உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
உலகில் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் எனும் பெருமைக்குரிய நாமத்தை டொயோடா தனதாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்த நாமத்தை ஜிஎம் நிறுவனம் தன்வசம் கொண்டிருந்தது. 2012ஆம் ஆண்டில் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்திருந்ததன் மூலம் தனது முன்னிலை போட்டியாளர்களான ஜிஎம் மற்றும் வோக்ஸ்வகன் போன்ற நிறுவனங்களை பின்தள்ளி இந்த உயரிய நிலையை டொயோடா பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடம் மொத்தமாக 9.75 மில்லியன் வாகனங்களை தான் விற்பனை செய்திருந்ததாக டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது. 75 வருட காலம் பழமை வாய்ந்த கார் உற்பத்தி நிறுவனத்துக்கு இது ஒரு சாதனையாக அமைந்துள்ளதுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 22.6 வீத அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது. இதே கால…
-
- 0 replies
- 380 views
-
-
வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின…
-
- 15 replies
- 1.3k views
-
-
எந்தவொரு நோக்கமும் இல்லாமல், திட்டமிடுதல் இல்லாமல், நான்கு பேரை பிரதானப்படுத்தியதுதான், கார்கில் போரில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணம், என, மாஜி ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில், பகுப்பாய்வு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், சாகித் அஜிஸ். சமீபத்தில், பத்திரிகைக்கு பேட்டி அளித்த இவர், கார்கில் விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து தெரிவித்திருந்தார்.பேட்டியில் அஜிஸ் கூறியதாவது: காஷ்மீரில், 1999ல், கார்கில் பகுதியை கைப்பற்றுவதில் அப்போதைய தளபதியாக இருந்த, முஷாரப் தீவிரமாக இருந்தார். இதனை ரகசியமாகவே நிறைவேற்ற, மாஜி அதிபர், முஷாரப் எண்ணினார். இதனால், இந்த விவகாரம் குறித்து, தளபதிகள் முகமது…
-
- 0 replies
- 1.1k views
-
-
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் மலைப் பகுதியைப் பிரித்து தனியாக கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிராகரித்தார். டார்ஜிலிங்கில் செவ்வாய்க்கிழமை வடக்கு வங்கத் திருவிழாவை அவர் தொடங்கிவைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் கோர்கா ஜனமுக்தி முன்னணியின் தலைவரும் கோர்காலாந்து பிரதேச நிர்வாக ஆணையத்தின் தலைவருமான பிமல் குருங் கலந்துகொண்டார். அப்போது கோர்கா ஜனமுக்தி முன்னணியைச் சேர்ந்த சிலர் தனி கோர்கா மாநிலத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். தனி கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கோபமடைந்த மம்தா, டார்ஜிலிங் பகுதியை மேற்கு வங்கத்திலிருந்து ப…
-
- 0 replies
- 365 views
-
-
எகிப்து என்ற நாடே ஆட்டம் கண்டு கொல கொலத்து கொட்டுப்படப் போகிறது என்று அந்த நாட்டின் படைத்துறை ஜெனரல் அப்டில் பாத் அல் சிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாடு எதிர் கொண்டுள்ள பிரச்சனையும் ஆர்பாட்டங்களும் மிகவும் பாரதூரமாவை இந்த ஆர்பாட்டங்கள் முழு நாட்டையும் இன்னொரு தடவை வீழ்த்தும் அபாயம் கொண்டுள்ளது. பொருளாதாரம், சமுதாயம், பாதுகாப்பு, நாட்டின் உறுதிப்பாடு அனைத்துமே தற்போது கேள்விக்குறியாகியிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது பல்வேறு சக்திகள் இந்த விவகாரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, சரியான முறையில் தந்திரத்தை கையாண்டு அடக்குவது அவசியம், இதுவரை 52 பேர் மரணித்துவிட்டார்கள். எகிப்திய மிலிட்டரி அக்கடமியில் உரையாற்றும்போது இவர் கூறிய கருத்துக…
-
- 1 reply
- 536 views
-
-
கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கவுன்சிலருக்கு $1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவருடைய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடத்திற்கு ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பெண் கவுன்சிலர் Ana Bailao குடிபோதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்ப்பட்ட கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டியதை அவர் ஒப்புக்கொண்டதால், அவருக்கு $1,000 அபராதம் விதித்ததோடு, ஒரு வருடத்திற்கு அவருடைய லைசென்ஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது தண்டனையாகும். ஏற்கனவெ அவர் ஒருமுறை இதுபோன்று தண்டனை பெற்று…
-
- 0 replies
- 512 views
-
-
நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்! கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00 வங்கி இருப்பு ரூபாய் 9,720.00 மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00 இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வ…
-
- 1 reply
- 822 views
-
-
விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!! தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது. ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்…
-
- 3 replies
- 834 views
-
-
புதுடில்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி., நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறைய…
-
- 0 replies
- 453 views
-
-
சும்மார் 33 வருடம் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்த QUEEN Beatrix ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தன்னுடைய புதல்வன் Willem Alexander இடம் தனது முடியுரிமையை கையளிக்க இருக்கின்றார். QUEEN Beatrix of The Netherlands has announced she will abdicate in favour of her son Crown Prince Willem Alexander after 33 years in power. "It is with the greatest of confidence, that I will hand over the throne on April 30 to my son, Willem Alexander, Prince of Orange," Beatrix said on Monday in a televised address, using the official title of the heir apparent. The queen, who is to turn 75 on Thursday, said her birthday and the 200-year anniversary of the monarchy in 2013 "were th…
-
- 2 replies
- 532 views
-
-
கனடாவிலிருந்து கிளம்பிய கென்போரெக்(Kenn Borek Air )ஏர் நிறுவனத்தின் ஜெட் விமானம் தென்துருவப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது தரையில் விழுந்து நொறுங்கியது. அது விழுந்த இடத்தையும் விபத்துக்கான காரணங்களையும் அறிய அமெரிக்க நியுசிலாந்து மீட்புப் படையினர் முயன்று வருகின்றனர். ஆனால் பனி சூழ்ந்திருக்கும் பகுதிகளில் விமானத்தை கண்டவறிவது ஆபத்தான காரியமாக உள்ளது என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர். இருப்பினும் விமானத்தின் வால்பகுதி தெரியுமிடத்தில் இந்த மீட்புபடையினர் தனது முயற்சியைத் தொடங்கலாம் என்றால், அந்தப் பகுதி மவுண்ட் எலிசபெத் மற்றும் குவீன் அலெக்ஸாண்ட்ரா சரிவும் சந்திக்கின்ற ஆழமான பகுதியாக இருக்கிறது. இதில் பனி அடர்த்தியும் அதிகம் உள்ளது இந்தப்பனியை அகற்றி ஆழத்திற்க்குள்…
-
- 0 replies
- 282 views
-
-
வாடிகன்சிட்டி: வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர். சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று. போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்…
-
- 16 replies
- 904 views
-
-
சீனாவின் புதிய தலைமை சீன இராணுவத்தை முற்றுமுழுதாக நவீனமயப்படுத்தும் திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. சீனா பொருளாதாரத்தில் முன்னேறும் எத்தனங்களை நடாத்திக் கொண்டிருக்க அதன் பகை நாடுகள் நவீன இராணுவத்தை கட்டியமைப்பதில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்த நிலையில் சீனாவைப் போல கம்யூனிச நாடான ரஸ்யாவும் இதுவரை இல்லாதளவு பாரிய முதலீட்டை செலுத்தி தனது முப்படைகளையும் மேலை நாடுகளுக்கு இணையாக நவீனப்படுத்தி வருகிறது. இதே பாணியில் இப்போது சீனாவும் பிரமாண்டமான தொகையை செலவிட்டு இராணுவத்தையும், வான்படையையும் அதி நவீனப்படுத்துகிறது. இதில் ஓரங்கமாக வை 20 என்னும் புது வகை ஜெட் விமானத்தை அது அறிமுகம் செய்கிறது, தாங்கிகள், உட்பட அதிபார யுத்தத் தளவாடங்களை இது சுமந்து செல்லும் வல்லம…
-
- 2 replies
- 443 views
-
-
தைவான் தொழிலதிபர் ஒருவர் நோபல் பரிசுக்கு நிகராக ஆசிய நோபல் பரிசு வழங்க நிதி உதவி அளித்துள்ளார். உலக அளவில் மிகுந்த மதிப்புள்ள பரிசாக நோபல் பரிசு விளங்குகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபல் அளித்த நிதியில் இந்தப் பரிசு நிறுவப்பட்டது. இதற்கு நிகராக ஆசிய அளவில் ஒரு பரிசை நிறுவ தைவான் தொழிலதிபர் சாமுவல் யின் என்பவர் திட்டமிட்டிருக்கிறார். நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ருயன்டெக்ஸ் குழுமத்தின் நிறுவனர் சாமுவல் யின் இது குறித்த அறிவிப்பை தைவானின் தைபே நகரில் திங்கள்கிழமை இதனை அறிவித்தார். டாங் பரிசு எனப் பெயரிடப்பட்ட இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் டாங் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், சட்டம், சீனா தொடர்…
-
- 0 replies
- 454 views
-
-
இஸ்லாமாபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் விரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார். பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத் இதை அறிந்த, பாக்., பயங்கரவாத அமைப்புகளின…
-
- 1 reply
- 360 views
-
-
புதுடில்லி; பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான கருத்தை தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சியினர் காட்டிய அலட்சியத்துக்காக அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறினார். வர்மா தலைமையிலான மூன்று பேர் குழு பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை அண்மையில் மத்திய அரசுக்கு வழங்கியது. சுமார் 630 பக்கங்கள் கொண்ட அவரது அறிக்கையைத் தயாரிக்கும் போது காங்கிரஸ் கட்சியினர் மிகவும் தாமதமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதாக செய்தியாளர்களிடம் கடந்த வாரம் வர்மா கூறியிருந்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிர…
-
- 0 replies
- 327 views
-
-
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் எனபா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். லோக்சபாவுக்கு வரும் 2014ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்துவரும் தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது. பா.ஜ.,வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பா.ஜ., சார்பில்பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என அக்கட்சியில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு நிதிஷ்குமார் மறுத்து விட்டார்.குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.…
-
- 2 replies
- 386 views
-
-
அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள். அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்கிறது என்று அணுசக்தி எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்: நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி, கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வரும் காரணத்தால்தான் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் கூடங்குளம் அணுஉலை இத…
-
- 1 reply
- 497 views
-
-
கனடாவின் போர்ட்டர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், டொரண்டோவின் Billy Bishop விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் Changi விமானநிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. டொரண்டோவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யும் பயணிகள், நியூயார்க்கில் உள்ள லிபர்டி சர்வதேச விமானநிலையத்தில், சிங்கப்பூர் விமானத்தில் மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஒரு விமானம் சிங்கப்பூருக்கும் டொரண்டோவுக்கும் தற்சமயம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் Qatar விமானநிறுவனத்திடமும்…
-
- 0 replies
- 516 views
-
-
ஒண்டோரியோவின் Kitchener என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் பின்னால், ஒரு பெண்ணின் தலையில்லாத முண்டப்பகுதி மட்டும் கிடைத்துள்ளதால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் காவல்துறையினர் இந்த தலையில்லா உடல்பகுதியை கண்டெடுத்துள்ளனர். இந்த உடலை ஆராய்ந்த காவல்துறையினர் ஒரு வெள்ளை நிற பெண்ணின் உடல் என்றும் வயது மற்றும் அடையாளம் முதலியவற்றை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பெண் அணிந்துள்ள டி-சர்ட்டில் "Forget princess I want to be a vampire" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி Kevin Thaler அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த உடலைப்பற்றி ஏதாவது …
-
- 0 replies
- 413 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேரிலான்ட்மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும்சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கவர்னர்மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூ…
-
- 0 replies
- 323 views
-
-
புதுடில்லி: காவிரி தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருப்பது இந்த வழக்கில திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு வந்து விடுமோ என்று தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அவமதிப்பு , உடனடி தண்ணீர் தேவை, நிவாரணம் வழங்கிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆர். எம். லோதா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் அதிருப்தி : விசாரணையின்போது தமிழக அரசு…
-
- 1 reply
- 473 views
-
-
பஞ்சம்: வடகொரியாவில் நரமாமிசம் உண்ணும் மனிதர்கள்! திங்கள், 28 ஜனவரி 2013( 12:51 IST ) வடகொரியாவில் வெளி உலகிற்கு மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பஞ்சம் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு ஹவாங்கேயிலி தலைவிரித்தாடுகிறது. இதுவரை 10,000 பேர் பட்டிணியால் பலியாகியிருப்பார்கள் என்று விசாரணை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசியால் தனது குழந்தைகளை கொன்று தின்ற தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகிறது. வடகொரிய கட்சி அதிகாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுவதாக தெரிகிறது. நாட்டின் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாட வடக்ரொயா இரண்டு ராக்கெட்டுகளை பெரும் செலவில் விண்ணில் செலுத்தி மகிழ்ந்துள்ளதாக அங்…
-
- 1 reply
- 658 views
-
-
பல மில்லியன்களை செலவழித்து டொரொன்டோவில் அமைக்க பட்டுள்ள ஒரு ஆலயம். இவ் ஆலயம் கைவேலைப்பாடுகளையும் பல சிற்ப வேலைப்பாடுகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.முன்பு பல கட்டுபாடுகளைக்கொண்ட இவ்வாலயம் இன்று முதல் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகத்தகவல் http://toronto.baps.org/info.php# http://toronto.baps.org/info.php Toronto BAPS Shri Swaminarayan Mandir 61 Claireville Drive, Toronto, ON M9W 5Z7. Canada Tel: 416 798 2277 Fax: 416 798 4498 Email: info@canada.baps.org Web: http://toronto.baps.org/index.php
-
- 0 replies
- 580 views
-
-
மக்களின் பணத்தை செலவிட்டு தனது மனைவி மும்தாஜூக்காக தாஜ் மகால் கட்ட ஷாஜஹானுக்கு ரைட்ஸ் இல்லை என உ.பி., அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் முஷாபர்நகரில் நடந்த பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவிட்டு, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி பூங்காக்களையும், சிலைகளையும் அமைத்துள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கூட, கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, தனது அருமை மனைவிக்காக கட்ட ஷாஜஹானுக்கு எந்த ரைட்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். Dinamalar
-
- 1 reply
- 791 views
-