உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் பெஸ்லான் பள்ளியில் நடைபெற்ற படுகொலையைத் தடுக்க ரஷ்ய அரசு தவறிவிட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு; மீள் விசாரணை கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள். * வெனிசுவேலாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; வாழ்வதற்காக குற்றச்செயலில் இறங்கும் மக்கள்; பிபிசியின் சிறப்புச் செய்தி. * உலக நாடுகளில் பெண்கள் வாழ கடிமான நாடாக அறியப்படும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் வாழும் பெண்கள் சிலர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
-
- 0 replies
- 313 views
-
-
தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைJANEK SKARZYNSKI/AFP/GETTY IMAGES ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைILIA YEFI…
-
- 0 replies
- 330 views
-
-
டெல்லி: ரூபாய் மதிப்பு, பொருளாதார தடுமாற்றம், பங்குச் சந்தை சரிவு போன்றவற்று முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனதாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார தடுமாற்றம் போன்றவற்றுக்கு பொதுவாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையை காரணமாக சொல்வார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அண்மைக்காலமாக உள்நாட்டு நடவடிக்கைகளும்கூட இந்த சிக்கல்களுக்குக் காரணம் என்று பேசி வருகிறார் ப. சிதம்பரம். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பேசிய ப.சிதம்பரம், 2009-11ஆம் ஆண்டு காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதாவது அப்போது நிதி அமைச்சரா…
-
- 0 replies
- 402 views
-
-
பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர் மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JUSTIN SULLIVAN படக்குறிப்பு, வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று. பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என…
-
- 0 replies
- 646 views
- 1 follower
-
-
ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரை…
-
- 0 replies
- 305 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் பலி அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட ஸ்கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடியரசுக் கட்சியை சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், விர்ஜினியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதில் ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு குண்டடிப்பட்டது. …
-
- 0 replies
- 261 views
-
-
இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள். உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றிலிருந்து (04) வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று (05) அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜேர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு | Virakesari.lk
-
- 0 replies
- 280 views
-
-
எரிவாயு குழாய்களை தடுப்போம் என லூகஷென்கோ கூறியதற்கு புடின் மறைமுகமாக எச்சரிக்கை! குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்ததற்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மறைமுகமாக கண்டித்துள்ளார். இதுகுறித்து புடின் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை பெலாரஸ் தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள். நான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. எரிவாயு குழாய்கள் பெலாரஸ் நாட்டின் வழியாகச் செல்வதால், அந்…
-
- 0 replies
- 299 views
-
-
பல்கேரியாவில் பஸ் தீ விபத்து ; குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பஸ் தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02:00 மணிக்குப் பிறகு (00:00 GMT) போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான BTV விடம் தெரிவித்தார். விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் இர…
-
- 0 replies
- 429 views
-
-
பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கை, பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கியுள்ள உலகளாவிய அவசரநிலை நெருக்கடி, வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டுவரவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் ( Environmental Investigation Agency), பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேடுகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடிக்குச் சமமானது என்றும் அந்த நிறுவனம் வாதிடுகிறது. இப்போது நாம் சுவாசிக்கும் காற்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். தனக்கு எந்த வித பாதுகாப்பும் வேண்டாம் என்று மறுத்து வந்தாலும், கெஜ்ரிவாலுக்கு தெரியாமலேயே அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் உ.பி. மாநில எல்லையில் உள்ள காசியாபாத்திலும் கெஜ்ரிவாலுக்கு 30 போலீசாரைக் கொண்ட இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்குவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாதுகாப்பு எனக்கு வேண்டாம். சாதாரண மக்களுக்கு முதலில் பாதுகாப்பு அளி…
-
- 0 replies
- 447 views
-
-
இந்தோனேசியாவின் தலைநகரான யகற்ராவில் உள்ள மென்ரெக் பூங்காவில் தற்பொதைய அமெரிக்க அரசுத் தலைவரான திரு பராக் ஒபாமா அவர்களின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதாவது அவரது 10ஆவது வயதிலே இருந்த தோற்றத்திலான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க http://www.nytimes.com/imagepages/2010/02/05/world/05cnd-indo.html http://www.nytimes.com/2010/02/06/world/asia/06indo.html
-
- 0 replies
- 541 views
-
-
ஓக்லஹாமா: அமெரிக்காவைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்குள்ள மளிகை நிறுவனம் ஒன்றில் அவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்திலேயே வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றது வழிப்பறிக் கொள்ளையர் எனத் தெரிகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் பெயர் பிரசாந்த். ஹைதரபாபாத், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் ஓக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் சேர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரசாந்த்தின் நண்பர்கள்தான் அவரது பெற்றோருக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். மெர்ச்சன்ட் நேவியிலிருந்து வில…
-
- 0 replies
- 371 views
-
-
மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து... தப்பிச் செல்லும், பணக்கார ரஷ்யர்களுக்கு... புகலிடம் வழங்கும் டுபாய்! உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளனர் என்று வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் டுபாயில் சொத்து வாங்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை அல்லது உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பை விமர்சிக்…
-
- 0 replies
- 266 views
-
-
. மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள் சேலம்: சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலையிலிருந்து தாலி விழுந்து விட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அண்ணன்களுக்கு நல்லதில்லை என்று செய்தி கிளம்பியது. இதையடுத்து பரிகாரமாக அண்ணன் மனைவிக்கு நாத்தனார்களும், கொழுந்தனார்களும் சேலை, குங்குமம், தாலிக் கயிறு கொடுத்து பரிகாரம் செய்த கூத்து நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி கழன்று கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் அண்ணன்களுக்கு ஆகாது; இதற்கு பரிகாரமாக அண்ணிகளுக்கு தாலி கயிறு-புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் …
-
- 0 replies
- 668 views
-
-
ஜெர்மனியில் கருப்பு பணம்: 18பேர் பட்டியலை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு! டெல்லி: ஜெர்மனியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 18 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யாததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் கருப்புப் பண பதுக்கல் தொடர்பான வழக்கில் மத…
-
- 0 replies
- 514 views
-
-
சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தை பிளவு படுத்தக் கூடாது: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஓபாமாவை நேர்காணல் செய்யும் பிரின்ஸ் ஹாரி. - படம். | ஒபாமா ஃபவுண்டேஷன். பிபிசி வானொலிக்கு கெஸ்ட் ஆசிரியராக இருந்து ஒபாமாவை நேர்காணல் செய்தார் இளவரசர் ஹாரி. அந்த நேர்காணலில் பராக் ஒபாமா சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தை பிளவு படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் முறையைப் பார்த்தால் சமுதாயத்தை பிளவு படுத்துவதாக உள்ளது. நம்மைப் போன்ற தலைவர்கள், சமூக வலைத்தள வாசிகள் தங்கள் பாரபட்சமான, ஒருதலைபட்சமான, ஒற்றைக் கருத்தியல் சார்ந்த பார்வைக…
-
- 0 replies
- 273 views
-
-
ஐரோப்பாவிற்கு எதிராக.... எரிவாயுப் போரை நடத்தி வருவதாக, ரஷ்யா மீது... உக்ரைன் குற்றச்சாட்டு! மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால் ஒவ்வொரு ஐரோப்பியரின் வாழ்க்கையையும் மோசமாக்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதன் விளைவாக குளிர்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குளிர்காலத்திற்குத் தயாராகும் ஐரோப்பாவை இது வேண்டுமென்றே கடினமாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்…
-
- 0 replies
- 265 views
-
-
நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமலர் அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைம…
-
- 0 replies
- 185 views
-
-
உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இராணுவமே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அந்த கறுப்பு பெட்டியில் உள்ள தகவல் பரிமாற்றம் மூலம், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய…
-
- 0 replies
- 214 views
-
-
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 33 பேர் உயிரிழப்பு 12 OCT, 2022 | 12:01 PM கடந்த வாரத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமான பருவமழை வடமேற்கில் உள்ள கர்னாலி மாகாணத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மாகாணம் முழுவதும் குறைந்தது 22 பேர் காணாமல் போயுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் சில பகுதிகளில்…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சர் பதவி விலகல்! பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார். உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்துள்ளேன். அதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்திருக்கிறேன்’…
-
- 0 replies
- 215 views
-
-
நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும் பட மூலாதாரம்,GIDEON MENDEL 31 ஜனவரி 2023 வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?30 ஜனவரி 2023 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை குஷிப்படுத்திய வொண்டர்வுமன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வொண்டர்வுமனின் வருகை பிரபல ஹாலிவுட் படமான வொண்டர்வுமன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்துவருகி…
-
- 0 replies
- 382 views
-
-
ரஷ்ய ரூபிள் ஒரு வருடத்தில் அதன் மிகக் குறைந்த மதிப்பிற்கு வீழ்ச்சி! ரஷ்ய ரூபிள் ஒரு வருடத்தில் அதன் மிகக் குறைந்த மதிப்பிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று (வெள்ளி) காலை மாஸ்கோ பங்குச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக நாணயம் 82 ரூபிள் வரை சரிந்தது. பெப்ரவரி 2022 இல் உக்ரைனில் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா பாரிய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யா தனது பொருளாதாரம் 2022 இல் 2.1 சதவீதம் ஆக சுருங்கிவிட்டது, இது கணிக்கப்பட்ட 15 சதவீத வீழ்ச்சியை விட மிகக் குறைவு. வெள்ளிக்கிழமை காலை யூரோவிற்கு எதிராக ரூபிள் 2 சதவீதம் சரிந்து 90.06 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் குறைந்த எண்ணெய் விலைகள் ரஷ்ய வருவாயைக் குறை…
-
- 0 replies
- 534 views
-