உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=DoXUGzHE2Q8
-
- 1 reply
- 587 views
-
-
தயாநிதி ஏன் மறுக்கவில்லை? ஜெயலலிதா கேள்வி முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏன் மறுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறித்து பேட்டி அளித்த கருணாநிதி, இதை நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை சட்ட ரீதியாகச் சந்திப்பதாக தன்னுடைய அறிக்கையில் கூறி இருக்கிறார். உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் இந்த உரையாடலில் இடம்…
-
- 1 reply
- 644 views
-
-
தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியா காலை கழுவத்தயார்:சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியாவின் காலைக்கூடக் கழுவத் தயார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் அமைத்தால் கட்சியைக் கலைத்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து சோனியாவின் காலைக் கழுவக்கூடத் தயாராக உள்ளேன் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஆந்திராவில் தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடர்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலவர் சந்திரசேகர ராவ், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவி…
-
- 3 replies
- 700 views
-
-
இரகசிய இடத்தில் விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணக் காப்பகம் [27 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 12:00 மு.ப இலங்கை] ஸ்டாக்ஹோம், டிச. 27 பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், "விக்கிலீக்ஸ்" இணையதளத்தின் ஆவண காப்பகம் இருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல் வேறு சர்வதேச நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளி யிட்டு, உலகளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கி லீக்ஸ்"இணையதளம் இரகசிய இடத்தில் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில், அந்த இணைய தளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங் கள் பாதுகாக்கப்பட்டு வரும் இரகசிய இடம் குறித்து, தற் போது தகவல்கள் வெளியாகி யுள்ளன. சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரின் மையப்பகுதி யில், பயோனின் என்ற இடத்தில் இந்த இரகச…
-
- 1 reply
- 797 views
-
-
விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அ…
-
- 0 replies
- 590 views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணைக்காக இன்று விசாரணைக்கு ஆஜரான முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றவியல் சட்டப் பிரிவு 160 ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து ராசாவுக்கு, மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.இதற்கான அறிவிப்பும் ராசாவின் டெல்லி வீட்டில் ஒட்டப்பட்டது. இந்தக் குற்றப் பிரிவின் கீழ் அழைப்பாணை பெற்றவர்கள், சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதில் அளிப்பது கட்டாயமாகும். அதன்படி சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக ராசா நேற்று முன்தினமே சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவி…
-
- 1 reply
- 591 views
-
-
. இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி சென்னை: இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவரும் டிசம்பர்த…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்திய தொலைத் தொடர்பு செய்மதியுடன் ராக்கட் வெடிந்து சிதறியது. தொலைத் தொடர்பு செய்மதியொன்றை விண்ணைநோக்கி ஏவும் முயற்சியில் சென்னைக்கு அண்மையிலுள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கட் ஒன்று ஏவப்பட்ட 50 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.
-
- 2 replies
- 770 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பஜாவோர் மாகாணம் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இது தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள ஹார் என்ற இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வினியோக மையம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை உணவு பொருள் வினியோகம் நடந்தது. அவற்றை பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி அதிர்ந்து தீப்பிடித்து எரிந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கு மிங்கும் ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். …
-
- 1 reply
- 628 views
-
-
அரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலிருந்து குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி(காணொளி இணைப்பு) _ வீரகேசரி இணையம் 12/25/2010 1:37:16 PM வலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தல் தொடர்பில் ருமேனியாவின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரஜை ஒருவர் நாடாளுமன்றத்தின் மேல் மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் ருமேனிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் எமில் பொக் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அதன்போது "பொக்இ நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பரித்துவிட்டீர்கள்" எனக் கூறியவாறு மேலிருந்து கீழே பாய்ந்துள்ளார். அவருடைய மேற்சட்ட…
-
- 1 reply
- 468 views
-
-
பிளாஸ்க்' வெடிகுண்டு மூலம் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் செல்லும் பயணிகள் தங்கள் கையில் பிளாஸ்க்கை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி, பிளாஸ்க்குகள் குளிர் நிலையில் வெடி பொருட்களை செலுத்தி அதை வெடிக்க செய்து விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்க்குகள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக காவக்ல்துறை அதிகாரி ஒருவர் …
-
- 0 replies
- 495 views
-
-
-
வெங்காய விலை உயர்வு குறித்து பெரியாரிடம்தான் கேட்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்தார். திமுகவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. முதலவரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, சற்குண பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழ…
-
- 2 replies
- 467 views
-
-
விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்க அஜீத்துக்கும் நிர்பந்தம் சென்னை: அரசியலில் குதிக்க நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் டெல்லி சென்ற விஜய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப் போவதாக செய்தி பரவியது. பின்னர் அதுபற்றி தகவல் எதுவும் இல்லை. கடந்த மாதத்தில், சென்னை வடபழனியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். …
-
- 0 replies
- 459 views
-
-
வங்க தேசத்தில் "கொலைகாரப் படை" என்று குற்றஞ்சாட்டப்படும் சிறப்பு காவல்துறையினருக்கு பிரிட்டிஷார் பயிற்சி அளித்தனர் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களை பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்நாட்டில் ராபிட் ஆக்ஷன் பட்டாலியன் என்றழைக்கப்படும் சிறப்பு காவல்துறையினருக்கு, எப்படி விசாரணைகளை நடத்துவது, எந்த சந்தர்ப்பத்தில் எப்படியான எதிர் தாக்குதல்களை நடத்துவது என்பது போன்ற விடயங்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கற்றுக் கொடுத்ததாக கசிந்த தகவல்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிறப்பு காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி அமெரிக்கா அப்படியான பயிற்சிகளை வழங்க மறுத்துவிட்டது என்றும் அந்தச் செய்தி…
-
- 1 reply
- 468 views
-
-
. பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை, இந்தியா மீண்டும் அங்கிருந்து விலைக்கு வாங்குகிறது! சண்டிகர்: பாகிஸ்தானுக்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது. அரசின் குழப்பமான கொள்கைகளாலும், அப்பாவி மக்கள் குறித்த சிந்தனை சற்றும் இல்லாததாலும் மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. காய்கறிக் கடைப் பக்கமே போக முடியவில்லை. அத்தனை காய்களின் விலையும் மிகக் கடுமையாக உள்ளது. எந்தக் காயை வாங்குவது என்றே தெரியவில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். ஒவ்வொரு காயின் விலை…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதை ரஷ்யா ஆதரிப்பதாக அந்நாட்டு அதிபர் மெட்வெதேவ் கூறினார். இந்திய பிரதமரும், ரஷ்ய அதிபரும் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். இதற்காக இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வெதேவ் நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கும், மெட்வெதேவும் சந்தித்து பேசினர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் உலைகள் அமைப்பது பற்றி ஆலோசித்தனர். பின்னர் ரஷ்ய அதிபர் மெட்வெதேவ், நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படும்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்பது ரஷ்யா…
-
- 1 reply
- 461 views
-
-
இலங்கைப் பிரச்னையில் தான் மிக விரைவில் நேரடியாகத் தலையிடவுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்த ராகுல் காந்தி, இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி இந்தியா ஏராளமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.மேலும், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார். இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவரே, எதிர்காலத்தில் தமிழக முதல்வராகப் போகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸை பலப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். …
-
- 5 replies
- 559 views
-
-
ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ……… அண்மையில், அமெரிக்காவில், பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனையின்போது – ராகுல் காந்தி கணக்கு காட்டப்பட முடியாத சுமார் இரண்டு லட்சம் டாலர்களுடன் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !) சோதனை செய்யும் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டார் என்றும் - பின்பு புது டெல்லி தலையிட்ட பின்பு தான் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்றும இன்று நம்பகத்தன்மை உள்ள ஒரு பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கிறது ! இந்த தகவல் என்னை போலவே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் ! இதில் கவலை தரக்கூடிய சில விஷயங்களும் இருக்கின்றன - அவர் கையில் வைத்திருந்த பணத்திற்கு கணக்க…
-
- 2 replies
- 689 views
-
-
அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை; எனக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை; அவர்கள் என்னை என்ன செய்தி ருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை’’ என்றார் தாமஸ் டாம் சாயர். அவருக்கு வயது 61. அவர் ஒரு அமெரிக்கர். அவருடைய மேல்சட்டை, கால்சட்டை எல்லாவற்றிலும் ஈரம். சிறுநீரின் நெடி. ‘அவர்கள்’ அனுமதித்தவுடன், அவர் அப்படியே வந்து விமானத்துக்குள் ஏறினார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே அவர் கழிப்பறைக்குப் போய் ஆடைகளை மாற்றிக் கொண்டு வர முடிந்தது. அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய். மற்றவர்களைப் போல் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருடைய உடலுடன் ஒரு குழாயைப் பொருத்தி ஒரு பிளாஸ்டிக் பையில் சிறுநீரை சேகரித்து, பிறகு கொட்டும்படி …
-
- 3 replies
- 3.5k views
-
-
மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறி்த்து இணை போலீஸ் கமிஷனர் ஹிமான்ஷு ராய் கூறியதாவது, நகரத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் பெரும் சேதம் விளைவிக்கும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த 4 பேரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கிற்கு மேற்பட்டவர்கள் ஊடுருவியிருக்கிறார்களா என்று நான் யூகிக்க விரும்பவில்லை என்றார். இந்த வார துவக்கத்தில் லஷ்கர் தீவிரவாதிகள் மும்பை மற்றும் அகமதாபாத்தில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையட…
-
- 0 replies
- 387 views
-
-
-
- 0 replies
- 601 views
-
-
தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ளது. அணுவாயுதங்களைப் பாவித்துப் புனிதப் போர் ஒன்றை நடத்துவதற்குத் தமது நாடு தயாராக உள்ளதாக வடகொரியாவின் ஆயுதப்படைகள் அமைச்சர் கிம் யொங் சுன் (Kim Yong-chun) தெரிவித்தார். தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது கருத்து வெளியாகியது. தென் கொரியாவின் பயிற்சி நடவடிக்கைகள், வட கொரியாவின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான ஆயத்தமென கிம் யொங் சுன் மேலும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற பயிற்சியில், நூற்றுக்கணக்கான தென் கொரியப் படையினரும், தாங்கிகளு…
-
- 0 replies
- 399 views
-
-
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டு தூதரகத்தில் இன்று திடீர் என்று குண்டு வெடித்தது. இதில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு பார்சலில் யாரோ வெடிகுண்டை மறைத்து வைத்து அதனை வெடிக்கச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ரோம் நகரில் ஓடிக்கொண்டிருந்த பாதாள ரெயிலில் குண்டு வெடித்த சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1012/23/1101223049_1.htm
-
- 3 replies
- 525 views
-
-
2010ஆம் ஆண்டில் தமிழக அரசியல் போக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரைத் தேர்தலை நோக்கியதாகவே இருந்தது, இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடரும் என்று அறிவித்தாலும், அது அப்படித்தான் நடக்குமா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாத நிலை உள்ளது. பா.ம.க. எங்கு போகும் என்பதும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. 2006ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்து போட்டி…
-
- 2 replies
- 537 views
-