உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
சிரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் முதன்முறையாக வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டுமென வலியுறுத்தி உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தலி் இதுவரையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா.,சபையும் குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களின் எண்ணத்தை படம் பிடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்நத பத்திரிகையாளர் கில்லஸ் ஜேக்குயர் என்பவர் சிரியா பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கில்லஸ் ஜேக்குயர் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்தது. சிரியாவின் உள்ளநாட…
-
- 0 replies
- 427 views
-
-
ஐ எஸ்ஸுக்கு துருக்கி, சவுதி, கத்தார் ஆகியவை ஆதரவு: பஷார் அல் அஸத் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பயங்கரவாதிகள் வளர்வதற்கு சிரியா ஒரு களமாக உள்ளது என்பதை நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் மறுத்துள்ளார். பஷார் அல் அஸதுக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளது இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போதே சிரியாவின் அதிபர் இதைத் தெரிவித்தார். துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடனேயே, சிரியாவில் பயிற்சி பெற்ற அந்த ஜிகாதிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர் என அவர் கூறுகிறார். பயங்கரவாதிகள் என அவர் கூறுவோரின் பிடியில் நாட்டின் சில பகுதிகள் இருக்கும் நிலையில், சிரியாவில் தேர்தல் மூலம் இடைக்கால ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக…
-
- 0 replies
- 541 views
-
-
6 ‘இல்லை’கள்... இதனாலேயே பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! பயங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை, 195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து, ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன? சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில், உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதி…
-
- 0 replies
- 860 views
-
-
ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டமான சாஞினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். 'ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' அந்த நகரில் உள்ள போலிஸ் தலைமையகம் இன்னமும் ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உள்ளே இருக்கும் அதிகாரிகளுக்கு காபுலில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரவு தலிபான்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால், காபுலின் மத்திய பகுதியை நோக்கி மூன்று ராக்கட்டுகள் ஏவப்பட்டன. முன்னதாக காபுலுக்கு வெளியே பக்ரம் விமான தளத்தை தாம் தாக்குவதாக த…
-
- 0 replies
- 624 views
-
-
பராக் ஒபாமா [07 - June - 2008] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையே கடந்த 17 மாதங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டி இவ்வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக உலகின் கவனத்தை ஈர்த்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்த வேட்பாளர் நியமனப்போட்டி முக்கியமான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவது நிச்சயம் என்றே பொதுவில் நம்பப்பட்டது. பில் கிளின்டனுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் கறுப…
-
- 0 replies
- 626 views
-
-
தமிழர் எதிர்ப்பு: இந்திய அரசின் நிரந்தர அரசியல் வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே. இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் பால் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறதோ அதே அணுகுமுறையைத்தான் ஈழத்தமிழர்கள் பாலும் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைப…
-
- 0 replies
- 546 views
-
-
இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் சிறுபான்மையின இந்து மக்கள் அதிகமாக வாழும் உமர்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஒரேமகனான பிலாவல் பூட்டோ கலந்து கொண்டார். அவருக்கு ராஜஸ்தானி தலைப்பாகையை அணிவித்த இந்து மக்கள், அவர்மீது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் கூடியிருந்த மக்களின்மீது வண்ணப்பொடிகளை தூவி வாழ்த்து தெரிவித்தார். …
-
- 0 replies
- 282 views
-
-
ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான விமானப்பயணங்கள் இரத்து! ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து விமானப் பயணங்களும் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா செல்வோருக்கு குறித்த விதி பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 ஆயிரத்து 462 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை அங்கு 827 …
-
- 0 replies
- 226 views
-
-
பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 12:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். 20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அ…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை. Ulyana Krychkovska, Tetyana Vysotska, Anastasia Protz — 22 அக்டோபர், 14:32 பெல்ஜியக் கொடி. ஸ்டாக் புகைப்படம்: பெல்ஜியக் கொடி 1332 தமிழ் உக்ரைனுக்கு €140 பில்லியன் இழப்பீட்டுக் கடன்களை வழங்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையம் பெல்ஜியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் பிரஸ்ஸல்ஸ் இன்னும் இந்த முயற்சியை அங்கீகரிக்கவில்லை. மூலம்: ஐரோப்பிய பிராவ்தா , பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்களை மேற்கோள் காட்டி. ஒரு EU தூதரின் மேற்கோள்: "ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூட்டம் தற்போது நடந்து வருகிறது, அங்கு உக்ரைனுக்கு ஆதரவாக முடக்…
-
- 0 replies
- 103 views
-
-
ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடியேறிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார். இப்படகுகளில் ஒன்று கவிழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் இத்தாலிய கடற்படை கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. இந்தப் படகிலிருந்து …
-
- 0 replies
- 252 views
-
-
ஈகுவடோரில் சற்றுமுன்னர் இரு பயங்கர நிலநடுக்கங்கள் : பதற்றத்தில் மக்கள் தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஈ…
-
- 0 replies
- 243 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் - பிரதமர் தெரீசா மே பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சூழலில், தெரீசா மேவின் முயற்சிகள் வெற்றியடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெரீசா மேவிற்கு வாழ்த்துக்கள் கூறி சுமுகமான போக்கை கடைப்பிடித்தாலும், ஐரோப்பிய ஒ…
-
- 0 replies
- 454 views
-
-
தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப் அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கை வீண் என கருதி, நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெ…
-
- 0 replies
- 669 views
-
-
மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை: ஹவானாவில் மிகப் பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய பேரணி தற்போது கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஹவானா புரட்சி சதுக்கத்தில் பேரணி ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த…
-
- 0 replies
- 314 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் பன்னிரெண்டு பேரை பலிவாங்கிய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. * துருக்கியில் ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள போதிலும் உறவுகளில் பாதிப்பு இல்லை என இருநாடுளும் கூறுகின்றன. * பிரிட்டனில் குட்டிச் சிறார்களின் போலிஸ் படை. புரிந்துணர்வை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி.
-
- 0 replies
- 191 views
-
-
வங்கதேசம் : ஆடைத் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர் 2 மே, 2013 - 06:58 வங்கதேசத்தில் 8 நாட்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்ததில் 400க்கும் அதிகமானோர் இறந்துபோன சம்பவத்தை அடுத்து, அங்கு மீண்டும் துணி ஆலைகள் முதல் தடவையாக தமது பணிகளை தொடங்கியிருக்கின்றன. இடிந்துபோன கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், துணி ஆலைகளில் பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் கசீனா கோரிக்கை விடுத்திருந்தார். பணியாளர் பணிக்கு திரும்பாவிட்டால், வணிக நஸ்டம் காரணமாக ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூட நேர்ந்தால், பணியாளர்கள் தமது …
-
- 0 replies
- 292 views
-
-
http://athavannews.com/wp-content/uploads/2021/02/Euro-zone-downturn-deepened-in-January-as-lockdowns-hit-services-700x380.jpg புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி! கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 624 views
-
-
1st June 2013 தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான தற்காலிக கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் எஸ்.கே.சர்க்கார் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் கூடும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு,…
-
- 0 replies
- 370 views
-
-
36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..! சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவில…
-
- 0 replies
- 437 views
-
-
போர்... மண்டலம் போல காட்சியளிக்கும் செக் குடியரசின் பல கிராமங்கள்! செக் குடியரசின் பல கிராமங்களில் வீசிய கடும் சூறாவளியினால், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு வீசிய இந்த சூறாவளி, தென்கிழக்கு ப்ரெக்லாவ் மற்றும் ஹோடோனின் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்கள் வேர்களோடு சாய்ந்தது. கார்கள் கவிழ்ந்தது. குறைந்த பட்சம் மணிக்கு 219 கிமீ (136 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஒரு போர் மண்டலம் போல இருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் ஆலங்கட்டி கற்கள் டென்னிஸ் …
-
- 0 replies
- 497 views
-
-
அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார். கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒ…
-
- 0 replies
- 309 views
-
-
தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர் ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார். கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடு…
-
- 0 replies
- 323 views
-
-
கோழிக்கோடு: கேரளாவில் கட்டாய திருமணம் செய்துகொண்டு தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஐக்கிய அரபுக்குடியரசு நாட்டைச் சேர்ந்த நபரின் மேல் மைனர் சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர்,கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அ…
-
- 0 replies
- 456 views
-
-
நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது. இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் கா…
-
- 0 replies
- 317 views
-