Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நேற்று சட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவர் தெரிவிக்கையில் ‘தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டு தருவேன். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும்’ என்றார். இந்நிலையில் திமுகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச…

  2. 2 ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை நீதிபதி ஓ.பி. சைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யப்பட்டதிலும், ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகள் விற்றதிலும் சிதம்பரத்தின் தலையீடு இல்லை என்று ஓ.பி. சைனி தெரிவித்தார். 2 ஜி முறைகேட்டில் சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2 ஜி வழக்கில், சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைத் தொடர்பான விசாரணை மார்ச் 17-ந் தேதி முதல் நடைபெறும் என்று நீதிபதி …

  3. இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி “பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்” என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர். அதில் 2 பேர் பான்…

  4. பிரிட்டனில் குடியேற விரும்புவோர்க்கு வருமான கீழ் வரம்பு 31 ஆயிரம் பவுண்டுகள் பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்ற…

  5. இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும் அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது அவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெ…

  6. பெய்ட் ஹனௌன்(பாலஸ்தீனம்): இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தன…

  7. கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ஆளுநர் உரை. சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது இதுகுறித்துக் கூறுகையில், தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க பாக். ஜலசந்தியில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, இது தொடர்பாக மத்திய அரசு இலங்கையுடம் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால் தம…

  8. சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம். ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்ப…

  9. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டதற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச சென்றவர்களை இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். http://youtu.be/O4vXXWxIFH8 அணு உலை குறித்த மக்களின் நியாயமான அச்சத்திற்கு மதச் சாயம் பூசி திசைதிருப்பி குழப்ப இந்து முன்னணி முயற்சிக்கிறது. ஜனநாயக …

  10. சிரியாவில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரேபிய லீக் நிறுத்தி வைத்துள்ளது. சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறைமுறைகளை அடுத்தே அரேபிய லீக் இம்முடிவை எடுத்துள்ளது. ஆயினும். அரேபிய லீக்கின் சார்பில் சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் சிரியாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும் என அரேபிய லீக் முன்வைத்த பரிந்துரையை சிரிய அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரேபிய லீக்கின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அரேபிய வளைகுடா நாடுகள் பின்வாங்கிய…

  11. நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. மேலதிக படங்களை பார்வையிடுவதற்கான இணைப்பு..> விழாவில் செந்தமிழன் …

  12. மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன் சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது. இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் - சிங்கள - ஆங்கில.. மும்மொ…

  13. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனவரி 30 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 64 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரை நினைவுக் கூறுமுகமாக 485 சிறார்கள் இணைந்து மகாத்மா காந்தியின் தோற்றத்தில் உடையணிந்து அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் மேற்படி நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்போது, 10 மற்றும் 16 வயதிற்குபட்ட 485 சிறுவர்கள் இந்நடைபவனியில் பங்குபற்றினர். இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இதற்குமுன் 13.06.2010 ஆம் திகதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 255 சிறார்கள் காந்தி போன்று உடையணிந்து அணிவகுப்பில் பங்குபற்றியமையே முந்தைய சாதனையாக இருந்தது. இம்முறை கொல்கத்தா…

  14. ராசா வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் இரத்து! - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!! இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும் உச்சநீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது. ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும் 9,000 கோடி ரூபாவுக்கு ராசா விற்றதால், நாட்டுக்கு 1.76 அலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உர…

  15. பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்க 13.6 தொன் எடை கொண்ட பாரிய , "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாது…

  16. அந்தமான் – நிக்கோபர் கடற்பகுதியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்குபற்றும் பாரிய கடற்போர்ப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியது. இந்தியாவின் ஏற்பாட்டில் 14 நாடுகள் கலந்து கொள்ளும் ‘மிலன்” என்ற பெயரிலான ஒரு வாரகால போர்ப்பயிற்சி நேற்று தொடக்கம் எதிர் வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. மிலன் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு 4 நாடுகளுடன் இணைந்து இந்தப் போர்ப் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா ஆண்டு தோறும் இதனை நடாத்தி வருகிறது. இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, புறூணே, மியான்மார், ஆகிய 9 நாடுகள் இந்தியக் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன. http://www.ilankathir.com/?p=3893

  17. இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்! கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்ச…

  18. SONY என்ற ஜப்பானிய நிறுவனம் இலத்திரனியல் உலகின் நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய காலம் போய்.. இன்று பெரிய நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோனி 2.9 பில்லியன் டாலர்கள் வருடாந்த வருமான இழப்பை சந்தித்து நிற்கிறது. ஆப்பிளின் அபார புதுமைகள் நிறைந்த வளர்ச்சி மற்றும் தொலைக்காட்சி உலகில் சாம்சங்கின் வளர்ச்சி சோனியை குலைநடுங்கச் செய்துள்ளது. இதற்கிடையே சோனியின் புதிய CEO வாக உருவாகி இருக்கும் 51 வயதான Kazuo Hirai சோனியை இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீட்க எந்த விதமான மனத்தாக்கமுள்ள முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு.. சந்தையில் போட்டியை சந்திக்க முடியாத பொருட்களை மீளப் பெறவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார். சோனியின் சிறுவர் வீடிய…

    • 4 replies
    • 1k views
  19. உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்.. எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் எகிப்தில் இடம்பெற்ற சூப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட பொறுமைக் குலைவும், கலவரமும் 74 பேருடைய உயிர்களை காவுகொண்டுள்ளது. 1000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுட்டிக்கும்படி கேட்டுள்ளது. இன்று எகிப்திய கபினட் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றமும் இந்த விவகாரத்தை விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்த உரையாடல்களில் கலந்துகொள்ள எகிப்திய உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து லீக் போட்டிகளும் உடனடியாக நிறுத்தப…

    • 0 replies
    • 302 views
  20. விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்! விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரிட்டன் நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இவர் மீது பெண்களை துன்புறுத்தியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு நாடுகளின் ரகசிய தகவல்களை வெளியிட்டதும்... இவர் மீதான குற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. தன் மீதான வழக்குகள் குறித்து அசாஞ்சே கூறுகையில், அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. எனக்கும், இந்த வழக்குகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என்னை பிரிட்டனை விட்டு சுவீடனுக்கு நாடு கடத்தியது சட்டவிரோதமான நடவடி…

  21. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற கடும் பனிப்பொழிவு காரணமாக 60பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரையன், போலந்து, ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகள் இந்த பனிப்பொழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 600பேர் மருத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 24ஆயிரம் பேர் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ளனர் என்றும், 1590பேர் இருப்பிடங்களை முற்றாக இழந்துள்ளனர் என்றும் உக்ரையன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150 நிலையங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்து நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். thanks /www.thinakkathir.com

  22. ஆர்ஜெண்டினா நாட்டுக்கு அருகே உள்ள போக்லாந்து தீவில் படைகளைக் குவித்து வரும் இங்கிலாந்து அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் ஐ அங்கு அனுப்பியுள்ளது.போக்லாந்து தீவை ஆர்ஜெண்டினா தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. 1982-ம் ஆண்டு ஆர்ஜெண்டினா போக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலமாக ஆர்ஜெண்டினா மீண்டும் போக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- ஆர்ஜெண்டினா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாதிடீரென தாக்கி விடக் கூடாது என கருதி இங்கிலாந்து போக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எ…

  23. பாகிஸ்தான் மருத்துவர் அப்ரிதான் ஒசாமாவை காட்டிக்கொடுத்தவர் ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவிடம் உறுதி செய்ததும் சகில் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அபோதாபாத் வளாகத்தி…

  24. 2008 தேர்தல் நேரம் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர் நோக்கியது. அமெரிக்காவின் பெருமையாகத்திகழந்த வங்கிகள் ஒரு புறம் கார் தொழில்ச்சாலைகள் மறுபுறமுமாக வங்குரோத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. வங்கிகளை பெரிதும் காப்பாற்ற உதவிய புஸ் தான் சந்தை பொருளாதாரத்தை நம்புபவன் என்றமுறையில் சரிந்து வரும் கார் உற்பத்தியை திரும்பப் புதுப்பிக்க பணம் கொடுக்க முடியாது என்று விட்டார். ஓபாமா தனது பக்க பலமாகிய தொழிலாளிகளைப்பாதுகாக்க ஒரு சூது போல நிறையப்பணம் கொட்டி கம்பனிகளை புனரமைத்தார். காங்கிரசில் இந்த கம்பனிகளின் தலைவர்கள் காரில் வராமல் பிளேனின் கடன் கேட்க வந்ததற்கே அவர்களை வைதார்கள். GM கடனுக்கு கொடுத்த விளக்கம், தன்னிடம் நல்ல புதிய மாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.