உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினார். காலை 10 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நீடித்தது. முதல்வருடன் நடந்த சந்திப்பிற்கு பின் சிதம்பரம் அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்திருந்த போது, அவரோடு பேசிய செய்திகளை முதல்வருடன் பரிமாறிக் கொண்டேன். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டி தரும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் துவங்கும் என்று அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்தது குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் முதல்வருடன் பேசினேன். …
-
- 4 replies
- 943 views
-
-
உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியல் : சோனியா, மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு இடம் லண்டனில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 68 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரட்டன் டாடா, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சீன பிரதமர் ஹு ஜிண்டாவும், 2-வது இடத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பெற்றனர். There are 6.8 billion people on the planet. These are the 68 who matter: http://www.forbes.com/wealth/powerful-people/list பலம் வாய்ந்த பெண்கள் http…
-
- 3 replies
- 1.6k views
-
-
அண்மையில் கனடாவில் பதினொரு மில்லியன் டாலர்கள் அதிர்ட்ட இலாப சீட்டை வெற்றிகொண்ட தம்பதியினர் தமது வெற்றித்தொகையின் பெரும்பகுதியை சமூக நல நிறுவனங்கள், வைத்தியசாலைகளிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார்கள். தமக்கென ஆபத்திற்கு மட்டும் சிறுதொகையை வைத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை சமூக மேம்பாட்டிற்கு கொடுத்த இவர்கள் நமக்கும் ஓர் முன் உதாரணம். http://www.youtube.com/watch?v=ixHfW5LwFHY இந்நேரம் எனக்கு ஓர் பாடல் வரிகள் நினைவில் வருகின்றது: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.. கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.. வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு! ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி.. வித…
-
- 4 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=L5L1pIId0p4
-
- 7 replies
- 960 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் வரிசையில் தற்போது இடத்தில், கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்திலும் முறைகேடு என காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்து நாட்டையே உலுக்கியுள்ளது. கார்கில் போரில் தாய் நாட்டிற்காக தீரமுடன் போரிட்டு உயிரிழந்த நமது இராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்காகவும், போரில் வீரசாகசம் புரிந்து வெற்றியுடன் திரும்பிய வீரர்களுக்காகவும் குடியிருப்பு கட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்ற்காக மும்பையின் மிக முக்கியமான பகுதியான் கொலாபா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இராணுவ நிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 6 அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட முடிவுசெய்யப்பட்டு, அந்த இடம் ஆதர்ஷ் கூட்டுறவு வீட்…
-
- 0 replies
- 695 views
-
-
ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' (Cadillac-one) எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது. இக்காரானது இரசாயன, உயிரியல் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அமெரிக்காவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது. துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கமுடியாத வெளிப்பரப்பு மற்றும் 5 அங்குல தடிமன் கொண்ட கண்ணாடிகள், காருக்குள் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி , காருக்குள் இருந்தபடி அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் வசதி என்பன இதன் மேலதிக சிறப்பம்சங்களாகும். மேலும் அமெரிக்காவில் இருந்து 40 வ…
-
- 0 replies
- 410 views
-
-
போபால் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமாவைக் கேட்டுள்ளது. எதிர்வரும் வாரம், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள். அமெரிக்காவின் ய+னியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வொறன் அன்டர்சன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவில்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ள ட…
-
- 0 replies
- 457 views
-
-
ஒரு வாய்ப்பு தாருங்கள்: காஷ்மீர் மக்களிடம் சோனியா வேண்டுகோள் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று காங்கிரஸ் தலைவரும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிக்கக் கூடியவை. மாநிலத்தில் இப்போது புதிய சூழல் நிலவுகிறது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய இளம் வயதினர், தவறான வழிகாட்டுதலால் பரிதாபமாக தங்கள் உயிரை இழக்க நேரிடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். காஷ்மீர் மக்களுக்க…
-
- 1 reply
- 684 views
-
-
31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை – தமிழில் ஜீரிஎன் 02 November 10 07:52 am (BST) 31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் 100க்கும் அதிகமான காடையர்கள் எனது வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தினர். காஷ்மீர் தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எதிர்த்து கோசங்களை எழுப்பியபடி எனக்குப் பாடம் படிப்பிக்கப் போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். NDTV, TimesNow மற்றும் News24 ஆகிய ஊடகங்களின் நகரும் ஒளி ஒலிபரப்பு நிலையங்கள் (Out side Broad casting Vans) ஏற்கனவே வந்து இச்செயலை நேரடியாக ஒளிபரப்பக் காத்திருந்தன. வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலான…
-
- 0 replies
- 756 views
-
-
தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள்இ தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு கொண்டுசென்றனர். 1860 ஆம் ஆண்டு துவங்கி 1911 வரை இப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இன்றைய நிலையில் தமிழ்இ மலையாளம்இ தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென் ஆ…
-
- 5 replies
- 863 views
-
-
அமெரிக்கர் அலெக்சாண்ரியா மில்ஸ் உலக அழகியாக தெரிவு http://www.youtube.com/watch?v=2_hX8b0-MwE
-
- 9 replies
- 1.9k views
-
-
அரசியல் காரணங்களுக்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. சிபிஐ புலனாய்வு அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் சமீபத்தில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ அமைப்பு அவசரம், அவசரமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இதிலிருந்து சிபி.ஐ. அமைப்பை காங்கிரஸ் எந்தளவுக்கு அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது என்பது புரியும். ஷா வழக்கில் சிபிஐ வழக்கத்தைவிட வேகம் காட்டி வருகிறது. ஆனால் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள போஃபர் பீரங்கி ஊழல் வழக்கு, 1984 கலவரம் சஜ்ஜன் குமார் மீதான வழக்கு ஆகியவற்றில் …
-
- 0 replies
- 439 views
-
-
அமெரிக்க விமானங்களில் பார்சல் வெடிகுண்டுகள்-அமெரிக்காவில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 31, 2010, 11:56[iST] அமெரிக்கா: அமெரிக்காவுக்கு இரண்டு விமானங்களில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை துபாயும், இங்கிலாந்து அரசும் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் மிகப் பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நாசவேலை சதிக்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சதி குறித்து மூன்று கண்டங்களையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஒரு பெண் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் 28ம் தேதி ஏமனில் உள்ள இங்கிலாந்து உளவு அமைப்பான எம்ஐ6ஐச் சேர்ந்த உ…
-
- 1 reply
- 572 views
-
-
காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை. சென்னைய…
-
- 2 replies
- 760 views
-
-
முதலை வடிக்கும் கண்ணீர். போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ? வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ? நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை. இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தி…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதல் பிரதியை வெளியிட, ம.நடராசன் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் ம.சாமி நாதன் குறுந்தகட்டைப்பெற்றுக் கொண்டார். கல்யாணவீடுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ‘வாராய், நீ வாராய்’ பாடலைத் தந்த திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகராசன் இசைய மைத்து, மேடையிலேயே இரண்டு பாடல்களையும்பாடி, தமிழ் உணர்வாளர்களை உற்சாகப் படுத்தினார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமை…
-
- 0 replies
- 514 views
-
-
ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் .. கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம் பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார். கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா? பதில்…
-
- 1 reply
- 648 views
-
-
சென்னை, அக்.24 : சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதூரில் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் கழுத்தில் நேற்று (அக்.23) காலை செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 2 செருப்புகளை துணியால் கட்டி யாரோ தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். செருப்புமாலை உடனடியாக அகற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மாயகிருஷ்ணன், யுவராஜ், தனசேகரன் ஆகிய 3 காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஆவேசத்துடன் கோஷமிட்டபடி மண் எண்ணையை ஊற்றி தீக்கு…
-
- 5 replies
- 1.2k views
-
-
சொரணைக் கெட்ட தமிழன்... - தங்கர் பச்சான் தாக்கு தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது …
-
- 4 replies
- 1.2k views
-
-
உலக அரங்கில் இந்தியா ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறத…
-
- 0 replies
- 5.5k views
-
-
ஓமார் காடரைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்தார். [ யார் இந்த ஓமார் காடர் : இவர் ஒரு கனேடியர். சிறு வயதில் ஆப்கானிஸ்தான் சென்றார். இவரின் தந்தையர் ஒரு அல்-கைய்டா தலைவர். பின்னர் இவர் கிரனைட் வீசி ஒரு அமெரிக்க இராணுவ வீரரை கொலை செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டு கியூபாவில் உள்ள சிறையில் ஏழு வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளார். ஒபாமா இந்த சிறையை மூட வேண்டும் என்பதால் இவர் மீது வழக்கு நடக்கின்றது. இவர் வழக்கின் தீர்ப்பின் படி கனடா வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இங்கு ஒருவித எதிர்ப்பு இதற்கு உள்ளது. ] குவன்ரானமோ பேயில் உள்ள இராணுவ நீதிம…
-
- 0 replies
- 623 views
-
-
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 4-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முதலாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் (ஏஐசிசி) தில்லியில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ÷ஆனால், இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஏஐசிசி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படாததே இதற்கு காரணம். இருப்பினும் இப்போதுள்ள உறுப்பினர்கள் "சிறப்பு அழைப்பாளர்களாக' கலந்து கொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு காரிய கமிட்டி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வா…
-
- 1 reply
- 604 views
-
-
ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி …
-
- 1 reply
- 837 views
-
-
16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ.16 கோடி… மணிக்கு 407 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது. அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன. அப்படியென்ன புகட்டியின் விசேஷம் ? 16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.“புகட்டி வெறும் கார் மட்டுமல்ல… அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் காரின் பெருமையை காப்பாற்ற மிகக்…
-
- 0 replies
- 670 views
-
-
கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில்27-10-10 புதன் அன்று மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாம்தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 100 நாட்களாக பொய் வழக்கின் காரணமாகதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செந்தமிழன் சீமான்சிறையிலடைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் ,கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வினை கண்டித்தும், அதிகரித்து வரும்மின்வெட்டினால் தமிழகம் இருண்டு கிடப்பதை கண்டித்தும் மாபெரும்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பினால்தடைப்பட்டிருந்த இக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்றத்தில் கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் அனுமதி வழங்கப்பட்டுவெகு உணர்வெழுச்சியாகவும், சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டத்திற்கு தஞ்சைமாவட்ட …
-
- 0 replies
- 717 views
-