Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக் பிரிட்டனின் கோன்வாலிலுள்ள சிறிதொரு கிராமம், மேத்தோடிஸ்ட் சிற்றாலயத்தை வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார். இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது. "இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார். சமூ…

  2. 'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …

    • 0 replies
    • 292 views
  3. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார். மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர். மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏர்லைன்ஸ…

  4. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கடந்த அக்டோபர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதையடுத்து வெளியே வந்தார். பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்ற அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தயங்கினார். எனினும், பீகாரில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை வலுப்படுத்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அவசியம் என்பதை மூத்த தலைவர்கள் வலியுறுத்…

  5. வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…

  6. பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளார்கள். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் உள்ளனர். 2050ம் ஆண்டு மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் …

  7. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், ஒரு தொழிலாளி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். சுக்மா மாவட்டத்தின் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள், டோங்காபால் - ஜெரூம் காட் பகுதியில் வந்தபோது நக்சல்கள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதேவேளையில், மலைப் பகுதிகளில் மறைந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர…

  8. ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …

  9. 08 OCT, 2023 | 01:47 PM (ஆர்.ராம்) 20ஆவது வால்டாய் இன்டர்நேஷனல் கலந்துரையாடல் கழகத்தின் வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல் கடந்தவாரம் ரஷ்யாவின் சூச்சி நகரில் அக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஃபியோடர் லுக்யானோவ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சர்வதேச அளவில் நேட்டோ, முதன்மையானது, அது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அது உலக சமாதானத்துக்கான கட்டமைப்பு அல்ல. பாதுகாப்புத் துறையில் நாங்கள் சீனாவுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவோம். நாங்கள் யாருக்கும் எதிராக எந்தக் கூட்…

  10. லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும். http://www.bbc.com/tamil/global-37650622

  11. மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றித…

  12. இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 71பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, குறைந்தது 71பேர் உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாட மக்கள் விழித்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பெய்த மழையால் கத்தோலிக்க பெரும்பான்மையான புளோரஸ் தீவில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் தீவின் கிழக்கு முனையில் பாலங்கள் மற்றும் வீதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் அழிக்கப்பட்டன. கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஒன்பது பேர் காயமடைந்து 71பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சேற்றுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தேசிய பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி தெரிவ…

  13. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த காட்சி ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ…

  14. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில், பசி பட்டியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகளின் அவலம், ஐ.எஸ். குழுவால் சின்னாபின்னமான நாட்டை மீள்கட்டியெழுப்ப இராக் அரசு புதிய முயற்சி உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  15. 21 JAN, 2025 | 08:30 AM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்பையிலிருந்து வெளியேறும் உடன்படிக்கையிலும் டிரம்ப் கைசாத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204398

  16. முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…

    • 0 replies
    • 291 views
  17. உலகப் பார்வை: ஆபாச பட நடிகைக்கும் டிரம்புக்கும் எந்த தொடர்பும் இல்லை-வெள்ளை மாளிகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தொடர்பு இல்லை ஆபாச பட நடிகைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்…

  18. கனடா- ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் நகரில் தட்டம்மை நோய் கண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2-வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள் மற்றும் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்து இரண்டு பெரியவர்களிற்கு தட்டம்மை கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. ரொறொன்ரோவில் தட்டம்மை பரவுகின்றதை பொதுமக்கள் தெரிந்திருப்பது அவசியம் என ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நோய் வெளி நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்தியா, துணை-சகாரா ஆபிரிக்க பகுதிகள், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கா உட்பட உலகின் பல பாகங்களில் தட்டம்மை பரவலாக காணப்படுகின்றதென தொற்று நோய் நிபுணர் டாக்டர் நீல் றோ தெரிவித்துள்ளார். இந்நாடுக…

  19. பெருவில் முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யக்கோரிய போராட்டங்களில் 17பேர் உயிரிழப்பு! தெற்கு பெருவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலியாக்கா நகரில், எதிர்ப்பாளர்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதில் உயிரிழந்தவர்களில் இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்களின்படி, அருகிலுள்ள நகரமான சுகுய்டோவில் எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலையைத் தடுத்த போது ஏற்பட்ட மோதலில், …

  20. கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகி…

    • 0 replies
    • 291 views
  21. Started by Paanch,

    புறாக்கள் அ ஓர் கருப்பு ஆங்கிலேய மேக்பை ஆங்கிலேய தாரைப் புறா ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை (=Aachen Luster Shield,[1] ELFP-No. D/705;[2] = Aachen Shield Owl[3]) ஆப்பிரிக்க ஆந்தை (GB/710)[2] ஆல்டென்பர்கர் தாரைப் புறா (D/513)[2] அமெரிக்க ராட்சத ரன்ட் புறா அமெரிக்கன் சோ ரேசர் (ESKT/031)[2] அனடோலிய ரிங்க்பீட்டர் (TR(D)/1104)[2] ஆன்ட்வெர்ப் சுமெர்லி (B/701)[2] அரேபிய தாரைப் புறா (D/514)[2] அரச புறா (ESKT/204)[2] ஆர்க்காங்கல் (புறா) (=Gimpel (D/402)) ஆர்மீனியன் டம்ப்லர் ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் ஆங்கிலேய கேரியர் (=Carrier (GB/101)[2]) ஆங்கிலேய விசிறிவால் (=Garden Fantail (GB/608)) ஆங்கிலேய நீளமுக டம்ப்லர் (clean legged (GB/830)[2] and muf…

  22. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது Posted on December 8, 2021 by தென்னவள் 19 0 சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழு…

    • 2 replies
    • 291 views
  23. கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறி தகவல்களை தர முடியாது சுவிஸ் அரசு திட்டவட்டம் பெர்ன்:'கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது' என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல…

    • 0 replies
    • 291 views
  24. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  25. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின. இந்நிலையில், 'வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்' என, வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனில் உள்ள போப் நிர்வா…

    • 0 replies
    • 291 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.