உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26630 topics in this forum
-
புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் 46வது சுதந்திர தின விழா இன்று புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒரு அங்கமான புதுச்சேரியில் நேற்று நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேசமயம்இ 1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் திகதி தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தம் இந்தியஇ பிரெஞ்சு அரசுகளிடையே கையெழுத்தானது. இதைத் தொடர்ந்துஇ டி ஜூரே எனப்படும் புதுச்சேரியை விடுவிக்கும் தீர்மானம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம்திகதி நிறைவற்றப்பட்டது. அந்த நாள் பிரான்சிடம் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரியில் இன்ற…
-
- 0 replies
- 782 views
-
-
உழைப்பும் சிரிப்புமாக என்னை வரவேற்றது குத்தம்பாக்கம் கிராமம்! இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது! எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய்…
-
- 1 reply
- 1.1k views
-
-
முக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் ! கலைஞர் ஐயாவுக்கு வயது ஆக ஆக வாரிசுகள் மேல் வைத்திருக்கும் பாசமும், பெருமையும் கூடிக் கொண்டே போகிறது, தந்தை மக்கட்கு ஆற்றும் உதவியாக, அரசு விழாவா ? குடும்ப விழாவா ? என பெரும் குழப்பம் ஏற்படும் அளவுக்கு பொது இடங்களில் வாஞ்சையின்றி வாரிசுகளைப் புகழ்ந்து தள்ளுகிறார். //"இப்போது சென்னை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அங்கே பக்கத்திலே ஒரு ரயில்வே கேட்- அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காலனி. அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போது ஸ்டாலின் ஒரு சின்ன குழந்தை. ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் புரிகிறது- அவன் ஒரு ஊக்கை விழுங்கவில்லை. ஊக்கத்தை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரஷியா கூறி உள்ளது. அமெரிக்க கண்டனம் ரஷியாவில் இருந்து பிரிந்த சிறு நாடுகளுள் ஒன்று, ஜார்ஜியா. இது இப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு உள்ளது. அதோடு அமெரிக்காவின் ராணுவ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவும் முன் வந்து உள்ளது. இதெல்லாம் ரஷியாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் ஜார்ஜியாவில் ரஷியர்கள் வசிக்கும் தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜிய ராணுவத்துக்கும், ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. தெற்கு ஒசெட்டியாவை ரஷியா க…
-
- 5 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்துக்கு தப்பியோடிய தாய்லாந்து மாஜி பிரதமர் ! பாங்காக்: ஒலிம்பிக் போட்டிகளைக் காண செல்வதாகக் கூறி தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். தாய்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்திய வந்த ஷினாவத்ரா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால், இவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். இந் நிலையில் 2006ம் ஆண்டு குடும்பத்தோடு இவர் வெளிநாடு சென்றபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இங்கிலாந்தில் வசித்து வந்தார். ஆனால், இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் தாய்லாந்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எதிர்கொள்ள குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகெங்கும் தினமும் 7000 பெண்கள் எய்ட்ஸினால் பாதிப்புறுகின்றனர் [11 - August - 2008] உலகெங்கும் தினமும் ஏழாயிரம் பெண்கள் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பூர்ணிமா மாளே தெரிவிக்கையில்; எய்ட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இந்தியாவில் குழந்தை திருமண சட்டங்களை அமுல்படுத்துவதில் சமூக அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்மூலம் இளம் வயதிலேயே பெண்கள் பாலியல் ரீதியான உறவுகளுக்கு ஆட்படுவதும், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாவதும் தடுக்கப்படுகிறது. இந்தியா மட்ட…
-
- 0 replies
- 684 views
-
-
ஈரோடு: உலகிலேயே மிகப் பெரிய வளையலை உருவாக்கியுள்ளதாக டைட்டன் தொழில் குழுமத்தின் நகை விற்பனைப் பிரிவான கோல்ட் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 22 காரட்டினாலான இந்த மிகப் பெரிய தங்க வளையலை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் எல்.ஆர். நடராஜன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே மிகப் பெரிய வளையல் இதுதான். இதன் சுற்றளவு 1830 மில்லி மீட்டராகும். அகலம் 140 மில்லி மீட்டராகும். எடை 24 ஆயிரத்து 505 கிராம் ஆகும். நான்கு 22 காரட் வளையங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வளையங்களும், டாடா நிறுவனத்தின் கொள்கைகளான நம்பிக்கை - நாணயம், வாடிக்கையாளர் திருப்தி, மதிப்பு மற்றும் புதுமை ஆகியவற்றைப் பிர…
-
- 0 replies
- 928 views
-
-
துபாய்: கையில் நிறைய்யய 'டப்பு' இருக்கா... அப்ப புறப்படுங்க ஐக்கிய அரபு எம்ரேட்ஸூக்கு. அங்கேதான் உலகின் அதி சொகுசான, எக்கச்சக்க காஸ்ட்லியான சுற்றுலா வசதியை செய்து கொடுக்கிறார்கள். இந்த ஹாலிடே பேக்கஜூக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா... ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 4.3 கோடி ரூபாய்!! அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் என்ற பிரமாண்ட நட்சத்திர ஓட்டல்தான் இந்த சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. அப்படி என்ன இருக்கு இந்த உலக மகா டூர்ல? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ... அபுதாபிக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட், எமிரேட் பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் சகல வசதிகளுடனும் கூடிய தங்கும் வசதி, ஸ்பா மஸாஜ் சுகம், நீங்கள் விரும்பும் உலகின் காஸ்ட்லி உ…
-
- 0 replies
- 668 views
-
-
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது. South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது. தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நட…
-
- 55 replies
- 7.4k views
-
-
வீரகேசரி நாளேடு - சீனாவின் பீஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 500,000 பூனைகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பூனைகள் சிறிதும் அசைய முடியாத நிலையில் பெருந்தொகையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
-
- 3 replies
- 1.6k views
-
-
டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உ…
-
- 0 replies
- 660 views
-
-
தயவு செய்து பின்வரும் இணையத் தளத்துக்குச் சென்று உங்களின் ஆதரவையும் இணையுங்கள். நன்றி. www.justiceformuttur.org
-
- 1 reply
- 871 views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது அதிகார துஷ்பிரயோகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக இவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை ஜனாதிபதி பதவியிலிருந்து கௌரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த வருடம் முஷராபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை புதிய ஜனாதிபதி முன்னில…
-
- 0 replies
- 623 views
-
-
திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது. இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர். …
-
- 0 replies
- 798 views
-
-
டெல்லி: கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான். அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது. இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். இந்த அரசின் நடவடிக்கைகள் எங…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: ஓகேனக்கல் பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதியைவிட்டு காங்கிரசார் ரஜினிகாந்தை விமர்சிப்பது ஏன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள். ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
தலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானோட தனது உறவுகளை வேகமாக விரிவாக்கி வந்த இந்தியா இன்று 450 மில்லியன் அமெரிக்க வெள்ளி அபிவிருத்தி உதவியை அறிவித்துள்ளது. இதுவரை கணனி கல்வித்துறை பயிர்ச் செய்கை போன்றவற்றிக்கு பயிற்சி அளித்து உதவி செய்து வந்தது. எதிர்வரும் காலங்களில் ஆப்கானிஸ்தானிய தரைப்படைகளை பயிற்சி போன்றவற்றிற்கு விரிவாக்கமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 0 replies
- 639 views
-
-
இஸ்ரேல் Ben Gurion Airport இல் இருந்து 5 பிள்ளைகளுடன் பெற்றோர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு. "உங்கள் பிள்ளை ஒன்று விமான நிலையத்தில் தவறவிடப்பட்டுள்ளது" என்பது தான் அந்த அறிவிப்பு. உடனடியாக விமானத்தில் இரு வேறு இடங்களில் இருந்த தாயும் தகப்பனும் பிள்ளைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளனர். என்ன ஆச்சரியம். 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணவில்லை. பெற்றோர் அது தமது பிள்ளை தான் என்று உறுதிப்படுத்தியதை அடுத்து... தவறவிடப்பட்ட 4 லே வயதான குட்டிப் பொண்ணு.. அடுத்த விமானத்தில் பாரிஸுக்கு பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பெற்றோர் மீண்டும் இஸ்ரேல் திரும்பும் போது இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்…
-
- 18 replies
- 3.4k views
-
-
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நைனாதேவி இந்துக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக அங்கு சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர், என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமான பெண்களும்,குழந்தைகளும், உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரியவருகின்றது. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/world/123-dead-...2008-08-03.html
-
- 8 replies
- 1.5k views
-
-
ராஜீவ்: உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை-நளினி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலைக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மன்னிப்பால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவரை சோனியா காந்தியின் மகள் பிரியங்கா நளினியை சிறைக்குச் சென…
-
- 5 replies
- 2.2k views
-
-
டெல்லி: தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து காக்க வான் பாதுகாப்பு (ஆஇர் Dஎfஎன்cஎ) திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட சோதனையை முடித்த பின்னர் டெல்லியை ஏவுகணைப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து நகரங்களைக் காக்க வான் பாதுகாப்பு திட்டம் உள்ளது. அதன் படி நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணை பாதுகாப்பு வளையத்தின் கீழ் அந்த நாடுகள் வைத்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் இந்தியாவும் சேரவுள்ளது. இதற்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி கட்ட சோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.…
-
- 0 replies
- 673 views
-
-
-
- 34 replies
- 16.6k views
-
-
அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு.... 28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை.. ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது. 26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்." - என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை. ராமர் குடிப்பார் அவருக்கு …
-
- 0 replies
- 1.7k views
-
-
அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாலஸ்தீனர்களை வெளியேற்ற எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் அரசு [27 - July - 2008] எருசலேம்: எருசலேமின் பழைய நகர்ப்பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது இஸ்ரேல் அரசு. எருசலேமின் பழைய நகர்ப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அம்மக்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற பெருச்சாளிகளை இஸ்ரேல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அரேபியர்களுக்கு மேலும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கில், யூதர்கள், பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து, பழைய நகரின் தெருக்களில் விட்டுவிட்டுச் செல்கின்றன…
-
- 0 replies
- 855 views
-