Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் அடுத்த வாரம் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணுஉலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த வாரம் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடத்த இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அணுசக்தி ஒழுங்குமுறை கமிஷனின் தலைவர் எஸ்.எஸ். பஜாஜ், அணுமின் நிலையத்தை துவங்குவதற்கு முன்னோட்ட…

  2. தண்ணீர் தர தாமதம்: கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம்! புதுடெல்லி: தண்ணீர் தர தாமதப்படுத்திய கர்நாடக அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில்,ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வராமல் போனது. எனவே…

  3. போர்ப்ஸ் சஞ்சிகையின் உலகின் அதி சக்தி மிக்க நபராக ஒபாமா தெரிவு போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற்றும் தொழில் என செல்வாக்கு மிக்கவர்களின் 2012ஆம் ஆண்டுக்கான பெயர்ப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பெற்றுள்ளார். கடந்த வருடமும் முதலிடத்தைப் பெற்ற அவர் இம்முறை இரண்டாவது தடவையாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் வெற்றி ,குறிப்பாக விருப்பு வாக்குகள், வாக்காளர் குழு வாக்குகள் என இரண்டிலுமே வெற்றி பெற்றமை என பல காரணங்களைக் கருத்தில் கொண்டே ஒபாமா இம்முறையும் முதலிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டதாக போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. மேலும் உலகின் பலமிக்க இராணுவம், பொருளாதார வல்லரசான நாட்டின் தலைவராக…

  4. பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 475 ஆக உயர்வு பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது. புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்த புயலால்,மிண்டானோ என்ற தீவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை பூபா என்ற சூறாவளி பயங்கரமாக தாக்கியது. அதன்போது மணிக்கு 210 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன் கனமழையும் பெய்ததால் பேரழிவு ஏற்பட்டுள்ளது சுரங்கங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் பாய்ந்தோடியதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக மக்கள் தங்கியிருந்த பாடசாலை ஒன்றில் வெள்ளம் ஏற்பட்டதால் இதில் சி…

  5. கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை,நாகை,திருவாரூரில் முழு அடைப்பு போராட்டம்! தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில்,மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெற வில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு 11 மணி முதல் கர்நாடக அரசு காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. ஆனாலும் இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது என…

  6. ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது! Posted by: Mathi Updated: Friday, December 7, 2012, 14:59 [iST] டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்…

  7. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் சார்பில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அந்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை நிறைவடைந்தது. இன்றைய விவாதத்தின்போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு உலை இந்த மாத இறுதியில் துவங்கும் என நாடாள…

  8. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவமும் காவல்துறையும் தொடர்ந்து பல வன்செயல்களை செய்துள்ளதாக ஐம்மு காஷ்மீரில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், நபர்கள் காணமல்போன சம்பவங்கள், பாலியல் வல்லுரவு போன்றவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தாம் கருதும் நூற்றுக்கணக்கான இந்திய படை அதிகாரிகளின் பெயர் விபரங்களை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்கள் சிலவும் இதில் இடம்பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு துவங்கிய ஆயுதப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர…

  9. தமிழகத்துக்கு காவிரி நதியிலிருந்து 10,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தும், வியாழக்கிழமை வரை கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து வியாழனன்று அம்மாநில சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா உட்பட எதிர்கட்சியின் உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடுவது அல்லது இல்லை என்று எந்தவிதமான முடிவையும் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி தண்ணீரை அளிக்காது என்று முதலமைச்சர…

    • 2 replies
    • 436 views
  10. சோனியாவுக்கு அடிப்படை அறிவே இல்லை - மோடி கடு‌ம் தா‌க்கு 'சோனியா காந்திக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமே இல்லை'' என்று அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ர் நரேந்திர மோடி கடுமையாக ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளா‌ர். குஜராத் சட்டசபை தேர்தல் வரும் 13, 17ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் இர‌ண்டு க‌ட்டமாக நட‌க்‌கிறது. இதற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுப‌ட்டு‌ள்ள நரேந்திர மோடி, ராஜ்கோட்டில் நட‌ந்த ‌பிரசார கூ‌‌ட்ட‌த்த‌ி‌ல் பேசுகையில், '' மேடம் சோனியாவுக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவே இல்லை'' எ‌ன்றா‌ர். குஜராத்தில் சோனியா பிரசாரம் செய்யும் போது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், ஆண்டுக்கு 6 மானிய விலை சிலிண்டர்களோடு கூடுதலாக 3 சிலிண்டர்களை தருவதாகவும், ஆனால் குஜராத்தில் கூடுதல் சிலிண்டர்கள் வழங்குவதில்லை என கூற…

    • 2 replies
    • 1.6k views
  11. காதல் மனைவியை கொன்றபின் இறுதி முத்தம் கொடுத்த விளையாட்டு வீரன் தானும் தற்கொலை அமெரிக்காவில் உள்ள கென்சாஸ் நகரின் காற்பந்து விளையாட்டு வீரரான ஜொவன் பெல்செர் தனது காதல் மனைவியைச் சுட்டு கொன்ற பின், “எனது செயலிற்காக நான் வருந்துகிறேன் அன்பே” எனக்கூறி அவரது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். நீண்டகாலமாக காதலித்து மனம்புரிந்த இந்தத் தம்பதிகளிற்கு மூன்றே மாதமான ஒரு குழந்தையுள்ளது என்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற மேற்படி விளையாட்டு வீரர் நேரடியாகவே தங்களது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கே தனது அணியின் முகாமையாளரையும், தங்களது பயிற்றுவிப்பாளரையும் வெளியே அ…

  12. உலகில் ஜனநாயகமும் சிறுவர் உரிமைகளும் ஓரளவுக்கு மதிக்கப்படும் நாடான பிரிட்டனில்.. இங்கிலாந்தில்... காடிவ் எனும் இடத்தில்.. ஒரு முஸ்லீம் தாய் தனது 7 லே வயது மகனை குர்ரானின் ஒரு பகுதியை மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக நாயைப் போன்று பொல்லால் அடித்தே கொன்றுள்ளார். இச்சம்பவம் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தாலும் வழக்கின் தீர்ப்பு தற்போதே வெளியாகியுள்ளது. அந்தப் பிள்ளையை கொன்றது மட்டுமன்றி.. அவனது உடலை வீட்டில் வைத்து.. தீ மூட்டி கொழுத்தியும் உள்ளார். இதன் மூலம் அந்த மரணம் தீ விபத்தால் ஏற்பட்ட ஒன்று என்று காட்டவும் முற்பட்டுள்ளார். இதற்கிடையில்.. தனது கணவர் மகன் குர்ரானை மனப்பாடம் செய்யவில்லை என்றால் தன்னை தண்டிப்பார் என்பதற்காகவே தான் அப்படி நடந்து கொண்டதாக அந்தப் பெண் ந…

  13. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் இன்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடு(காங்.,க்கு) ஆதரவாக 253 ஓட்டுக்களும், எதிராக 218ஓட்டுக்களும் கிடைத்தன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்,திரிணமுல் காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க.,முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்எனஅனைத்து கட்சிகளுமே, சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம் என்றே கோருகின்றன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, …

    • 2 replies
    • 612 views
  14. சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன. ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்க…

  15. இந்தியா- சீனா இடையிலான எல்லை மற்றும் இரு நாடுகள் இடையிலான பிரச்னைகள் குறித்து 10 ஆண்டு கால வரலாற்றில் இன்று உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதற்கென 3 நாள் பயணமாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் பெய்ஜிங் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ தொடர்பாளர்களுடன் பேச்சு நடத்துகிறார். தொடர்ந்து அவர் சமீபத்திய புதிய தேர்வாளர்களையும் சந்தித்து பேசவுள்ளார். எல்லையில் தளபதி ஆய்வு : இதற்கிடையில் இந்திய ராணுவ தளபதி பைக்ராம்சிங் இந்திய சீன எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வடகிழக்கு மாநில ராணுவ கமாண்டர் ஜெனரல் தல்பீர்சிங், தளபதியிடம் எடுத்துரைத்தார். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் டி…

  16. தனது உடல் நலம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக ஊடகங்களிலும் மக்களிடையேயும் வதந்திகள் பரவியவண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தனது உடல்நலம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். 'எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன். விஷக் கிருமிகள் சில இத்தகைய புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார் கருணாநிதி. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/54145-201…

  17. உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்களின் வரிசையில் கனடாவின் வான்கூவர் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. கனடாவின் Mercer ஆய்வகம் உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், ஜுரிச் இரண்டாமிடத்திலும், ஆக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் மற்றும் வான்கூவர் ஐந்தாமிடத்திலும் உள்ளது. மேலும் கனடாவின் ஒட்டாவா(14), டொரோண்டோ(15), மொன்றியல்(23) மற்றும் கேல்கரி(32) போன்ற நகரங்களும் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைதரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன. http://www.canadamirror.com/canada/2709.html

  18. உலகின் உயரமான பெண்மணி [2.36 மீற்றர் ]13, நவம்பர் காலமானார் .இன்றுதான் அந்தச்செய்த்து வெளியிடப்பட்டது ........... இவர் சீனாவை பிறப்பிடமாக கொண்டவர் . 40 வயது நிரம்பிய இவரது பெயர் Yao Defen .. அன்னார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் ... http://www.telegraaf.nl/buitenland/21130871/__Langste_vrouw_overleden__.html

  19. [size=4]பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை தரம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதுவரையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அந்தஸ்த்தை மாத்திரமே பாலஸ்தீனம் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், பாலஸ்தீனத்தை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையற்ற ஆசனத்தை வழங்கியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா - இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. எனினும் 138 வாக்குகள் ஆதரவாகவும், 41 வாக்குகள் எதிராகவும் பிரயோகிக்கப்பட்டிருந்தன.[/size] http://www.hirunews.lk/tamil/48462

  20. மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து வருகின்றன. பிரிந்து வாழும் இந் தம்பதியில் மனைவி வார இறுதியில் பிள்ளைகளைப் பார்ப்பது வழக்கம். கடந்த வருடம் இப்பிள்ளைகளில் மூன்று வயதான பிள்ளை காலை ஏழு மணிக்கு வெறும் காற்சட்டையுடன் வீதியில் சென்றதைக் கண்ணுற்ற அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பிள்ளைகளின் பாதுகாப்பில் விசேட கவணம் செலுத்தப்பட்டது. கடந்த வருடம் நத்தார் பண்டிகை காலத்தில் அப்போது 14 மாதங்களேயான தனது கடைசிக்குழந்தையை பலாத்காரமாக கணவரிடமிருந்து எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டு…

  21. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (வயது 30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை (வயது 30) கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் கேட் கர்ப்பமாக இருப்பதாக அவரது நண்பி ஜெசிகா ஹே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

  22. அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

    • 16 replies
    • 1.7k views
  23. அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/world.php?vid=320

    • 4 replies
    • 916 views
  24. வியத்நாம் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் ஆங்காங்கே மறைந்து கிடக்கும் குண்டுகள் அவ்வப்போது வெடித்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு கிராமத்தில் கிடந்த குண்டு வெடித்து, 4 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. வியத்நாமின் வின் லாங்க் மாகாணத்தில் உள்ள ஹியூ ஜியா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மூங்கில் குவியலுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். விவரம் அறியாத அந்தக் குழந்தைகள் அதை வைத்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு வெடித்தது. இதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 ம…

  25. திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம் Courtesy : The Hindu இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.