Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி! அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 72,000க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பானங்களுக்கு இந்த அரைவிலை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இதில் ஒருவருக்கு தள்ளுபடியாக 10 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆல்கஹால் பொருந்தாது. ஆனால், விமர்சகர்கள் ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமனைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் இதனை விமர்சித்துள்ளனர். முடக்கநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பப்களுக்கான வருகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள…

  2. கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பூடான் நாடு வழியாக, அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கிராக்கி பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, மருந்துகள் தயாரிக்க, சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பாம்பு விஷத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நல்ல பாம்பு விஷத்தை கடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 200 கோடி மதிப்புள்ள…

  3. தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப் அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கை வீண் என கருதி, நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெ…

  4. மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை: ஹவானாவில் மிகப் பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய பேரணி தற்போது கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஹவானா புரட்சி சதுக்கத்தில் பேரணி ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த…

  5. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் பன்னிரெண்டு பேரை பலிவாங்கிய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. * துருக்கியில் ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள போதிலும் உறவுகளில் பாதிப்பு இல்லை என இருநாடுளும் கூறுகின்றன. * பிரிட்டனில் குட்டிச் சிறார்களின் போலிஸ் படை. புரிந்துணர்வை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி.

  6. வங்கதேசம் : ஆடைத் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர் 2 மே, 2013 - 06:58 வங்கதேசத்தில் 8 நாட்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்ததில் 400க்கும் அதிகமானோர் இறந்துபோன சம்பவத்தை அடுத்து, அங்கு மீண்டும் துணி ஆலைகள் முதல் தடவையாக தமது பணிகளை தொடங்கியிருக்கின்றன. இடிந்துபோன கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், துணி ஆலைகளில் பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் கசீனா கோரிக்கை விடுத்திருந்தார். பணியாளர் பணிக்கு திரும்பாவிட்டால், வணிக நஸ்டம் காரணமாக ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூட நேர்ந்தால், பணியாளர்கள் தமது …

  7. 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் …

  8. http://athavannews.com/wp-content/uploads/2021/02/Euro-zone-downturn-deepened-in-January-as-lockdowns-hit-services-700x380.jpg புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி! கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. …

  9. 1st June 2013 தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான தற்காலிக கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் எஸ்.கே.சர்க்கார் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் கூடும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு,…

  10. நான் தான் நெல்சன் மண்டேலாவின் காதலிக்கு பிறந்த மகள் என உரிமை கோரியுள்ளார் 65 வயது பெண் ஒருவர். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மண்டேலாவுக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவருக்கு எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்பதால், அவருடைய உறவினர்கள் அனைவரும் பிரிட்டோரியாவில் குவிந்துள்ளனர். இந்நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மண்டேலாவுக்கு மூன்று மனைவிகள், முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி வின்னி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், அவரை மண்டேலா விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவது மனைவி கிரேகா மிச்சேல், இவர் மொசாம்பிக் நாட்டு மு…

  11. 36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..! சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவில…

  12. தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைகோப்புப் படம் இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென…

  13. போர்... மண்டலம் போல காட்சியளிக்கும் செக் குடியரசின் பல கிராமங்கள்! செக் குடியரசின் பல கிராமங்களில் வீசிய கடும் சூறாவளியினால், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு வீசிய இந்த சூறாவளி, தென்கிழக்கு ப்ரெக்லாவ் மற்றும் ஹோடோனின் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்கள் வேர்களோடு சாய்ந்தது. கார்கள் கவிழ்ந்தது. குறைந்த பட்சம் மணிக்கு 219 கிமீ (136 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஒரு போர் மண்டலம் போல இருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் ஆலங்கட்டி கற்கள் டென்னிஸ் …

  14. அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார். கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒ…

  15. தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர் ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார். கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடு…

  16. கோழிக்கோடு: கேரளாவில் கட்டாய திருமணம் செய்துகொண்டு தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஐக்கிய அரபுக்குடியரசு நாட்டைச் சேர்ந்த நபரின் மேல் மைனர் சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர்,கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அ…

  17. President Donald Trump on Tuesday fired FBI Director James Comey. In a signed letter, Trump informed Comey that he was "hereby terminated and removed from office, effective immediately," explaining that he reached the conclusion that Comey is "not able to effectively lead the bureau." "It is essential that we find new leadership for the FBI that restores public trust and confidence in its vital law enforcement mission," Trump told Comey in the letter. "I wish you the best of luck in your future endeavors." White House press secretary Sean Spicer said shortly before 6 p.m. ET on Tuesday that Comey was "notified a short time ago," but declined to say how Come…

  18. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது. இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் கா…

  19. ஆபிரிக்காவில் பயங்கரம் ! பெற்றோல் பௌசருடன் லொறி மோதி விபத்து : 90 க்கும் மேற்பட்டோர் பலி ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் பௌசருடன் லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பௌசருடன் லொறி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங…

  20. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை சோதனை – ரஷ்யாவிற்கு அமெரிக்கா கண்டனம் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ரஷ்யா ஏவுகணை சோதனையை நடத்தியமைக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ரஷ்யாவின் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றை வெடிக்கச் செய்யும் வகையில் குறித்த ஏவுகணை சோதனை அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொறுப்பற்ற வகையில் இவ்வாறு அழிவுகரமான செயற்கைக்கோள் சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இச்சோதனையினால் சுற்றுப்பாதையில் 1,500 க்கும் மேற்பட்ட குப்பைகள் இருப்பதாகவும் அந்த துகள்கள் அனைத்து நாடுகளின் நலன்க…

  21. பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர். அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்…

  22. காங்கிரஸ் கட்சி தரைமட்டமாக என்ன காரணம் ? | Socio Talk காந்தி, நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி விழியில் நடந்து வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதை எடுத்து வழி நடத்துவது யார்? ராகுல் காந்தியா? பிரியங்கா காந்தியா? காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா? காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? மேலும் பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.

  23. அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதனையடுத்து புதிய சர்ச்சை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை …

  24. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை! பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த நிலை…

  25. டெல்லி முதல் மந்திரியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகாராஷ்டிராவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷடிர மாநில தலைவரான அஞ்சலி டமானியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டியிட செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 600 பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது மகார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.