Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதாலேயே தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதகல் பகுதி அருள்தந்தை ஒருவரை மேற்கோள் காட்டி இச் செய்தியை குறிப்பிட்ட இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்ட அருள்தந்தையிடம் தெரிவித்ததாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியில் மேலும் தெரிவிக்…

    • 0 replies
    • 622 views
  2. தென்னகத்து பூலான் தேவி…. பூலான் தேவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரசித்திப் பெற்ற கொள்ளைக் காரர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை தென்னகத்து பூலான் தேவியைப் பற்றியது. அந்தப் பூலான் தேவி, நெருக்கடியால் கொள்ளைக்காரியானவர். இந்தப் பூலான் தேவி, கொள்ளையடித்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர் அந்தப் பூலான் தேவி, சமுதாயத்தால் வஞ்சிக்கப் பட்டவர். இந்தப் பூலான் தேவி சமுதாயத்தையே வஞ்சித்தவர். அந்தப் பூலான் தேவி படிப்பறிவில்லாத பாமரர் இந்தப் பூலான் தேவி படித்துத் தேறிய கவிஞர் அந்தப் பூலான் தேவி சொந்தக் குடும்பத்தாலேயே வெறுத்து ஒதுக்கப் பட்டவர் இந்தப் பூலான் தேவி தன் குடும்பத்தால் ஊரை அ…

  3. வடகொரியா வரவேற்கிறது http://www.youtube.com/watch?v=FJ6E3cShcVU&feature=player_embedded

  4. சென்னை, பிப்.21,2011 இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தா சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் புதுக்​கோட்டை சாமியார் பிரேமானந்தா. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயி​ருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். தனது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கும், உள்துறை செய​லாளருக்கும் மனு கொடுத்தும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத…

  5. சோனியா குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளது: ராம் ஜேத்மலானி திங்கள், 21 பிப்ரவரி 2011( 14:53 IST )சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் போட்டி வைக்கப்பட்டுள்ளது என்று பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கை தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, “சுவிஸ் வங்கிகளில் காந்தி குடும்பத்தார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார். “இவர்கள் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. கெண்ட் புத்தகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவ…

  6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா சர்வதேச சக்தியாக எழுச்சி பெற்று வருவதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதே என்றும் இந்தியாவுக்கு ஆதரவான இத்தீர்மானத்தை ஜனநாயக கட்சி எம்.பி. அல்சீ ஹேஸ்டிங்ஸ் கொண்டுவந்த அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உலகின் பலமான ஜனநாயக நாடாகவும், பொருளாதார ரீதியாக அமெரி்க்காவுக்கு முக்கிய நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறப்பட்ட இத்தீர்மானம் தற்போது அயலுறவு விவகாரத்துக்கான குழு…

  7. பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர். பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார். அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈய…

    • 10 replies
    • 1.5k views
  8. சென்னை, பிப்.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர்(சிபிஐ) இன்று அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஷ…

    • 7 replies
    • 1.8k views
  9. இலங்கையைச் சேர்ந்த 40வயதுடைய ராஜஸ்ரீ, 1991-ம் ஆண்டு சென்னையில் தங்கி இருந்தார். அப்போது போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை விமானநிலைய அதிகாரிகள் பிடித்து அவர் சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சி.பி.ஐ. போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ராஜஸ்ரீ கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். thanks to .... http://www.thedipaar.com/news/news.php?id=24497

  10. ஒரு பக்கம் எதிரே பலமான கூட்டணி.இன்னொரு புறம் தன் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலை. அதற்கு முன் யாருக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்பதில் இழுபறி.. குழப்பம்! இக்கட்டான கட்டத்தில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது அ.தி.மு.க.! உள்ளுக்குள் நெருக்கடிகள் ஆயிரம் இருந்தாலும், மிகப்பெரிய தொண்டர் பலம் இந்தக் கட்சியின் அழுத்தமான அஸ்திவாரம்.கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி 61சீட்டுக்களே பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் 32.52 என்கிறது ஒரு புள்ளிவிவரம்! இது தி.மு.க. வாக்கு வங்கி சதவிகிதத்தைவிட சற்று அதிகம்! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் வந்துவிட…

  11. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி. தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது. 10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்... வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பி…

  12. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் இந்திரபுரியான இந்தியாவின் முதன்மையுடன், வங்கசதேசம், இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் திருவிழா, வரும் சனிக்கிழமை முதல் களைகட்ட தொடங்கும். நாடே விழாக்கோலம்..! தொடக்க நாளான இன்று வங்கதேசமே கலைகட்டியுள்ளது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தும் மிகப்பெரிய பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி இது என்பதால் அங்கு நாடே திருவிழா பூண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்…

  13. புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது: ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்பட…

  14. புதுதில்லி, பிப்.17: முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். 2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பிறகு ராசாவுக்கு…

  15. ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் எத்திபோப்பியாவை சேர்ந்த 129 அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறுவதற்காக கப்பலில் சென்றனர். மொசம்பிக் அருகே அந்த கப்பல் சென்ற போது கப்பலில் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட னர். 60-க்கும் மேற்பட்டோரை அவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் 50 பேர் கப்பலில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மொசம்பிக் நாட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://www.thedipaar.com/news/news.php?id=24489

  16. எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள் வீரகேசரி இணையம் 2/17/2011 10:35:33 AM லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார். அவரின் ஆட்சியில் வேலையின்மை பெருகிவிட்டதாகவும், விலை உயர்வு ஆகிய போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை கடாபியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குதிப்பிடத்தக்கது. எகிப்தின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே லிபியாவிலும் அதே பாணியிலான போராட…

    • 207 replies
    • 13.5k views
  17. 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் செ‌ன்னை, புதன், 16 பிப்ரவரி 2011( 16:22 IST ) தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமல…

    • 0 replies
    • 1.1k views
  18. இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அவர்களை விசாரிக்க மூன்று பெண் நீதிபதிகளை கொண்ட முழு அமைக்கப்பட்டுள்ளது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அந்த நாட்டின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்காரர் http://www.telegraph.co.uk/news/worldnews/europe/italy/8326139/Silvio-Berlusconi-trial-to-be-presided-over-three-women-judges.html இத்தாலிய பிரதமர் சில்வியோ ‌பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டடங்களுக்கு எதிராகப் பெண்கள் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய செய்தி அறிந்ததே. தங்கள் பிரதமரின் சல்லாப சரசங்களால் சர்வதேச அரங்கில் இத்தாலி நாட்டின் கவுரவம் குறைந்து விட்டதாக அப்பெண்கள் வருந்திக் கூறினர். அதிகார…

  19. கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம். ‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா? “அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் ச…

    • 0 replies
    • 1.3k views
  20. ராசா கைதோடு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து தி.மு.க.வின் பெயர் விடுபட்டு விடும் என்றுதான் தி.மு.க.வினர் நினைத்திருந்தனர். ஆனால் ராசா கைதுக்குப் பிறகு, க ருணாநிதி குடும்பத்தினர் பெயர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, கதிகலங்கிப் போயுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவை சி.பி.ஐ. கடந்த வாரம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றும் என தி.மு.க. நம்புகிறது. அதே நேரத்தில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடு …

  21. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள…

  22. இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. …

  23. திபெத் தலைவர் தலாய்லாமா. இவருடைய மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது கார் மோதி பலியானார். நோர்பு, இண்டியான மகாணத்தில் ப்ளூமிங்டன் நகரில் வசித்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி குறித்த வீடியோ பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=24396

  24. பயணிகளுக்கான படகுப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், இந்த முயற்சியில் சுதாட்டம் இருப்பது வெளிப்படை என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறி்க்கையி்ல், "இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுப் போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அதில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தலை மன்னார்க்குப் படகுப் போக்குவரத்து உரிமங்கள் வழங்கிட உலகளாவிய ஒப்பந்தக் கோரல் விளம்பரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கால அவகாசம் கொடுத்து, அத்தகைய விளம்பரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் வரும…

  25. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் தொலைத் தொடர்பு இலாகா பொறுப்பு வகித்த ஆ.ராசா கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டெல்லிக்கு 4 தடவை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது ஆ.ராசா ஒத்துழைக்க வில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய சி.பி.ஐ கடந்த 2-ந்தேதி ஆ.ராசாவை கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. 5 நாள் விசாரணைக்குப் பிறகு 8-ந்தேதி ஆ.ராசா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 2 நாள் ராசாவை சி.பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.