உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
காதலி தாக்கியதில் உகன்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளார் 10 November 09 04:14 pm (BST) உகன்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜேம்ஸ் கஸினி தனது காதலியினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் இராணுவத் தளபதி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. உகன்டாவின் தலைநகர் கம்பலாவில் அமைந்துள்ள கம்ஸியின் காதலி வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்புக் கம்பியொன்றினால் கம்ஸியின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கம்ஸியின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார். வீ…
-
- 0 replies
- 867 views
-
-
வெறிநாய் போலீசை ஏவிவிட்டு மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு! கடற்கரை அழகைப் பதம்பார்க்கும் போலீசின் கதை நமக்குத் தெரியாதா? காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால் அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு! கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால் அவன் டூட்டியில் இருக்கும் போலீசு! உழைக்கும் மக்களின் அனுபவத்தில் சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து ’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு? கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க… ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க… இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வ…
-
- 1 reply
- 827 views
-
-
அருணாச்சால்ப்பிரதேசத்திற்கு இன்று காலை வந்திறங்கிய திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது இந்த இந்தியப் பயணம் சீனா நினைப்பது போல் அரசியல் ரீதியானது அல்ல என்றும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். டவாங்கில் இன்று காலை வந்திறங்கிய தலாய் லாமாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. "தான் எங்கு சென்றாலும் சீனா எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது வழக்கம்தான். நான் ஏதோ பிரிவினைவாத இயக்கத்தை வளர்த்தெடுப்பதாக சீனாவின் கம்யூனிச அரசு குற்றம் சாட்டுவதில் எந்த ஒரு அடிப்படை உண்மையும் இல்லை". என்று அவர் மியூசியம் ஒன்றை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். என்னுடைய இந்த வருகை அ…
-
- 0 replies
- 873 views
-
-
ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார். மரியம் ஹூச…
-
- 4 replies
- 1.8k views
-
-
திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர். கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு…
-
- 3 replies
- 2.1k views
-
-
டெக்சாஸ் ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க வீரர்கள் பலி திகதி : Friday, 06 Nov 2009, [vethu] அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று நடந்தது. ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிதல் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள…
-
- 0 replies
- 901 views
-
-
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த 23 வயது ஆசிரியை, தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்யவுள்ளார். அவரது பெயர் லின்சி. ஆசிரியையாக உள்ளார். 23 வயதாகும் லின்சி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்ய அவர் விரும்பினார். இதன் மூலம் உலகெங்கும் உள்ள இளம் தாய்மார்களுக்கு பிரசவம் குறித்த பயத்தைப் போக்கி அதனை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என லின்சி கருதுகிறார். தான் ஒரு ஆசிரியையாக இருப்பதால் இதை ஒரு பாடம் நடத்துவது போல நினைப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் தனது பிரசவத்தை ஒளிப்பதிவு செய்து வைத்து அதை பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்…
-
- 0 replies
- 2.7k views
-
-
இடுக்கி அணைக்காக முல்லை பெரியாறு அணையை தகர்க்க கேரளம் சதி: வைகோ புதன்கிழமை, நவம்பர் 4, 2009, 14:21 [iST] சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு, பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது. கேரள அரசின் திட்டமிட்ட, தீங்கான செயல்களாலும் மத்திய அரசின் ஓர வஞ்சகமான துரோகத்தாலும், இந்த அபாயம் நம்மை வளைத்துள்ளது. 2006ம் ஆண்டு மே மாதம் …
-
- 0 replies
- 599 views
-
-
''இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சமத்துவபுரங்கள் போன்ற புதிய குடியிருப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் 1980களில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள், தமிழகத்தில் சுமார் கால் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அகதி முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் தமிழர்கள் இணக்கமாக வாழும் சூழல் அங்கு இல்லை. எனவே அவர்களை அங்கு அனுப்புவது பாதகமாகவே அமையும். எனவே தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் இழிநிலையைப் …
-
- 0 replies
- 574 views
-
-
பொதுவாக நான் மைக்கல் ஜக்சன் பாடல்களையும் நடனத்தையும் அதிகம் விரும்பி கேட்டதுமில்லை பார்த்ததும் இல்லை காரணம், இளையராஜா இசை மயக்கம் + ஜான் டென்வர் + லியோ செயர் + ரியோ + க்ளிஃப் ரிச்சர்ட் + ஃபில் காலின்ஸ் + சண்ட்டானா + பார்பரா + 3டிக்ரிஸ் + பில்லி ஜோயல் + எல்ட்டன் ஜான் + பீ ஜீஸ் + பீட்ல்ஸ் + இன்னும் பல கலைஞர்கள். அதில் அவர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசிவிட்டுப் போகும் எனவே புகழ் வந்தபின் அனைவரும் போடும் கூத்துக்களில் இவரின் கூத்து என்றே எண்ணினேன் நீதிமன்றத்தில் இவரை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் வரை. அவருடைய மரணம் என்னை கருத்து எழுதும் அளவுக்கு கூட தூண்டவில்லை இருந்தும் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது முதல் அவருக்கு மரியாதை செய்து அவர் உடலை அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது. சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார். அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ…
-
- 0 replies
- 764 views
-
-
திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (11:31 IST) 11வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் பல்கேரியா நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி கோர்டசா (வயது 11). இவர் சிறு வயதிலேயே பருவம் அடைந்துவிட்டார். கோர்டசாவுக்கு ஜெலிஸ்கோ (19) என்ற ஆண் நண்பர் இருந்தார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். அடிக்கடி உல்லாசத்திலும் ஈடுபட்டனர். இதில் கோர்டசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் காலையில் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் கோர்டசாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. திருமண கோலத்தில் இருந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியோடு காணப்பட்ட கோர்டசா நா…
-
- 3 replies
- 2k views
-
-
சென்னை: 2009 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சன் டிவி குழுமத்தின் லாபம் ரூ. 130.36 கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட லாபத்தை விட 20 சதவீதம் அதிகமாகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவ உள்ளன செய்தி உதவி: தட்ஸ் தமிழ் உங்கள் இல்லம் தோறும் வந்…
-
- 9 replies
- 1.9k views
-
-
மார்க்சிஸ்ட் தொண்டர் சுட்டுக் கொலை மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொண்டர்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மேற்கு மிட்னாபுர் மாவட்டம் பேல்பகாரி என்ற இடத்தில் உள்ள மதாப் முடி (42) என்ற மார்க்சிஸ்ட் தொண்டர், இன்று வயல்வெளியில் நின்று மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். நீண்ட நாட்களாகவே தங்கள் இயக்கத்தில் சேருமாறு மதாப் முடியை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வற்புறுத்தி வந்தனர். அதற்கு அவர் மறுத்ததால், இத்தகைய கொடூர செயலை செய்ததாக தெரிய வந்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19696…
-
- 3 replies
- 665 views
-
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை இம்பால் , ஞாயிறு, 1 நவம்பர் 2009( 15:08 IST ) மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில், எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, வீட்டின் இருந்தவர்களை இழுத்து சென்று சுட்டு கொன்றுள்ளனர் என புகார் தெரிவித்துள்ளனர்.. http://tamil.webdunia.com/newsworld/news/national/0911/01/1091101026_1.htm இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை...
-
- 0 replies
- 530 views
-
-
ஈழத்தமிழர்கள் சீனாவுடன் சேர்ந்தால் இந்தியா பயந்து போய் விடும், சீனாவும் உடனே ஓடி வந்து எம்முடன் உறவு கொள்ளும் போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளுக்கு மத்தியில் ஓரளவிற்கேனும் சர்வதேச அரசியல் தளத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை: வாசித்து கருத்துப் பகிர்க ----------------------------------------------- சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி சூரியதீபன் கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து கூட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கேரள அரசைக் கண்டித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மதுரை கண்டனக் கூட்டத்தை திமுக திடீரென தள்ளி வைத்து விட்டது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி வழங்கினார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் மதுரையில் நவம்பர் 1-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச…
-
- 0 replies
- 1.1k views
-
-
தலிபான்களுக்கு இந்தியா நிதி உதவி : பாகிஸ்தான் குற்றச்சாட்டு வீரகேசரி இணையம் 10/27/2009 2:40:49 PM - பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தற்கொலை தாக்குதல், குண்டுவீச்சு, கொலை போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்- கொய்தா தீவிரவாதிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பாகிஸ்தான் இராணுவம் செயல்படுகிறது. இருந்தும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை செயல்பாடுகளுக்கு இந்தியா நிதி உதவி அளிக்கிறது என பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தலிபான் …
-
- 2 replies
- 660 views
-
-
மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நவம்பர் முதலாம் திகதி மதுரையில் மத்திய அமைச்சரவையைக் கண்டித்து தி.மு.க நடத்தும் கூட்டத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரியவருகின்றது. மத்திய அரசுடனும், காங்கிசுடனும் தி.மு.காவுக்கு ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவாகி வருகிறதாகவும், இதனால் இத்தகைய நிலைபாட்டை நிச்சயம் தி.மு.க எடுக்கும் என்றும் தெரிய வருகிறது. இவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு புதிய கட்சிகளின் ஆதரவும் வலிய வந்தது. இதனால் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மத்திய ஆட்சிக்காலத்தில் தி.மு.கா வுக்கு…
-
- 2 replies
- 2.3k views
-
-
இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. ......... காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு… கைராட்டை கதருன்னு சொன்னே வெள்ளக்காரனின் …
-
- 0 replies
- 1.8k views
-
-
குளிர்கால நேரம் ஐரோப்பாவில் மாற்றப்பட்டுள்ளது . உங்கள் மணிக்கூட்டை ஒரு மணித்தியாலம் பிந்தி இருக்க வையுங்கள். ஒரு மணித்தியாலம் கூட நித்திரை கொள்ளலாம்.
-
- 2 replies
- 1.2k views
-
-
அணு சக்தி குறித்து ஈரானுடன் இஸ்ரேல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுடனான அணு சக்தி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரானுடன்,தங்கள் நாட்டு அணு சக்தி தொழில்நுட்ப நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்க்ள் என்று இஸ்ரேல் அணு சக்தி ஆணையத்தின் பேச்சாளர் யேல் டோரான் தெரிவித்தார். அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை மேற்கொண்டு தெரிவிக்க டோரான் மறுத்துவிட்டார். இதனிடையே இது குறித்து ஈரான் தரப்பில் கருத்து தெரிவிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இணைய இணைப்பு http://www.uthayan.com/Welcome/full.php?id=1215&Uthayan1256440030
-
- 1 reply
- 842 views
-
-
நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான பயணச் சலுகை வழங்குவதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. வயது 31. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், வடக்குப் பகுதி தீவான பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தார். நடுவானில் லியூவுக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தை பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட். விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர் பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவி செய்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது 20 October 09 02:31 am (BST) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனாவோடு இந்தியாவின் முரண்கள் அதிகரித்துச் செல்கிறது. சென்ற மாதம் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்கியது சீனத் தூதரகம். இந்நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சீன அரச் தயாரித்திருக்கும் பயணக் கையேட்டில் காஷ்மீரை இறையாண்மையில்லாத தனி நாடு என்று சித்தரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள வரைபடத்திலும் காஷ்மீர் இந்தியாவோடு இல்லையாம். சீனாவின் இச்செயல் புது டில்லியில் அரசியல் சூட்டைக் கிளப்பி விட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர் இருதரப்பிலு…
-
- 6 replies
- 1.9k views
-