸின் அயல்நாடான தாய்லாந்திலும் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கண்காண…

  16. 29 MAR, 2024 | 10:23 AM காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித…

  17. புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441

  18. Published By: SETHU 28 MAR, 2024 | 02:08 PM சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீட…

  19. 28 MAR, 2024 | 12:32 PM அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம…

  20. 23 MAR, 2024 | 06:35 AM ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். …

  21. 19 JAN, 2024 | 09:59 PM நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பப்பட்ட “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது. இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவா…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 நிமிடங்களுக்கு முன்னர் காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது. இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ர…

  23. Published By: RAJEEBAN 03 MAR, 2024 | 12:07 PM காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. ஜோர்தான் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது. சி130 …

  24. மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும்…

  25. Published By: SETHU 27 MAR, 2024 | 06:06 PM ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/179843

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.