உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஒண்டோரியோவின் Kitchener என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் பின்னால், ஒரு பெண்ணின் தலையில்லாத முண்டப்பகுதி மட்டும் கிடைத்துள்ளதால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் காவல்துறையினர் இந்த தலையில்லா உடல்பகுதியை கண்டெடுத்துள்ளனர். இந்த உடலை ஆராய்ந்த காவல்துறையினர் ஒரு வெள்ளை நிற பெண்ணின் உடல் என்றும் வயது மற்றும் அடையாளம் முதலியவற்றை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பெண் அணிந்துள்ள டி-சர்ட்டில் "Forget princess I want to be a vampire" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி Kevin Thaler அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த உடலைப்பற்றி ஏதாவது …
-
- 0 replies
- 411 views
-
-
After six Spanish tourists raped in Mexican resort of Acapulco, police hunt gang of armed, masked men http://youtu.be/dwwzuZfptmk Bertha Ramos and Mark Stevenson, Associated Press | ACAPULCO, Mexico — Authorities have information they hope will lead them to the gang of armed, masked men who raped six Spanish tourists in the Mexican resort of Acapulco, the attorney general in the southern state of Guerrero said. The vicious, hours-long attack at a beach home on the outskirts of Acapulco before dawn Monday was the latest chapter of violence that has tarnished the once-glamorous Pacific coast resort celebrated in Frank Sinatra songs and Elvis Pre…
-
- 0 replies
- 566 views
-
-
டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்! டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ: கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று …
-
- 0 replies
- 337 views
-
-
பிரான்ஸ் பயணத்தை ரத்து செய்தார் புதின், உறவுகளில் சிக்கலா? அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார். இந்த மாதத்தின் பிற்பாதியில் புதின் பிரான்சிஸில் பயணம் முற்கொள்ள இருந்தார் ஒரு ரஷ்ய பழமைவாத தேவாலயம் திறப்பு விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் கலந்துகொள்ள இருந்த திட்டம் புதினுக்காக கைவிடப்பட்ட பிறகு, புதின் இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரம்ளின் கூறியுள்ளது. எந்தவொரு சந்திப்பும், சிரியா பற்றிய பேச்சுவார்த்தையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஒலாந்த் வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அமைதியை முன்னெடுக்கும்போது எந்த நேரத்தில்…
-
- 0 replies
- 322 views
-
-
கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும் Thomas uylland Eriksen, பேராசிரியர், சமூக மானிடவியல் துறை தமிழாக்கம்: ரூபன் சிவராஜா இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. இதனை எழுதிக் கொண்டிருக்கும் …
-
- 0 replies
- 389 views
-
-
புதிய நீர்மூழ்கிப் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின்போது வடகொரியா புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணைகளை காட்சிப் படுத்தியுள்ளது. பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணி வகுப்பினை கோட் மற்றும் ஃபர் தொப்பி அணிந்திருந்த வடகொரியத் தலைவர் கிம்யொங் உன் தனது கைகளை அசைத்த வன்னம் புன்னகைத்து பார்வையிடும் காட்சிகளையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அணிவகுப்பில் அணிவகுப்பு படையினரின் வரிசைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உலகின் மிக சக்திவாய்ந்த…
-
- 0 replies
- 569 views
-
-
மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. ரோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந…
-
- 0 replies
- 286 views
-
-
ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்! ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான ‘Operation Allies Refuge’ என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், ‘அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்’ என கூறினார். முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்க…
-
- 0 replies
- 231 views
-
-
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது. ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு…
-
- 0 replies
- 237 views
-
-
லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முழுமையாக முகம் தெரிய வேண்டும் என்று உத்தரவு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது…
-
- 0 replies
- 390 views
-
-
புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார். இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர…
-
- 0 replies
- 298 views
-
-
ஆயுதங்களைப் அதிகரிப்பது... தற்காப்புக்காக மட்டுமே, போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்! ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்’ என கூறினார். பைடன் நிர்வாகம் பியோங்யாங்கிற்கு எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை எ…
-
- 0 replies
- 250 views
-
-
ஆப்கன் தலைநகர் காபூலில் கார்குண்டுத்தாக்குதலில் 24 பேர் பலி பலர் படுகாயம்! அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கைகள்! துருக்கிய எதிர்கட்சிப்பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்!ஊடகங்களுக்கு எதிரான தாக்குதலென வலுக்கும் குற்றச்சாட்டு! மற்றும் ஸ்காட்லாந்தில் அமையும் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் குறித்து கடலுக்குள் இருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேக செய்திகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 210 views
-
-
படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் இன்று தொலைப்பேசியில் உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. ரஷ்ய படையெடுப்பு: “ராணுவ நடவடிக்கையின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்” – புதின் - தமிழில் செய்திகள் (bbc.com)
-
- 0 replies
- 233 views
-
-
பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்காத, நல்ல இமேஜ் உள்ளவர்களை நாடெங்கும் சுமார் 300 தொகுதிகளில் நிறுத்த ஆலோசித்து வருகிறது. இது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை கணிசமாக பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 332 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் டா வின்சியின் ஏசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் படத்தின் காப்புரிமைCHRISTIE'S நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட ஓவியம் என்று நம்பப்படு…
-
- 0 replies
- 436 views
-
-
ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கைய…
-
- 0 replies
- 3k views
-
-
வாஷிங்டன்: ''இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது,'' என, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமா பேசினார். அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக பதவி வகிக்கும் பாரக் ஒபாமா, நியூயார்க் மாகாணத்தின் வெஸ்ட் பாயின்ட் என்ற இடத்தில், ராணுவ அகாடமியில் பேசியதாவது: இந்த உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது, புதிய வாய்ப்புகளை அளித்தாலும், புதிய ஆபத்துகளையும் வழங்குகிறது. அரசுகளின் அதிகாரம், தனிப்பட்ட மனிதர்கள் கையில் மாறியதால், 2001, செப்டம்பர் 11 தாக்குதல்களை நாம் சந்தித்தோம் என்பதை, நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இப்போதும் நிலைமை மாறி விடவில்லை. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் மீது, ரஷ்யா நடத்தி வரும் த…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ் தேசிய தோழர் - நிகரன் விடைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்கானிஸ்தானில்... பிரபல மசூதியில், குண்டுவெடிப்பு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- 40பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர். காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டுவெடித்துள்ளது. மேலும் அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் ஒரு மருத்துவமனையில் மட்டும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில்,…
-
- 0 replies
- 434 views
-
-
அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை: 30 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை கொல்வதற்கு இஸ்ரேல் எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது என்கிறார் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி, Image captionபாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூ…
-
- 0 replies
- 336 views
-
-
நார்வே சிறைகள் புதுப்பிக்கப்பட்டுவருவதால், நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. நார்வேயில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைகளில் இடம் கிடைக்கும் வரை, சிறைத் தண்டனையை அனுபவிக்கக் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது . தற்போது நார்வேயில் சுமார் 1,300 பேர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இடம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் இடமில்லாத காரணத்தால், சிறை தண்டனை அனுபவிக்கவேண்டிய கைதிகளுக்கு தனது நாட்டில் சிறைகளை வாடகைக்குத் த…
-
- 0 replies
- 415 views
-
-
நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல். போட்டி: ’கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'ஐ.பி.எல்.: கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
-
- 0 replies
- 393 views
-
-
பின்லேடனை போல் ஜார்ஜ்புஷ் ஆபத்தான தீவிரவாதி: கருத்துக்கணிப்பில் தகவல் இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் இணைந்து இந்த நாட்டு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. உலக அமைதிக்கு ஆபத்தாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு அமெரிக்கா வினால் தான் உலக அமைதிக்கு ஆபத்து என்று அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இங்கிலாந்தில் 69 சதவிதம் பேரும் கனடாவில் 62 சதவிதம் பேரும், மெக்சி கோவில் 53 சதவிதம் பேரும் அமெரிக்காவால் உலக அமைதி கெடுகிறது என்று கருத்து கூறி உள்ளனர். பின்லேடனை போல சர்வதேச தீவிரவாதிகள் பட்டி யலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சையும் அவர்கள் சேர்த்துள்ளனர். ஆபத்தான மனிதர் பின்லேடன் என்று இங்கிலாந்தில் 87 சதவிதத் தினர…
-
- 0 replies
- 876 views
-
-
உலகப் பாரவை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம் படத்தின் காப்புரிமைAFP திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும்…
-
- 0 replies
- 401 views
-